காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   மௌனி காலமானார் இன்று! (02-06-2021) (http://www.kamalogam.com/new/showthread.php?t=74978)

vasanthanirmala 02-06-21 07:04 PM

மௌனி காலமானார் இன்று! (02-06-2021)
 
காமலோக நண்பர்களுக்கு!

என் அருமை தங்கை/நண்பி மௌனி இன்று ஃபரீதாபாத்தில் 11.00 மணிக்கு இறைவனடி புகுந்தார், அக்கா சில காலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். இப்போது கீமோ செய்யும்போது கரோனா நோயால் பாதிக்கப்பட்டார்.

அவர் வேண்டுகோளின்படி அவர் இறந்த செய்தியை உங்களுக்கு தெரிவிக்கிறென். காமலோகத்தை உயிராக
நினைத்த உள்ளம். இறக்கும்போதும் அவர்கள் ராசு, அஷோ, ஜேஜே என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.நண்பர் அஷோக்கு குறிப்பாக சொல்ல சொன்னார்,

அருமை அக்கா மௌனிக்கு கண்ணீர் அஞ்சலி,

ஜய2019

asho 02-06-21 07:10 PM

மிகவும் வருத்தமாக இருக்கிறது, நேற்று கடைசியாக தனிமடல் தந்து உடல் நிலமை மோசம் என்று சொல்லியிருந்தார். நம்பிக்கையோடு இருங்கள் என்று பதில் தந்தேன். பொய்யாகி விட்டது.

நான் நேசித்த ஒருவர், என்னை அண்ணா என்று அழைத்தவர் இன்று இல்லை.

என்ன சொல்வது என்று தெரியவில்லை

itsmeparthi 02-06-21 07:14 PM

மெளனி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.. காமலோகத்தில் தங்களின் பங்கு அளவிடமுடியாதது.. உங்களைப் போல் இன்னொரு எழுத்தாளர் கிடைப்பாரா என்றால் அது சந்தேகமே.. உடலளவில் மறைந்தாலும் உங்கள் எழுத்துக்கள் வாயிலாக என்றென்றும் எங்களுடன் வாழ்வீர்கள்.. இந்த காமலோகம் என்றும் உங்களை மறவாது - இப்படிக்கு உங்களின் ரசிகர்களில் ஒருவன்

விதைத்துக்கொண்டே இரு!!
முளைத்தால் மரம்!!
இல்லையேல் உரம்!!

PREMJI 02-06-21 07:15 PM

இந்த செய்தி கேட்டவுடன் திடுகிட வைத்தது என்னை...மிகவும் வருந்தத்தக்க செய்தி....மிகவும் அன்பான நபர் அவர் இந்த காம உலகத்தில் கோலோச்சிய முடி சூடா தலைவி ராணி...அவருடைய கதைகள் சொல்லும் அவரை பற்றி.....அவருடைய ஆன்மா சாந்தம் அடைய பிராத்திக்கிரேன்.....இனி அவருடைய கதைகள் பேசும் இந்த உலகுக்கு.......ஆழந்த இரங்கல்கள்..

ஒரு பெண்ணாக இந்த காம உலகத்தில் சரித்திரம் பல படைத்தாய் நீங்கள்.....

உங்கள் உடல் அழியலாம் ஆனால் உங்கள் படைப்பு என்றும் அழியாது

conan 02-06-21 07:22 PM

மிகவும் வருத்தமான செய்தியை கண்டு மனம் கலங்குகிறது!!

உழைப்புக்கு பெயர் போன மௌனி காமலோகத்தில் தற்போது இல்லை என்று நினைக்கும் போது மனம் ஏற்க மறுக்கிறது!!

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!!

gemini 02-06-21 07:23 PM

நேற்றும் அவர் எழுதிய ஒரு தொடர்கதையை படித்தேன். அவருக்கு அதை பற்றி இன்று பாராட்டு / வாழ்த்து ஒன்று எழுதுவோம் என நினைத்து இருந்தேன்.


இந்த செய்தியை கேட்டதும் மிக வருத்தமாக உள்ளது.
அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி.

ASTK 02-06-21 07:23 PM

நண்பர் மௌனி காமக்கதைகளின் முடிசூடாராணி. அவர் நெடுங்காலம் இந்த தளத்தில் இருந்தாலும் அவர் எழுதிய கதைகள் பல இணைய தளங்களில் பலராலும் படிக்கப் படுகிறது. அப்படிப் பட்ட நீங்கப் புகழைப் பெற்றவர் இந்த நிமிடம் நம்மோடு இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் இந்த தளத்தில் இணைவதற்கு அவரது கதைகளும் ஒரு காரணம். இந்தப் பாழாய் போன கொரானாவிற்கு அவரும் தப்பவில்லை. இந்த கொடூரக் கொரானாவிற்கு மனதாபிமானமே இல்லை.

இந்த காமலோகமும் தமிழில் காமக்கதைகளும் உள்ளவரை மௌனியின் புகழ் இருந்து கொண்டேயிருக்கும்.

போய் வாருங்கள் மௌனி! உங்கள் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்!!!

kprakash3516 02-06-21 07:32 PM

வருத்ததிற்குரிய அதிர்ச்சியளிக்கும் செய்தி இது. லோகத்தில் மிகசிறந்த கதாசிரியகளில் முக்கியமானவர். நல்ல மனதுகாரர், மற்றவரின் படைப்புக்களை பண்புடன் விமர்சிப்பவர்மௌனி அவர்கள். இது போன்ற சமயங்களில் தான் இறைவனின் மீது கோபமும் அவனது இருப்பின் மீது சந்தேகமும் ஏற்படுகிறது.

madavan1000 02-06-21 07:35 PM

மௌனி அவர்கள் பெண் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அவர் பல கதைகளை தொடர்ந்து வாசித்திருக்கிறேன். அவரின் தீவிர வாசகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொண்ட நிலையில் அவர் மரணச் செய்தி மிகவும் வருத்தம் தருகிறது. இரங்கல், வருத்தம் என்பதெல்லாம் சம்பிரதாயச் சொல்லாக இருக்கலாம், ஆனால் அவை அந்த நேரத்தில் சார்ந்தோருக்கு சமாதானம் தரும் வலிமை மிகு சொற்கள்.
கொரோனா கொடிது, நம் கண் முன் நடமாடிய பலரை பறித்துக் கொண்டிருக்கிறது.
மௌனி மரணமும் அவ்விதமே.
அவரது ஆன்மா சாந்தியடையட்டுமாக

KADAMBANC 02-06-21 07:39 PM

ஈடு செய்ய முடியாத இழப்பு.. அவருடைய கதைகள் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியவை. காமக்கதைகள் படிக்க விரும்புவோருக்கும் படைக்க விரும்புவோருக்கும் அவருடைய கதைகள் ஒரு கிரியா ஊக்கியாகும்.
அவர் இன்று நம்மிடம் இல்லை என்பதை நம்ப மனம் மறுக்கிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!!!!

ஸ்திரிலோலன் 02-06-21 07:45 PM

நேற்று வரை சீரியஸ் என்று கேள்விப் பட்டேன். தில்லி என்.சி.ஆர். ரீஜியனில் கொரனா கட்டுக் கடங்காமல் இருப்பதை அறிவோம். இம்மாதம் என் தூரத்து உறவினர்கள் இரண்டு பேர் கொரானாவால் உயிர் இழந்தனர். இப்பொழுது நம் லோகத்து சொந்தம் ஒருவரையும் கொரானா அரக்கன் கொண்டு சென்று விட்டான் என்று நினைக்கையில் மனம் சொல்ல முடியாத அளவு துயர் கொள்கிறது.

நண்பர் மௌனி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

mmkarnan 02-06-21 08:10 PM

ஐயகோ?! நான் பலமுறை வெளிப்படுத்தியதை போல, நண்பர் மௌனியின் எழுத்துக்கள் தான் என்னைப்போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு ஆதர்சம் ஆயிருந்தது. ரசித்து ரசித்துப் படித்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர் மறைந்த நண்பர் தோழி மௌனி அவர்கள். அன்னாரின் இறப்பைத் தொடர்ந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் எழுத்துக்களை ஆதர்சமாய் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான நமது தோழர்களுக்கு எனது மனமார்ந்த ஆறுதல்கள். அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற மனதார வேண்டுகிறேன்.

johndoejr7 02-06-21 08:18 PM

அதிர்ச்சிகரமான செய்தி. அவரது பல கதைகளை படித்துள்ளேன். நல்ல எழுத்தாளர். அவர் எழுதிய கதைகளில், நான் படித்த கதைகள் மிகவும் சொற்பமே... இன்னும் நெறைய படிக்க வென்றும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.

அவர் பெண் என்பதே எனக்கு ஆச்சர்யம் தான். ஒரு பெண்ணாக, காமலோகத்தில் இத்தனை கதைகள், வர்ணனைகள் ஆச்சர்யம்.

தன் கதைகள் மட்டுமல்லாது, மற்றவரது கதைகளுக்கும் நல்ல கருத்துக்களை படிந்து ஊக்கப்படுத்துவார் என்று கண்டுள்ளேன்.

மனதில் ஒரு வெறுமை. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

vjagan 02-06-21 08:35 PM

என்னை என் லோக வாழ்வில் மனதால் பாதித்த உடன் பிறவாத தங்கையின் இழப்பு பற்றி வாயிருந்ததும் வார்த்தை இல்லை

நினைவுக்கு வரும் வாக்கியங்கள்:

1. விலையில்லாத மாணிக்கக் கற்கள் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் தாமதமாகவே நம்மால் இனம் காணப்படுகின்றன;

ஆனால் ஏனோ அந்தப் பொல்லாதக் கடவுள், அவைகளை இரக்கமின்றி அவசர அவசரமாக தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

உபயம்: பெயர் அறியப் படாத ஒருவர்

2. அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை

இப்போதிந்த உலகம் முழுவதும்
எமனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை...

உபயம்: கண்ணதாசன்

தேவ் 02-06-21 08:48 PM

மிகவும் வருத்தமிக்க செய்தி. நண்பர் மௌனி அவர்களின் தொடர் கதைகள் மிகவும் வேறுபட்ட தளத்தில் இருப்பதை நினைத்து ஆச்சர்யம் அடைந்துள்ளேன்.

மௌனி அவர்கள் சார்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். கொரனோ எனும் கொடிய பேய்க்கு இன்னும் எத்தனை பலிகள் தான் தேவையோ?.

வருத்தத்துடன்.

jayjay 02-06-21 09:21 PM

Quote:

Originally Posted by jaya2019 (Post 1544581)
காமலோகத்தை உயிராக
நினைத்த உள்ளம். இறக்கும்போதும் அவர்கள் ராசு, அஷோ, ஜேஜே என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

ஜய2019

மிகவும் நெருங்கிய நண்பி.. இன்று இல்லையென்ற செய்தி, காணும்போதே இதயம் கணக்கிறது. இறக்கும்போதும் என்னை நினைவுகூர்ந்த அன்பிற்கு ஈடாக என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லையே.

இனியவள் இனி இறைவனடியில் இளைப்பாறட்டும்..

tamizhan_chennai 02-06-21 09:23 PM

ஆழ்ந்த அனுதாபங்கள். இதை தவிர வேறு என்ன சொல்ல முடியும். வருத்தமாக உள்ளது.

ramstories 02-06-21 09:41 PM

ஈடு செய்ய முடியாத இழப்பு.. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்ளும் அதே நேரம் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்,,

sinna vaaththiyaar 02-06-21 09:53 PM

என்னெங்க சொல்லுறிங்க.....

எனது நெருங்கிய நண்பர்களின் சொந்தங்களை இந்த காலகட்டதில் இழந்த வருத்ததில் இருந்த எனக்கு மௌனியின் மறைவு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது....அவரது ஆன்மா இறையருளை அடைய பிரார்த்தனை செய்வோம்.....
(மன்னிக்கவும்....என்னால் இந்த த்ரெட்க்கு ஸ்டார் கொடுக்க முடியவில்லை...இந்த செய்தியை எதிர்பார்க்கவில்லை...)

harshanwriter 02-06-21 10:04 PM

எனக்கு மௌனி யாருனு கூட தெரியாது முன் பின் பார்த்தது கூட இல்ல ஏன் ஒரு பிரைவேட் மெசேஜ் கூட பண்ணது இல்ல ஆனா இன்று மௌனி இன்று இந்த உலகத்தில் இல்லை என்ற செய்தியை அறிந்து என் கண்கள் குளமானது.

ஏதோ என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பரை இழந்தது போன்ற ஒரு உணர்வு சொல்ல முடியாத சோகம்.

நான் பல தளங்களில் மௌனியின் பல கதைகளை படித்து மகிழ்ந்து இருக்கிறேன். என்னை போலவே பல பேரை மகிழ்வித்தவர் மௌனி.

ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

என்ன வாழ்க்கைடா இது.

இந்த இரண்டு வருடங்களில் என் வாழ்க்கையிலும் சரி எனக்கு பிடித்த பிரபலங்களிலும் சரி நான் இழக்க கூடாத பல பேரை இழந்து விட்டேன் இன்று மௌனி.

என்ன சொல்றதுன்னே தெரியல. தன் எழுத்துக்களால் இன்னும் வாழும் மௌனிக்கு நன்றி.

nandabalan 02-06-21 10:27 PM

மெளனி
 
அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

lawrence 02-06-21 10:29 PM

அன்புத் தோழி
கதை அரசி
தத்துவ ஞானி
அபார ரசிகை
நுண்ணிய மனம்
வாழ்த்தும் குணம்
அயரா உழைப்பு
நோயிடம் வீரம்

எத்தனை பரிமாணங்கள் உமக்கு

ஈடு செய்ய இயலாது உம்மை
சம்பிரதாய வார்த்தைகள் அல்ல
சத்தியமான வாக்குமூலம்

niceguyinindia 03-06-21 12:43 AM

இந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை கடந்த வருடம் அவர் புற்று நோய் என்று சொன்னார் அதன் பின் அவர் அதில் இருந்து மீண்டு விட்டார் என நினைத்தேன்

காரணம் அவர் பல படைப்புகளை படைத்து ஆக்டிவாக இருந்தார் எனவே மீண்டு விட்டார் என நினைத்தேன் !

ஒரு முறை கூட அவரிடம் பேசியது இல்லை அவர் கதைகளை படித்து இருக்கிறேன் இப்படியும் எழுத முடியுமா என எண்ண தோன்றும் உன்னத படைப்பாளி

மனம் கனக்கிறது ..

அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்

வரிப்புலி 03-06-21 01:57 AM

மனம் ஏற்க மறுக்கிறது

பிரசாந்த் 03-06-21 02:26 AM

மிகுந்த வேதனையாக உள்ளது, மௌனி அவர்களின் செய்தியைக் கேட்டதும். நம்ப முடியவில்லை, இன்னும் அவர் நம்மோடு இருக்கிறார் என்றே நினத்துக்கொள்வோம்.

அவர் படைப்புகள் காலம் கடந்து நிற்கும். அவை இன்னும் வரப்போகும் சந்ததியினரையும் மகிழ்ச்சிப் படுத்தும்.

மௌனி அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

ipsasp 03-06-21 03:03 AM

அய்யோ, இது நிஜமா. நம்பவே முடியல. மவுனி அக்கா காலமானார் செய்திய சத்தியமா ஜீரணிக்க முடியல. காமக் கதைகளின் சூப்பர் ஸ்டார் அவர். காமலோகம் இருக்கும்வரை அவர் பெயர் இங்கே கோலோச்சும்.

அவர் ஆன்மா ஆண்டவன் பாதத்தில் இளைப்பாறட்டும். ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா.

vinoth86102 03-06-21 06:57 AM

அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...
இந்த பாழாய்ப்போன கொரோனா இன்னும் எத்தனை உயிரை தான் காவு வாங்குமோ ...

மீனாமீனா 03-06-21 08:21 AM

ஆழ்ந்த இரங்கல் ஈடுசெய்ய முடியாத இறப்பு என்ன சொல்வது என தெரியவில்லை

loser view 03-06-21 08:34 AM

மௌனி அக்கா இரந்த செய்தி கேட்டு மிகவும் மனம் துன்பத்துக்கு உள்ளாக்கியது அவர்கள் கதை இருக்கும் வரை அவர் ஆத்மா உயிருடன் இருக்கும்

நெருப்பு 03-06-21 09:49 AM

மௌனி மவுனமானது ஏனோ? கதைகளுக்குள் நமக்குள் நடந்த உரையாடல்கள் என்றுமே மற்க்கக்கூடியதல்ல.
பல காலமாய் இந்த தளத்தில் பயணித்தோம், ஏனோ மனம் கணக்கிறது.
உங்கள் மறு உலக பயணம் சிறக்கட்டும்..

தமிழ் ராஜா 03-06-21 10:13 AM

மிகவும் வேதனையான செய்தி. பல தளங்களில் கதை எழுதி அனைவரையும் மகிழ்வித்தவர் அவர் இப்போது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.

Mauran 03-06-21 10:16 AM

மிகவும் கலங்க வைக்கிற செய்தியை சொல்லியுள்ளீர்கள்.. நம்முடன் பலகாலம் பயணித்த ஒருவர் இவ்வுலகை விட்டு செல்லும் பொழுது அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் !

nadoon 03-06-21 10:33 AM

அவருடைய கதைகள் படிப்பவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியவை.சோர்வில்லாத நடை, பாத்திரஙளை கையாளும் விதம், ஒரு திரைக்கதை ஆசிரியனுக்கு உள்ள தகுதி,இவ்வளவும் கொண்ட மவுனி ஒரு பெண் எழுத்தாளர் என்பது அவர் மறைவுக்கு பின்புதான் எனக்கு தெரிந்தது..அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!!!!

spsamy3006 03-06-21 11:45 AM

தமிழ் காமக்கதைகள் உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு. மௌனியின் பெயரை நமது தளத்திற்கு சேருவதற்கு முன்பே அங்கொன்றும் இங்கொன்றுமாய் வேறு தளங்களில் கேள்வி பட்டிருக்கிறேன். சமீபத்தில் காமலோகத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அவரது அறிமுக திரியை பார்க்கும் போது அவரின் மீதான மரியாதை பலமடங்கு கூடியது. ஒரு பெண், ஒரு வேறு மாநிலத்தை சேர்ந்தவர் தமிழ் மீதான காதலால் இத்தனை காமபடைப்புகளை உருவாக்கி உள்ளார் என்பது பிரம்மிக்க வைத்தது. ஆனால் இப்போது இந்த உலகத்தையே அல்லல் படுத்து இந்த கொடும்நோயால் மௌனியை இழந்து விட்டோம் என்பது இதயத்தை கணக்க வைக்கிறது. அன்னாரது உடல் இந்த பூமியை விட்டு அகன்றாலும் அவரது எழுத்துக்கள் இங்கு இருந்து என்றும் அவரை நம் நினைவில் வாழவைத்துக் கொண்டு இருக்கும்...

meikandaan 03-06-21 12:14 PM

இந்த கொரனா நேரத்தில் எந்த அதிர்ச்சியையும் தாங்கும் பழக்கம் வந்துவிட்டது.. விரும்பிய பலரும் திரும்ப இயலாத இடம் செல்கின்றனர்.. என்ன சொல்வது !!

ஆனால் மௌனி அவர்களுக்கு அப்படி இல்லை, மனிதன் மாண்டு போகலாம், அவன் எழுத்துக்கள் மடிவதில்லை ..

உலகின் இறுதி மனிதன் காமக்கதை பிரியன் ஆயின், அவனிடம் மௌனி அவர்களின் பிரதி ஒன்று இருக்கும் ..

என்றும் வாழ்க அவர் தமிழ் ஊழியம் !!

பட்டிகாட்டான் 03-06-21 12:29 PM

மிகவும் வருத்தமான செய்தி .அவரின் கதைகள் என்றென்றும் அவரை நினைவுபடுத்திக்கொண்டு இருக்கும் .

Raju.K 03-06-21 12:31 PM

மௌனி அவர்களின் இழப்பு கேட்டு வருத்தம் அடைகிறேன். அவருடைய படைப்புகள் பலவற்றை இங்கு படித்து இருக்கிறேன். ஆனால் அவர் பெண் என்னும் செய்தி எனக்கு புதிது. இதனை கேட்டபின் அவருடைய எழுத்துக்கள் இன்னும் ஒரு புதிய பரிமானத்தில் பார்க்கப்படுகிறது. அவருடைய குடும்பத்திற்கும் மற்றும் நம் காம லோக நிற்வாகிகளுக்கும், மற்ற அன்பர்களுக்கும் என் அனுதாபங்கள். ஒம் ஷாந்தி ஓம் ஷாந்தி

don11 03-06-21 02:17 PM

மிகுவம் வருத்தம் தரும் செய்தி.
மிகச்சிறந்த படைப்பாளரை இழந்நதுவிட்டோம்.

msvasan 03-06-21 02:42 PM

ஆழ்ந்த் அனுதாபம் அவர் குடும்பத்தினர்க்கு

எழுத்து இருக்கும் வரை அவருக்கு இறப்பு இல்லை

கண்ணன்76 03-06-21 03:02 PM

சிறந்த எழுத்தாளர். அவர் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். ஆழ்ந்த இரங்கல்

saibalaaji 03-06-21 03:05 PM

ஆழ்ந்த இரங்கல்கள்

dhilludura 03-06-21 03:13 PM

நல்ல மனிதர், நல்ல கதை ஆசிரியர் இறந்திவிட்டார் என்பது மனதுக்கு மிகவும் கஸ்டமாக இருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தியடைய கடவுலை வேண்டிக்கொள்கிறேன்

RishiA 03-06-21 03:57 PM

மௌனியின் இறப்பின் செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். மிகச் சிறந்த எழுத்தாளரை இழந்துவிட்டோம். மௌனி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்... அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

rojaraja 03-06-21 04:07 PM

மௌனி அவர்களின் கதைகளை தளத்தில் படித்து இருக்கிறேன். முன் பின் முகம் பார்த்து பழகவில்லை என்றாலும் அவர்களின் மறைவு கேட்டு மிகவும் வருந்துகிறேன். இறுதி வரை லோகத்துடன் தொடர்பில் இருந்துள்ளார் அன்னார் ஆன்மா சாந்தி அடைய வணங்குகிறேன்.

Nambikainayagan 03-06-21 05:37 PM

ஜாம்பவான் எழுத்தாளர் மௌனி அவர்கள் இறந்துவிட்டார் என்னும் செய்தி ஒவ்வொரு காமக்கதை வாசர்களுக்கும் பேரதிர்ச்சியை தந்திருக்கிறது.வேறு சில தளங்களிலும் அவர்களுக்காக இரங்கல் பதிவுகள் பகிரப்பட்டு வருவதை பார்க்கும் போது மௌனி அவர்கள் பெற்ற புகழ் எல்லைக்கு அளவில்லை என்பது நன்கு புலப்படுகின்றது.

இத்தளத்தில் மௌனி அவர்கள் எழுதிய படைப்புகளை படிக்கும் தகுதியை நான் இன்னும் அடையவில்லை என்பதை எண்ணும்போது மிகுந்த துர்பாக்கியசாலியாக உணர்கிறேன்.வேறு சில தளங்களில் மௌனி அவர்கள் எழுதிய ஒரு சில கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

மௌனி அவர்கள் பெண் என்பதை அறிந்த போது காமலோகத்தின் தேவதை அவரே என அடிப்படை உறுப்பினராகிய என்னால் உணர முடிந்தது.

பெண்ணாக இருப்பினும் தைரியமாகவும் தனது புரட்சிகரமான சிந்தனைகளாலும் பல கதைகளை படைத்த சிங்கப் பெண்ணிற்கு என் வீர வணக்கங்கள்.

போலி கலாச்சாரம் மற்றும் சமுதாய கட்டுப்பாடுகள் போன்ற தடைகளால் மௌனி போன்ற மாபெரும் ஜாம்பவான் எழுத்தாளரை கடைசிவரை உலகம் கொண்டாட தவறி விட்டது என்பது மிகவும் வேதனை தரக்கூடிய உண்மை.

மௌனி அவர்களின் சிறந்த படைப்புகளுக்கு சாகித்திய அகாடமி விருது அல்லவா கொடுத்து கவுரவப்படுத்திருக்க வேண்டும் இந்த நயவஞ்சக உலகம்.

மௌனி அவர்கள் மறைந்தாலும் அவர்கள் பெற்ற புகழ் என்றும் மறையாது.காமக்கதைகள் படிக்கும் கடைசி வாசகன் இருக்கும் வரை அவர் மக்கள் மனதில் என்றும் நிறைந்து இருப்பார்.

மௌனி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.அன்னாரின் மறைவை எண்ணி வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Walter White 03-06-21 06:14 PM

மிகவும் வருத்தமாக இருக்கிறது, நேற்று இரவு கூட அவரின் கதையை படித்தேன், அவர் மறைந்துவிட்டாலும் அவரின் எழுத்துகளால் என்றென்றும் வாழ்வார்.

Ragov 03-06-21 06:17 PM

வருத்தம் மனதை வாட்டுகிறது
 
என்ன தோழி மௌனி நம்மை விட்டு இறைவனடி சேர்ந்துவிட்டாரா; கடவுளே இன்று இப்படி ஒரு அதிர்ச்சி வருத்தம் ஏன்.

கதைகளைப்பற்றி நம் கலந்துரையாடல்கள் இன்னமும் என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இப்படி திடீரென மௌனமானதேன் தோழி மௌனி; இதென்ன கொடுமை

ஆம் வரிப்புலியாரே 'மனம் ஏற்க மறுக்கிறது'

ஒரு நல்ல மனம் படைத்த தோழியை நாம் இழந்துவிட்டோம்

மௌனி ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

ராகவ்

the heaven 03-06-21 07:43 PM

மிக மிக வருந்த கூடிய செய்தி.

இந்த தளத்தினை நான் அடைய வேண்டும் என எண்ணியதே அவரோடு உரையாட அவர் கதைகளோடு உறவாட தான்.

இதை நான் அவரிடமே பல சமயங்களில் சொல்லி இருந்தேன்,

படிக்கும் ஆர்வம் இருக்கும் எனக்கும் படைக்கும் திறன் இல்லை,

இந்த கருவில் ஒரு கதை படையுங்கள் என ஒரு முறை அவரிடம் சொன்னேன்

அவரும் சம்மதம் தெரிவித்து இருந்தார் ஒவ்வொரு நாளும் அவர் அந்த கருவிலோ அல்லது அவரது கற்பனையிலோ ஏதெனும் கதை வரும் என காத்திருந்தேன்

ஆனால் இன்று அந்த காத்திருப்பு முடிவில்லா தவிப்பாக முற்று பெறாமல் முடிந்தது

அவரிடம் நான் உங்கள் ரசிகன் உங்களை ரசிக்கவே இந்த தளத்திற்கு வந்தேன் எனவும் அதற்க்கு அவர் தெரிவித்த நன்றியும் இன்றும் இனிமேலும் நினைவலைகளில் நிழலாடும்

இரண்டு மூன்று மடல்களில் மட்டுமே உரையாடிய எனக்கு இருக்கும் தவிப்பை விட பல வருடங்கள் பழகிய பாக்கியவான்கள் பலருக்கு இருக்கும் மனக்குமுறலை எனது ஆறுதலும் மனவருத்தமும் இந்த இரங்கல் மடலும் சாந்த படுத்தும் என நம்பவில்லை

எனினும் என்னால் இயன்றது இதுவே,


இவ்வுலகை விட்டு பிரிந்த எழுத்தாளர் மௌனி அவர்கள் என்றும் இறவா கதைகள் மூலம் இவ்லோகத்தில் என்றும் வாழ்வார் என்ற நம்பிக்கையோடு எனது அன்பை அவருக்கு காணிக்கை ஆக்குகிறேன்.

மேலும்

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது வருத்தம் கலந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

என்னைப்போன்ற ரசிகர்கள் நெஞ்சில் ஓர் இடத்தில் என்றும் அவரும் அவரது படைப்புகளும் என்றும் வாழும்...

ராசு 03-06-21 08:15 PM

நேற்று இரவு தொலைபேசி மூலம் மௌனி அவர்களின் மரணம் பற்றிய இந்த சோகமான செய்தி கிடைத்தது. சில நிமிடங்கள் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து விட்டேன். மிகுந்த துக்கமடைந்தேன்.

அவர் ஒரு நல்ல எழுத்தாளர் ! காமலோகத்துக்கு இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு !

அவரது ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன் !

microbala 03-06-21 08:29 PM

இருக்கும்போது பலர் மகிழிய பல கதைகளை படைத்தது தனது வாழ்க்கைய அர்பணித்தவர், அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

Sabareeshan25 03-06-21 09:53 PM

மௌனியின் ஒரு சில கதைகளை படித்து இருக்கிறேன்...அவர்களுடைய கதை உணர்வு பூர்வமாக இருக்கும்.... அவரின் இழப்பு நம் தளத்திற்கு மட்டுமல்ல, இலக்கிய உலகிற்கே பேரிழப்பு....
என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன், அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!!!

jenipriyan 04-06-21 12:14 AM

ஆழ்ந்த இரங்கல்கள் .. மிகவும் வருத்தமான செய்தி.. என் அனைத்து கதைகளையும் பாராட்டி , தனிப்பட்ட முறையில் ஊக்கம் அளித்தவர் .. அவர் இல்லாவிடிலும் , அவர்தம் படைப்புகளின் வழி வாழ்வாங்கு வாழ்வார்

smartman 04-06-21 01:29 AM

எதிர்பாராத நிகழ்வு... என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனம் வேதனைப் படுகிறது.

நாங்கள் கைகோர்த்து எழுதிய 20/20 வகை கதைகள் வாசகர்களுக்கிடையே பிரபலமானது. சில மாதங்களுக்கு முன்பு கூட என்னிடம் தனிமடலில் பேசிக்கொண்டிருந்தார். திரும்ப 20/20 எழுதலாம் வாங்க என்று அழைத்தார். தன்னுடைய ஆரோக்கியக் குறைவு பற்றி சொல்லி இருக்கிறார். நானும் ஆறுதல் சொல்லி தேற்றினேன்.

நானும் இங்கே வருவது அறிதாகிவிட்டது. எனவே அவரைப் பற்றி அடிக்கடி தெரிந்துகொள்ளமுடியாமல் போனது. ஆனாலும் அவர் மறைந்த மறுநாளே இங்கே வரச்செய்தது எது என்று புரியவில்லை.

ஆழ்ந்த அனுதாபங்கள். வேதனையுடன் போராடிக்கொண்டே கதைகளையும் படைத்த மௌனியின் ஆன்மா சாந்தியடையட்டும்.

Thaslima 04-06-21 01:49 AM

மௌனி ஒரு பெண் என்பதே ஆச்சரியம் தான். காமலோகத்தில் எழுத்தாளுமை மிக்க ஒரு எழுத்தாளரை இழுப்பது நமக்கு பேரிழப்பாகும். அவரின் குடும்பத்தார்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

whiteburst 04-06-21 04:03 AM

மிக வருத்தமான செய்தி! அதிர்ச்சியாக இருக்கிறது! தனி ராஜாங்கம் நடத்தியவர்! ஆழ்ந்த இரங்கல்கள்

kadir 04-06-21 10:14 AM

அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

maria 04-06-21 01:15 PM

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்

bright 04-06-21 01:40 PM

மௌனியின் இழப்புக்கு பெரிதும் வருந்துகின்றேன்.அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

sudu 04-06-21 03:07 PM

மிகவும் வருத்தமான செய்தி. ஓம் சாந்தி.

baalan 04-06-21 03:22 PM

மிகவும் அதிர்ச்சியான செய்தி இது. அவரது பல கதைகளைப் படித்து ரசித்து இருக்கிறேன். இப்போது அவரே இவ்வுலகில் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. மௌனி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

alexandra 04-06-21 04:18 PM

சிறந்த கதை ஆசிரியர், அவர்தம் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

icefire89 04-06-21 07:08 PM

ஒரு சிறந்த கதாசிரியர்...
அவருடைய இழப்பு நமது காமலோகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு...
ஒரு கதையை பல்வேறு கோணங்களில் எழுதக் கூடிய திறமை படைத்தவர்
நமது மௌனி அவர்கள்...

இந்த செய்தி பொய் என்று யாராவது சொல்லக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது...
வருத்தத்துடன்...

Naturelover 05-06-21 04:05 AM

மிகவும் வருந்தத்தக்க செய்தி. அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறன்.

அவர் படைப்புகளின் வாயிலாக நம்முடன் என்றும் இருப்பார்.

kxklm 05-06-21 04:54 AM

இவரின் சில கதைகளை படித்துள்ளேன் . இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்

Rivalto 05-06-21 05:13 AM

இவ்வுலக வாழ்வை நீங்கினாலும் , நம் மனதில் நீங்கா இடம் பிடித்த விண்ணரசி அமரர் திரு மௌனி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

madhub5u 05-06-21 07:27 AM

ஈடு செய்ய முடியாத இழப்பு. லோகத்துக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கம். ஆழ்ந்த அணுதாபங்கள். அவர் கதைகள் என்றென்றும் மறக்க முடியாதவை

Sent from my Redmi Note 9 Pro Max using Tapatalk

HERMI 05-06-21 07:44 AM

மௌனி : காமத்தில் யாரும் சொல்லாத பல விஷயங்களை சொல்லி கதைகள் தந்தவர். புதிது புதிதாய் யோசித்து, வாசிக்கும் மனங்களை  வசீகரம் செய்தவர். எழுத்துக்கள் மீது தீராத காதல் இவருக்கு, ஆனால் நோய்க்கு இவர் மீது தீராத ஆசை.!!! உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பார்கள்...!!! ஆனால் பல கோடி ரசிகர்களை தவிக்க விட்டு, பரலோகம் சென்று விட்டார்...நம் தோழி மௌனி அவர்கள்.!

என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனம் கனக்கிறது.!!

தோழியின் ஆன்மா நித்திய அமைதியில் சாந்தி பெறட்டும்.!

raingmail 05-06-21 08:43 AM

அருமைச் சகோதரி இறைவனடி சேர்ந்தார் எனும் தகவல் அதிர்ச்சியாய் உள்ளது, கண்ணீர் அஞ்சலி சகோதரிக்கு,,,

bububuin 05-06-21 09:32 AM

மௌனியின் பங்களிப்பு இந்த தளத்தின் வேர்விட்ட ஆலமரம் போலானது. அவரின் கதைகள் வருங்கால படைப்பாளிகளை விழுதுகளாக உருவாக்கியும் வாசிப்பு தேடி வருபவர்களுக்கு நிழலாகவும் இருப்பவை.

bedroom_salak 05-06-21 02:14 PM

மௌனி மறைவு செய்தி கண்டு அதிர்ச்சி..ஏன் நல்ல படைப்பாளியை .. மறைந்தார் என்ற செய்தியை ஏற்க மனது மறுக்கிறது..அவர் பல கதைகளை படைத்து,எல்லோரிடமும் அன்பாக பழகி..எத்தனை கதைகளை இங்கே படைத்து..இப்போ நம்முடன் இல்லை..
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்
க் ஆழ்ந்த இரங்கல்.

kauveri 05-06-21 02:27 PM

அதிர்ச்சிகரமான செய்தி.
காமக்கதைகளில் சரித்திரம் படைத்து விட்டுச் சென்றுவிட்டார். அவர் கதைகள் மூலம் நம்மூடன் உயிரோட இருப்பார் இனி.
கதைகளைப் பற்றி பல விஷ்யங்கள் பேசவேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

gmkumar_007 05-06-21 03:18 PM

ஆழ்ந்த இரங்கல் அவர்கள் குடும்பம் அனைவருக்கும்.

patarasu 05-06-21 04:19 PM

காமலோகத்தின் முன்னணி படைப்பாளராகத் திகழ்ந்த மௌனியின் மறைவு வருத்தமளிக்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.

காமலோகம் உள்ளவரை மெளனியின் படைப்புக்கள் அவருடைய நினைவை நிலையாகப் பெற்றிருக்கும் என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்.

ஓம் சாந்தி!

anbu1994 05-06-21 08:10 PM

அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

rameshmani 05-06-21 09:50 PM

மெளனி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..

tamilplus 05-06-21 10:46 PM

பல கதைகளை எழுதி லோக நண்பர்கள் பலரின் மனதிலும் நீங்க இடம் பெற்ற மௌனி இறந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன் .
தாய்மொழி தமிழ் இல்லை (மலையாளம்) என்றாலும் , பழந்தமிழ் இலக்கியங்கள் உரையாடும் ஆழ்ந்த தமிழ்ப்புலமையும் ஆர்வமும் உடையவராய் இருந்தார் .
காமமில்லா தலைப்புகளில் பல திரிகளில் அவரது பங்களிப்பை காண முடியும் .
ஆழ்ந்த அனுதாபங்கள் .

kazuthaipuli 05-06-21 10:55 PM

பணியின் காரணமாக சில நாட்கள் வராமல் இன்று லோகத்திற்கு வந்த எனக்கு இப்படி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை, கடைசியாக கூட அவருடைய கதைகள் சிலவற்றைதான் படித்து விட்டு சென்றேன்..

வந்தியத்தேவன் 05-06-21 11:13 PM

எதனை கொண்டு ஆறுதல் தேடுவோம்? மரணத்துக்கு ஏது மருந்து?
ஒவ்வொரு நொடியும் மரணம் நம்மை விதவிதமான ரூபங்களில் சந்தித்து கெக்கலித்து வருகிறது

பிரார்த்திப்பது தவிர வேறென்ன செய்யப்போகிறோம்?
நம்மால் என்ன தான் செய்து விட முடியும்?

வேதா 06-06-21 02:07 PM

மிகவும் வேதனைக்குரிய செய்து.....

சகோதரியின் நினைவுகள் அவர் கதைகள் இணையத்தில் உலாவும் வரை அழிவென்பதே காணாத ஒன்றாக காணப்படும் .

ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன் .

malar1988 08-06-21 08:32 PM

பல நல்ல கதை பதிவுகளை தந்தவர் ... அடுத்தவர் கதை பதிவுகள் சிறந்ததாக இருக்கும் பொழுது அதனை முழுமனதோடு பாராட்டுவார் ... அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களை பதிவு செய்கிறேன் ...

shobana_rv80 09-06-21 02:52 PM

அய்யகோ..அருமை நண்பி மெளனி அவர்களின் மறைவுச்செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது..
இந்த கொடிய நோய் கொரோனா இன்னும் எத்தனை பேரைத்தான் காவு வாங்குமோ....
எத்தனை..எத்தனை கதைகள்...காமலோகத்தின் முடிசூடா கதைமகாராணியாக வலம்வந்தவர் இன்று நம்மோடு இல்லை என நினைக்கவே மனம் வெம்புகிறது..
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்...
துயரத்துடன்....

Laal 10-06-21 10:08 AM

மௌனி அவர்களின் இறப்புச்செய்தி அதிர்ச்சியளிக்கிறது.அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

venkat2012 10-06-21 06:06 PM

அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

Sent from my Redmi Note 8 Pro using Tapatalk

susi 11-06-21 05:23 PM

நல்ல எழுத்தாளர். அவரிடம் அறிமுகம் இல்லையென்றாலும் அவரின் பதிவுகளை படித்ததுண்டு. உடல் நலக் குறைவிலிருந்து மீண்டு வந்துவிட்டார் என நினைத்திருந்தேன்.

அவரின் இறப்பு ஏனோ மனதை பிழிகிறது!

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன்!

gymhotking 11-06-21 07:16 PM

நம்பவே முடியல ... மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி...ஆன்மா சொர்க்கத்தில் இளைப்பாரட்டும்

SMS1000 11-06-21 10:14 PM

நண்பர் மௌனி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

rx100 12-06-21 10:46 AM

நீங்கள் மறைந்தாலும் . உங்களுடைய படைப்புகளுக்கு என்றுமே மரணம் இல்லை . உங்களுடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

Vijithacool614 13-06-21 12:14 AM

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!!

தனிமை காதலன் 13-06-21 02:14 AM

பாவங்கள் நிறைந்த ஒரு காலத்தில் மற்றும் உலகத்தில் வாழ்கிறோம் நாம் அதனால் தான் இத்தனை மரணங்கள் நம்மை சுற்றி நிகழ்கிறது.. வாழ்க்கையை பயத்துடன் வாழ வழி செய்கிறது.. கொரோனாக்கு பலியாகும் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.. உங்கள் ஆத்மா சாந்தி அடையவும் உங்கள் ஆசைகளை நிறைவேற்றவும் இறைவனை வேண்டுவோம்..

Naren 13-06-21 02:18 AM

ஆழ்ந்த வருத்தங்கள்...
அவரின் ஆன்மா அமைதியாக உறங்கட்டும்

jollu004 13-06-21 03:11 AM

மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி.. அவருடைய கதைகளுக்கு அடிமை. ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரத்திற்கிறேன்.

tamilmaaran 13-06-21 04:51 AM

மெளனி மனம் கவர்ந்த படைப்பாளி. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். காமலோகத்துக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு. ஈடு செய்ய இயலாத இழப்பு.

srnsk 13-06-21 10:30 AM

ஆழ்ந்த இரங்கல்கள்

rajesh2008 13-06-21 11:16 AM

மௌனி ஒரு பெண் எழுத்தாளர்.அதுவும் காமம் பேசும் ஒரு தளத்தில். இது நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. இருந்தபோதும் வாசிக்க ரசனையான புகழைத் தந்த படைப்புகள் பல தந்து நம் உள்ளம் நிறைந்த நேசர் அவர் இல்லை என்பது வெளியில் நிஜம் ஆனால் அவர் தம் சிறந்த படைப்புகளில் என்றும் வாழ்வார். அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

சந்திரமுகி 14-06-21 11:23 AM

மிக சிறந்த படைப்பாளர்.. மிகப்பெரிய இழப்பு.. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

ஜிசேகர் 14-06-21 04:32 PM

மிகவும் வருத்தமான செய்தி. மனம் மிககனமாக உணர்கிறேன். அன்னாரது ஆத்மா அமைதியாய் துயில வேண்டிக் கொள்கிறேன்.

hi2chat2003 15-06-21 05:30 PM

Quote:

Originally Posted by jaya2019 (Post 1544581)
காமலோக நண்பர்களுக்கு!

என் அருமை தங்கை/நண்பி மௌனி இன்று ஃபரீதாபாத்தில் 11.00 மணிக்கு இறைவனடி புகுந்தார், அக்கா சில காலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். இப்போது கீமோ செய்யும்போது கரோனா நோயால் பாதிக்கப்பட்டார்.

அவர் ஆசைப்படி அவர் இறந்த செய்தியை உங்களுக்கு தெரிவிக்கிறென். காமலோகத்தை உயிராக
நினைத்த உள்ளம். இறக்கும்போதும் அவர்கள் ராசு, அஷோ, ஜேஜே என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.நண்பர் அஷோக்கு குறிப்பாக சொல்ல சொன்னார்,

அருமை அக்கா மௌனிக்கு கண்ணீர் அஞ்சலி,

ஜய2019

நான் முன்பு ஆக்டிவாக இருந்த பொது அவரது கதையை படித்த்து ரசித்து உள்ளேன் , மிகவும் திறமையான ஒருவர் , அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்

serakumar 16-06-21 07:18 PM

அவர் ஒரு பெண் என்பதே இப்போதுதான் தெரியும். மறைவுக்கு அஞ்சலி.

kamakedi 16-06-21 10:47 PM

நீண்ட நாட்களாக என்னால் தளம் வரமுடியவில்லை, வந்தவுடன் தோழி மௌனி மறைந்த செய்தி கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஒரு நல்ல படைப்பாளி, நல்ல விமர்சகர், சக படைப்பாளிகளையும், விமர்சகர்களையும் தக்க சமயத்தில் பாராட்ட தவறியதில்லை.

அவர் கேன்சர் நோயுடன் போராடி கொண்டு இருப்பதாக எனக்கு சொல்லியிருக்கிறார், அந்த போராட்டத்துக்கு இடையே அவரின் படைப்புக்களை கண்டு வியந்திருக்கிறேன். அவருடன் நடந்த தனி மடல்கள் இன்றும் மனதில் இருக்கிறது , இன்பொக்சில் தேடி மீண்டும் வாசிக்க வேண்டும்.

அவரின் படைப்புக்குள் அவர் பெயரை நிலைத்து வைக்கும்.

Thiru Raj 16-06-21 11:37 PM

அதிர்ச்சியான செய்தி.

காமலோகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

மௌனிக்கு என்று தனி வாசகர் கூட்டமே உண்டு.

அவரில்லா விட்டாலும் அவரின் எழுத்து என்றென்றும் நம்மிடையே அவரின் புகழ் பாடிக் கொண்டிருக்கும்.

அவரின் ஆண்மா இறைவனிடத்தில் சாந்தி அடையட்டும்.

ஓம் சாந்தி.

- ராஜ் -


All times are GMT +5.5. The time now is 10:16 PM.

Powered by Kamalogam members