புதிய ஐகேஷ் (iCash) பாயிண்ட் சிஸ்டம்
நண்பர்களே...!!
எளிமையான முறையில் ஒரு பாயிண்ட் சிஸ்டம் தேடிக் கொண்டிருந்தேன் அது iCash வடிவில் கிடைத்துள்ளது. iCash என்பதனை, kPoints, kCash என்று மாற்றலாமா என்று யோசித்து வருகிறேன். அதனால் அக்டோபர் மாதம் முழுவதும் பரிசோதனை செய்யப் பட்டு, நவம்பரில் நடைமுறைப் படுத்தப் படும். iCash வழங்கும் முறை: 1) அக்டோபர் 1-ம் தேதி முதல், மன்றத்தில் எங்கு யார் புதிய திரி (தலைப்பு) துவக்கினாலும், அவர்களுக்கு ஒரு திரிக்கு 1 iCash தானாகவே கிடைக்கும். (விரைவில், இந்த முறை நீக்கப் படும்) 2) அக்டோபர் 1-லிருந்து துவங்கும் புதிய கதைகளில், முடிவடைந்த கதைகளுக்கு மட்டும் iCash சன்மானம் கொடுக்கப் படுகிறது. ஒவ்வொரு கதை முடிந்த பின்னும், அதற்கான தனி திரியில் விண்ணப்பித்து கதாசிரியர்கள் தங்கள் கதைக்கான iCash வெகுமதியை பெற்றுக் கொள்ளலாம். மூன்று பாகம் வரை உள்ள கதைகளுக்கு 5-10 iCash. 3 பாகங்களுக்கு மேல் உள்ள கதைகளுக்கு 10-25 iCash. கதையின் எழுத்துப் பிழைகள், விதிமுறைகள் கடைபிடித்தலுக்கு ஏற்ப சன்மானம் கூடலாம், குறையலாம். 3) மாதம் தோறும் நிர்வாகத்தில் உதவி செய்யும் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு, நிர்வாகியால் குறிப்பிட்ட iCash தொகை வழங்கப் படும். அவர்கள் மன்றத்தில் வரும் சிறந்த பதிப்புகளுக்கு, நிர்வாகத்துக்கும், மற்றவர்களுக்கும் மன்றத்தில் உதவி செய்யும் உருப்பினர்களுக்கு அதை சிறிது சிறிதாக அன்பளிப்பாக வழங்குவார்கள். 4) தங்களிடம் iCash உள்ளவர்கள் யாரும், தங்களுக்கு பிடித்த படைப்பாளிகள் யாருக்கு வேண்டுமானாலும் அதை சன்மானமாக வழங்கலாம். உங்கள் ஒவ்வொரு பதிப்பின் வலது பக்கத்தில், வார்னிங் அளவுக்கு கீழ், உங்களிடம் எவ்வளவு iCash உள்ளது என்று தெரியும். அவரது பதிப்புக்கு வெகுமதி வழங்க நினைத்தால் அருகில் உள்ள donate லிங்கினை சொடுக்கி அவருக்கு உங்களிடம் உள்ள iCash-ஐ சன்மானமாக வழங்கலாம். சிறிய குறை: இதில் தற்போதுள்ள முக்கிய குறை: Donate பட்டனை தட்டும் போது, தமிழில் பெயர் வைத்துள்ளவர்களுக்கு கொடுக்கும் போது அவர்கள் பெயர் சரியாக தெரியாது, நீங்கள் மீண்டுமொருமுறை அவர்கள் பெயரை தட்டச்சு செய்ய வேண்டும். சோதனைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த பின், இந்த பாயிண்ட் சிஸ்டத்தை வேறு பல விதங்களில் மன்றத்தில் உபயோகிக்க உள்ளோம். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.. |
மிக நல்ல வரவேற்க்கக்கூடிய நாணய பகிர்ந்தளிப்பு.
|
இன்னும் எனக்கு சரியாகப் புரியவில்லை (நேற்று அருந்திய விஸ்கி இன்னும் முழுதாக வெளியேறவில்லை :-) மூளை சிந்திக்க மறுக்கிறது), ஆனாலும் உங்கள் புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
|
எனக்கும் புரியவில்லை....ஆனால் எதோ புதுவிதமாக தெரிகிறது... icash என்பது நாங்கள் ஸ்டார் கொடுப்பது போல் உள்ளதா என்று தெரியவில்லை...
|
தலைவரே உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் கதை எழுதுபவர்களுக்கு மட்டுமா அல்லது கருத்துக்கள் பத்ப்பவர்களுக்குமா ?அது தான் புரியவில்லை.
|
மன்னிக்க வேண்டும் தலைவரே.......... கொஞ்சம் விளக்கமாக விளக்குங்களேன்.........
|
Icash ...புதிதாக உள்ளது...இதனை பிடித்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கலாம் என்றால்....இதனை பெற்றவர்களுக்கு என்ன பயன்? கொடுத்தவர்களுக்கு குறைந்து விட்டால்...இன்னும் கொஞ்சம் விளக்கமாக விளக்குங்களேன்....
|
ஐகேஷ் முறை!
iCash முறையில் கிடைக்கப் பெறும் சன்மானத்தின் அளவுக்கேற்ப பல்வேறு வாசல்களைத் திறந்து விடலாமே! ஆசிரியர் அடியேனின் இந்த ஆலோசனையை ஏற்பாரா?
|
அந்த கேஷை வைத்து என்ன செய்யமுடியும் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்
|
புதிய முறையானா iCash நல்ல ஐய்டியா என்றே தோன்றுகிறது. இதன் மூலம் நமக்கு பிடித்தவர்களுக்கு நாம் பரிசும் கொடுக்க முடிகின்றது என்பது ஒரு புதிய அனுகுமுறை, நிற்வாகி நினைப்பது போல் இதை kCash என்று மாற்றினால் நன்றாகவே இருக்கும். ஒரு சந்தேகம் இந்த iCash முறையினால் வாசகர்களுக்கு என்னென்ன பயன் என்பதையும் எடுத்து இயம்பினால் நன்றாக இருக்கும். முடிந்த கதைகளுக்கும் விதிமுறைகள் கடைபிடித்து எழுதுதல், எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுதல் , போன்றவற்றை மனதில் வைத்து iCash சன்மானத்தை நிர்னயித்து இருப்பது நமது தள வாசகர்களுக்கு தரமன கதை கிடைக்க வழி வகுக்கும்.
|
All times are GMT +5.5. The time now is 09:50 PM. |
Powered by Kamalogam members