காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   அனைவரின் நண்பருக்கு பிறந்த நாள் (29.11.2011) (http://www.kamalogam.com/new/showthread.php?t=53074)

asho 29-11-09 11:41 AM

அனைவரின் நண்பருக்கு பிறந்த நாள் (29.11.2011)
 
http://kamalogam.com/new/customavatars/avatar48_3.gif

நண்பர்களே, நம் தளத்தில் அனைவரின் அன்பும் மதிப்பும் பெற்றவர் ஸ்மார்ட்மேன் அவர்கள். இன்று அவரின் பிறந்தநாள். பொதுவாக நம் தள பாரத்தின் கீழே கண்டால் இன்று பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் பெயர்கள் தெரியவரும்.

அவர் சமீபகாலமாக அலுவலக/சொந்த வேலைகளினால் தளத்திற்கு அதிக நேரம் வராமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவ்வப்போது வந்து சென்றாலும் பதிவுகள் முன் போல் தருவதில்லை. அவரை திரும்ப நம் தளத்திலே உற்சாகமாக வரவைக்கவும், அவரின் அன்புக்கு பாத்திரமான பாசக்கார தம்பிகள் எத்தனை பேர் உள்ளோம் என்பதை அவருக்கு தெரிவிக்க இந்த திரியை பயன்படுத்திக்கொள்வோம்.

அண்ணன், ஸ்மார்ட்மேன் அவர்கள், பதினாறு பேறுகளும் பெற்று வாழ்வின் அனைத்து இன்பங்களையும் பெற்று நீடுழி, இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகிறேன்.

பதினாறு பேறுகள்

"துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோயின்மை பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே"

என்ற காளமேகப்புலவரின் பாடல் படி

புகழ், கல்வி, வெற்றி, மக்கட்பேறு, துணிவு, செல்வம், மிகுந்த தானியம், சுகம், இன்பம், அறிவு, அழகு, புதிதுபுதிதாக ஏற்படக்கூடிய சிறப்புக்கள், அறவுணர்வுடைய குடிப்பிறப்பு, நோயற்ற வாழ்வு, நீண்ட வயது பெற வாழ்த்துகிறேன்.


குறிப்பு:
பொதுவாக இந்த திரி தலைவாசலில் வாழ்த்துக்கள் பகுதியில் தான் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் ஸ்மார்ட்மேன் அவர்கள் அதிக பிரைவசி விரும்புபவர் என்பதால் அவர் பெயர் மற்றவர்(அதாவது லாகின் ஆகாமல் பார்ப்பவர்) அறியக்கூடாது என்பதால் தலைப்பை பொதுவாக வைத்து இந்த பகுதியில் வைத்துள்ளேன். இந்த திரிக்கு மட்டும் இங்கே சிறப்பு அனுமதி கேட்டு தலைமை நிர்வாகி அவர்களிடம் வேண்டியிருக்கிறேன்.

நான் அவரை ஒரளவு அறிந்தபடியால் அண்ணா என்று அழைக்கிறேன். வாத்தியார் மாதிரி பெரிசுகளும் :) அவரை அப்படி விளித்து சங்கடப்படுத்திவிட வேண்டாம் :).

jayjay 29-11-09 11:42 AM

மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
 
http://www.kamalogam.org/gallery/dat...rtman_copy.jpg


ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ஸ்மார்ட்மேன் அவர்களின் பெயரைப்போலவே எழுத்துக்களும் செயற்பாடுகளும் ரொம்பவே ஸ்மார்ட்.
நிர்வாக சவாலின் முடிசூடா மன்னர்.
ஸ்மார்ட்மேன் அவர்களின் படைப்புக்கள் லோகத்தில் வானளவு உயர்ந்துள்ளது.

அவர் வாழ்விலும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழவேண்டுமேன எல்லாம் வல்ல இறஒவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஸ்மார்ட் அண்ணே உங்களோட சேவை என்றைக்கும் லோகத்திற்கு தேவை. காத்திருக்கின்றோம் உங்களுக்காக.

maria 29-11-09 11:50 AM

ஏற்கனவே நான் வாழ்த்து சொல்லிவிட்டென்
இருந்தாலும் மீண்டும் ஒருமுறை அவருக்கு
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

oshoviji 29-11-09 12:10 PM

கொஞ்சம் கதை,
நிறைய படங்கள்,
கொஞ்சம் அறிவு,
நிறைய இலக்கியம்,
கொஞ்சம் நெகிழ்ச்சி,
நிறைய மகிழ்ச்சி,
கொஞ்சம் குறுகுறுப்பு,
நிறைய புன்முறுவல்,
கொஞ்சம் படபடப்பு,
நிறைய அமைதி,
நிறைய நட்பு,
நிறைய அன்பு,
நிறைய அனைத்தும்
தந்த அன்பு ஸ்மார்ட் அண்ணனை
அன்புடன் வாழ்த்துகிறோம்

( நெட்டில் சுட்டு கொஞ்சம் எடிட் செய்த கவிதைதான். திட்டாதீங்க.)

JACK 29-11-09 12:33 PM

ஸ்மார்ட் சாருக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்

பச்சி 29-11-09 12:36 PM

ஸ்மார்ட் அண்ணா...

அன்புக்கு இலக்கணமாக திகழ்பவர் நம்ம ஸ்மார்ட்மேன். அவரின் அமைதியான அனுகுமுறை தான் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம். உதவி என்று கேட்டால்... (அன்புக்கு கட்டுப்பட்டு) செய்து தர உடனே ஒத்துக் கொள்பவர். நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் இவரைப்பற்றி... இவரை வாழ்த்த வாய்ப்புக்கு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்க ஸ்மார்ட் அண்ணா.. பல்லாண்டு... பல நூறு நூற்றாண்டு... அனைத்து வளங்களுடன் நீடுடி வாழ... என் வாழ்த்துக்கள்.

Lia 29-11-09 12:41 PM

இன்று பிறந்த நாள் கானும் ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

vaithiyanathans 29-11-09 12:44 PM

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே..

லலிதாதாசன் 29-11-09 12:44 PM

Quote:

Originally Posted by asho (Post 914471)
நான் அவரை அதிகம் அறிந்தபடியால் அண்ணா என்று அழைக்கிறேன். வாத்தியார் மாதிரி பெரிசுகளும் :) அவரை அப்படி விளித்து சங்கடப்படுத்திவிட வேண்டாம் :).

என் வயசுக்கு மீசைக்காரரை மாமான்னு கூப்பிடலாம்.:) இருந்தாலும் அடக்கிவாசித்து ஸ்மார்ட் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏதாவது உவமைசொல்லி பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாமென்றால் அசோ அழகாக நிறைய சொல்லி எனக்கு பூட்டு போட்டுவிட்டார்.

இருந்தாலும் என் பங்கிற்கு விஜியை போலவே நெட்டில் சுட்ட கவிதைகளின்று ஒரு கவிதை:

கோபியரின் கண்ணனே-
எங்கள்
லோகத்தின் பச்சிளம் பாலகனே.

சிரித்தால் நீங்கள் குழந்தை- மீறி

பலம்கொண்டெளுகையில் ஆயிரம் யானை.

புதியவர்களுக்கு வழிகாட்டி-இன்றும்
பழையவர்களுக்கு ஆட்காட்டி.(பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுபவர்.)

அகவைகள் பலபோயும்
உந்தன்
அகத்துக்கு வயதுபோகவில்லை.

ஓலைச்சுவடியும் ஏங்கி கிடக்கிறது
உன் எழுத்துக்களை ஏந்துவதற்க்கு...
உன் சிரிப்பின் ஓசை கேட்டதில்லை நான்
உன் முகம் பார்த்ததில்லை நான்
உன் சினம் பார்த்ததில்லை நான்
உன் எழுத்தினால்....
உன் மனம் மட்டுமே பார்த்திருக்கிறேன் நான்
உன் நட்பூக்களின் சாட்சி
லோகக் கூட்டமே.
உன் நண்பர்களின் எண்ணிக்கையறிந்து
உன் மனசாட்சியும் கூட
பொறாமை கொள்ளும் நட்புக்கரசன் நீ


நன்றி: இணையத்துக்கு.


பிறந்தநாள் அன்று எதைக் கேட்டாலும் தரவேண்டும் என்று சொல்வார்கள். நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். நான் சுட்டுபோட்ட கவிதையை போல அல்லாமல் இதமாக, பதமாக நீங்கள் சுட ஆரம்பித்த சூடான பூரி சுவையான சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு எடுத்து சுடச்சுட எங்களுக்கு இனிவரும் நாட்களில் பரிமாறவேண்டும்.

இதேநாளில் பிறந்த இன்னொரு பிரபலம்:

1. கலைவாணர். என்.எஸ்.கிருஷ்ணன்(நவம்பர் 29, 1908

oolvathiyar 29-11-09 01:34 PM

மென்மையானவர், இனிமையானவர், திறமையானவர், நேட்டிவிட்டி படங்களை கூட போட்டோசாப்பில் ஏத்தி டச் செய்யும் தில்லு படைத்தவர், கூச்ச சுபாவத்ம் மட்டுமே இவருடை மைனஸ் பாயின்ட் பிறந்த நாள் கொன்டாடுகிறார். மீசை மற்றும் அன்னாச்சி என்று நான் செல்லமாக அழைக்கும் ஸ்மார்மேனுக்கு என்னை போல என்றும் 16 தானே. அவருக்கு பிறந்த நாள் திரியை மென்மையாக ஆரம்பித்த ஆசோவுக்கும் நன்றி.

Quote:

Originally Posted by asho (Post 914471)
நான் அவரை ஒரளவு அறிந்தபடியால் அண்ணா என்று அழைக்கிறேன். வாத்தியார் மாதிரி பெரிசுகளும் அவரை அப்படி விளித்து சங்கடப்படுத்திவிட வேண்டாம்

என் அன்பு தம்பி தங்க கப்பி ஸ்மார்மேன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் சந்தோசமாய் வாழ கடவுள் அருள் புரிவார்.


All times are GMT +5.5. The time now is 11:01 AM.

Powered by Kamalogam members