என் இரண்டு லட்சம் இ.பணங்கள் ( 7-11-2020 )
லோக நண்பர்கள் அனைவருக்கும் முன் கூட்டிய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
நான் லோகத்தில் இணைந்து இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது. இன்று ( 7- 11-2020 ) எனது இ.பணங்களின் மதிப்பு இரண்டு லட்சத்தை ( 2,00,000 ) தொட்டு விட்டது. இந்த இ.பணங்களை பரிசுகள் வாயிலாகவும் பின்னூட்டங்கள் வாயிலாகவும் எனக்கு வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த லோகத்தைப் பொருத்த வரை இது ஒரு சாதனையா என்று எனக்குத் தெரியவில்லை. எனினும் வளர்ந்து வரும் இளம் உறுப்பினர்களுக்கு இந்த சாதனை ஒரு உந்துதலைத் தரும் என்று நான் நம்புகிறேன். அதனால் இந்த திரி அவர்களுக்கு உதவும் என்று பதிவிடுகிறேன். லோகத்தில் இந்த சாதனையை இதற்கு முன் நிகழ்த்திய ஜாம்பவான் படைப்பாளர்களுடன் என்னை இணைத்துக் கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். இப்படி ஒரு வாய்ப்பை நல்கிய நிர்வாகத்தினருக்கும் எனது நன்றிகள்! தொடர்ந்து என்னால் இயன்ற அளவு படைப்புகளை வழங்குவேன். நண்பர்கள் தொடர்ந்து படித்து தங்கள் மேலான ஆதரவை தாருங்கள்! |
Quote:
இந்த அளவு ஆர்வத்துடன் காமலோகத்துக்கு நேரம் செலவழித்து பற்பல படைப்புகள் வழங்கிய தங்களை பாராட்டி வாழ்த்துவதில் பெருமையடைகிறேன். தொடரட்டும் தங்கள் சேவை ! |
Quote:
|
உங்கள் இரண்டு லட்சம் இபணமும் படைப்பாளிகளுக்கு ஊக்குவிக்க செலவிட்டு , மேலும் செலவிட பல வெற்றிக்கதைகளை எழுதவேண்டும் என வாழ்த்துகிறேன்.
|
இந்த மகத்தான சாதனையை எட்டியதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். மேலும் பல படைப்புகளை கொடுத்து லோகத்தில் உங்கள் சாதனை பயணம் தொடர வாழ்த்துக்கள்.
|
அயராத முயற்சியினால் உழைத்த உழைப்பின் மூலம் ஈட்டிய பொற்காசுகள்!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்! |
Quote:
Quote:
Quote:
|
காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Reload this Page ஐகேஷ் (iCash) வசதியின் புதிய மாற்றங்கள் http://www.kamalogam.com/new/showthread.php?t=34765 நிர்வாக உறுப்பினராக பதில் பதிவதென்றால் திரி ஆரம்பித்தவருக்கு வருத்தம் வரும், மேலே உள்ள திரி சென்று பார்த்து கொள்ளுங்கள். நிர்வாக நடவடிக்கை அதிக ஐகேஸ் வைத்திருப்பவர்கள் மேல் அல்லது விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது முன்னர் அவ்வப்போது எடுக்கப்பட்டது, தற்போது (சிலர் பணம் [டொனேசன்]கொடுத்தே) ஐகேஸ் வாங்கியதால் அந்த உச்சகட்ட லிமிட் தற்காலிகமாக கை விடப்பட்டது . ஆனால் அதிகபட்ச ஐகேஸ் பரிமாற்ற விதிகள் மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, உங்களுக்கு நேரிடையாக இபணம் 1000 மேல் தந்தவர் மீது நடவடிக்கை எடுக்கவும், அதிகப்படியாக ஐகேஸ் வைத்திருப்பவர்களிடம் அதனை எடுக்கவும் விரைவில் ஆவண செய்யப்படும். ////////////// சக தளத்து உறுப்பினர் என்று கருத்து பதிந்தால் நீங்கள் இபணத்தை யாருக்கு முறையாக ஈயவில்லை என்றே சொல்வேன் நண்பரே, உங்கள் கதைகளுக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தது தளத்து உறுப்பினர்களே, அப்படி உங்கள் கதைகளுக்கு வந்த வெற்றிக்கான சன்மானத்தின் ஒரு பகுதியை உறுப்பினர்களுக்கு (கருத்து பதிபவர்களுக்கு) தர வேண்டியது முறையானது. இனியாவது பகிர்ந்தளியுங்கள். |
Quote:
|
உங்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. அதுவும் இந்த குறுகிய காலத்தில் ! நீங்கள் மேலே கூறியதுபோல, நான் பல காலத்திற்குப் பின்னர் கதை எழுதியபோது, உங்களில் இணைய பணத்தை சொன்னது போலவே தந்தீர்கள் மிக்க நன்றி !
|
All times are GMT +5.5. The time now is 07:51 AM. |
Powered by Kamalogam members