காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   டிரீமர் இறையடி சேர்ந்தார். (http://www.kamalogam.com/new/showthread.php?t=68532)

jayjay 15-04-16 01:48 PM

அன்னாரது ஆன்மா சாந்திய​டைய கடவு​​ளை பிராதிர்க்கி​றேன்.

lawrence 15-04-16 02:00 PM

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்

MACHAN 15-04-16 02:50 PM

ட்ரீமர் ஐயாவை நேரில் சந்தித்தவர்களில் நானும் ஒருவன். அவர்களின் இழப்புச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

வாட்ஸ் அப் வழி தகவல் அறியத்தந்த காமக்கேடியார் அவர்களுக்கு நன்றி.

பச்சி 15-04-16 03:59 PM

நண்பர் ட்ரீமர் அவர்களின் இறப்பு மிகுந்த வருத்தத்திற்குரிய ஒன்று தான். அவர்களை ஒன்றுக்கு இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அந்த சந்தித்த பொழுதுகளின் நினைவுகள் கண்முன்னே நின்று கொண்டே இருக்கிறது. நல்ல மனிதர், அன்பும் மரியாதைக்கும் உரியவரான ட்ரீமர் அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்பது மிக மிக வருத்தம் அளிக்கிறது.

ராஜேஷ் மற்றும் ராசு சார் ஆகியோரின் தகவல் பதிவுகளுக்கும், இறுதிச் சடங்கில் கலந்து கொண்டமைக்கும் நன்றி.

வந்தியத்தேவன் 15-04-16 04:04 PM

இறைவா.. மரணம் கடக்கா மனிதன் இல்லை..

எனினும் மனிதன் அதை ஏற்றுக் கொள்ள தயாராயில்லை.

ட்ரீமர் அண்ணனின் ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்..

salem1963 15-04-16 04:33 PM

நமது உறுப்பினர் ட்ரீமர் அவர்கள் இறைவனடி சேர்ந்ததற்கு எனது ஆழ்ந்த வருந்தங்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்

anabayan 15-04-16 05:04 PM

இன்று காலையில் நண்பர் நல்லவன் அவர்கள் போனில் நம் லோக பிதாமகராக விளங்கிய அண்ணன் ட்ரீமர் அவர்கள் இப்பூவுலகம் விடுத்து மேலுலகத்தில் இறைவனின் பாதம் அடைந்தார் என்ற சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்ததோடு சொல்லொன்னா துயரமும் அடைந்தேன்.

அண்ணன் ட்ரீமர் அவர்களை நண்பர்கள் ராசு மற்றும் ராஜேஷ் அவர்களின் உதவியால் இரு முறை சந்தித்து பேசும் பாக்கியம் பெற்றவன். வயதில் மூத்திருந்தாலும் அவர் பேச்சில் குழந்தைதனமிருக்கும் எழுத்தில் இளமையிருக்கும்.

உடல் நலம் முடியாத சமயங்களில் கூட லோகத்தில் பங்களிக்க அவர் ஆர்வம் கொண்டவராய் இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.

அமரரான அண்ணன் ட்ரீமர் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குவதோடு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன்.

அண்ணனின் ஆன்மா இறைவனின் பாதத்தில் சாந்தியுடன் இளைப்பாற அந்த ஆண்டவனை பிராத்திக்கிரேன்.

oolvathiyar 15-04-16 05:44 PM

காமலோத்தில் மறக்க முடியாத வகையில் பெரிய கதைகள் வித்தியாசமான சிந்தனைகள் கொன்ட கதைகளை படைத்தும், நச்சென்று பின்னூட்டம் மூலமாக அனைவர் மனதையும் கவர்ந்த நன்பர் டிரீமர் காலமாகி விட்டார் என்ற செய்தி மிக மிக* வருத்தமான செய்தி. நான் லோகத்தில் சேர்ந்து 10 வருடம் பக்கம் ஆகிறது, இது தான் லோகத்தில் முதல் மரண செய்தி.

தன்னுடையை மரணம் எப்ப வரும் மிக சிறந்த ஞானிகளே உனர்வார்களாம், நம்ம டிரிமரும் அவ்வாறு உனர்ந்திருந்ததால் தான் சில மாதங்களுக்கு முன்பு,

லோக உறுப்பினர் மரணித்தால்...?


டிரிமர் அண்ணனின் பரிந்துரைபடி தான் நான் ஓல்நீதிமன்றம் என்ற சவால் போட்டியை துவங்கினேன்.

உடல் நலம் குறைந்த பிறகும் வந்து பின்னூட்டங்களை செய்து எங்களை மகிழ்ச்சியில் வைத்திருந்த நபர் டிரிமர். நான் எந்த படைப்பு செய்தாலும் டிரிமர் அண்ணனிடமிருந்து பின்னூட்டம் எப்ப வரும் என்று ஆவலுடன் ஏங்குவேன். நான் துவங்கி ஓல்நீதிமன்ற சவால் போட்டி அறிவிப்பு திரியில் டிரிமர் அண்ணன் அவர்கள் பதித்ததுதான் காமலோகத்தில் அவர் பதித்த கடைசி பதிப்பாகி விட்டதே. அதை அவர் எனக்கு கொடுத்த வரமாகவே நான் ஏற்றுக்கொள்கிறேன்.

டிரிமர் அண்ணனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை லோக நன்பர்களுக்கு தெரிவித்து அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கிறேன்.

ஸ்திரிலோலன் 15-04-16 06:15 PM

ட்ரீமர் ஐயா அவர்களின் உடல்நிலை கடந்த சில நாட்களாக அண்ணன் ராஜேஷ் மற்றும் நல்லவன் அவர்களின் மூலம் அறிந்து வந்தேன். இடையே வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் இருந்து, அதன் பின் சற்று தேறி வருவதாய் அறிந்து ஆறுதல் அடைந்தேன். ஆனால் அதன் பின் சீரியஸ் ஆகி, இன்று ஐயா இறைவனடி சேர்ந்ததை அண்ணன் ராசு அவர்கள் வாட்ஸப் மூலம் கொடுத்த தகவல் மூலம் இன்று காலை அறிந்தேன். லோக நண்பர்கள் பலரை இது வரை சந்தித்து இருந்தாலும், ட்ரீமர் ஐயா அவர்களை கடைசி வரை சந்திக்க முடியாமல் போனது என் துரதிருஷ்டம். அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

RAJA678 15-04-16 08:06 PM

நண்பரின் பிரிவுக்கு எனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்


All times are GMT +5.5. The time now is 07:28 PM.

Powered by Kamalogam members