காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   காமலோகத்தை நன்றாக பயன்படுத்துவது எப்படி? (http://www.kamalogam.com/new/showthread.php?t=43219)

mayakrishnan 15-04-08 07:53 PM

காமலோகத்தை நன்றாக பயன்படுத்துவது எப்படி?
 
காமலோகத்திற்கு வருவதற்கு எல்லாருக்கும் ஒரு பொதுவான காரணம் உண்டு. என்றாலும், எல்லாரும் ஒரே விதமாய் இந்த தளத்தை பயன்படுத்துவதில்லை. சிலர் காமக்கதைகளை படிக்க வருகிறார்கள். சிலர் இங்கு ஜோக், அறிவுரை திரிகளை சுற்ற வருகிறார்கள். சிலர் சினிமா, சின்ன திரை பகுதியை சுற்றிவிட்டு போய்விடுகிறார்கள். எனக்கு தெரிந்து ஒரு நண்பர் லாகின் ஆனவுடன் நேராக தீவிர தகாத உறவு பகுதிக்கு போய்விடுவார். மற்ற பகுதி பக்கம் அவர் பெரும்பாலும் வருவதே இல்லை. ஒவ்வொருவர் ஒவ்வொரு ரகம்.

காமலோகத்தில் தினமும் ஐந்து மணி நேரம் சுற்றி கொண்டிருக்கும் நபர்களும் எனக்கு தெரியும். பெரும்பாலனோர் ஒரு வித பழக்கமாய் அடிக்கடி காமலோகம் வருகிறார்கள். இங்கு வரவில்லையெனில் எனக்கு எதோ குறைகிற மாதிரி இருக்கிறது என்கிறார்கள். காமலோகத்தில் அதிக நேரம் செலவழிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் செலவழிக்கும் நேரத்தில் எவ்வளவு நேரம் உருப்படியாய் செலவழிக்கிறோம் என்பது தான் கேள்வி.

காமலோகத்தில் மட்டுமல்ல, இன்று இணையம் முழுமைக்கும் ஒரு பிரச்சனையுண்டு. அதாவது இணையத்தை ஒரு காரண காரியத்திற்காக யாரும் பயன்படுத்துவதில்லை. ஒரு நோக்கத்திற்காக உள்ளே நுழைகிறார்கள். பிறகு மனம் போன போக்கில் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு மாறி கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு பிரச்சனை. நம் வாழ்வை நாம் இப்படி வீண் செய்ய முடியாது. சில நேரம் காரண காரியம் இல்லாமல் சுற்றி கொண்டிருப்பது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். என்றாலும் மனம் என்பதை கட்டுபடுத்தவில்லையெனில் அது ஒரு மதி கெட்ட குதிரையாக நம்மை எங்காவது தள்ளிவிட்டு போய்விடும்.

காமலோக்தை நன்றாக பயன்படுத்துவது எப்படி? காமலோகத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது எப்படி?

காமலோகத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பல திரிகள் உண்டு. அதில்லாமல் ஒவ்வொரு வாசலாய் முன்னேறுவது என்பது கூட அந்த பயிற்சிக்காக தான். இங்கே நான் சொல்ல வருவது அவற்றில் கற்று கொள்ளாமல் தவறவிட்ட விஷயங்களை பற்றி. சிலர் இதனை முன்பே அறிந்திருக்கலாம். அல்லது நான் சொன்ன யோசனைகளை காட்டிலும் மேம்பட்ட மாற்று யோசனைகள் வைத்திருக்கலாம்.

காமலோகத்தில் நாம் செலவழிக்கும் நேரத்தை குறைப்பது எப்படி?

காமலோகத்தின் தொடக்கமாக நாம் காமலோகத்தின் contol panelயை வைத்திருப்பது நலம். அதாவது நாம் லாகின் ஆகும் போது முதற்பக்கமாய் control panelயை வைத்திருந்தால், அந்த பக்கத்தில் நமக்கு வந்திருக்கும் தனிமடல்களின் லிஸ்ட் இருக்கும். அடுத்து நாம் இல்லாத போது பின்னூட்டங்கள் எழுதபட்ட நமது subscribed திரிகளின் லிஸ்டும் இருக்கும். இவற்றை படிப்பதற்கு முன்பு மேல்பட்டையில் உள்ள quick links உள்ள who's online கிளிக் செய்தால் தற்போது ஆன் லைனில் இருக்கும் நம் நண்பர்களை பார்த்து கொள்ள முடியும். Subscribed திரிகளை வாசித்த பிறகு மேல்பட்டையில் உள்ள new posts கிளிக் செய்தால் நீங்கள் இல்லாத போது பின்னூட்டங்கள் எழுதபட்ட/தொடங்கபட்ட அனைத்து திரிகளும் பார்வைக்கு வரும். அவற்றில் உங்களுக்கு தேவையானதை படித்து விட்டு/பின்னூட்டமிட்டு, ஆன் லைனில் இருக்கும் நண்பர்களிடம் உரையாடி விட்டு நிமிர்ந்தால் அதிகபட்சம் 15 நிமிடம் கூட செலவாகி இருக்காது. அதாவது குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது வரும் உறுப்பினர்களுக்கு சொல்கிறேன்.

Subscription பயன்படுத்துவது எப்படி?

நாம் பார்க்கும் திரிகளை நாம் விரும்பினால், அந்த திரியின் மேலே thread tools பகுதியில் சொடுக்கி subscribe செய்து கொள்ளலாம். Control panel பகுதியில் இந்த subscription திரிகள் பின்னூட்ட நிலவரத்தை கொண்டு அடுக்கபட்டு இருக்கும்.

நாம் தொடங்கிய திரிகளில் எந்தந்த திரிகளில் பின்னூட்டம் எழுதபட்டிருக்கிறது என அறிய நாம் my profile பக்கத்திற்கு போய் thread started by the user சொடுக்கினால் பின்னூட்ட நிலவரத்திற்கு ஏற்ப திரிகள் அடுக்கி காட்டப்பட்டிருக்கும். நாம் தொடங்கிய திரிகளுக்கு இது சரியான யோசனை என்றாலும், நாம் பின்னூட்டமிடும் மற்றவர்களின் திரிகளில் மேலும் பின்னூட்டம் எழுதபட்டிருக்கிறதா என அறிய subscribed threads தான் பயன்படும்.

Subscribed threads பகுதியில் folders மூலம் இன்னும் அதிக பயன்பாட்டை கொண்டு வரலாம். உதாரணத்திற்கு நான் subscripions பகுதியை பல folderகளாக பிரித்திருக்கிறேன்.
  • Unedited subscription
  • நான் எழுதிய கதைகள்
  • நான் எழுதிய கதை அல்லாத திரிகள்
  • நான் எழுதிய சவால் கதை திரிகள்
  • சமீபத்தில் நான் பின்னூட்டமிட்ட திரிகள்
  • காமலோகத்தில் மிக முக்கியமான கதை அல்லாத திரிகள்
  • காமலோகத்தின் மிக சிறந்த கதைகள்
  • நான் ரசித்த கதைகள்
Subscription folderகளில் defaultயாக இருக்கும் folderயை unedited subscription என மாற்றி கொள்ளுங்கள். இது அவசரத்தில் இருக்கும் போது உதவும். அதாவது ஒரு திரிக்கு பின்னூட்டம் கொடுக்கும் போது (quick reply மூலமாக அல்ல), அந்த திரி unedited subscription மூலம் பதிவாகி கொள்ளும். நீங்கள் பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதனை தகுந்த folderக்கு மாற்றி கொள்ளலாம்.

இதை தவிர படிக்க வேண்டிய கதைகள், படிக்க வேண்டிய கதையல்லாத திரிகள் என்று இரண்டு subscription folder வைத்திருக்கிறேன். ஒரு சுவாரஸ்யமான திரியை பார்க்கிறோம். அதை பிறகு படிக்கலாம் என ஒதுக்கி வைப்பதற்காகவே. படிக்க வேண்டிய திரிகள் என்கிற folderயை நான்காக பிரித்து வைத்திருந்தேன். பழைய கதைகள், உடனடியாக படிக்க வேண்டியவை, மெதுவாக படிக்கலாம், சமீபத்திய கதைகள் என்கிற நான்கு folderகளையும் சமீபத்தில் 'படிக்க வேண்டிய கதைகள்' என மீண்டும் ஒரே folderயாக மாற்றி விட்டேன். காரணம் படிக்க குறைவான கதைகள் இருந்தால் தான் படிக்க முடியும். இல்லையெனில் 50ற்கு மேற்பட்ட கதைகள் படிக்க வேண்டியவை என லிஸ்ட்டில் மாதக்கணக்கில் தூங்கி கொண்டிருக்கும்.

பின்னூட்டம் கொடுக்கும் போது முடிந்தளவு quick reply தவிர்த்து விடுதல் நலம். ஏனெனில் பொதுவான replyயில் பின்னூட்டம் எழுதும் போதே, அந்த திரிக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுக்கலாம். அதோடு எந்த folderயில் subscribe ஆக வேண்டுமென்பதையும் தேர்வு செய்து விடலாம்.

Folderகளை இதே போல தனி மடல்களிலும் பயன்படுத்த முடியும்.

காமலோகத்தில் நீங்கள் செய்ய போவது என்ன?

தொடக்க காலங்களில் நான் எல்லா பகுதிக்கும் சுற்று பயணம் போவதுண்டு. ஆனால் தற்போது கதைகள், கதைகள் பற்றிய உரையாடல் பகுதிக்குள் என்னை சுருக்கி கொண்டு விட்டேன். காரணம் காமலோகம் மிக பெரிய கடல். தினம் பல திரிகள் தொடங்கபடுகின்றன. பல பின்னூட்டங்கள் எழுதபடுகின்றன. அத்தனையும் பார்த்து கொண்டிருப்பது முடியாத காரியம். அதற்கு பதிலாக எனக்கு ஆர்வமானதை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன். மற்ற பகுதிகளுக்கு போவதில்லை என்பதல்ல. மிக குறைவாக போகிறேன் என்பது தான் உண்மை. உங்கள் ஆர்வத்தை பொறுத்தும் நீங்கள் தினசரி தளத்திற்கு செலவழிக்கும் நேரத்தை பொறுத்தும் உங்கள் காமலோக உலாவின் அளவுகோளை உருவாக்கி கொள்ளுங்கள்.

முகப்பு பக்கம்

Forum home pageயில் top 5 stats தெரிவது போல வைத்திருப்பது நலம். காரணம், நிர்வாக அறிவிப்புகள், கடைசியாக பின்னூட்டம் எழுதபட்ட திரி விவரங்கள், கடந்த 30 நாட்களில் அதிக ஹிட்ஸ் வாங்கிய திரிகளின் விவரம் போன்றவை அதில் காணலாம். அதே போல எல்லா வாசல்களும் expandedயாக முகப்பு பக்கத்தில் தெரிவதும் அவசியம்.

காமலோகத்தில் கதைகளை வாசிப்பது

காமலோகத்தில் ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன. தினமும் புது கதைகள் பதிக்கபட்டபடி இருக்கின்றன. எல்லாவற்றையும் படிப்பது என்பது இயலாத காரியம். சில காலம் காமலோகத்தில் சுற்றி வந்தபிறகு பிரபல எழுத்தாளர்கள் யார் என்பது நமக்கு தெரிந்துவிடும். ஆக கதைகளை வாசிப்பது என்பதை இரண்டாக கொள்ளலாம். ஒன்று கடந்த காலத்தில் பதிக்கபட்ட சிறப்பான கதைகள். இன்னொன்று தற்போது பதிக்கபட்டு கொண்டிருக்கும் கதைகள்.

ஓர் உதாரணம் சொல்கிறேன். ஐடியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நம் தளத்தின் உறுப்பினர். காலை முதல் மாலை வரை அலுவலக நேரத்தில் காமலோகம் அவரது கணிப்பொறியில் திறந்தே இருக்கும். காலையில் வந்தவுடன் அவர் தளத்தில் new postயை பார்த்து படிக்க வேண்டிய கதைகளை subscribe செய்து கொள்வார். பிறகு நாள் முழுக்க நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொன்றாய் வாசிப்பார். பின்னூட்டம் எழுதுவார். தவிர தங்க கதைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொன்றாக வாசித்து கொண்டிருக்கிறார்.

இன்னொரு உதாரணம் நம் வாத்தியார். மாதந்தோறும் சிறந்த கதைக்கான வாக்கெடுப்பு நடக்கும் சமயம் அதே திரியில் மாதத்தில் முடிக்கபட்ட அனைத்து கதைகளுக்கான சுட்டிகள் கொடுக்கபட்டிருக்கும். வாக்கெடுப்பிற்கான கடைசி நாளுக்குள் அனைத்து கதைகளையும் வாசித்து விடுவார்.

படிக்க வேண்டிய மற்ற திரிகள்

காமலோகத்தின் நோக்கம்

காமலோகம் உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

தமிழை வளர்க்கிறதா காமலோகம்?

நண்பர்களே, உங்கள் 'காமலோக உலா' எப்படி?

காமலோகத்தில் அதிகம் பார்க்கும் பகுதி எது?

காமலோகத்தில் களிப்பது எப்படி?

காமலோகம் புரொடக்ஷன்ஸ்

தங்க வாசலை நோக்கி

உங்கள் பெயர்,அவதாரம்,கையெழுத்து பற்றி?

காமலோக நண்பர்களின் பூர்வீக பூமி எது?

காமலோக பயனாளர் பெயரை தேர்ந்தெடுப்பதில் முரண்பாடு ஏன்?

காமலோக நண்பர்களின் வயது என்ன?

காமலோக உறுப்பினர்கள் சந்திக்கலாமே?

காமலோகத்தில் பெண் உறுப்பினர்கள் உள்ளனரா?

காமலோக உறுப்பினர்களுக்குள் திருமணம்?!

காமலோகத்தினை பெண்ணாக உருவகப்படுத்தி

கதைகளுக்கு சுவாரஸ்யமான பின்னூட்டங்கள் எழுதுவது எப்படி?

எழுத்துரு அமைப்பு (Font Setup)

தமிழில் எழுத சுலபமான 7 வழிகள்


குறிப்பு

இந்த திரி எழுத எனக்கு பெரிதும் ஊக்கமளித்த நிர்வாக உறுப்பினர் ஹயாத் அவர்களுக்கு என் நன்றிகள். திரிகளை தொகுத்து சுட்டிகளை கொடுத்தது அவரது கடின உழைப்பே.

இந்த திரியை குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டமாய் எழுதி இதனை மேம்படுத்துங்கள் நண்பர்களே.

rina 15-04-08 08:09 PM

மிகவும் பிரயோசனமாக ஒரு ஆக்கத்தை இங்கே பதித்துள்ளீர்கள். முடிந்த அளவு அதனை உபயோகப் படுத்தப் பார்கின்றேன். நன்றி

superhero 15-04-08 08:19 PM

நன்றி மாயகிருஸ்னினன் ,மிகவும் உபயோகமான தகவல்..........என் போன்று நன்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்...........

சூர புலி 15-04-08 10:37 PM

மா.கி., உங்களின் மற்றுமொரு அருபெரு திரியாக இது திகழும் என்பதில் ஐயமில்லை.
நீங்கள் சொன்ன அனைத்துமே உண்மை. முதலில் நான் சிரிப்பு பகுதியில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன்... நண்பர் பில்லாவால் கதை பகுதியில் நுழைந்து இப்போது வெள்ளிவாசலில்... விரைவில் தங்க வாசலிலும் சுற்றுவேன்..

முடிந்தவரை நல்ல கருத்துக்களையும் நண்பர்களுக்கு கூற மறக்கமாட்டேன்.

பல நல்ல தகவல்கலை சொல்லியுள்ளீர்கள்..மிகவும் நன்றி நண்பரே.

உங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்
சூர புலி

anusuya 15-04-08 11:14 PM

நண்பர்களுக்கு அவர்கள் லோகத்தில் இருக்கும் நேரத்தை எப்படி திறம்பட பயன்படுத்துவது என்று விளக்கி நல்லதொரு திரியை தொடங்கியுள்ளீர்கள்...வாழ்த்துக்களுடன் சில ஐகேஷ்கள்....

rose1604u 15-04-08 11:28 PM

மிக மிக அருமையான உபயோகமான திரி இது... இப்படியான அருமையான ஒரு திரி ஆரம்பித்த நண்பர் மா.கி அவர்களுக்கு கோடி நமஸ்காரம்...

நிச்சயம் இந்தத் திரியினால் பலரும் பலனடைவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை...

vaaliban 16-04-08 12:59 AM

சபாஷ் மாகி !!

மனதில் உதித்த விஷயத்தை ........பத்திரிக்கைகளில் வருமே தலையங்கம் என்று அதைப் போல் நேர்த்தியாக தொகுத்து வழங்கி இருப்பது , புதிய உறுப்பினர்களுக்கு மட்டும் அல்ல , பழைய நண்பர்களூம் சீர்திருத்தி கொள்ள உபயோகமான திரியாக இருக்கும் !

மீண்டும் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் !!!

thangar.c 16-04-08 02:02 AM

நண்பர் மாகியின் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவுகளில் இதுவும் ஒரு அருமையான பதிவு. ஒரு ஆசிரியர் போல தெளிவாக விளக்கியுள்ளார். காமலோகத்தில் உலாவுவதற்கும் ஒரு பயிற்சி வேண்டித்தான் இருக்கிறது. நண்பர் மாகியைப் போல 'டெக்னிக்கலான டிப்ஸ்' தருவது எம்மைப் போன்றவருக்கு மிகவும் பயனளிக்கும். நல்ல தகவலுக்கு நன்றி நண்பா...

subscription மற்றும் Post Reply, Quick Reply பற்றி நிறைய விபரங்கள் எமக்கு புதியவை. இரண்டு மூன்று முறைப் படித்து புரிந்துகொண்டேன். அறியாத காரணத்தால் இதுவரை பெரும்பாலும் 'Quick Reply' யில் தான் பின்னூட்டங்கள் இட்டேன். இப்பொழுது தான் Post Reply யின் பயன்களைக் கற்றுக் கொண்டேன். கற்றுத் தந்தமைக்கு நன்றி நண்பரே....

bernard123x 16-04-08 10:20 AM

பயனுள்ள தகவல்கள்
 
மிகவும் அருமையான, பயனுள்ள தகவல்கள் பலவற்றை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. நன்றி.

Hayath 16-04-08 10:40 AM

மாயகிருஷ்ணன் அவர்களே ,

எங்களுக்காக நேரத்தை ஒதுக்கி தாங்கள் இந்த கட்டுரையை படைத்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி..புதிதாக காமலோகம் வருபவர்களும், பழைய உறுப்பினர்களும் காமலோகத்தை எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்பதை இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்வார்கள் என்பது உறுதி.

உங்கள் இந்த கட்டுரை மூலம் நானும் சில விசயங்களை தெரிந்து கொண்டேன். Subscription- பற்றி நன்றாக விளக்கியுள்ளீர்கள்.தங்களுடைய ஒவ்வொரு திரியும் எங்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்திருப்பது சிறப்பு.

நான் அதிகமாக காமலோகத்தில் பார்ப்பது காம ஆலோசனைகள்/விவாதங்கள் பகுதியே அதன்பின்னர்தான் கதைகளை படிக்கிறேன், நிர்வாக விஷயங்களுக்காக பல திரிகளை பார்வையிடுகிறேன் அதில் எனக்கு பிடித்த சில திரிகளில் மட்டுமே பின்னூட்டமிடுகிறேன்.

உங்கள் சிறப்பான காமலோக பங்களிப்பை பாராட்டி 500 இ-பணங்கள் வழங்குகிறேன்.

வாழ்த்துக்கள் & பாராட்டுகள் & 5*


All times are GMT +5.5. The time now is 07:19 PM.

Powered by Kamalogam members