காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   சிறந்த காமலோக விமர்சகர் 2008: துவக்கம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=47602)

xxxGuy 11-11-08 09:05 AM

சிறந்த காமலோக விமர்சகர் 2008: துவக்கம்
 
நண்பர்களே,

சென்ற வருடம் முதல் காமலோகத்தில் தரமான கருத்துக்களை திரிகளில் வழங்குபவர்களை சிறப்பிக்க இந்த "சிறந்த காமலோக விமர்சகர்" பட்டம் ஆரம்பிக்கப் பட்டது. இதன் மூலம் நீங்கள் காமலோகத்தில் தரமான கருத்துக்கள், விமர்சனங்கள் வழங்கும் 5 பேரை நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யலாம் (இந்த திரியில் அல்ல). அவர்களில் அதிகமாக பரிந்துரை செய்யப் பட்டவர்கள் வாக்கெடுப்பில் வைக்கப் பட்டு அவர்களில் ஒருவர் சிறந்த காமலோக விமர்சகராக தேர்வு செய்யப் பட்டு சிறப்பிக்கப் படுவார். இந்த வருடம் நிறைய புதியவர்கள் வந்துள்ளதால் போட்டி இன்னும் நன்றாக சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

பரிந்துரை செய்வதற்கென தனி திரி நிர்வாக போட்டிகள் களம் பகுதியில் உள்ளது.
http://www.kamalogam.com/new/showthread.php?t=47601
அங்கு கருத்துக்களுக்கு என்று தனிப் பதிப்பு கூடாது. அதனால், இந்த அறிவிப்பு திரியை கருத்துக்கள் பதிக்க உபயோகப் படுத்தவும். இங்கு உங்கள் பரிந்துரைகளைப் பதிக்க வேண்டாம்.

அங்குள்ள பரிந்துரை திரி இன்று முதல் 20 நாட்களுக்கு (30 நவம்பர் 2008 வரை) திறந்திருக்கும். பிறகு ஒரு மாத வாக்கெடுப்புக்கு வைக்கப் படும்.

நன்றி..

coolanu 11-11-08 09:15 AM

சிறந்த விமர்சகர்.

பின்னூட்டங்களின் மூலம் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி, லோகத்தை கலகலப்பாக வைத்திருக்க, அயறாது பின்னூட்டம் இடுபவர்களுக்கு வழங்கி சிறப்பிப்பது அருமையான விஷயம்.

லோகம் மேம்பட இப்படியான அனைத்து சிறப்பான விஷயங்களையும் செய்துவரும் தலைவருக்கு நன்றி.

பரிந்துரைக்கும் திரியில் என்னுடைய விருப்பத்தை பரிந்துரைக்குறேன்.

நன்றி

தமிழா 11-11-08 09:23 AM

காமலோக விமர்சகருக்கும் பரிசா ? உங்கள் இந்த முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் , இதன் மூலம் காமலோக விமர்சகர்களை உற்சாக படுத்தலாம் .

வரிப்புலி 11-11-08 09:25 AM

நானும் ஆவலோடு எதிர்பார்த்த ஒன்று இந்த விமர்சகர் போட்டி, இந்த வருடத்தில் போட்டி மிகவும் கடினமானதாக இருக்கும் என்று எதிர்பார்கிறேன். புதியவர்கள் பலரின் பங்களிப்பு பிரம்மிக்க வைக்கிறது.

இந்த முறை என் பெயரை யாரும் பரிந்துரைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அப்படி பரிந்துரைத்தாலும் என் பெயரை வாக்கெடுப்பில் சேர்க வேண்டாம் என்றும் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கிறேன். நான் சிறந்த விமர்சகன் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். கடந்த வருடம் என் மேல் அன்பு வைத்து என்னை தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இந்த முறை நிச்சயம் தகுதியானவர் வெல்வார் என்பது என் நம்பிக்கை, அவருக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

anabayan 11-11-08 09:29 AM

நம் நிர்வாகி எடுத்த இந்த முடிவால் நல்ல வளமான தரமான அதிக விமர்சனங்களை எதிர்ப்பார்க்கலாம். நிர்வாகிக்கு நன்றி.

வரிப்புலி 11-11-08 09:49 AM

[இந்த திரியில் பெயர்கள் பரிந்துரை செய்ய அனுமதி இல்லை. பதிப்பு நிர்வாகத்தால் அழிக்கப் பட்டது. பதித்தவர் விதிமுறை மீறலுக்கு எச்சரிக்கப் படுகிறார். - Admin]

shobana_rv80 11-11-08 09:52 AM

வரவேற்கத்தக்க முடிவு..
சிறந்த விமர்சகர் தேர்ந்தெடுப்பதின் மூலம் கதைகளுக்கும் மற்ற பகுதிகளிலும் பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தும் நண்பர்களை நாமும் உற்சாகப்படுத்தலாம்.

asho 11-11-08 10:05 AM

ஆமாம் நண்பர்களே, நம் தளத்தில் நல்ல முறையில் விமர்சனம் எழுதுபவரை ஊக்குவிக்க தந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தயவு செய்து நிர்வாக உறுப்பினரை குறிப்பிடுவதையும், உங்கள் ஒருவருக்கு மட்டும் பிடித்த அவ்வளவாக பிரபலமாக/பின்னூட்டமிடாதவரை குறிப்பிடாதீர்கள். இதனால் உண்மையிலே சிறந்த முறையில் பின்னூட்டம் இடுபவர்களுக்கு வாக்கு சேராமல் போய்விடும்.

வரிப்புலி 11-11-08 10:16 AM


[மீண்டும் எச்சரிக்கப் படுகிறார். எச்சரிக்கை புள்ளிகள் கொடுக்கப் படுகிறது. அடுத்த முறை 1 வாரம் தடை செய்யப் படுவார். -Admin]

smartman 11-11-08 10:50 AM

விமர்சகரும் / விமர்சனங்களுமே ஒரு படைப்பாளிக்கு சிறந்த பரிசாகவும் உற்சாகமூட்டும் டானிக்காகவும் அமைகிறது. எனவே "காமலோக சிறந்த விமர்சகர்" தேடல் ஒரு மிக அத்தியாவசியமான தேவையே. விமர்சகர்களையும் விமர்சனங்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு இனிக்கவே செய்கிறது.

Quote:

இந்த அறிவிப்பு திரியை கருத்துக்கள் பதிக்க உபயோகப் படுத்தவும். இங்கு உங்கள் பரிந்துரைகளைப் பதிக்க வேண்டாம்.
வரிப்புலி... நிர்வாகி அவர்களின் அறிவிப்பை சரியாகப் படிக்கவும். இங்கே பரிந்துரை கூடாது. குட்டுக்கு ஏங்குகிற மாதிரி தெரிகிறதே


All times are GMT +5.5. The time now is 06:00 PM.

Powered by Kamalogam members