ட்ரீமரின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் (updated: 22.12.13)
தளத்திலே நமக்கு தெரிந்து அதிக வயதுடையவர் என்றாலும், தனது இயலாமை என்பதையும் தாண்டி... ட்ரீமர் அய்யா அவர்கள் நம் காமலோகத்தில் தனது படைப்புகள் மற்றும் பின்னூட்டங்கள் என்ற பங்களிப்புகளின் மூலமாக 2000 என்ற மைல்கல்லைத் தற்போது கடந்துள்ளார்.
அவர்களின் ப்ரோபைலிற்கான சுட்டி: http://www.kamalogam.com/new/member.php?u=32140 அவரின் ஆக்கங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் : http://www.kamalogam.com/new/search.php?searchid=708640 காமலோகத்துக்கு அளப்பரிய சேவையாற்றிய மூத்தவருக்கு இந்த சின்னவன் அன்பான பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே நீங்களும் வாழ்த்தலாம் நம்மவரை. |
கதைகளை ஆழ்ந்து படித்து, மனதில் பட்ட கருத்துகளை அருமையாக வெளிப்படுத்தி, எல்லாக் கதைகளுக்கும் பின்னூட்டமிட்டு நம் எல்லோரின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராகி இருப்பவர் பெரியவர் அன்பு அண்ணன் ட்ரீமர் அவர்கள்!
ட்ரீமர் சார் உடல்நலம் சீரடைந்து, லோகத்திலும் தனிவாழ்விலும் நலமும், வளமும் காண எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவர் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் காண வாழ்த்துகிறேன். வாழ்த்துத் திரியைத் தொடங்கிய நண்பர் நிசாதாசனுக்கு நன்றி! |
லோகத்துக்கு மிக சிறந்த கதைகள் பல கொடுத்து மற்றவர்கள் கதைகளுக்கும் ஆழமான பின்னூட்டம் கொடுத்து முதுமை காரனமாக சமீபகாலமாய் கதைகள் பதிப்பதை குறைத்து கொன்டார் அதிலும் 2000 பதிவுகள் எட்டி உள்ளது பெரும் சாதனையே. வாழ்த்துகள் டிரீமர் அண்ணா (லோகத்தில் நான் அண்ணா என்று அழைக்க முடிஞ்ச ஒரே ஆள் நீங்கள் தானுங்கோ)
|
ஐயா டிரீமரின் 2000 மாவது பதிப்புக்கு வாழ்த்துகக்ள்
அவர் நல்ல உடல் நலத்துடன் மேன்மேலும் பதிப்புகளை தர ஆண்டவனிடம் இந்த நேரத்தில இறைஞ்சுகிறேன். திரி தொடங்கிய நிஷாதாசனுக்கும் பாராட்டுகள் |
அன்பு அண்ணன் 2000 பதிவுகளை தாண்டியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தன் உடல் நிலை சரியில்லை என்று கதைகளை எழுதுவதை நிறுத்தினாலும் மற்றவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பின்னூட்டமிட்டு இன்னமும் உற்சாகப்படுத்தி வருகிறார். நிறைய பரிசுகளை, அவருக்கு பிடித்தமான கதைகளை எழுதுபவர்களுக்கு தருகிறார்.
என்னை பொருத்தவரை என் கதைகளை விட அவருடைய பின்னூட்டங்கள் மிகவும் சுவையாக இருக்கும். மீண்டும் உடல் நலமடைந்து பழையப்படி உற்சாகமான பின்னூட்டங்கள் போடவேண்டும். இதுவே என் பிரார்த்தனை! இரண்டாயிரம் பதிவுகள் மிக விரைவில் 5000 ஆகட்டும், ஆகும். அதற்கு ஸ்ரீதேவி மஹாலஷ்மி அண்ணனுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன். யாதேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய உருவில் உறைகின்றாளோ அந்த ஆரோக்கிய லட்சுமியை நமஸ்க்கரிக்கின்றேன். இந்த திரியை உரிய சமயத்தில் தொடங்கிய நண்பர் நிஷாதாசனுக்கு நன்றி. |
2000 தாண்டிய ட்ரீமருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கட்ட வாழ்த்துக்கள். |
பாசத்திற்குறிய அன்பான பண்பான ட்ரீமர் அண்ணாச்சியின், 2000 பதிவை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்...
உடல் நிலை காரணமாக முன்பு போல பல அரிய கதைகளை படைக்காவிடினும், கிடைத்த நேரத்திலே, தான் படித்த கதைக்கு பின்னூட்டம் எழுதி, படைப்பாளியை ஊக்குவிக்கிறார்.. விரைவிலே உடல் நலமடைந்து, முன்பு போல சொக்க வைக்கும் பல கதைகளை படைக்கனும் என்பதே எங்களின் ஆசை..என்னை போன்றவர்கள் இங்கே நிறைய பேர் உங்களின் கதைக்காக காத்திருக்கிறோம்.. |
கதையை ஆழ்ந்து படித்து விரிவான பின்னூட்டம் இடுவதில் வல்லவரான ட்ரீமர் இன்னும் பல ஆயிரம் பதிவுகளை பதிக்க மனதார வாழ்த்துகிறேன்
|
நமது தளத்தின் மூத்த சகோதரரான ட்ரீமர் ஐயாவின் இரண்டாயிரமாவது பதிவுக்கு மச்சானின் மனமார்ந்த வாழ்த்துகள்....! நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மேலும் பல்லாண்டு காலங்கள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
|
ட்ரீமர் அப்பா அவர்கள், இரண்டாயிரம் பதிவுகள் நிறைவு செய்ததற்கு என் வாழ்த்துக்கள். எல்லோரும் சொன்ன மாதிரி, இந்த வயதிலும், எல்லோருடைய கதைகளுக்கு பின்னூட்டம் இட்டு, அவர்களை உற்சாக படுத்துவர்தர்க்கு நன்றிகள். ஆண்டவன் அவர்களுக்கு நீண்ட ஆயுள் குடுக்குமாறு வேண்டுகிறேன்.
இது தன்வந்தரி சுலோகம் (ஆரோகியத்துக்கு) ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரையே அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய விநாசநாய, த்ரிலோக்ய நாதாய ஸ்ரீ மகாவிஷ்ணுவே நம என் துதிக்கிறேன். |
All times are GMT +5.5. The time now is 10:47 PM. |
Powered by Kamalogam members