காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   உலக கோப்பையை வென்றது இந்திய அணி - வாழ்த்துக்கள்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=57835)

எந்திரன் 03-04-11 12:31 AM

உலக கோப்பையை வென்றது இந்திய அணி - வாழ்த்துக்கள்!
 
உலகக்கோப்பையை வென்று இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.

2011 ஏப்ரல் 03ம் தேதி மும்பையில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையை ஆறு விக்கட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் 14 கோடி ரூபாய் சன்மானம் கொடுக்கப்பட்டது.

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

nana2003 03-04-11 12:36 AM

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்...

dayaan 03-04-11 12:49 AM

எத்தனை ஆண்டுகளுக்கு பின் இந்த வெற்றி. மிகவும் மகிழ்சியாக இருக்கிறது.

smartman 03-04-11 12:52 AM

1983ல் உலகக்கோப்பையை வென்ற இந்தியா பல வருடங்கள் முயன்று இந்த முறை மீண்டும் உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்தியனாகப் பிறந்த நாம் பெருமிதம் அடையவேண்டிய நிகழ்வு இது.

kay 03-04-11 01:23 AM

28 ஆண்டுகளுக்குப் பின் தோணி தலைமையில் இந்தியக் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை மீண்டும் பெற்றுள்ளது! ஸ்ரீ லங்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சாதனையைப் பாராட்டுவோம்! ஸ்மார்ட்மேனுக்கு நன்றி!:0019::0019::0019:

MACHAN 03-04-11 01:45 AM

1983 கபில்தேவ் தலைமையிலான அணி வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்குப்பிறகு 2011 ல் உலகக்கோப்பையை மீண்டும் தனதாக்கிக்கொண்ட இந்திய அணிக்கு மச்சானின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....!

இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டியில் முதல் முறையாக ஆசியாக்கண்டத்தை சேர்ந்த இரண்டு அணிகள் ஃபைனலில் மோதுவது இதுவே முதன்முறை...! அதேபோலவே உலகக்கோப்பை போட்டியை நடத்தும் நாடு கோப்பையை தட்டிச்செல்வதும் இதுவே முதன்முறையாகும்....!

ஏற்கனவே டெஸ்ட் தர வரிசைபட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா இந்த உலகக்கோப்பை போட்டிகளில் பெற்ற வெற்றியின் மூலமாக ஒருநாள் போட்டி தர வரிசைப்பட்டியலிலும் முதலிடத்தை பெறுகிறது. எல்லா சாதனைகளையும் ஒருசேர பெற்றுக்கொடுத்த கேப்டன் தோனிக்கும், அவரின் சகாக்களுக்கும் பாராட்டுக்கள்.:sign0098:

KAMACHANDRAN 03-04-11 03:09 AM

அபாரமாக விளையாடி அசத்தலான வெற்றியை தன் வசப் படுத்திய இந்திய அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :anim_19:.

ஒவ்வொரு இந்திய வீரர்கள் முகத்திலும் மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் கண்டு நானும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நம்ம சூப்பர் ஸ்டாரும், துணைவியாரும், அவர் மகள் ஐஸ்வர்யாவும் இருக்க கண்டேன். அவர்கள் முகத்திலும் வெற்றியின் பிரகாசம் தெரிந்தது.

கேப்டன் தோனி இறுதியாக அடித்த ஆறு ரண்கள் ஒவ்வொரு இந்தியரினுடைய ஆவலுக்கும் கொடுத்த மரியாதை என்று நினைக்கிறேன்.

மீண்டும் வாழ்த்துக்கள்

demkae 03-04-11 06:15 AM

இந்தியா அணியின் சரியான நேரத்தில் எழுச்சி, மற்றும் எல்லா வீரர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி கனிதான் இக்கோப்பை. ஒவ்வொரு இந்தியனும் கொண்டாட வேண்டிய தருணம் இது.
வெல்டன் தோனி, யுவராஜ், காம்பீர், சாகிர் கான், சச்சின், மற்றும் எல்லா வீரர்களுக்கும் வாழ்த்துகள்.

ஆதி 03-04-11 07:43 AM

என் வாழ்த்துக்கள் நம் அணிக்கு. ஒவ்வொரு வீரர்களின் கடின உழைப்பு, அதன் பலன் தான் இந்த வெற்றி கோப்பை.

subbukannan 03-04-11 10:00 AM

நமது அணிதான் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் அணி என்பதை எண்ணும் போது பெருமையாக உள்ளது. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துகள்


All times are GMT +5.5. The time now is 02:44 AM.

Powered by Kamalogam members