காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஜனவரி 1 2022 முதல் அனுமதிகள் மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=76016)

asho 26-12-21 12:19 PM

ஜனவரி 1 2022 முதல் அனுமதிகள் மாற்றம்
 
காமலோக நண்பர்களே.. நண்பிகளே...!

நம் தலைமை நிர்வாகி அவர்கள் வழிகாட்டல் படி இந்த அறிவிப்பு பதிக்கப்படுகின்றது.

2022 மார்ச் 4-ம் தேதி 21வது பிறந்த நாள் கொண்டாடும் காமலோகத்தில் பல மாற்றங்கள் வர உள்ளன. நமது லட்சியங்கள் நீண்டு கொண்டே போகும் போது, நாம் தொட வேண்டிய மைல் கற்களையும் தூரமாக்கி வைக்க வேண்டும். அது போல இந்த வருட லட்சியம், தரமான கருத்துக்களை அடைவதாக வைத்துள்ளேன்.

தரமான கதைகளை படைப்பதில் நமது படைப்பாளிகள் குறைந்தவர்கள் அல்ல என்று நிரூபித்துள்ளார்கள், இனி தரமான கருத்தில் கவனம் செலுத்த இருப்பதால், காமலோக பகுதிகளின் அனுமதிக்கு வேண்டிய கருத்துக்களின் எண்ணிக்கை கூட்டப் பட்டுள்ளது.

2007க்கு பின் 15 வருடம் கழித்து இந்த மாற்றம் அவசியமாகிறது. இது புதியவர்கள் சிலருக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை தோழர்களே.. முயற்சி செய்யுங்கள் நிச்சயம் உங்களுக்கு வழி காட்ட நாங்கள் இருக்கிறோம். அத்துடன் நமது காமலோக படைப்பாளிகளுக்கு இது ஒரு புதிய புத்துணர்வை ஊட்டக் கூடியதாகவும் அமையும்.

அனுமதிக்கான தமிழ் பதிப்புகள்

தமிழ் வாசல்-க்கு = 30 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 15 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* கதைகள் படைத்திருந்தால் 20 தமிழ் பதிப்புகள் போதுமானது.
--* தளத்தில் இனைந்த நாளில் இருந்து 7+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
(கவனிக்க! கதைகளின் சராசரி அளவு: 50 வரிகள்)

காமக் கதை வாசல் = 80 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 40 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 2 கதைகள் படைத்திருந்தால் 50 தமிழ் பதிப்புகள் போதுமானது.
--* தளத்தில் இனைந்த நாளில் இருந்து 31+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
(கதைகள் 50 வரிக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)

தீ.தகாத உறவு வாசல் = 120 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 60 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 2 கதைகள் படைத்திருந்தால் 75 தமிழ் பதிப்புகள் போதுமானது.
--* தளத்தில் இனைந்த நாளில் இருந்து 45+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
(கதைகள் 50 வரிக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)

வெண்கல வாசல் = 500 தமிழ் பதிப்புகள்
--* 3 கதைகளுடன் தரமான பங்களிப்பு உள்ளவர்களுக்கு 300 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 250 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* தளத்தில் இனைந்த நாளில் இருந்து 90+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
--* 10 கதைகள் படைத்தவர்கள் (75 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்).

வெள்ளி வாசல் = 1500 தமிழ் பதிப்புகள்
--* 5 கதைகளுடன் தரமான பங்களிப்பு உள்ளவர்களுக்கு 800 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 750 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* தளத்தில் இனைந்த நாளில் இருந்து 180+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
--* 20 கதைகள் படைத்தவர்கள் (400 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்).

தங்க வாசல் = 4000 தமிழ் பதிப்புகள்
--* 10 கதைகளுடன் தரமான பங்களிப்பு உள்ளவர்களுக்கு 2000 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 2000 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* தளத்தில் இனைந்த நாளில் இருந்து 365+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
--* 50 கதைகள் படைத்தவர்கள் (1000 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்).

வெள்ளி வாசல் வரை எளிதில் முன்னேறி விடலாம், ஆனால் தங்க வாசல் அனுமதி உங்கள் பதிவுகளை தீவிரமாய் ஆராய்ந்த பின்னரே, பங்களிப்பின் அடிப்படையில் கொடுக்கப் படுகிறது. உபயோகமான திரிகள் துவக்காதவர்களின் தங்க வாசல் அனுமதி தாமதப் படுத்தப் படும்.

நான் பழைய உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுள்ளது, எங்களுடன் Nov. 2000 - Mar. 2002 வருடங்களில் நமது குழுக்களில் பங்கு கொண்டிருந்தவர்களையும், பிறகு March 2002 *- Dec. 2004 வருடங்களில் பழைய திஸ்கி மன்றத்தில் இருந்தவர்களையும் குறிக்கும். 2007 ஜனவரி 1க்கு முன் சேர்ந்தவர்களும் பழைய உறுப்பினர்கள். அது போக சேர்ந்து 3 வருடம் ஆகி நிர்வாக தண்டனை நடவடிக்கையாக தலைவாசலுக்கு இறக்கி விடப்பட்டவர்களும், 3 மாதம் பங்களிக்காமல் இருந்து திரும்ப தலைவாசலில் அனுமதிக்கப்பட்டவரும் பழைய மெம்பர் என்று கருதப்படுவர். இவர்கள் இம்மாதிரி தலைவாசலுக்கு இறக்கிவிடப்படும் வரை எந்த வாசல் அனுமதி பெற்றிருந்தார்களோ அந்த வாசல் அனுமதி திரும்ப பெறும் வரை மட்டுமே பழைய உறுப்பினர். அதாவது வெள்ளிவாசல் உறுப்பினர் ஒருவர் தலைவாசலுக்கு திருப்பி விடப்பட்டால் அவர் தலைவாசலில் இருந்து வெள்ளிவாசல் வரையே அந்த பழைய உறுப்பினர் சலுகை பெற முடியும் தங்கவாசல் அனுமதி பெற முழு தகுதி பெற்றிருக்க வேண்டும்

தரமான பங்களிப்பு என்பது கதைகளுக்கு வழங்கும் பின்னூட்டமே ஆகும். தலைவாசலில் தமிழில் தட்டச்சு செய்ய தெரியும் என்று நிருபித்தால் போதும் என்பதால் அங்கே 30 பதிவுகள் பற்றி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் அடுத்தடுத்த வாசல் அனுமதிகளுக்கு கதைகளுக்கான பின்னூட்டங்களே தரமான பங்களிப்பு என்று கருதப்படும். அதுவும் ஒருவரி, உப்புசப்பில்லாத, அனைத்து கதைகளுக்கும் பொருந்தும்படியான, பொதுவான பின்னூட்டங்கள் ஏற்கப்படாது, அனுமதி கேட்டு ஒருவர் விண்ணப்பிக்கும் போது அவர் பதிவுகள் சரி பார்க்கும் நிலையில் இம்மாதிரியான பின்னூட்டங்கள் அவர்கள் பதிப்பு எண்ணிக்கையில் இருந்து நீக்கப்பட்டு குப்பைக்கு கொண்டு செல்லப்படும்.

சிலர் மொத்தமே சில பதிப்புகள் செய்து விட்டு அதில் 3 கதைகள் பதித்து விட்டதால் வெண்கல வாசல் அனுமதி வேண்டும் என்று விண்ணப்பித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கதைகள் பதிப்பதோடு மற்றவர்கள் கதையையும் படித்து கருத்துக்கள் கூற வேண்டும் என்பதற்காக, வெண்கல வாசல் முதல் கதைகள் பதிப்பவர்களும் குறைந்த பட்சம் கருத்துக்கள் கூறயிருக்க வேண்டும் என்று பதிப்புகள் எண்ணிக்கை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. முழுமை அடைந்த கதைகள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்(அதன் பாகங்களும் விதிகள் படி கதைகள் எண்ணிகையை கூட்டும்). மூன்று பாகங்களில் ஒரு கதை எழுதி முடிக்கப்படாவிட்டாலும் அது கதையாக கணக்கில் கொள்ளப்படாது. அனுமதி கேட்கும் முன் கதைகளை முடித்து வைத்திருக்க வேண்டும், அல்லது முடிவுறாக கதை/பாகங்களை குறிப்பிடுதல் கூடாது.

வெண்கல, வெள்ளி, தங்க வாசல் அனுமதி பெற்றவர்கள் வருடம் தோறும் குறைந்தபட்சம் 36 தமிழ் பதிப்புகளாவது செய்தல் வேண்டும், அல்லது அவர்கள் வாரந்தோறும் பரிசீலனை செய்து அனுமதிகள் குறைக்கப் படும். ஏதாவது தவிர்க்க சூழ்நிலை காரணமாக பதிக்க முடியாமல் போனால், அந்த வருடம் முடிவதற்கு முன் நிர்வாகியிடம் தெரிவித்தால், பரிசீலனை செய்யப் படும்.

முன்பு பங்களித்தவர்கள் தொடர்ந்து 3 மாதங்கள் வராமல் இருந்தால் அவர்கள் கணக்கு "செயல்படா நிலை"-யில் (Inactive Mode) வைக்கப் படும். அவர்கள் நிர்வாகியிடம் தெரிவித்து அனுமதி பெற்று சென்றிருந்தால், அதே அனுமதி திருப்பி வழங்கப் படும். அல்லது அனுமதிகள் அனைத்தும் நீக்கப்பட்டு பதிப்புகள் மற்றும் இபணம் நீக்கப்பட்டு பின் தலைவாசலில் இருந்து அனுமதி திருப்பி கொடுக்கப் படும். இது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் முடிவிற்கு உட்பட்டது, கடந்த காலத்தில் முறையாக சிறப்பாக பங்களிக்காதவர்களுக்கு அனுமதி மறுக்க கூடும்.

இந்த திருத்தங்கள் அனைத்தும், நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்துவதற்காகவே செய்யப் படுகின்றன. அதை உணர்ந்து பெயரளவில் எண்ணிக்கைக்காக பதிக்காமல், மனம் திறந்து உங்கள் கருத்துக்களை பதிக்கவும்.

இவை அனைத்தும் 2022 ஜனவரி் 1-ம் தேதி முதல் அமுலுக்கு வருகின்றன.

இந்த வருடம் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மார்ச் 4, 2022 வரை பழைய அனுமதிகள் விதிவிலக்காக அனுமதிக்கப்படும். இவர்கள் அனுமதி மட்டும் ஜனவரி 14க்கு பின் மார்ச் 4க்குமுன் வரை பொதுவிலே பதிந்து கேட்க தேவையில்லை, தனிமடலில் நிர்வாக உறுப்பினர் ஒருவரிடம் கேட்டால் போதும். பொதுவிலே பதிந்து கேட்டால் ஜனவரி 14 சேரும் உறுப்பினர்கள் அனுமதிகளில் குழப்பம் நேரிடலாம் என்பதாலே இந்த சிறப்பு ஏற்பாடு.


உங்கள் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..

நன்றி..

madavan1000 26-12-21 05:53 PM

நிர்வாகி அவர்களுக்கும்,
மேற்பார்வையாளர் அவர்களுக்கும் நன்றி

Quote:

நமது காமலோக படைப்பாளிகளுக்கு இது ஒரு புதிய புத்துணர்வை ஊட்டக் கூடியதாகவும் அமையும்
நிச்சயம் மறு நுழைவுக்கு அனுமதி கொடுத்ததிலேயே பல கதைகள் திகட்ட திகட்ட. கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இன்னும் இந்த அறிவிப்பில் பல புதுகதைகள் கிடைக்கும்

Quote:

வெண்கல, வெள்ளி, தங்க வாசல் அனுமதி பெற்றவர்கள் வருடம் தோறும் குறைந்தபட்சம் 36 தமிழ் பதிப்புகளாவது செய்தல் வேண்டும்
இதுவும் ஓகேதான்
ஆனாலும் வருடத்திற்கு 36 என்பது மாதாமாதம் 3 பதிப்புக்கள் தர வேண்டியுள்ளது.
பதிப்புக்கள் என்பதை கதைகள் என்றே நான் கருதுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல உப்பு, சப்பில்லாமல் பதியப்படும் பின்னூட்டங்களை கணக்கில் கொள்ளக் கூடாது.

அலர்ட் எச்சரிக்கை கொடுத்தால் நல்லது

மற்றபடி இந்த அறிவிப்பால் பல நல்ல படைப்பாளிகள், படைப்புக்கள் கிடைக்கும்
வாசகர்களுக்கும் நல்ல விருந்தாக அமையும்

அன்புடன்
மாதவன் 1000

ASTK 26-12-21 06:42 PM

காமலோகத்தை இன்னும் சிறப்பாக நடத்திட விரும்பி அனுமதியில் கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எடுக்கும் புதிய முயற்ச்சிகளுக்கு உறுப்பினர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெற்றால் அடுத்த வாசல் அனுமதி என்பதில் எந்த மாற்றமும் இருக்காது என்று நினைக்கிறேன்.

அதேநேரம் எழுத்து வடிவிலான அம்சங்களுக்கும் பங்கேற்புக்கும் அதிக முன்னுரிமை தருவதை வரவேற்கிறேன். ஏனென்றால் படங்கள் வீடியோக்கள் போன்ற மற்ற அம்சங்களை வைத்தே பல தளங்கள் குப்பை கொட்டி வருகிறார்கள். அதே சமயம் காமலோகத்தின் தனிச்சிறப்பே இங்கே உள்ள கதைகள் , கட்டுரைகள் & பின்னூட்டங்கள் தான். எனவே நீங்கள் நடக்க எடுக்கும் புதிய முயற்சிகளில் எழுத்து வடிவிலான பங்கேற்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போது மற்ற தளங்களிலிருந்து காமலோகம் இன்னும் தனித்து நிற்கும். நீண்ட காலத்திற்கு இதன் சேவை தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

icefire89 26-12-21 10:10 PM

இதுபோன்ற விஷயங்கள் தான் நமது தளத்தை இளமை பொலிவுடன் இன்று மட்டுமல்ல இன்னும் பல பத்தாண்டுகளுக்கு வீறுநடை போட எடுக்கும் முடிவுகளுக்கு என்னைப் போன்ற உறுப்பினர்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் கண்டிப்பாக உண்டு...

rook 26-12-21 10:49 PM

பின்னோட்டம் அதிகம் இடதுவதால் கதைகலை பதிக்கும் கதாசிரியர்களுக்கு புத்துணர்சி பெறுவதுடன் மேலும் பல கதைகள் பதிக்க ஆவல் அதிகமாக வாய்ப்புகள் இருக்கும், புதிய நண்பர்களும் தழில் பதிக்கும் திறனை அதிகம் பெறலாம் அல்லவா ஆகையால் நிர்வாகம் எடுத்து முடிவு மிக சரியாதே...

loser view 27-12-21 07:10 AM

வரும் புத்தாண்டுக்கு பிறகு வரும் மாற்றம் கதை ஆசிரியர்களுக்கு புதிய உணர்ச்சாகத்தை அளிக்கும் என்று நம்புகிறேன் மேலும் எத்தனை பதிவுகள் படைந்தால் எத்தனை நாளிக்கு பிறகு அனுமதி கேட்க வேண்டும் என்று தெளிவாக கூறிப்பிட்டு விட்டதால் இனி அனுமதி கேட்பவர்களுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படாது என்று எண்ணுகிறேன்

mmkarnan 27-12-21 08:59 AM

கால மாற்றத்திற்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகள்தான். ஏற்கனவே நண்பர் ASTK அவர்கள் கூறியது போல, நம் லோகத்தின் தனிச்சிறப்பே கதைகளும், கட்டுரைகளும் ,விமர்சன பின்னூட்டங்களும் தான். மற்ற தளங்கள் வீடியோவை வைத்து ஒப்பேற்றி கொண்டிருக்கும் நேரத்தில், இன்னுமும் புதுமைப் பொலிவுடன், வித்தியாசமான கதை களங்களைக் கொண்டு அருமையான கதைகளை பல கதாசிரியர்கள் இங்கே பதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கையால் மேலும் மேலும் பல எழுத்தாற்றல் உடைய கதாசிரியர்கள் படைப்புகளை தருவார்கள் என்பது திண்ணம்.

ruthran3001 29-12-21 12:25 PM

ஒரு தளம் சிறப்பாக செயல்பட விதிகளும் கட்டுப்பாடுகளும் அவசியம் அதன்படி நமது தளம் இன்னும் சிறப்பாக செயல்படும்.
ஒரு கதாசிரியருக்கு கிடைக்கப்பெறும் மிகப் பெரிய பரிசு வாசகர்களின் பின்னூட்டங்களே. அத்தகைய பின்னூட்டங்களை அதிகரிக்கும் வகையாக நிர்வாகம் எடுத்திருக்கும் இந்த மாற்றங்கள் வரவேற்கத்தக்கது.

raingmail 30-12-21 05:38 AM

மீண்டும் காமலோகத்தில் களிப்புற வாய்ப்பு வழங்கிய காமலோக நிர்வாக குழுவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இனி வரும் காலங்களில் மீண்டும் தலைவாசலுக்கு வராத வகையில் சிறப்பான பங்களிப்பினை வழங்குவேன், மீண்டும் ஒருமுறை நன்றி ஐயா,,, தளத்தின் புதிய விதிகளை கண்டிப்பாக தளத்தினை சீறும் சிறப்புமாய் கொண்டு செல்லும் வாழ்த்துக்கள்,,,

niceguyinindia 30-12-21 07:57 AM

லோகத்தில் மாற்றங்கள் ஒன்றே மாறாதது .. பல மாற்றங்களை கண்டுள்ள லோகம் இந்த மாற்றத்தை அடுத்தும் இன்னும் கூடுதலாய் மிளிரும் என நம்புகிறேன்


All times are GMT +5.5. The time now is 11:10 PM.

Powered by Kamalogam members