காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0082 - நவம்பர் 2012 மாதம் ஒரு சவால் போட்டி - வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=61994)

asho 29-11-12 02:29 PM

நி: 0082 - நவம்பர் 2012 மாதம் ஒரு சவால் போட்டி - வாக்கெடுப்பு முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

2012ம் வருடம் நவம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான rohini அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான தித்தி(த)ப்பு (1-5) (1-3) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 3 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு மூவரும் குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 3 பேர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 53 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி http://www.kamalogam.com/new/customa...tar35219_3.gif குரு அவர்கள் 21 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். காமலோகத்தில் முதல் முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் குரு..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1)குரு - 21 வாக்குகள்
2)niceguyinindia - 19 வாக்குகள்
3)Tamil_Lover - 13 வாக்குகள்
வெற்றி பெற்ற உறுப்பினரான குரு-வுக்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் niceguyinindia மற்றும் Tamil_Lover க்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து பாகங்களை தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய niceguyinindia & Tamil_Lover க்கு எங்கள் பாராட்டுகள். இவர்களுக்கு தலா 300 இபணம் ஊக்கப் பரிசாக பரிசாக வழங்கப்படுகிறது.


நன்றி.

-0-

Mathan 29-11-12 02:36 PM

வாழ்த்துகள் குரு அண்ணா...

உங்களின் உழைப்பு வீண்போகாது என்பதற்கு இதுவே சான்று.
தங்கம் என்றும் தரத்தில் தாழ்ந்ததில்லை. இனியும் புகுந்து விளையாடுங்கள் !!

போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

maria 29-11-12 02:38 PM

இந்த மாத சவால் ராஜாவாக மகுடம் சூட்டிய குரு அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக..
தொடர்ந்து இரண்டாமிடமும் மூன்றாமிடமும் வந்த நண்பர் நைஸ்கைக்கும் தமிழ்லவ்வருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்

tdrajesh 29-11-12 02:43 PM

Quote:

Originally Posted by Mathan (Post 1193356)
உங்களின் உழைப்பு வீண்போகாது என்பதற்கு இதுவே சான்று.

உண்மையான வார்த்தை.

இம்மாத சவால் ராஜா நண்பர் குருவுக்கும் மற்றும் இரண்டாம் மூன்றாம் இடத்தை பிடித்த நண்பர்கள் நைஸ்கை அவர்களுக்கும் தமிழ் லவ்வர் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

MACHAN 29-11-12 03:02 PM

போட்டியில் வென்ற சவால் ராஜா குருஜிக்கும், போட்டியில் பங்குபெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற நைஸ்கை, தமிழ் லவ்வர் அவர்களுக்கும் மச்சான் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிச்சிக்கிறேன்.

HERMI 29-11-12 03:10 PM

நிர்வாக சவாலில் வென்று சவால் ராஜா பதக்கம் வென்ற இந்த வருட லோகத்தின் புதிய வரவு நண்பர். குரு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.!!!
பங்குகொண்ட நண்பர்கள் நைஸ் கை, தமிழ் காதலன் இருவருக்கும் என் பாராட்டுக்கள்.!
@ தமிழ் காதலன் - தொடர்ந்து பங்களித்து வெற்றி வாகை சூட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.!
ஓட்டளித்த வாசக கண்மணிகளுக்கும், நடத்திய நிர்வாக நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.!

குரு 29-11-12 07:29 PM

ஒரு தளம் அமைத்து அனைவரின் திறமைகளையும் வெளிப்படுத்த உதவி தொடர்ந்து நடத்திக் கொண்டும் இவ்விதம் போட்டிக்கான வாய்ப்புகளையும் அளித்து சிறப்பிக்கும் தலைவர் அவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக தொடர்ச்சி அளித்த என் சகநண்பர்களுக்கும் வாக்களித்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னை வாழ்த்திய வாழ்த்த இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

SIRUTHAI 29-11-12 08:48 PM

வெற்றி மகுடம் சூடிய குரு நண்பருக்கு பாராட்டுக்கள்.

தமிழ்க்காதலன் நண்பரே, தொடர்ந்து எழுதுங்கள், வெற்றி பெறும் வரை விடாதீர்கள்.

கிட்டத்தட்ட அனைத்து நிர்வாக சவாலிலும் கலந்து கொண்டு கலக்கும் நைஸ்கை நண்பருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

niceguyinindia 29-11-12 10:02 PM

வெற்றி பெற்ற நண்பர் குருவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ..

எனது தொடர்ச்சிக்கு வாக்களித்த மற்றும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

kay 29-11-12 10:51 PM

சவால் ராஜாவாகப் பதக்கம் பெற்ற நண்பர் குருவுக்கு வாழ்த்துக்கள்! முயற்சி திருவினையாக்கும்! அடுத்து வந்த நணப்ர்கள் நைஸ்கை மற்றும் தமிழ் லவருக்கும் வாழ்த்துக்கள்! தமிழ்க் காதலர் தங்க வாசல் உறுப்பினர் ஆகும் நாள் மிக அருகாமையில் உள்ளது! :0019:


All times are GMT +5.5. The time now is 07:56 AM.

Powered by Kamalogam members