ஒரு சோகமான செய்தி! "jaya6" இறைவனடி எய்தினார்!
நமது காமலோக அங்கத்தினர் மதிப்பிற்குரிய "jaya6" அவர்கள் இன்று புதன் கிழமை 19-02-2020 காலை 7:30 மணி யளவில் இறைவனடி எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் காமலோகத்தில் தங்கவாசல் அங்கத்தினர். காமலோகத்தில் இணைந்த தேதி 19-08-2009. இதுவரை 5560 பதிவுகள் படைத்திருக்கிறார். அவர் கடைசியாக 11-02-20 12:06 மணி அன்று இங்கு போட்ட பின்னூட்டம் கக்கொல்டு கணவனின் கனவுகள் என்ற கதைக்கு கடைசியாக அவர் என்னுடன் தொலைபேசியில் பேசியது 13-02-2020 மாலை 6:30 மணி இப்போது அவர் நம்முடன் இல்லை. அவரது உடல் மீது மலர் மாலை வைத்து எனது இறுதி மரியாதையை செலுத்தி விட்டு இப்போது தான் வருகிறேன். அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினேன். இன்று மாலை 5:00 மணிக்கு இறுதி சடங்குகள் முடித்து மயானத்துக்கு செல்லலாம் என்று திட்டமிட்டிருப்பதாக சொன்னார்கள் அவரது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் கடவுளை வேண்டிக் கொள்வோம். |
ஆழ்ந்த இரங்கல்கள்.
|
லோகத்தின் மூத்த உறுப்பினர் jaya6 அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! அவரை இழந்து வாடும் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மூத்த உறுப்பினரின் மறைவு லோகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு!
|
நண்பர் ஜெயா6 இன் மறைவு செய்தி மிகவும் வருத்தத்தை தருகிறது, நம் லோகத்தின் சார்பாக நீங்கள் சென்று அவருக்கு இறுதி மரியாதை செய்தது அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அவரின் வண்ணமயாமான பதிவுகள் என்றும் மறக்க முடியாதவை. - நன்றி ராசு சார் (இன்று மதியம் கன்கை எனக்கு அலைபேசியில் நீங்கள் சொன்னதாக சொன்னார்)
|
சோகமான செய்தி.... ஆழ்ந்த இரங்கல்....
|
நண்பர் ”ராசு” மூலம் சோக செய்தி கேள்விப்பட்டேன். அவருடன் நான் பலமுறை சாட்டிங் செய்திருக்கிறேன், சென்னை போகும் போது ”ராசு” அவர்களை பார்க்க போயிருந்தேன். அப்போது நாங்கள் இருவரும் ”ஜெயா6” அவர்களை பார்க்க போகலாம்னு திட்டமிருந்தோம்.நேரம் அமையதால் அவரை பார்க்க முடியாமல் போய் விட்டது வருத்தமாக இருக்கிறது.
அவரது ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன். |
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
|
ஆழ்ந்த இரங்கல்கள்
|
ஆழந்த இரங்கங்கள். அவரது ஆன்மா இறைவனை அடைய பிராத்திக்கிறேன்.
|
ஆழ்ந்த இரங்கல்கள்.
அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம் |
All times are GMT +5.5. The time now is 07:13 PM. |
Powered by Kamalogam members