காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   இன்று உலக புத்தக தின ( 23/4/22 ) வாழ்த்துகள்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=77733)

ASTK 23-04-22 11:17 AM

இன்று உலக புத்தக தின ( 23/4/22 ) வாழ்த்துகள்!
 
இன்று ( 23/4/2022 ) உலக புத்தக தினம். இந்தத் தினத்தில் படைப்பாளிகள் அனைவருக்கும் வாசகர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இணையம் மூலமாக வாசிக்கும் பழக்கம் அதிகமானதும் புத்தக வாசிப்பு குறைந்து விட்டது. இது வருத்தமானது என்றாலும் இது அறிவியலின் வளர்ச்சி என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நாளில் நான் படித்த என்னை கவர்ந்த எனக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்திய சில புத்தங்களைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


1 . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்


கதையாசிரியர் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட சோழ சாம்ராஜியத்தில் நடைபெறும் நிகழ்வை கற்பனை கலந்த கதையாக தந்திருப்பார். காதல் மோதல் பழிவாங்குதல் என அனைத்தும் இந்தக் கதையில் இருக்கும். எனக்கு மட்டுமல்ல தமிழ் படித்த பலருக்கும் இந்த கதை பிடிக்கும்.


2. மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள்!


இந்த புத்தகம் பாரசீகப் படையெடுப்பு முதல் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்கு வரும் வரை இந்தியாவில் ஏற்பட்ட முகலாயர்களின் ஆட்சியில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும்.


3. சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி?


அறிவியல் வரலாறு புவியியல் சம்பந்தமான பல கேள்விகளுக்கு விடை தந்திருப்பார். அவரது பாணியில் அந்த கேள்வி பதில் எனக்கு பல விஷயங்களுக்கு கண் திறந்தது.


இதேபோன்று நண்பர்களுக்கு பிடித்த படித்த புத்தகங்களை இங்கே பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

( இந்த திரி உரிய இடத்தில் பதிவிட்டு இருக்கிறேனா என்ற குழப்பம் எனக்குத் தோன்றுகிறது. அப்படியில்லை எனில் உரிய பகுதிக்கு மாற்றி விடவும் ).

annaisivakumar 24-04-22 02:22 PM

அன்பு நண்பருக்கு வணக்கம். ஒரு அருமையான தியரியை தொடங்கியதற்க்கு வாழ்த்துக்கள்.

புத்தகம் வாசிப்பு என்பது தற்போது உள்ள வாழ்க்கை முறையில் குறைந்து விட்டது. அதுவும் நம்முடைய பிள்ளைகளிடம் முற்றிலும் இல்லாமல் போய் விட்டது.

ஆனால், நாம் சிறுவர்களாக இருந்த போது, புத்தம் வாசிப்பு பெரியவர்களிடமும், சிறியவர்களுடமும் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக நூலகம் சென்று வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது.

என்னுடைய புத்தகம் வாசிக்கும் பழக்கம் தொடங்கியது எழுத்தாளர் திரு. ராஜேஷ்குமாரின் துப்பரியும் கதைகளுடன்.

பின்பு திரு. பட்டுகோட்டை பிரபாகரின், கதைகள், திரு, இந்திரா சொளந்திர ராஜன் கதைகள், தினமலரின் சிறுவர் மலர், வாரமலர், ராணி, குமுதம், ஆனந்த விகடன் என்று சென்றது.

வரலாற்று காவியங்கள், திரு. கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்...

சுயசரிதைகளாக, தந்தை பெரியார், ஹிட்லர், ஆப்ரகாம் லிங்கன், அக்னி சிறகுகள்...

மற்றும் கண்ணதாசனின் ஒரு புத்தகம் (ஏழு பாகம்).

புத்தகம் படித்து நீண்ட நாள்களாக மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது என பார்த்தால்....பொன்னியின் செல்வனும், ஹிட்லரின் சுயசரிதையும் தான்.

conan 24-04-22 03:24 PM

இதே போல ஏற்கனவே ஒரு திரி இருந்தாலும், பிடித்த புத்தங்களையும் பற்றியும் நீங்க பேசியுள்ளதால் எனது பதிவையும் இடுகிறேன்!

நான் புத்தகங்கள் படிக்கச் ஆரம்பித்ததே ஆங்கில இலக்கியத்தில் தேர்ச்சி பெற தான்! ஸ்போக்கன் இங்கிலிஷ் காக!!

நான் புத்தகம் படிக்கச் ஆரம்பித்தது சேத்தன் பகத் புத்தகங்கள் மூலமாக தான், பிறகு பல புத்தங்கள் அதில் என்னை மிகவும் கவர்ந்த கதை, ஜே கே ரௌலிங் எழுதிய ஹார்ரி பாட்டர், எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது, இந்த புத்தகங்கள் படிக்கும் போது இதன் திரைப்படத்தை 10 முறை (இதுவரை 8 படங்கள் என்றால் x 10) அப்டி இருந்தும் கூட இன்னும் திரும்ப படித்தாலும் அதே சிலிர்ப்பு! கற்பனையும் உச்சம்!!

சிம்பிள் ஆங்கிலம் படித்தாலும், கொஞ்சம் கடினமான ஆங்கிலத்தையும் படிக்க வேண்டும் என்று ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதைகளை படிக்க ஆரம்பித்தேன் , ஆனால் படிக்கவே முடியவில்லை, புரிய மிகவும் கடினமாக இருந்தது - இது 1890 களில் எழுதிய கதை என்பதால் அந்த கால ஆங்கிலம், பிறகு 4 ஆண்டுகள் கழித்து திரும்ப படிக்க ஆரம்பித்தேன், இப்போது இந்த புத்தங்களை மீது தான் அளவில்லா ஆசை! கதையை அவ்ளோ அழகாக விறுவிறுப்பாக சொல்லிருப்பார்!! சாதாரண கதையாக இருந்தாலும், ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பேசும் வசனங்கள் அனைத்தும் பிரமாதமாக இருக்கும்!

மூன்றாவது அகதா கிறிஸ்டி, ஷெர்லாக் ஹோல்ம்ஸ் எழுதிய ஆர்தர் கோனன் டாய்ல் இற்கு அடுத்த படியாக கருதப்படுபவர், இவரது கதையும் சஸ்பென்ஸ் க்கு பஞ்சமே இருக்காது! கடைசியாக உண்மையை வெளியிடும் தருணம் நாம் அதை எதிர்பார்த்து இருக்க மாட்டோம்!! இவரது முக்கியமான புத்தகம் என்றால் அண்ட் தென் தேர் வெற் நன் (And Then There Were None), படிக்காதவர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகம்!

இன்னும் பல ஆங்கில புத்தங்களை இருக்கிறது! - ரிக் ரியோர்டன், அமிஷ் திரிபாதி, டான் பிரவுன், ...

தமிழில் நான் முழுமையாக படித்த ஒரே புத்தகம் பொன்னியின் செல்வன். பாதி படித்தது சிவகாமியின் சபதம்!! முதல் 10 அத்தியாயங்கள் தாண்டி முடிக்க முடியவில்லை!

சுயசரிதையில் பிடித்தது வீர் சாவர்க்கர், அக்னி சிறகுகள், மற்றும் கண்ணதாசன் எழுதிய வனவாசம்!!

இன்னும் பல புத்தகங்கள் படிக்கச் ஆசை தான்! இப்போது நெட்பிலிக்ஸ், ஹாட்ஸ்டார், ப்ரைம் போன்ற ஓ டி டி என்ற முறை வந்துள்ளதால் அதில் சீரியல் பார்க்கவே தோன்றுகிறது! முடிந்தளவு அதை குறைத்து புத்தகங்கள் பக்கம் திரும்ப வேண்டும்!

vjagan 11-08-22 06:17 PM

மாணிக்கப் பரல்கள் சில பல கொண்ட திரி படித்தாலே போதும் இலக்கியம் என்பது என்ன என்று தெரியவரும், புரியவரும்!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்!கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்பு குறியீடும்!

asho 11-08-22 07:10 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1619810)
மாணிக்கப் பரல்கள் சில பல கொண்ட திரி படித்தாலே போதும் இலக்கியம் என்பது என்ன என்று தெரியவரும், புரியவரும்!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்!கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்பு குறியீடும்!

இவரை என்ன செய்வதென்றே புரியவில்லை, நம் தளத்தில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக சிந்திக்கின்றனர்.

இன்று உலக புத்தக தின ( 23/4/22 ) வாழ்த்துகள்!

இந்த திரிக்கு 4 மாதம் கழித்து ஒரு கருத்து பதிந்து தள்ள வேண்டுமா?. சரியாக ஒரு வருடம் கழித்து அதே நாளில் எழுப்பி விட்டால் கூட சரி.

ஏன் இப்படி செய்கிறார், அது தான் 10,000 பதிப்புகள் எட்டத்தில் இருக்கிறாரே, பின் ஏன் இப்படி பதிவுகள் செய்து குவிக்கிறார்.

இன்று ஒரு திரியில் அடுத்தடுத்து சில பதிவுகளை ஒன்றினைத்தோம்.

இரட்டை பதிவுகள் தான் இதுவரை கண்டிருக்கிறோம் ஆனால் மூன்று பதிவுகள் எப்படி?.

Laal 11-08-22 07:20 PM

Quote:

Originally Posted by asho (Post 1619822)
Quote:

Originally Posted by vjagan (Post 1619810)
மாணிக்கப் பரல்கள் சில பல கொண்ட திரி படித்தாலே போதும் இலக்கியம் என்பது என்ன என்று தெரியவரும், புரியவரும்!

பாராட்டுகளும் வாழ்த்துகளும்!கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்பு குறியீடும்!



இவரை என்ன செய்வதென்றே புரியவில்லை, நம் தளத்தில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக சிந்திக்கின்றனர்.



இன்று உலக புத்தக தின ( 23/4/22 ) வாழ்த்துகள்!



இந்த திரிக்கு 4 மாதம் கழித்து ஒரு கருத்து பதிந்து தள்ள வேண்டுமா?. சரியாக ஒரு வருடம் கழித்து அதே நாளில் எழுப்பி விட்டால் கூட சரி.



ஏன் இப்படி செய்கிறார், அது தான் 10,000 பதிப்புகள் எட்டத்தில் இருக்கிறாரே, பின் ஏன் இப்படி பதிவுகள் செய்து குவிக்கிறார்.



இன்று ஒரு திரியில் அடுத்தடுத்து சில பதிவுகளை ஒன்றினைத்தோம்.



இரட்டை பதிவுகள் தான் இதுவரை கண்டிருக்கிறோம் ஆனால் மூன்று பதிவுகள் எப்படி?.

உண்மையிலேயே நானும் யோசித்திருக்கிறேன். லோகத்தில் ஒரு வரிப் பின்னூட்டம் கூட இட சோம்பல் படுபவர்கள் மத்தியில் (நிர்வாகம் பின்னூட்டம் இடுங்கள், இடுங்கள் என தொடந்து குட்டிக்கொண்டே இருந்தாலும்) நண்பர் ஜெகன் மட்டும் எப்படி சுறுசுறுப்பாக அனைத்திற்கும் பின்னூட்டம் இட்டுக்கொண்டே செல்கிறார் என்பது வியப்பாக இருக்கும். அவர் வந்து விளக்கினால்தான் உண்டு ஐயா, அம்மனி... :)


All times are GMT +5.5. The time now is 04:56 PM.

Powered by Kamalogam members