காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   150 ஆண்டு நிறைவுபெற்ற சென்னை உயர்நீதிமன்றத்தை வாழ்த்துவோம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=61297)

Nallavan1010 08-09-12 09:47 AM

150 ஆண்டு நிறைவுபெற்ற சென்னை உயர்நீதிமன்றத்தை வாழ்த்துவோம்
 
சென்னை உயர்நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 150 வது ஆண்டு விழா நிறைவடைகின்றது. நீதித்துறை மென்மேலும் செம்மையுற்று வளர மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள். நீதித்துறையை சேர்ந்த காமலோக நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

bedroom_salak 08-09-12 10:27 AM

இன்று இனிதே நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்..
150ஆண்டுகளாக, நீதி துறையிலே,பல சிறப்பான தீர்ப்புகளை வழங்கியும், பல வழிகாட்டுதலையும் வழங்கி, இன்றும் தனித்துவமாக நிற்கும், சென்னை உயர் நீதி மன்றம்..
திரி தொடங்கிய தம்பியின் தொழில் மேலே இருக்கும் பக்தி.. பரவசம்..
வாழ்த்துக்கள்..

vjagan 08-09-12 10:28 AM

நானும் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
நல்லதொரு திரியைத் தொடங்கிய நம்முடைய ஆசிரியர் நண்பர் Nallavan1010,
அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,நன்றியறிதலுடன் !
கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் !

anabayan 08-09-12 04:56 PM

பெருமை படக்கூடிய நிகழ்வுதான் வாழ்த்துக்கள்.

கண்ணன்76 08-09-12 05:59 PM

நீதிதுறையில் செயல்பாடுகள் மெதுவாக நகர்ந்தாலும் 150 நிறைவு செய்வது சென்னைக்கு இன்னும் ஒரு சிறப்பு. வாழ்த்துக்கள்.

PUTHUMALAR 08-09-12 07:00 PM

நீதிக்கு தலை வணங்கி வாழ்த்துகின்றேன்.. வளைந்த நீதியைத் தன்னுயிர் தந்து நிமிர்த்திய பாண்டிய நெடுஞ்செழியன் வாழ்ந்த மண்ணில் அமைந்திருக்கும் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை கிளையை புறக்கணித்த செயல் மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது.. (மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்று தான் அழைக்க வேண்டுமாம்.. சென்னை உயர் நீதிமன்றம் என அழைப்பது தவறாம்..)

oolvathiyar 08-09-12 08:04 PM

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1172547)
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்று தான் அழைக்க வேண்டுமாம்.. சென்னை உயர் நீதிமன்றம் என அழைப்பது தவறாம்..

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தான் அதை கட்டும் போது பெயரிட்டார்கள். மாவட்டத்தின் பெயரை மாற்றி விட்டதற்காக நீதி மன்றத்தின் ஹெரிட்டேஜ் பெயரை மாற்ற முடியாதல்லவா.

மெட்ராஸ் என்பது ஆங்கில பெயர் என்றும் சென்னை என்பது தமிழ் பெயர் என்று நம் மக்களிடையே பல காலமாக இருக்கிறது. ஆனால் 15 வருடங்களுக்கு முன்பு நான் ஒரு வரலாற்று பகுதியில் படித்த விசயம்.
முன்பு அந்த இடம் நகரம் அல்ல கிராமங்களும் மீனவ குப்பங்களும் பல பெயர்களில் இருந்த இடங்கள். ஒரு இடத்தில் சென்னை மற்றும் மதராஸ் என்ற இரன்டு மீனவ கிராமங்கள் ஒட்டி ஒட்டி இருந்தன. இரன்டையும் காலி செய்து விட்டு தான் பிரிட்டிஷ் காரர்கள் அங்கே ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள். ஆரம்ப காலங்களில் மதராஸ் சென்னை என்ற இரன்டு பெயரையும் பயன்படுத்தினார்கள். பிறகு பிரிட்டிஷ்காரர்கள் மெட்ராஸ் என்ற ஒரே பெயரில் நிலை நிறுத்தி விட்டார்கள். அதனால் மதராஸ் என்பது பிரிட்டிஷ்காரங்க வச்ச பெயர் அல்ல அதுவும் தமிழ் பெயர் தான்.

பிகு : இது நான் எங்கோ எப்பவோ ஒரு புத்தகத்தில் படித்தது என்பதால் இதற்க்கு என்னால் ஆதாரம் எல்லாம் கொடுக்க இயலாது. இப்படியும் ஒரு வரலாறு இருக்கிறது என்று பகிர்ந்து கொள்ளவே வழங்கினேன்.

PUTHUMALAR 09-09-12 01:17 AM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1172555)
இப்படியும் ஒரு வரலாறு இருக்கிறது என்று பகிர்ந்து கொள்ளவே வழங்கினேன்.

நான் அறிந்திராத சிறந்த தகவல்களை தந்த வாத்தியாருக்கு மிக்க நன்றி!..

Mathan 09-09-12 01:51 AM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1172555)
ஒரு இடத்தில் சென்னை மற்றும் மதராஸ் என்ற இரன்டு மீனவ கிராமங்கள் ஒட்டி ஒட்டி இருந்தன. இரன்டையும் காலி செய்து விட்டு தான் பிரிட்டிஷ் காரர்கள் அங்கே ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள். ஆரம்ப காலங்களில் மதராஸ் சென்னை என்ற இரன்டு பெயரையும் பயன்படுத்தினார்கள். பிறகு பிரிட்டிஷ்காரர்கள் மெட்ராஸ் என்ற ஒரே பெயரில் நிலை நிறுத்தி விட்டார்கள். அதனால் மதராஸ் என்பது பிரிட்டிஷ்காரங்க வச்ச பெயர் அல்ல அதுவும் தமிழ் பெயர் தான்.

வாத்தியார் சொல்வதிலும் ஓர் அர்த்தம் இருப்பதாகவே தான் உள்ளது.

ஏனெனில் வெள்ளக்காரனுங்க அவனுங்க வாயில் நுழையாமல், தரங்கம்பாடியை ட்ராங்க்குபார் என்றும், தூத்துக்குடியை டூட்டுக்கோரின் என்றும் உதகமண்டலத்தை ஊட்டி என்றும் வைத்தது போல் சென்னையை வெள்ளக்காரன் வாயில் நுழையாமல் மெட்ராஸ் என வைத்திருக்க வாய்ப்பில்லை. மதராஸ் தான் அவனுங்க வாயில் நுழையாமல் மெட்ராஸ் என வைத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் வாத்தியார் சொல்வது மிகவும் சரியாக படுகிறது.

அதுமட்டுமன்றி எனக்கென்னவோ மதராஸ் தான் முதலில் பயண்பட்டில் இருந்த பெயராக இருக்கும் எனவும் தோன்றுகிறது. எப்படி சொல்கிறேன் என்றால்,

பிரிடீஷ் அரசாங்கம், மதராஸ் நகரத்தை விரிவு படுத்துவதற்க்காக சென்னப்ப நாயக்கர் என்பவரிடம் இருந்து தான் பெரும்பான்மையான நிலத்தை வாங்கினர். அப்பொழுது சென்னப்ப நாயக்கர் ஓர் கன்டிஷனோடு தன் நிலங்களை விற்க சம்மதித்தார். அது என்ன கண்டிஷன் எனில், பிரிடீஷ் அரசாங்கம் அவரது நிலத்தில் புதிதாக உருவாக்கபட இருக்கும் நகரத்திற்கு தனது பெயரை சூட்டவேண்டும் என்ற ஓர் நிபந்தனையுடன் தான் விற்றார் என்பது குறிப்பிடதக்கது. அதன் பிறகு தான் சென்னப்பட்டினம் என்ற பெயரே வந்தது. காலத்தால் அது மருவி சென்னை என ஆனது.

இன்றும் வடநாட்டினர் நம் சென்னையை மதராஸ் என தான் அழைக்கின்றனர். நம்மவர்களை மதராஸி என தான் அழைக்கின்றனர். ஆனால் நம்மவர்கள் அவர்கள் அப்படி கூப்பிடுவதை தவறாக எண்ணி நம்மை அவர்கள் கேலி செய்வதாக நினைக்கின்றனர்.

எப்படி இன்னமும் பெயர் மாறாமல் மெட்ராஸ் யுனிவர்சிட்டி என இருக்கின்றதோ, அதேப்போல் மெட்ராஸ் உயர்நீதி மன்றம் என இருப்பதில் தவறேதும் இல்லையே.

இந்தியாவிலேயே முதன் முறையாக கார்ப்பரேஷன் அந்தஸ்த்தை பெற்றதும் மதராஸ் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?!

thangar.c 09-09-12 03:09 AM

நீதிக்கு தலை வணங்கி, நீதிமன்றத்தின் 150 ஆண்டு கால நிறைவை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன். வாய்ப்பளித்த நல்லவனுக்கும் வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 08:47 AM.

Powered by Kamalogam members