காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0141 - துவாரகாபுரியில் சுயவம்வரம் - சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=74611)

asho 08-05-21 01:17 PM

நி: 0141 - துவாரகாபுரியில் சுயவம்வரம் - சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்
 
நி.சவால்: 0141 - துவாரகாபுரியில் சுயவம்வரம் - சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நி.சவால்: 0141 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான madhavi அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான துவாரகாபுரியில் சுயவம்வரம் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இதற்கு நமது உறுப்பினர்களில் 5 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். அவர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் சென்ற சவாலை விட இந்த முறை அதிக எண்ணிக்கையில்(+11) அதாவது 33 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 9 வாக்குகள் பெற்று kauveri முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0141 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான kauveri அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் kauveri
இந்த போட்டியில் வென்றதன் மூலம் வெள்ளிவாசலில் இருந்து அடுத்த வாசலான தங்கவாசல் அனுமதியையும் பெறுகிறார்.


வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

kauveri - 9 வாக்குகள்
tdrajesh - 7 வாக்குகள்
vjagan - 6 வாக்குகள்
ASTK - 6 வாக்குகள்
niceguyinindia- 5 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான ASTK , vjagan, tdrajesh மற்றும் niceguyinindia அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த போட்டி திரியை கண்டு ஆனால் வாக்களிக்காமல் சென்ற நால்வருக்கும் தனிமடலில் விளக்கம் கோரப்படுகிறது, பதில் திருப்திகரமாக இல்லையெனில் நடவடிக்கை எடுக்க கூடும்.


போட்டியில் வென்ற அனைவருக்கும் பரிசு பணமும், முதலிடம் பெற்றவருக்கு பதக்கமும் மற்றும் தங்கவாசல் அனுமதியும் வழங்கியாயிற்று

-:O:-

vjagan 08-05-21 02:33 PM

நி.ச. போட்டி 0141போட்டியில்

முதல் இடம் பெற்று வாகை சூடிய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

kauveri

அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்!

வெற்றி பெற்ற படைப்பாளியான kauveri இவர் இரண்டாவது முறையாக இவ்விருதினை பெறுகிறார் !

இந்த போட்டியில் வென்றதன் மூலம் வெள்ளிவாசலில் இருந்து அடுத்த வாசலான தங்கவாசல் அனுமதியையும் பெறுகிறார்.

அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்!

போட்டியில் கலந்து கொண்டு உற்சாகம் தரும் கதைகளை கதையளப்புகள் செய்து பின்னியெடுத்த அந்த மோதிர விரல் ஆசிரியர்கள்

kauveri ASTK vjagan tdrajesh niceguyinindia

ஆகிய ஐந்து நண்பர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்!

நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று சொல்லி அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எ சிறப்பு வாழ்த்துகள் கூறும் நிர்வாகத்தினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்!

vjagan னுக்கும் ஆறு பொன்னான வாக்குகள் அளித்து கல்யாண மாலை அணிவித்து கவரவும் செய்த அந்தப் பொல்லாத வாசகர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்!

களையெடுப்பு தொடருவது மிகவும் சுவாரஸ்யமான சந்தோஷமான செயற்பாடு தான்!

asho 08-05-21 02:41 PM

நிர்வாக உறுப்பினராக பதிக்காமல் சக தளத்து உறுப்பினராக பதிகிறேன்.

Quote:

Originally Posted by vjagan (Post 1536883)
அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்! அட...அடே... அடடே...!
எ சிறப்பு வாழ்த்துகள் கூறும் நிர்வாகத்தினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! அட...அடே... அடடே...!

அதென்ன அட அடே அடடே, இது மரியாதைக்குறைவான வார்த்தை.

தமிழ் திரைப்படங்களில் கவுண்டமனி இந்த வார்த்தைகளை இட்டு சொல்லித்தான் பிறரை குறிப்பாக பெண்களை திட்டுவது வழக்கம்.

நீங்கள் ஒரு வார்த்தை அல்லது வரிகளை திரும்ப திரும்ப பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளீர்கள், இதனால் முதல் தடவைக்கப்புறம் அந்த வார்த்தை மதிப்பிழந்து விடுகிறது என்பதனை புரிந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த வார்த்தைகள் படிக்கையில் நேரவிரயம்+எரிச்சல் தான் வருகிறது.

vjagan 08-05-21 02:51 PM

இபணம் 500 நன்றியுடன் பெற்றுக் கொண்டேன்! நண்பர் அசோ சொன்ன பிழைகள் களைந்து விட்டு பதிந்து விட்டென்!

ASTK 08-05-21 03:59 PM

சவாலில் வெற்றி பெற்று தங்கவாசலை அடைந்த நண்பர் காவேரிக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியில் கதைகளின் தொடர்ச்சிகளைத் தந்த மற்ற நண்பர்களுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் பாராட்டுகள்!

நிர்வாகத்தின் பரிசுப் பணம் கிடைத்தது. மிக்க நன்றி.

kauveri 08-05-21 07:24 PM

போட்டியில் கலந்து தங்கள் மகத்தான உழைப்பை அளித்து கதையெழுதிய நண்பர்களுக்கும், கதைகளுக்கு பின்னூட்டம் எழுதிய நண்பர்களுக்கும், வாக்களித்த நண்பர்களுக்கும், வெற்றிப் பெற வாக்களித்த நண்பர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் பாராட்டுக்கள்.

tdrajesh 08-05-21 08:03 PM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1535955)
உழைப்பு + காமம் + நல்ல கதை +அற்புதமான முடிவு! சவாலில் வெற்றி பெற எல்லா தகுதியும் பெற்ற தொடர்.

இச்சவாலில் வெற்றி பெற்று தங்க வாசலில் நுழைந்துள்ள நண்பருக்கு என் பாராட்டுகள். உங்களின் சிறப்பான பங்களிப்பு இனியும் தொடரவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

Ragov 08-05-21 09:14 PM

Quote:

Originally Posted by kauveri (Post 1536903)
போட்டியில் கலந்து தங்கள் மகத்தான உழைப்பை அளித்து கதையெழுதிய நண்பர்களுக்கும், கதைகளுக்கு பின்னூட்டம் எழுதிய நண்பர்களுக்கும், வாக்களித்த நண்பர்களுக்கும், வெற்றிப் பெற வாக்களித்த நண்பர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள் நண்பர் காவேரி,

போட்டியில் வெற்றி பெற்றததோடு அதன் பிரதிபலிப்பாக தங்க வாசலையும் அடைந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்


மேலும் சக போட்டியாளர்களான ASTK , vjagan, tdrajesh மற்றும் niceguyinindia ஆகிய அனைவருக்கும் பாராட்டுக்கள்


நட்புடன்
ராகவ்

sakthim 08-05-21 10:52 PM

போட்டியில் பங்கு பெற்ற நண்பர்களும் வெற்றி பெற்ற நண்பருக்கும் பாராட்டுக்கள்.

kudaikkullamazhai 09-05-21 12:29 AM

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 01:55 PM.

Powered by Kamalogam members