காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   மச்சான் 5000 போட்டுட்டாருங்கோ....! (updated: 30.03.13) (http://www.kamalogam.com/new/showthread.php?t=57543)

KANNAN60 18-02-11 11:21 PM

மச்சான் 5000 போட்டுட்டாருங்கோ....! (updated: 30.03.13)
 
3000 தொட்ட அன்பு மச்சானுக்கு முதலில் வாழ்த்துகள்!

”மச்சான்” - இந்த உறவுமுறையைச் சொல்லும்போதே நம் நாடி நரம்புகளில் அந்நியோன்யமும், பாசமும், கேலி செய்யும் உரிமையும், எதையும் நம்பிச் சொல்லலாம் என்ற எண்ணமும் பரவவில்லையா!

நம் மச்சானுக்கு என்னவொரு பொருத்தமான பெயர்! இரண்டு வருடங்களாகத் தன்னுடைய படைப்புகளால் (குறிப்பாகப் பின்னியெடுக்கும் நான்-ஸ்டாப் ரவுசான அசைபடத் திரியால்), லோகத்தைக் கம்பீரமாக வலம் வருபவர்!

இவருடைய அசைபடத் திரிக்கு நான் அடிமையாகிக் கிடக்கிறேன். அலுவலகத்தில் இருக்கும்போதே ‘இன்றைக்கு மச்சான் என்ன போட்டிருப்பாரோ, எத்தனை போட்டிருப்பாரோ (அட.. அசைபடமுங்க! :y15:)’ என்று நினைப்பதுண்டு. நாம் சூடாக ஒரு கதையைப் போட்டால் அதிவிரைவில் அதற்கேற்றாற்போல் ஒரு அசைபடத்தைத் தேர்ந்தெடுத்து, நம் கதையின் வரிகளை அழகாகக் கோட் செய்து அடுக்கிப் பதித்து, நம்மைப் புல்லரிக்க வைப்பார்.

சமீபகாலமாக, இவருடைய முன்குறிப்புகள் அசைபடத்திரியில் மிகவும் பிரபலம். மச்சான் இதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமும், சிரத்தையும் மிக அதிகம் என்பதை நான் அறிவேன். அதன் பலனை அருமையான அவர் பதிவுகளில் காணமுடிகிறது!

மச்சானின் சவால் வெற்றி பெறவும், அவர் இன்னும் பல்லாயிரம் தாண்டவும், அசைபடத்திரியில் சாதனை படைக்கவும், அவருடைய ஸ்டைலில் அழகுதமிழில் கதைகளை மீண்டும் படைக்கவும் வாழ்த்தி, என்னுடன் சேர்ந்து நம் அன்பு மச்சானை வாழ்த்துமாறு உங்கள் எல்லோரையும் அழைக்கிறேன்!

கீப் ‘இட்’ அப் மச்சான்!! க்ரேட் ஜாப்!!!

kazuthaipuli 18-02-11 11:26 PM

மச்சான் எல்லா சந்தோஷங்களும், சாதனைகளும் உங்களுக்கு ஒரே நேரத்தில் அமைகின்றது. வாழ்த்துக்கள்.

nana2003 18-02-11 11:53 PM

வாழ்த்துக்கள் மச்சான்..

gemini 19-02-11 12:11 AM

மச்சானுக்கு "மச்ச" வாழ்த்துக்கள்.

ஜெய் 19-02-11 12:49 AM

என்னாது மச்சான் போட்டது 3000மா :y4:? அடஙொக்கமக்கா.

வாழ்த்துகள் மச்சான்.

KAMACHANDRAN 19-02-11 05:55 AM

அன்பு நண்பர் மச்சான் தனது 3000 வது பதுவுகள் பதிந்து காமலோகத்தை சிறப்பாக அலங்கரித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல பதிவுகளையும் போட்டிகளையும் நடாத்த என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

jayjay 19-02-11 06:52 AM

நிஜத்தில் மச்சான் என யாரையும் எளிதில் சொல்லிவிடமாட்டோம்.. அன்னியோன்யமான நட்புடையவர்களைதான் அன்பாக அப்படி அழைப்போம்.. ஆனால் இணையும்போதே "உன் மச்சான்" என அன்னோன்யமான நட்புடன் இணைந்தவர்.

கள்ளம்கபடம் தெரியாது. எல்லாரையும் தன் நட்புவட்டத்திற்குள் இழுத்து அணைத்துக்கொள்ளும் அன்பிற்கினியவர் மச்சான்.

மஸ்கட் மச்சானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மென்மேலும் பல பதிவுகளின் மூலம் டாப் போஸ்டர் ஆக வாழ்த்துக்கள்.

vjagan 19-02-11 06:53 AM

வந்தனமும் வாழ்த்துக்களும் ! மேலும் மேலும் நல்ல பதிப்புகளை வெளியிட்டு தானும் வளர்ந்து காமலோகமும் வளர வாழ்த்துக்கள் !

oshoviji 19-02-11 09:07 AM

வாழ்த்துகள் மச்சான்.

போட்ட மூவாயிரத்தையும் வீடியோவா எப்ப போடுவீங்க..? :D

maria 19-02-11 10:06 AM

3000 பதிப்பகள் பதிந்த மச்சானுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்
அசைபட கிங் என அவரை சொல்லலாம்.
இப்போது அசைபடத்துக்கு முன்னோட்டமாக திரை கதை வசனம் எழுதுவது என்னை போன்றவர்களுக்கு கல்கண்டு மாதிரி இனிக்குது
நோவாமலே நொங்கு திங்க மாதிரி
திரி ஆரம்பித்த கண்ணனுக்கும் ஸ்பெஷல் தாங்ஸ்
5நட்சத்திரம்.
எப்படியோ எனது 10001 வது பதிப்பு மச்சானுக்கு வாழ்த்து சொல்லுவதினால் எனக்கு மிக்க மகிழ்சி.
ஒன்னுல விட்டதை ஒன்னுல பிட்டிச்சிட்டேன்


All times are GMT +5.5. The time now is 03:24 PM.

Powered by Kamalogam members