காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   மொழி பெயர்ப்பு கணிணி மென்பொருள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=35751)

Young_Taurus 19-05-07 11:02 PM

மொழி பெயர்ப்பு கணிணி மென்பொருள்
 
ஆங்கிலத்திலிருந்து, மற்ற முக்கிய உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு இலவசமாக உதவுகின்ற இனையதளங்களை பார்த்துள்ளேன். இந்த இனையதளங்களில், தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய இலவச உதவி இல்லை.

ஆங்கிலத்திலிருந்து, தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய இலவச உதவி செய்யும் இனையதளங்களின் பெயர்களை அறிந்தவர்கள், தயவு செய்து அவற்றை சொல்லுங்களேன்.

alexandra 26-05-07 12:15 PM

நானும் இதை எதிர்பார்க்கிறேன் . நண்பர்களே தெரிந்தால் சொல்லுங்களேன்.

கமல் 27-05-07 02:47 PM

ஆமாம் நண்பர்களே தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள். மிக ஆவலுடன் உளளேன்.

asho 27-05-07 03:01 PM

எனக்குத்தெரிந்தவரை இம்மாதிரி மென்பொருள் (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் படியானது) இல்லை. சில இனையதளங்கள் பணம் பெற்று தகுந்த பணியாட்கள் வைத்து கொண்டு தான் மாற்றித்தருகின்றன. இலவசமாக சான்சே இல்லை.

இம்மாதிரி வேலைக்காக, நண்பர் ஒருவருக்காக தொடர்ந்து பல நாட்கள் கூகிளாண்டவர் மூலம் தேடியதில் நான் கண்ட உண்மை தான் மேற்கண்டது.

ஒரு பக்கத்திற்குள் என்றால் நண்பர்கள் (ஆங்கிலப்புலமை பெற்றவர்) யாருக்காவது அனுப்பி வாய்ஸ் வடிவில் பெற்று பின் அதை கேட்டு நீங்கள் தமிழில் டைப் செய்யலாம்.

நான் ஒரு சிக்கலான மொழிபெயர்ப்பு ஒன்றை ஜெர்மனில் இருக்கும் என் நண்பருக்கு யாஹுவில் சாட் மூலம் வரி வரியாக அனுப்பி அவர்(தமிழ் டைப் செய்ய தெரியாதவர்)தமிழில் சொல்லச்சொல்ல டைப் செய்து முடித்தேன்.

இல்லை மாற்று வழி உள்ளதென்றால் கூறுங்கள், நாம் எல்லோரும் பயண் அடைவோம்.

இன்னும் சில வருடங்களில் தன்னார்வ குழுக்கள் ஏதாவது நிச்சயம் முயன்று தமிழ் கூறும் நல்லுலகிற்கு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

kay 10-06-07 12:58 AM

பிற நாட்டுச் சாத்திரங்கள் தமிழில் செய்வோம் என்றான் தமிழ்க் கவி!அவன் கனவு நனவாக இது போன்ற முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்! கனவு மெய்ப்பட வேண்டும்!:) :) :)

keith 10-06-07 01:24 AM

நண்பர்களே மின்பொருள் பற்றி எனக்கு தெரியாவிட்டாலும், மொழி பெயர்த்து கொடுக்க மனம் இருக்கிறது. வேண்டுமானால் எனக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள்.
கீத்

tamilplus 12-01-16 01:08 AM

இந்த பிரச்னைக்கு இன்றுவரை முடிவு இல்லையா என்ன?நான் இதெல்லாம் இணையத்தில் மிக எளிது என்று அல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன் !!!
இந்த தொல்லைக்கு ஏதாவது அப்டேட் உண்டா .? கணினி புலிகள் பதில் சொல்லுங்களேன்.

catwalk 12-01-16 10:54 AM

கூகிள் மொழிப்யர்ப்பு தளத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
ஆனால் அதில் வரும் தமிழைப் படித்தால் கொஞ்சம் சிரிப்பு வரும்...

vjagan 22-08-16 09:54 PM

கீழே குறிப்பிட்ட மென்பொருள் சென்று பாருங்கள் அய்யா! அதன் பயனாக்கம் மிகவும் பேருதவியாக இருக்கும் அய்யா !
SHABDKOSH
English Tamil Dictionary | இங்கிலீஷ் தமிழ் நிகண்டு
அதனுடைய சுட்டி:

http://www.shabdkosh.com/ta/translate?e=SAGA&l=ta

தமிழ் பையன் 16-02-20 11:14 AM

நான் எழுதும் கதைகளை, பின்னூட்டம் இடும் பதிவுகள் எல்லாம் இந்த தளத்தின் மூலமாகவே செய்கிறேன். ஏன் இந்த பதிவு கூட இத்தளத்தின் மூலம் நான் தட்டச்சு செய்தது தான். யுபயோகிக்க மிகவும் சுலபமாக உள்ளது. செல் போனில் இது சரியாக வேலை செய்யுமா என்று தெரியவில்லை. ஆனால் கணினி பயனாளர்களுக்கு இது மிகவும் உதவும். இது தான் அந்த தளத்தின் சுட்டி.


https://www.smartwebsolutions.org/tamil-typing/


All times are GMT +5.5. The time now is 03:04 AM.

Powered by Kamalogam members