காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   அதிரடி பில்லாவின் பதிவுகள் 9000! சவால் நாயகனுக்கு வாழ்த்து சொல்லலாம் வாங்க! (updated: 13.03.10) (http://www.kamalogam.com/new/showthread.php?t=47419)

கண்ணன்76 03-11-08 11:37 PM

லோகத்தில் இவர் இல்லாத இடமே இல்லை. அதிலும் புதியவர்களை உற்சாகபடுத்தும் முதல் நபர்., அதிவிரைவாய் 5000 பதிவுகள் கண்ட நண்பர் பில்லாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

KANNAN60 04-11-08 12:20 AM

காமக்கதையா கூப்பிடு பில்லாவை,
கதைப் போட்டியா சொல்லிவிடு பில்லாவுக்கு.

மயக்கும் பரிசுகளா மறக்காதே பில்லாவை
மறுப்பற்ற உதவிதேவையா கூப்பிடு பில்லாவை.

பின்னூட்டம் மூலம் கலக்கணுமா?
பின்னுவார் பாரு எங்க பில்லா.

குறள்போல் சிலசமயம் குறிப்பு,
குவிந்திருக்கும் அதில்பல கருத்து!

மனதில் இருப்பதை மறைக்காமல் ஒரு சொல்
மற்றவர் மனதை உறுத்தாமல் ஒரு சொல்.

போட்டிகளுக்கெல்லாம் ஒரு போட்டி வைத்தால்
போராடாமல் வெல்லும் பில்லாவின் சவால்கள்!

எட்டுத் திசை நோக்கினும்
எங்கும் காணேன் பில்லா போல்!

வாழ்க பில்லாவின் காமலோக சேவை!
வாழ்த்துவோம் வாரீர் வான்மழையென!!

ஆதி 04-11-08 05:05 PM

Quote:

Originally Posted by rkannan60 (Post 783587)
மனதில் இருப்பதை மறைக்காமல் ஒரு சொல்
மற்றவர் மனதை உறுத்தாமல் ஒரு சொல்.!

முத்தான சொல். ஆமோதிக்கிறேன். அவரை நேரில் பார்த்தவன் என்ற முறையில். சாந்த மனசுக்காரார் பில்லா.

smdhabib 04-11-08 05:13 PM

வாழ்த்துக்கள் நண்பரே.. வாழ்த்துக்கள். 5000 த்தை தாண்டியதற்க்கு இந்த ஹபிபின் வாழ்த்துக்கள். முதல் இடம் பிடிக்க எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஹபிப்

லலிதாதாசன் 05-11-08 06:55 AM

தனது தனிப்பட்ட சாதனைகளின் மூலம் காமலோக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய அளவுக்கு தவிர்க்க முடியாத தனிப்பெரும் சக்தியாகிவிட்ட வாசகர் சவால் நாயகன் பில்லாவுக்கு 5000 பதிவுகள் தாண்டுவதென்பது ஓர் பெரிய சாதனையே அல்ல.

இவர் 10000 தொடும்நாள் வெகு தொலைவில் இல்லை.

தான் செல்வதோடு மட்டுமின்றி இளையோரையும் அரவணைத்து, வழிகாட்டியாய் நின்று தன்னோடு அழைத்துசெல்லும் பில்லாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
லலிதாதாசன்

rose1604u 05-11-08 09:54 AM

அடடா.....

பில்லா அண்ணாச்சி..... உங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்... என்னடா இவ இத்தனை லேட்டா வந்து வாழ்த்துறாளேன்னு நினைக்காதீங்க... எல்லாரும் சொல்லுறது போல "லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து"ன்னு நான் சொல்ல போறது கிடையாது... காரணம் உங்களுக்கே தெரியுமில்ல...
எல்லாரும் சொன்னது போல உங்களுக்கு இந்த 5000 எல்லாம் எம்மாத்திரம்? இது போல நீங்க பல ஆயிரங்களைக் கடந்து லோகத்தில் இருக்கும் அனைவரது மனங்களிலும் என்றும் மங்கா இடம் வகிக்க வேண்டும் என்பதே இந்த தங்கையின் ஆசை....

வாழ்த்துக்கள் அண்ணாச்சி...

வரிப்புலி 05-11-08 07:29 PM

சோதனைகள் தான் ஒருவனை
சிகரம் கொண்டு செல்லும்
நீ இன்று சிகரத்தில் இருக்கிறாய்..!

காற்றை ஆழியில்
அடைக்க முடியுமா...?!
சாதனை நாயகனே...!
சோதனைகளை வெல்வாய்
சாதனைகள் தொடர்வாய்
இன்னும் சிகரங்கள் காத்திருக்கின்றன

சோதனைகள் பக்குவபடுத்தும்
பக்குவம் சோதனையை தவிர்கும்

உன் வெற்றியில் தான் - எங்கள்
மகிழ்ச்சி இருக்கிறது ஆகவே
தொடர்ந்திடு உன் பணியை
உன்னை தாங்க - எங்கள்
தோள்கள் காத்திருக்கின்றன.

விரைவில் யாரும் எட்டா இடம் பிடிக்க உன் அன்பனின் அன்பு வாழ்த்துக்கள்.

உன் வளர்சிக்கு என் அன்பளிப்பு 5* + 500 iCash

Myboy 05-11-08 09:22 PM

வாழ்த்துக்கள்
 
5000 பதிவுகள் கண்ட நண்பர் பில்லாவிற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 10000 பதிப்பு காண வாழ்த்துக்கள்!!

junaam 06-11-08 02:49 PM

இந்த பில்லாவை 3000 பதிப்புகளை தொட்ட போதே 5000 தொட வாழ்த்து சொன்னேன்.

இப்போது இவர் தொட்டு விட்டார் . ஆனால் இதற்க்காக நான் வாழ்த்து சொல்ல போவதில்லை .

அதற்க்கு பதிலாக 10000 பதிப்புகளை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் பில்லா.

இவரிடம் எனக்கு பிடித்த ஒன்று மற்றவர்களை ஊக்கப்படுத்தும் இவரின் செயலே.

மீன்டும் வாழ்த்துக்கள் பில்லா

anusuya 06-11-08 03:19 PM

5000 பதிப்புக்கள் பதித்த பில்லாவுக்கு வாழ்த்துக்கள்...
(சரி..பில்லாவை எங்கே காணோம்..இந்தத் திரியில் அவர் எதுவும் பதிக்க வில்லையே...ஜலதோஷம் எதுவும் வந்துட்டா...:razz:)


All times are GMT +5.5. The time now is 02:18 AM.

Powered by Kamalogam members