காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நடிகர் நாகேஷ் காலமானார் (http://www.kamalogam.com/new/showthread.php?t=49090)

muthuveeran 31-01-09 12:41 PM

நடிகர் நாகேஷ் காலமானார்
 
பிரபல நடிகர் நாகேஷ் மரணம்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான நாகேஷ் இன்று (31.1.09) சனிக்கிழமையன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.

குண்டு ராவ் எனும் இயற்பெயர் கொண்ட நாகேஷ் அவர்கள் ஒரு பாரம்பரியம் மிக்க கண்ணட பிராணமர் குடுமத்தில் 1933 ஆம் ஆண்டு. பிறந்தவர். நீண்ட காலம் உடல்நலம் குன்றியிருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் நாகேஷ்

திரையுலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்து நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு மிகச் சிறந்த குணசித்திர நடிகாரக திகழ்ந்தவர் நாகேஷ். எம் ஜி ஆர், சிவாஜி தொடங்கி நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமை அவருக்கு உண்டு.
நடிகர்களுக்கு என்று ஒரு கூறப்படும் ஒரு உடல்வாகு இல்லாத நிலையிலும், நடிகனுக்கு திறமைதான் முக்கியம், உடல் அமைப்பு இரண்டாம் பட்சமே என்று வெளியுலகுக்கு எடுத்துக் காட்டியெ பெருமை அவருக்கு உண்டு.

நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் சிறந்து விளங்கியவர் நாகேஷ். இயக்குநர் ஸ்ரீதர் அவர்களால் நவக்கிரகம் எனும் படத்தில் அறிமுகமான நாகேஷ் பின்னர் தனது நடிப்புத் திறமையினால் விறுவிறுவென உயர்ந்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்.

நெஞ்சில் ஓர் ஆலையம் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த மருத்துவ உதவியாளர் வேடம் அந்தப் படத்துக்கு ஒரு பெரும் ஏற்றத்தை தந்தது. காதலிக்க நேரமில்லை படத்தில் அவர் பேசும் வசனமான ' என் படம் வெளிவரட்டும், பிறகு ஒவ்வொரு வெள்ளைக்காரனும், வீ டோண்ட் வாண்ட் இங்கிலிஸ் பிக்சர்ஸ், வீ வாண்ட் ஒன்லி தமிழ் பிக்சர்ஸ்' எனும் வசனமானது தமிழ் திரையுலகில் சிறப்பை வெளிக்கொண்டு வந்து இன்றும் உயிருடன் இருக்கிறது.

ஒரு திரைப்படம் எடுப்பது எவ்வளவு சிரமாம விடயம் என்பதனை அந்தப் படத்தில் அவரும் ஸ்ரீதரும் இணைந்து கொண்டு வந்திருதனர். நாகேஷ் அவர்களின் முன்னேற்றத்தில் இயக்குயந்ர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலசந்தர் ஆகியோருக்கு பெரும் பங்கு உண்டு.

பாலசந்தர் அவர்களின் நாடங்கள் திரைப்படமான போது அதில் பலவற்றில் நாகேஷ் நடித்தார். எதிர்நீச்சல், நீர்குமிழி போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

எதிர்நீச்சல் படத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே சமூகத்தில் நிலவிய சமுதாய ஏற்ற தாழ்வுகளை அவர் வெளிக்காட்டியிருந்தார். சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் அப்பாவி இளைஞராக நடித்த அவர் திரைப்படத்தில் கதாநாயகனாக முன்னேறிய போதும் தனது கடந்த காலத்தை மறக்காமல் அந்த சர்வர் உடையை பத்திரப்படுத்தி வைத்திருந்தது இன்றும் பார்போரை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம்.

திருவிளையாடல் படத்தில் அவர் ஏற்றிருந்த ஏழைப் புலவர் தருமி வேடம் தமிழ் திரையுலகில் ஒரு முத்திரையாக பார்க்கப்படுகிறது. அந்தக் காட்சி குறித்து விவாதிக்கும் போது, இயக்குநர் ஏ பி நாகராஜன் நடிக்கும் பொறுப்பை நாகேஷின் முடிவுக்கு விட்டுவிட்டார்.

மிகச்சிறப்பாக அமைந்த அந்தக் காட்சி குறித்து பல வருடங்களுக்கு பிறகு நாகேஷ் அவர்கள் ஒரு பேட்டியில் அதற்கான உந்துதல் எங்கிருந்து கிடைத்தது என்று கூறியிருந்தார். அதில் சென்னையிலுள்ள மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தின் குளக்கரையில் தனது சொத்துகளை இழந்த ஒரு பெரியவர் ஒரு நாள் தனிமையில் தனது நிலை கண்டு புலம்பிக் கொண்டிருந்தாகவும் அதை கண்டு அவரது உணர்ச்சிகளை உள்வாங்கிக் கொண்டு இந்த தரும் வேடத்தில் வெளிக் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அப்பேற்பட்ட ஒரு திறமை வாய்ந்த ஒரு மேதை அவர். ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகில் இரு துருவங்களான சிவாஜி எம் ஜி ஆர் ஆகியோருடன் நடித்தவர். (இருவரையும் ஒரே நேரத்தின் அணைத்துச் சென்றவர்)

நாகேஷ் ஒரு பல்துறை வித்தகர்....ஒரே வார்த்தை ஜீனியஸ்
------------------------------------------------------------

நாகேஷ் குறித்து மேலும் தகவல்களை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆதி 31-01-09 12:51 PM

அன்னார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

sureash 31-01-09 01:02 PM

அன்னார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்திப்போம்.

selvenselvi 31-01-09 01:06 PM

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சிறந்த நகைச்சுவை நடிகரை இழந்தோம்.

mouse1233 31-01-09 01:12 PM

கண்ணீர் அஞ்சலி!
 
வாழ்க்கையில் கஷ்டம் என்பது சின்ன கல் போல அதை கண் அருகில் வைத்து பார்த்தால் உலகை மறைத்து விடும்..
கொஞ்சம் தள்ளி வைத்து பார்த்தால் அதன் அளவு புரியும்
தூக்கி தூரப்போட்டு விட்டால் அப்படி ஒன்று இருப்பதே தெரியாது
இதை எழுதியது கே.பாலச்சந்தர் என்றாலும் அதை உச்சரித்த நாகேஷின் குரல் எனக்கு என்றும் கேட்டுக்கொண்டே இருக்கும்...
http://tbn0.google.com/images?q=tbn:...eye-crying.jpg

sunrise 31-01-09 01:24 PM

காமலோக நண்பர் முத்துவீரன் நாகேஷ் அவர்கள் பற்றிய அறிய செய்திகளை நம் காமலோக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாகேஷ் அவர்கள் கன்னடர் என்றாலும், நம் தமிழ் திறைவுலகிற்க்காக பலவித அரிய படங்களில் நடித்து அனைவர் மனதிலும் நீங்காத இடம் கொண்டவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

sajid80 31-01-09 01:40 PM

நடிகர் நாகேஷ் ஒரு ஜீனியஸ் என்பதில் சந்தேகமேயில்லை...
அவரின் சிற{ரி}ப்புக்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்...
இரட்டை அர்த்த,விரச வசனம் பேசாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
அனைவரையும் தன் இயல்பான நடிப்பால்.நகைச்சுவையால் சந்தோஷபடுத்திய நாகேஷின் மரணம் தமிழ்திரையுலகுக்கும்,தமிழ் ரகிகர்களுக்கும் ஈடுகட்ட முடியாத பெரிய இழப்பே!
மரணம் என்னும் கனியை அனைவரும் சுவைத்தே ஆகவேண்டும்...
இன்று அவர்,நாளை நாம்....
அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள்வானாக...

BILLA 31-01-09 01:41 PM

படங்கள் இல்லாத காலங்களிலும் அவரை ஆதரித்து முக்கிய வேடங்கள் தந்த நடிகர் கமல் அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்..

நகேஷ் ஒரு தலைசிறந்த நடிகர்..... முகபாவங்களை மாற்றியே பலரை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தவர்...

முத்துவீரனுக்கு இந்த இடத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

tavan 31-01-09 01:51 PM

ஒரு நகைச்சுவை சகாப்தம் சரிந்து விட்டது. அவர் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம்.

lawrence 31-01-09 01:51 PM

நாகேஷ் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.


All times are GMT +5.5. The time now is 11:28 AM.

Powered by Kamalogam members