காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   பின்னூட்டம் சம்பந்தமான புகார்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=61401)

Mathan 18-09-12 04:00 AM

பின்னூட்டம் சம்பந்தமான புகார்கள்
 
Quote:

Originally Posted by rajapanneer (Post 1174021)
இதுவரை 50 பதிப்புகளை கடந்து விட்டேன் எனவே எனக்கு காமக் கதை வாசல் அனுமதி தர கேட்டு கொள்கிறான்

தலைவர் அவர்களே,

இன்று அதிகாலை இரண்டாம் ஜாமம் 2:58க்கு தொடங்கி 3:37 க்குள் இந்த நண்பர் ஓர் 10 கதைகளுக்கு பின்னூட்டமிட்டுள்ளார். அதில் வாத்தியாரின் 'சிந்தாதே என் ரத்தம்' இரண்டு பாகமும் அடங்கும். அவரது பின்னூட்டங்கல் மேற்கொண்டு தொடர்ந்துக்கொண்டு தான் உள்ளது.

வாத்தியாரின் அந்த கதையின் ஒவ்வொரு பாகமும் வேகமாக படித்தாலே முக்கால் மணி நேரமாவது ஆகும். ஆனால் இந்த நபர் எண்ணிக்கையை கூட்டுவதற்கென்றே செயல் படுவது போல், இரண்டு நிமிடத்தில் ஒரு கதைக்கு பின்னூட்டமிட்டு கொண்டிருக்கிறார் அவரது பின்னூட்டமும் ஏற்கும்படியாகவும் இல்லை.

இதுபோன்ற பின்னூட்டங்கள் எழுத்தாளருக்கு ஓர் மனநிறைவையும் தராது, மாறாக கஷ்டப்பட்டு உழைத்து எழுதும் கதாசிரியர்களுக்கு வெறுப்பை தான் ஏற்படுத்தும். நீங்கள் இவருக்கு ஏதும் அடுத்த வாசல் அனுமதி அளிக்கும் முன் இவரது பதிவுகளை கொஞ்சம் சரி பார்த்து பின் எதுவாயினும் முடிவு செய்யுங்கள்.

vjagan 18-09-12 07:55 AM

Quote:

Originally Posted by Mathan (Post 1175153)
இதுபோன்ற பின்னூட்டங்கள் எழுத்தாளருக்கு ஓர் மனநிறைவையும் தராது, மாறாக கஷ்டப்பட்டு உழைத்து எழுதும் கதாசிரியர்களுக்கு வெறுப்பை தான் ஏற்படுத்தும். நீங்கள் இவருக்கு ஏதும் அடுத்த வாசல் அனுமதி அளிக்கும் முன் இவரது பதிவுகளை கொஞ்சம் சரி பார்த்து பின் எதுவாயினும் முடிவு செய்யுங்கள்.

மிகவும் சரியாகச் சொன்னார் நம்முடைய உழைப்பாளர், படைப்பாளர், ஆசிரியர், நண்பர் Mathan அவர்கள். மிக்க நன்றி Mathan அவர்களே!

நானும் இன்னும் ஓர் உதாரணம் காண்பிக்கிறேன்:

மெனக்கெட்டு உட்கார்ந்து 200 வரிகளுக்கு மேலே எழுதப்பட்ட என்னுடைய படைப்பான
'வா.சவால்:0056 – காஞ்சபெரியம்மாவுடன் தனிக் குடித்தனம்vjagan
என்ற கதைக்கு

ஒரு காமலோக உறுப்பினர் இட்ட பத்தே, பத்து வார்த்தைகளில் இட்ட, இந்தப் பின்னூட்டத்தைப் படியுங்கள்.


'கதை படைப்பாளியான நீங்கள் இந்த மாதிரியான புரியாத புதிர் கதை படைக்க வேண்டம்'

நான் உடனே அவருக்குத் தனி மடலில் ஒரு கடிதம் எழுதினேன் அன்றே.. அதற்கு இன்று வரை அவரிடமிருந்து பதில் இல்லை.
அதன் சுட்டி:
http://www.kamalogam.com/new/showthread.php?t=60669
[quote="vjagan;1174370"]இது வரை ஐந்து நாட்களில், மன்னிக்கவும்-12,13 மற்றும் 14 என்ற மூன்றே நாட்களில் -66 பின்னூட்டங்கள்/பதிவுகள் எழுதிப் பதித்த நம்முடைய நண்பர் அவர்களின் வேகத்தை, நாம் மிகவும் பாராட்டவே வேண்டும்!
அவருக்குப் பாராட்டுக்களும் நல் வாழ்த்துக்களும் !


அவர்கள் இந்த பின்னூட்டம் மூலம் நமக்கு என்ன செய்தி சொல்ல முற்படுகிறார், அய்யா,அம்மணி ?

என்னுடைய கதையில் அந்தப் 'புரியாத புதிர்' எங்கே காணப்பட்டது என்று எனக்கு யாரவது சுட்டிக் காண்பிப்பீர்களா ?

அப்படிச் சுட்டிக் காண்பித்தால் இனி, இம்மாதிரியான 'புரியாத புதிர்'க் கதைகளை எழுதி நண்பர்போன்ற நற் குணம் கொண்ட வாசகர்களை இம்சிப்பதை, நான் நிறுத்திக் கொள்கிறேன் !

xxxGuy 18-09-12 10:20 AM

Mathan மற்றும் vjagan,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! நாங்கள் புதியவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவது போல் நீங்களும் நன்றாக கண்காணித்து வருவது நன்றாக புலப் படுகிறது. ஆனால், இந்த அனுமதி விண்ணப்ப திரி உங்கள் புகாரைப் பதிக்க சரியான திரி அல்ல. இந்த புகாரை நீங்கள் எனக்கு தனிமடலில் அனுப்பி இருக்கலாம், அல்லது உதவி மையம் பகுதியில் உள்ள புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் என்ற பகுதியில் பதிந்து இருக்கலாம்.
http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78
விரைவில் இந்த திரி அங்கே மாற்றப் படும்.

எவ்வளவு தில்லு முல்லுக்கள் செய்ய முனைத்தாலும் அவர் வெண்கல வாசலுக்கு முன்பு தான் செய்ய முடியும், தீவிர தகாத உறவு அனுமதி வரை நாங்கள் அதிக நுணுக்கமாக பதிப்புகளின் தரத்தை, காரணத்தைச் சோதிப்பதில்லை. வெண்கல வாசல், வெள்ளி வாசல், தங்க வாசல் அனுமதிகளுக்கு விண்ணப்பிக்கும் போது ஒருவருடைய அத்தனை பதிப்புகளும் அலசப் பட்டே கொடுக்கப் படும், அப்போது இது போன்றவர்கள் மாட்டிக் கொள்வார்கள்.

புதிதாக சேர்ந்தவர் ஆர்வ மிகுதியில் விளைவுகள் என்னாகும் என்று அறியாமல் பதித்து வருகிறார். நாளை அவர் கதை பதித்து அவருக்கு இது போன்ற பின்னூட்டங்கள் வரும் போது ஒரு படைப்பாளியின் மனநிலையை அவரும் உணர்ந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

இனி அவர் இது போன்று எண்ணிக்கையை உயர்த்துவதற்காக பதிக்கிறார் என்று தெரிந்தால் அவருக்கு எச்சரிக்கை கொடுக்கப் பட்டு, அவருடைய பதிப்புகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப் படும்.

vjagan 18-09-12 10:37 AM

எங்களின் தவற்றினை அன்புடன் சுட்டிக் காட்டிய தலைவருக்கு மிக்க நன்றி !
இனியொரு சமயம், அம்மாதிரி தவற்றினை நானும் நண்பரும் செய்ய மாட்டோம் !
உங்களுடைய வாழ்த்துதலுக்கு நன்றி அய்யா !

தொடர்ந்து புதியவர்களுக்கும், பிழை செய்பவர்களுக்கும், எங்களான வழி காட்டுதல்களை அன்புடன் தொடர்ந்து செயல் ஆற்றுவோம் !

Mathan 18-09-12 04:51 PM

தலைவரே,

இந்த புகாரை தனியே இங்கே கொண்டு வந்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திரி மற்ற வாசல் அனுமதி பதிந்தவர் தகுதி பற்றிய ஆலோசனை மட்டுமன்று, இங்கே பலரும் தங்களது பொன்னான நேரத்தையும் இழந்து கைவலிக்க தட்டச்சு செய்து கதைகள் பதிக்கின்ற எத்தனையோ படைப்பாளிகளின் தோளில் ஏறி சொகுசாக எண்ணிக்கையை அதிகரிக்கும் சவாரி செய்யும் பல போலியான பின்னுட்டவாதிகளின் சப்பை கட்டுகளை அம்பலப்படுத்தும் திரியாகவே இத் திரி விளங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதன் வலியை நான் நன்கு உணர்ந்தவன் என்ற முறையில் நான் இதனை சொல்கிறேன்.

புதியவர்கள் மட்டுமன்று, ஏற்கனவே இங்கே சில சீனியர் உறுப்பினர்கள் கூட இந்த செயலை புரிகின்றனர்.

சமயங்களில் லேட்டஸ்ட் ஃபாரம் நியூஸ்சில் லேட்டஸ்ட் போஸ்ட் வரிசையை பார்த்தாலே நமக்கு புரியும். சொற்ப நேரத்தில் ஒருவரது பெயர் மட்டுமே வரிசையாக ஓடிக்கொண்டே இருக்கும். ஓர் உறுப்பினரின் பெயர் அஆஇஈஉஊஎஏ என வைத்துக்கொள்வோம்,

அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ

இப்படி தொடர்ந்து ஓரிரு நிமிட இடைவெளியில் ஓடிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் பார்த்தால் இந்த நபர்கள் இதுபோன்று இடும் பின்னூட்டங்கள் எல்லாமே கதைக்காகவே தான் இருக்கும். அந்த பின்னூட்டங்களை படித்துப்பார்த்தாலே தெரியும் இந்த நபர் கதையை படிக்காமலே பின்னூட்டம் இட்டு சென்றுள்ளர் என தெல்லத்தெளிவாக புரியும்.

சும்மாச்சும், சுவையான வெண்பொங்கலில் அங்காங்கே
கொஞ்சம் மிளகு கிடப்பது போல், கதையின் சுவை குறைந்தது
போல் உள்ளது.

இல்லைனா,

அல்வாவிலே இருக்கும் முந்திரி போல்
சுவையும் மனமுமாக கதை பிரம்மாதம்.

அல்லது

சொறக்காயில் உப்பு இருந்தது
கோதுமையில் புழு இருந்தது

மற்றவர்களின் பின்னூட்டத்தை பார்த்து கொஞ்சம் ஒப்பனை செய்து பின்னூட்டமிடுவது,

சென்ற வருடம் எனது ஓர் கதையில் அப்படி தான் ஓர் சீனியர் நபர்,

படிக்காமலே,

கதையின் நீளம் சற்று தொய்வை தருகிறது.
மற்றபடி கதை பரவாயில்லை.

அவர் எனது அந்த கதையை பின்னூட்டமிடும்பொழுது நான் தளத்தினுள் தான் இன்விசிபில் மோடில் இருந்தேன். அவர் கதைகளுக்கு பின்னூட்டமிட்டுக்கொண்டு வருவதை பார்த்து எனக்கு எண்ணிலடங்கா ஆத்திரம் கொப்பளித்தது. ஓர் நிமிடம் இரண்டு நிமிட இடைவெளியில் பல கதைகளுக்கு எப்படியும் ஓர் பத்து கதைகளுக்கு மேல் பின்னூட்டமிட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் செல்கிறார். இருந்த பொழுதிலும் அந்த வரிசையில் எனது கதையும் இருக்கவே, அய்யோ, இவர் என் கதைக்கு பின்னூட்டமிடக்கூடாது என வேண்டினேன். சொல்லிவைத்தார் போல், குறைந்தது வேகமாக படித்தாலே ஒரு மணிநேரம் பிடிக்கும் கதையை இரண்டே நிமிடத்தில் மேற் சொன்ன பின்னூட்டத்தை இட்டு சென்றார்.

அக்கனமே நான் அவருக்கு அதே திரியில் தகுந்த பதிலடி கொடுத்தேன். தனக்கு பிடித்தவர்கள் கதைக்கு ஆஹா ஓஹோ என பின்னூட்டமிடுபவர்களும் உண்டு. அதையும் படித்து தான் பின்னூட்டமிடுகின்றனரா என்பதை யார் அறிவாரோ !

அதிலிருந்து அவர் எனது திரிக்கு வருவதே கிடையாது, பின்னூட்டமிடுவதும் கிடையாது. எனக்கு அதைப்பற்றி கவலையே இல்லை. இப்படிபட்டவர்கள் நான் நேரத்தை செலவழித்து எழுதும் கதைகளுக்கு பின்னூட்டமிடவேண்டும் என அவசியம் கிடையாது. நான்கு பேர் எனது கதையை படித்து இங்கே கவனிக்கப்படவேண்டிய வார்த்தை படித்து பாராட்டினாலும் சரி, படித்துவிட்டு கதையில் உள்ள குறைகளை சொன்னாலும் சரி அதை நான் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்வேன். நான்கு பேர் கூட தேவையில்லை, ஒருவர் படித்து பின்னூட்டமிட்டால் கூட அதுவே நான் பெற்ற பயணாக அமைதி கொள்வேன்.

ஆனால் நான் செய்த அந்த ஓர் நல்ல காரியத்தால் பலருக்கும் நன்மையில் முடிந்துள்ளது. அதன் பிறகு அந்த நபர் கொஞ்சம் உ ஷா ர் ஆகிவிட்டார். மற்றவர்கள் கதையை நிதானமாகவே படித்து பின்னூட்டங்களும் இடுகிறார். இல்லை எனில், இதுவரை நம்ம வாத்தியாரை மிஞ்சி சென்றிருப்பார் அந்த நபர்.

வாத்தியாரின் பின்னூட்டங்களோடு ஒப்பிடுகையில் ஏனி வைத்தாலும் அவரது புகழிற்கு தகுதியுடையவர் கிடையாது. உண்மையான உழைப்பை கொண்டவர்களுக்கு தான் பல புகழ்ச்சிகள் சென்று சேரவேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருப்பவன் நான்.

சும்மா மொத்தமே
நான்கு வார்த்தையை

இதுபோல் பின்னூட்டமிட்டு லோகத்தில் நான் தான் அதிக பதிப்புகள் பதிந்தவன் என மார்தட்டிக்கொள்வதில் என்ன இருக்கிறது ? சொல்லுங்கள் பார்ப்போம். அவர்களுக்கே அதை நினைக்க கேவலமாக இல்லையா ?

பலருக்கு என்னால் நன்மை ஏற்பட்ட பொழுதிலும் எனக்கு ஓட்டு கிடைக்காதே என்ற எண்ணமெல்லாம் எனக்கு இப்பொழுது இல்லை. அதையெல்லாம் நான் எப்பொழுதே தூற தூக்கிபோட்டுவிட்டேன். இப்பொழுதெல்லாம் எனது சொந்த விருப்பத்திற்க்காகவும் ஆசைக்காகவுமே தான் நான் கதைகள் / கவிதைகள் யாவும் எழுதுகிறேன். எனது ஆக்கங்களுக்கு நானே முதல் ரசிகன், நானே முதல் வாசகன் அதுவே எனக்கு போதும்.

இன்னமும் ஒரு சிலரோ,

பரவாயில்லை

கதை அருமை

இன்னும் கொஞ்சம் நன்றாக கொடுத்திருக்கலாம்

கதை சூப்பர்

பின்னூட்டங்களை பற்றி எவ்வளவு ஆய்வுகள் நடத்தினாலும், சில திருந்தாத ஜென்மங்கள் மட்டும் எப்பொழுதுமே திருந்தாது திருத்தவும் முடியாது என்பதைப்போல் தான் இன்னமும் நிலவரம் உள்ளது.

ஆக தலைவரே, இந்த திரியை பொருத்த மட்டும், என் கண்ணுக்கு தெரிந்து என் கதைக்கோ அல்லது யார் கதையாக இருந்தாலும், போலியான பின்னூட்டங்கள் என தெரிந்தால் அந்த பின்னூட்டமிட்ட நபர் யாராக இருந்தாலும், நான் இந்த திரியில் இங்கே தெரிவிப்பேன். அவருடைய பெயர் முதற்கொன்டு, அதன் திரி பின்னூட்டம், சுட்டி ஆகியவை எல்லாம் முடிந்த அளவு எவ்வளவு டீட்டெயில்ஸ் கலெக்ட் செய்யமுடியுமோ அவ்வளவையும் இங்கே நான் சுட்டிக்காட்டுவேன்.

ஆடுற மாட்ட ஆடித் தான் கறக்கனும்
பாடுற மாட்ட பாடித்தான் கறக்கனும்னு சொல்லுவாங்க.

மற்றவர்களும் தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி மற்றவர்கள் கதையை உண்மையாக படிப்பவர்களுக்கு மதிப்பும் மறியாதையும் அளிப்பவன் என சொல்லிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்.

அதனால் இத்திரியை 'மற்ற வாசல் அனுமதி பதிந்தவர் தகுதி பற்றிய ஆலோசனை ' என்பதை இதன் தலைப்பை மாற்றி எல்லோருக்குமே பொருந்தும்படியாக, 'பின்னூட்டம் சம்பந்தமான புகார்கள்' என இதற்கு தலைப்பிடுகிறேன்.

இனி பின்னூட்டம் பற்றி ஆய்வு நடத்திக்கொண்டிருப்பதில் எந்த பயணும் இல்லை. இனி நேரடி புகார் தான். அதுவும் நிர்வாகத்திற்கு தனி மடலில் காதும் காதும் வைத்தார்போல் சரி செய்வது கிடையாது. பப்ளிக்கா இப்படி ஓப்பனாக புகார் செய்தால் தான் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துக்கொள்வார்கள்.

இந்த திரியில் பின்னூட்டம் புகார்கள் தொடர்பாக யார் வேண்டுமானாலும் எவர் மீது வேண்டுமானால் இங்கே தகுந்த ஆதாரத்துடன் நிர்வாகத்திற்கு தெரிவிப்போம், தெரிவிக்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மடியில் கனமிருந்தால் தானே
வழியில் பயம் ?!

பின்னர் பதிந்தது : (19-09-12 : 7.30 AM)
Quote:

Originally Posted by asho (Post 1175333)
தவறிழைப்பவர் பெயர் இந்த திரியில் குறிப்பிடாமல் எழுதுங்கள், அல்லது தவறான அந்த பதிவினை ரிப்போர்ட் போஸ்ட் செய்யுங்கள்.

நிர்வாகத்தினர் சொல்லுக்கு மதிப்பளிப்போம். நமக்கு யாரையும் கஷ்டப்படுத்தி பார்க்கனும் என்ற எண்ணமோ அல்லது அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கமோ எதுவும் கிடையாது. எல்லோரும் நம்ம மக்கள் தானே. போனா போகட்டும் வேற என்ன பண்ணுறது.

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாது"

அததும் அவங்கவுங்களுக்கா தெரியனும். இந்த பின்னூட்டங்களால லோகத்திலே பல சண்டைகள் சச்சரவுகள் எவ்வளவோ நடந்திருக்கு. அதுக்கு மேலையும் பார்த்துக்கிட்டு நான் இப்படி தான் இருப்பேன் என அடம்பிடிக்கிறவங்களோட மல்லுக்கு நிக்கிறதும் நமக்கும் அசிங்கம் தான்.

நிர்வாகத்தினர் சொல்லுற மாதிரி, பெயரை குறிப்பிடாமல், நாசுக்காக என்ன தவறு நிகழ்ந்திருக்கு ? எப்படி நிகழ்த்தப்பட்டது என இங்கே குறிப்பிட்டாலே போதுமானது. அதை ஓர் ரிப்போர்ட் போஸ்ட்டோ அல்லது தனிமடலிலும் கூட நிர்வாகத்தினருக்கு தெரிவித்துவிடுங்கள். மத்தவங்கள் பின்னூட்டங்களால் நீங்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டீங்கள், அல்லது உங்கள் படைப்பிற்க்கு (போதிய) பின்னூட்டமே கிடைக்கப்பெறாமல் நீங்கள் அவமான பட்டது போல் ஏங்கியதுண்டா ? வேறு ஏதாவது தீர்வு, வழிமுறைகள் இப்படி உங்களுக்கு தெரிந்ததையும் மனதில் பட்டதையும் தாராளமாக இங்கே மற்ற நண்பர்களோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள். நன்றி !

oolvathiyar 18-09-12 08:13 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1175192)
இந்த புகாரை நீங்கள் எனக்கு தனிமடலில் அனுப்பி இருக்கலாம்

சில விசயங்கள் பப்ளிக்காக அலசினால் இதை படிக்கும் மற்றவர்களுக்கு ஒரு விழிப்புனர்வாக இருக்கும் என்பது என் கருத்து.
Quote:

Originally Posted by Mathan (Post 1175245)
பப்ளிக்கா இப்படி ஓப்பனாக புகார் செய்தால் தான் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துக்கொள்வார்கள்

அனைவருக்கும் விழிப்புனர்வு ஏற்படுத்தும் நோக்கில் இதை செய்வதை நான் ஆதரிக்கிறேன். ஆனால் ரொம்ப வலிக்கற மாதிரி அடிச்சுறாதிங்க. குறிப்பா புதியவர்கள் ஆர்வகோளாரில் செய்யும் தவறுகளை நான் சுட்டிகாட்டுவோம், அவர்கள் விழித்துக்கொள்ளட்டும், ஆனால் பயந்து விடும் படி செய்துவிட வேன்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

குரு 18-09-12 08:27 PM

என்னைப்போன்ற புதியவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்த திரி அமையும் என்பதில் ஐயமில்லை. நான் பதிவுகள் இடுவதில் இந்த நிமிடம் வரை அவசரம் காட்டியது இல்லை. காரணம் படைப்பை நன்கு உள்வாங்கிக் கொள்ளாமல் மேம்போக்காக இடப்படும் பின்னூட்டங்கள், அருமை சபாஷ் சூப்பர் போன்ற பின்னூட்டங்கள் எத்தகு வலி கொடுக்கும் என்பதை ஒரு கவிஞனாக கதைஞனாக ஒரு கலைஞனாக நான் நன்கு அறிவேன். நான் செல்லும் தளங்களில் நான் துணிவுடன் வலியுறுத்துவதும் இதைத்தான்.

பதிவுகளின் எண்ணிக்கையில் என்ன வாழ்கிறது என்பது எனக்கு புரியவே இல்லை. நூறு பெற்ற கௌரவர்களை விட ஐந்து பெற்ற பாண்டவர்கள்தான் சிறப்பெய்தினர்.

யானை பலவருடங்களுக்கு ஒருமுறை குட்டிப்போடுவதால்தான் அது யானை. தினமும் போட்டால் அவை பன்றிகள்.

இதன்மூலம் புதியவர்களுக்கும் பழையவர்களுக்கும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்பும் கருத்து என்ன என்றால்

* படைப்புகளை நன்கு உள்வாங்கி அனுபவித்துப் பின் அவற்றில் என்ன உணர்ந்தீர்கள் என்பதை அப்படியே எழுதுங்கள்.

* படைப்பாளர்களுக்கு நீங்கள் கோடி கோடியாகப் பணம் கொட்டிக்கொடுக்கப்போவதில்லை. உங்களை மகிழ்விக்க படைக்கும் அந்த கலையுலகப் பிரம்மாக்களுக்கு உங்கள் மனமார்ந்த விரிவான பாராட்டுகள் தான் தேவை.

* ஒரு படைப்பு நன்றாக இல்லை என்றால் அதை தெளிவாக பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள், இதனால் படைப்பாளர் மனம் வருந்தும் என எண்ணினால் தரமில்லாத படைப்புகளை அவர் மேலும் மேலும் அள்ளிக்குவிக்க நீங்கள் உடந்தை ஆகிறீர்கள் என்று பொருள்.

* குறைந்த பட்சம் ஐந்துவரிகளாவது பின்னூட்டம் இட்டே தீரவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். எண்மை அல்ல திண்மைதான் பின்னூட்டத்திற்கு அழகும் வலிவும் சேர்க்கும்.

அனைவருக்கும் நன்றி.

asho 18-09-12 09:07 PM

Quote:

Originally Posted by குரு (Post 1175288)
* ஒரு படைப்பு நன்றாக இல்லை என்றால் அதை தெளிவாக பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள், இதனால் படைப்பாளர் மனம் வருந்தும் என எண்ணினால் தரமில்லாத படைப்புகளை அவர் மேலும் மேலும் அள்ளிக்குவிக்க நீங்கள் உடந்தை ஆகிறீர்கள் என்று பொருள்.

இதில் ஒரு சிறு திருத்தம்.

குறை தெரிந்தால் பொதுவிலே தெரிவிப்பதற்கு பதில் சம்பந்தப்பட்ட நண்பருக்கு தனிமடலில் தெரிவியுங்கள். அவர் அதனை (போதிய கால அளவில்)கண்டுகொள்ளவில்லை என்றால், அந்த திரியிலே முதலில் நிறைகள் ஏதாவது இருந்தால் அதனை பதிந்து பின் குறையை பதியுங்கள்.

இதனால் நட்பு வளரும். நம் தளத்திலே படைப்புகள் பெருகும்.

PUTHUMALAR 18-09-12 09:20 PM

Quote:

Originally Posted by Mathan (Post 1175245)
சமயங்களில் லேட்டஸ்ட் ஃபாரம் நியூஸ்சில் லேட்டஸ்ட் போஸ்ட் வரிசையை பார்த்தாலே நமக்கு புரியும். சொற்ப நேரத்தில் ஒருவரது பெயர் மட்டுமே வரிசையாக ஓடிக்கொண்டே இருக்கும். ஓர் உறுப்பினரின் பெயர் அஆஇஈஉஊஎஏ என வைத்துக்கொள்வோம்,
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
இப்படி தொடர்ந்து ஓரிரு நிமிட இடைவெளியில் ஓடிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் பார்த்தால் இந்த நபர்கள் இதுபோன்று இடும் பின்னூட்டங்கள் எல்லாமே கதைக்காகவே தான் இருக்கும். அந்த பின்னூட்டங்களை படித்துப்பார்த்தாலே தெரியும் இந்த நபர் கதையை படிக்காமலே பின்னூட்டம் இட்டு சென்றுள்ளர் என தெல்லத்தெளிவாக புரியும்.

நண்பர் மதனின் ஆதங்கம் புரிகின்றது.. இருந்த போதும் தொடர்ந்தார் போல் ஒருவரின் பின்னூட்டங்கள் அடுத்தடுத்து சில நிமிட இடைவெளியில் வருகின்றது என்பதற்காகவே அவர் கதையைப் படிக்காமலேயே பின்னூட்டமிடுகின்றார் என்ற ஒரு முடிவுக்கும் நாம் வந்து விடக்கூடாது.. ஏனென்றால் சில வேளைகளில்.. அதுவும் இப்போது மின் தடை அதிகம் உள்ள இக்கால கட்டத்தில் நானெல்லாம் மொத்தமாக நேரம் கிடைக்கும் போது திரிகளைப் படித்து அதற்கு பின்னூட்டக் குறிப்புகளையும் நோட்பேடில் குறித்து வைத்துக் கொண்டு பிறகு வேறொரு சமயம் வரும் போது அந்த திரிகளை வரிசையாக எடுத்து தொடர்ந்து பின்னூட்டங்கள் இடுவதும் உண்டு.. அதனால் நண்பர் மதன் குறிப்பிடுவது போல் அடுத்தடுத்து பெயர்கள் வருவதும் உண்டு.. அதனால் திரிகளைப் படிக்காமலேயே இடும் பின்னூட்டமென்று யாரும் அதைக் கருதக் கூடாது.. பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்தே அது அந்தத் திரிகளைப் படித்து பார்த்துப் பின் போடப்பட்ட பின்னூட்டமா? அல்லது படிக்காமலேயே போட்ட பின்னூட்டமா? என்ற ஒரு முடிவுக்கு நாம் வர வேண்டும் என அன்புடன் நண்பர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்..

KANNAN60 18-09-12 09:38 PM

தம்பி மதனின் ஆதங்கம் நியாயமானதுதான். கையொடிய எழுதிய கதைகளுக்குப் பொத்தாம் பொதுவாகப் பின்னூட்டம் தருவது படைப்பை / படைப்பாளியை அவமானப்படுத்தும் செயலே.

Quote:

Originally Posted by asho (Post 117529)
....குறை தெரிந்தால் பொதுவிலே தெரிவிப்பதற்கு பதில் சம்பந்தப்பட்ட நண்பருக்கு தனிமடலில் தெரிவியுங்கள். அவர் அதனை (போதிய கால அளவில்)கண்டுகொள்ளவில்லை என்றால், அந்த திரியிலே முதலில் நிறைகள் ஏதாவது இருந்தால் அதனை பதிந்து பின் குறையை பதியுங்கள்.

இதனால் நட்பு வளரும். நம் தளத்திலே படைப்புகள் பெருகும்.

கரெக்ட். அசோ சொன்ன இந்த வழிமுறையைத்தான் நான் முதலில் இருந்தே பின்பற்றி வருகிறேன். மனம் புண்படாமல், அதே சமயம் நாம் நினைக்கும் கருத்துகளையும் சொல்லிவிடலாம்.

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1175303)
.......மொத்தமாக நேரம் கிடைக்கும் போது திரிகளைப் படித்து அதற்கு பின்னூட்டக் குறிப்புகளையும் நோட்பேடில் குறித்து வைத்துக் கொண்டு பிறகு வேறொரு சமயம் வரும் போது அந்த திரிகளை வரிசையாக எடுத்து தொடர்ந்து பின்னூட்டங்கள் இடுவதும் உண்டு.. ......

தோழி புதுமலர் சொல்வதுபோல், இதையும் அடிக்கடி செய்து வருகிறேன். கதைகளை/படைப்புகளை உள்வாங்காமல், பதிவுகளின் எண்ணிக்கையைக் கூட்ட, பெயருக்குப் பின்னூட்டம் இடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி நான் செய்வதும் இல்லை.


All times are GMT +5.5. The time now is 08:25 PM.

Powered by Kamalogam members