காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   லோகக் கவியரசர் நல்லவன் அவர்களின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துவோமே..!! (http://www.kamalogam.com/new/showthread.php?t=65685)

ஸ்திரிலோலன் 13-01-15 08:39 PM

லோகக் கவியரசர் நல்லவன் அவர்களின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துவோமே..!!
 
லோகத்தில் கவியரசர் என்று அழைக்கப்படும் நண்பர் நல்லவன்1010 Nallavan1010 http://www.kamalogam.com/new/customa...tar33733_1.gif அவர்களின் 2000 பதிவுகளை வாழ்த்துவோமே..!! தமிழில் அனைவரும் வியப்புறும் புலமை பெற்றதோடு, கவிதைப் பின்னூட்டங்கள், காம விடுகதைகள், வா.சவால்களை வெற்றிகரமாக நடத்தியது, புதியவர்களை ஊக்குவித்தல் என்று லோகத்தில் கலக்கும் நண்பரை
Quote:

Originally Posted by xxxGuy (Post 1320070)
புதியவர்கள் வரப் போகும் இப்புத்தாண்டில் நிர்வாகப் பணிகளில் புது ஆர்வத்தை ஊட்ட, நமது தளத்தில் எறும்பு போல் சுறுசுறுப்பாய் உலா வரும் Nallavan1010-வை புதிய நிர்வாக உதவியாளராக இணைத்துக் கொள்கிறோம்

சமீபத்தில் தலைவரே பாராட்டி, நிர்வாகப் பதவி கொடுத்ததையும் நினைவுகூற விரும்புகிறேன்...

தொடர்ந்து கலக்குங்கள் அண்ணா...

RasaRasan 13-01-15 08:46 PM

நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், தமிழ் புலவர் என பன்முகம் கொண்ட நம்ம நல்லவரின் 2000 பதிவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாசகர் சவால் அறிவிப்பு திரியை 2000 திரியாக பதிவிட வேண்டும் என நினைத்திருந்தார். ஆனால் பல வேலைகளினால் அது முடியாமல் போய் இப்போது 2000 பதிவை நல்லவர் தொட்டுள்ளார்.

இந்த நேரத்தில் நிர்வாக உதவியாளராகவும் நல்ல்லவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொருத்தமானவருக்கே தலைவர் இந்த பதவியை தந்துள்ளார்.

நல்லவர் வல்லவர் மேலும் பல்லாயிரம் பதிவுகளை தர வாழ்த்துகிறேன்.

வாழ்த்து திரியினை தொடங்கிய நண்பர் ஸ்திரிலோலனுக்கும் நன்றி.

tdrajesh 14-01-15 04:36 AM

அருமை நண்பர் நல்லவன் 2000 பதிவுகளை தாண்டியதற்கு என் பாராட்டுகள்.

கவிதைகள், கதைகள் என்று சமீபத்தில் கலக்கி கொண்டிருக்கும் நண்பர் நிர்வாகத்தில் இணைந்தது சிறப்பானது.
Quote:

Originally Posted by RasaRasan (Post 1320325)
நல்லவர் வல்லவர் மேலும் பல்லாயிரம் பதிவுகளை தர வாழ்த்துகிறேன்.

ரா.ரா. அழகாக சொல்லிவிட்டார். வாழ்த்துகள்.

shiva19 14-01-15 07:12 AM

அன்பு நண்பர் நல்லவன் அவர்கள் 2000 பதிவுகளை தாண்டி மேலும் சிகரம் நோக்கி சிங்க நடை போட்டு அதோடு மேலும் பல சிறப்பு பதவிகள் வந்து அடையவும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

anabayan 14-01-15 11:41 AM

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1320323)
லோகத்தில் கவியரசர் என்று அழைக்கப்படும் நண்பர் நல்லவன்1010 Nallavan1010 அவர்களின் 2000 பதிவுகளை வாழ்த்துவோமே..!!

ஓரிரு வரிகள் பின்னூட்டமிடுவதே சிரமமாக கருதப்படும் வேளையில் நாலடியார் போல ஒவ்வொரு பின்னூட்டத்திலும் நான்கு வரி கொண்ட கவிதை மணியை கோர்த்து பின்னூட்டமிடுவதில் வல்லவர் நம் கவிச்சக்கரவர்த்தி நல்லவர் ஒருவரே என்றால் அது மிகையாகாது. அந்த கவிதைகளால் எவ்வளவோ அறியாததையும் புரியாததையும் நாம் தெரிந்து கொண்டோம் என்றால் அதுவும் மிகையாகாது.

அத்தகைய சிறப்பு மிக்க பதிப்புக்கள் 2000த்தை நமக்களித்த கவியரசரை பாராட்டுவதோடு மேலும் பல்லாயிர சிறந்த பதிப்புக்களை நமக்களித்திட வாழ்த்துகின்றேன்.

கவிச்சக்கரவர்த்தியை வாழ்த்த திரி தொடங்கிய தம்பி ஸ்லோவுக்கு நன்றியும் சபாஷூம்.

தாமதமான வாழ்த்துக்கு வருந்துகிரேன் கவியரசே

vjagan 14-01-15 05:18 PM

நண்பரும் சிறந்த படைப்பாளருமான Nallavan1010 http://www.kamalogam.com/new/customa...tar33733_1.gif அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
அவருக்கு மேலும் மேலும் சிறப்புக்கள் சென்றடைய வாழ்த்துகள அய்யா அம்மணி !

oolvathiyar 14-01-15 05:41 PM

கவிதையாகவே பின்னூட்டம் எழுதி 2000 தொட்டிருக்கிறார் என்றால் அது மகத்தான சாதனை கவிஞரை பாராட்டுகிறேன்.

NamiXXX 14-01-15 09:54 PM

நண்பர் நல்லவருக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் !!!

கண்ணன்76 14-01-15 11:46 PM

பல துறை வித்தகர் நல்லவருக்கு என் வாழ்த்துக்கள்.

eros 14-01-15 11:57 PM

Quote:

Originally Posted by anabayan (Post 1320386)
ஓரிரு வரிகள் பின்னூட்டமிடுவதே சிரமமாக கருதப்படும் வேளையில் நாலடியார் போல ஒவ்வொரு பின்னூட்டத்திலும் நான்கு வரி கொண்ட கவிதை மணியை கோர்த்து பின்னூட்டமிடுவதில் வல்லவர் நம் கவிச்சக்கரவர்த்தி நல்லவர் ஒருவரே என்றால் அது மிகையாகாது. அந்த கவிதைகளால் எவ்வளவோ அறியாததையும் புரியாததையும் நாம் தெரிந்து கொண்டோம் என்றால் அதுவும் மிகையாகாது.

உண்மை. ஒரு சிறந்த கவிஞர் நம் லோகத்தில் இருப்பது அதிசயம், நமக்கு பெருமை. அவர் இப்ப நிர்வாகத்தில் சேர்ந்திருப்பது ரொம்ப பொருத்தம்.


All times are GMT +5.5. The time now is 09:55 PM.

Powered by Kamalogam members