காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   இணையப் பணம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=74879)

sankar77 25-05-21 08:11 PM

இணையப் பணம்
 
இணையப் பணம் பற்றி வினா எழுப்பி இருந்தேன்,. தகுந்த விடையினை புதியவர் மையத்தில் பெற்று விட்டேன் .
ஒவ்வொரு பொருள் பற்றியும் தீர்க்ககமாக சிந்தித்து செயலாற்றி வரும் நம் நிர்வாகிகள் பற்றி ஒரு பெருமிதமான எண்ணம் மனதில் எழுகிறது, வளர்க அவர்தம் பணி .வாழ்த்துவோம்.
கொஞ்சம் அவசரப் பட்டுவிட்ட சங்கர் 77

gemini 25-05-21 08:17 PM

தேவையில்லாமல் இணையப்பணம் பற்றி இன்னொரு திரி திறந்து , உங்களை நீங்களே பாதகத்துக்கு உட்படுத்து கிறீர்கள்.

உங்களுக்கு இதைப்பற்றி புகழ்ச்சியாக எழுத வேண்டும் என்றால், இதை பற்றி விளக்கமாக எழுத்தப்பட்ட திரியில் எழுதியிருக்கலாம். தேவையில்லாமல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திரி.

காமலோக நிர்வாகம் உங்களை வெளிநடப்பு செய்யும் நிலைமைக்கு உங்களை நீங்களே அதற்க்கு வழி வகுக்காமல், விதிகளை மீறாமல் செயற்படுங்கள்.

asho 25-05-21 09:29 PM

நான் இரண்டுக்கு மேற்பட்ட திரிகளில் புது உறுப்பினர் அவசரம் குறித்து எழுதி விட்டேன். அப்படி என்ன அவசரம் ஒரே நாளில் அனைத்து பகுதிக்கும் சென்று மறு நாள் இந்த தளத்தை விட்டே சென்று விடப்போகிறீர்களா?. இல்லை கிடைக்கும் சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு திரும்ப வெளியே காத்திருக்க போகிறீர்களா?.

மெதுவாக தலைவாசலில் உள்ள திரிகளை பார்வையிடுங்கள், அறிவிப்புகளை படியுங்கள், விளக்கங்களை படியுங்கள், மற்றவர் எழுப்பிய நீங்கள் கேட்க நினைத்த கேள்வி/சந்தேகங்களுக்கு எப்படி பதில் சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.

எடுத்தவுடன் அனுமதிகள் பகுதியில் சென்று அடுத்த வாசலுக்கு அனுமதி கேட்டு ஒரு பதிவு. பின் பதிவுகள் எண்ணிக்கையை கூட்ட சில பதிவுகள், திரி ஒன்று அல்லது இரண்டு ஆரம்பித்து அதிலே திரும்ப திரும்ப திரும்ப திரும்ப பதிவுகள் பதிந்து பதிவுகள் எண்ணிக்கையை கூட்டி அனுமதி கேட்பது.

இல்லாவிட்டால் நிர்வாக உறுப்பினர்களுக்கு தனிமடல் போடுவது, புதிய உறுப்பினர்கள் என்ற அப்பாவி பிம்பத்தை வைத்துக்கொண்டு என்ன கேள்வி வேண்டுமானலும் கேட்கலாம் தவறில்லை என்ற எண்ணம்.

எதையும் பார்ப்பதில்லை, படிப்பதில்லை, நேராக தளத்தில் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு சென்று விட பறப்பது.

உங்கள் வீட்டிற்குள் அன்றைக்குத்தான் புதிதாக சேர்ந்த நண்பரை அனுமதித்து, உங்கள் வாழ்வில் அதுவரை நடந்த அனைத்து அனுபவங்களையும், உங்களிடம் உள்ள அனைத்து வளங்களையும், உங்களின் அனைத்து ரகசியங்களையும் தெரிவித்து விடுவீர்களா?,உங்களுக்கு தங்கை இருந்தால் அவர்களை அறிமுகப்படுத்தி பழக துடிப்பீர்களா?..


இந்த திரி பூட்டப்படுகிறது, இல்லாவிட்டால் இதற்கு இரண்டு கருத்து பதிந்து பதிப்புகள் எண்ணிக்கையை கூட்டுவார்கள்.

மற்றவர் கதை/கவிதை/கட்டூரைக்கு சென்று தினம் 5 கருத்து திறந்த மனதுடன் படித்து பார்த்து பதிந்தால் 4 நாளில் அடுத்த வாசல் அடையலாம். பின்னர் அங்கும் சிறப்பாக செயல்பட்டால் 5 நாளில் அடுத்த வாசல்.

அதைவிட்டு சும்மா பறக்கிறார்கள், நேரம் குறைவாக இருக்கும் போது ரயிலை பிடிக்க நினைப்பவர்கள் போல.


All times are GMT +5.5. The time now is 09:17 AM.

Powered by Kamalogam members