காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   தள செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தேவை? (http://www.kamalogam.com/new/showthread.php?t=21024)

nandabalan 01-09-05 11:03 AM

தள செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தேவை?
 
அன்புள்ள இணையத்தலைவர் அவர்களுக்கு,

வெகு நாட்களாய் நான் சொல்ல விரும்பியும் சொல்லாமல் இருந்த விஷயங்களை தங்கள் முன்பு வைக்கிறேன். இதை என் அன்பு கோரிக்கையாயை கூட வைத்துக் கொள்ளுங்கள். இப்படி ஒருஅற்புதமான ஒரு தளம் இருப்பதை கண்ட போது நீண்ட நாட்களாய் கிடைக்காத ஒன்றை தேடித்தேடி திடீரென்று கிடைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் இருந்தது என் மனது அப்போது. இந்த தளத்தில் நான் சேர்வதற்கு மிகவும் சிரமப்பட்டேன். பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தள மேற்பார்வையாளரும், இனிய நண்பருமான காஞ்சனாதாசன் சொல்லியது போல் இங்கு கதைகளை பதிப்பதே என் முதற்பணி என்பது போல் அத்தனை வேகமாய் கதைகளை பதித்து பதவி உயர்வு கிடைக்க பெற்றேன்.

ஆனால் சமீப காலங்களில் நிறையப்பேர் ஒரிரு கதைகளை பதித்தி விட்டு உறுப்பினர்களாகின்றனர். உறுப்பினர் ஆனதும் அடுத்து அடுத்து கதைகள் எதுவும் பதிக்காமல் வெறும் விமர்சனங்களை மட்டுமே பதித்து பதவி உயர்வு பெறுகின்றனர். பதவி உயர்வும் கேட்கின்றனர். இந்த போக்கிற்கு தாங்கள ஆதரவு தரக்கூடாது என்பதோடு, ஒவ்வொரு புதிய உறுப்பினர்களும் குறைந்த பட்சம் 15 கதைகளை ஆவது அது காமக்கதைகளாகவோ அல்லது தகாத உறவுக் கதைகளாகவோ கூட இருக்கட்டும். ஆனால் குறைந்தது 15 கதைகள் பதிக்க வேண்டும் என்று நடைமுறை படுத்த வேண்டும். வெறும் விமர்சனங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. விமர்சனங்கள் நிச்சயம் வேண்டும். அது ஒரு ஊக்க சக்தியே மேன்மேலும் கதைகள் எழுதுவதற்கு. ஆனால் விமர்சனங்கள் எழுதுபவர்கள் தாங்களும் தங்களால் இயன்ற வரை கதைகளை பதிக்கவேண்டும்.

இன்னொன்று தமிழில் நாலடியார் போல் நான்கு வரிகளில் கதை சொல்லும் பாங்கை கட்டாயம் தடைசெய்ய வேண்டும்.

அதே போல் பழைய உறுப்பினர்களில் நிறையப் பேர் இப்போது கதைகள் எதுவும் புதிதாய் பதிப்பதில்லை. அசைபடப் பகுதியில் படங்களை பதிப்பதில் எந்த பயனும் இருப்பதாய் தெரியவில்லை. மேலும் நம் தள பழைய உறுப்பினர்களில் எத்தனையோ பேர் மிக அற்புதமான கதைகளை கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் படைப்புகளை படிக்கும் போது என்ன ஒரு அற்புதத் திறமைகளை வைத்திருக்கிறார்கள் என்று. இன்று அந்த திறமைசாலிகள் எல்லாம் எங்கே போனார்கள்? அவர்களையும் மீண்டும் கதை எழுத தலைவர் அன்புக் கட்டளை இடவேண்டும். தொடர்ந்து எதுவும் பதிக்காதவர்களின் உறுப்பினர் பதவியை பறித்து அறிமுக உறுப்பினராக்கி விட வேண்டும்.

மேலும் நான் கேள்விப்பட்டவரை தலைவர் சொந்தப்பணத்தை போட்டு தமிழ்மக்களின் தீராத் தாகத்திற்கு ஒரு அருஞ்சுனையை கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட தலைவருக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாய் கதைகள் பல படைத்து காமலோகம். ஓஆர்ஜியை வெற்றிகரமாக நடத்த உதவ வேண்டும் என்பது என் ஆசையும் கோரிக்கையும் கூட.

என் கருத்துக்கள் பலருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம். ஆனால் சிந்தித்து பாருங்கள் தனி ஒரு மனிதனாய் இந்த தளத்தை எந்த ஒரு நிதி உதவியும் இல்லாமல் நடத்துவதென்பது எத்தனை எத்தனை கடினம் என்று. இன்றைக்கு எந்த தளத்தில் நுழைந்தாலும், ஒரு சில தளங்கள் தவிர (ஆனால் அந்த தளங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன) அனைத்தும் பே சைட் என்று சொல்லக்கூடிய தளங்கள் தான் இயங்குகின்றன. ஆகவே குறைந்தபட்சம் நம்தளமாவது எந்த பொருளாதாரச் சிக்கலுமில்லாது இயங்க அனைவரும் கதைகள் பல எழுதி நம் சிஸ்டர் தளமான Kamalogam.org நன்கு செயல்பட உதவி புரியவும்.

இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும், விதிகளும் எனக்கும் பொருந்தும். எதிர்காலத்தில் நானே தொடர்ந்து கதைகளை பதிக்கவில்லை என்றால் என் உறுப்பினர் பதவி போகும்.

அன்புடன்

சிவா - மதுரை.

manostb 01-09-05 04:25 PM

இந்த கருத்து... ஓரளவுக்கு... அனைவருக்கும் பொருந்தும்...

முடிவு நல்லதே
ஆனால் அப்படியே செயல்படுத்த முடியுமா...?

15 கதைகள் என்பது கொஞ்சம் கடினமே.. :-(

tsunami 01-09-05 05:37 PM

நண்பரே என்னை போன்றவர்கள் வேலை பளு நிமித்தமாக கதை எழுத ஆர்வம் இருந்தும் எழுத முடியாமல் அவதி படுகின்றனர். அப்படி ஆர்வத்துடன் பல காரண்ங்களால் கதை எழுத முடியாதவர்களை எல்லாம் நீங்கள் விரும்புவது போண்ற சட்டம் கொண்டுவந்தால் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

testing_arvind 01-09-05 05:56 PM

ஏற்கனவே இத்தளத்தில் உள்ள விதிமுறைகள் கடுமையாக உள்ளன. நீங்கள் சொல்லும் 15 கதை விதிமுறை பல உறுப்பினர்களுக்கு மிகவும் சிக்கல் மிக்கதாக இருக்கும். இப்படி கட்டாயப்படுத்தி கதை எழுத வைத்தால் கதைகளின் தரமும் நீளமும் குறையும் என்பது என் கருத்து. பிறகு, எல்லாராலும் கதை எழுத முடியாது..அது ஒரு திறன் தான் என்பதநை நீங்கள் அறிவீர்கள். நானும் கதை எழுதுகிறேன் என்று எல்லாரும் ஆரம்பித்தால் அப்புறம் குப்பைகளை களைவதே மேற்பார்வையாளர்க்கு பெரிய வேலையாகிப்போய் விடும். விமர்சனங்களின் தரத்தையும் நீளத்தையும் தற்பொழுது உள்ள விதிகள் நன்றாகவே கட்டுப்படுத்துகின்றன. அதில் மாற்றம் தேவையில்லை. பழைய உறுப்பினர்களுக்கு எத்தனையோ காரணங்களுக்காக ஈடுபாடு காட்ட முடியாமல் இருக்கலாம். அதற்காக அவர்கள் பதவியை பறிப்பது சரியாகாது. வேண்டுமானால் அன்பு வேண்டுகோள் விடுக்காலாம். அவ்வளவே. ஆனால், நிறைய கதைகள் எழுதினால் அதன் மூலம் நமது கட்டணத்தளத்திற்கு ஆதரவு கூடும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

nandabalan 01-09-05 06:11 PM

அன்பு நண்பர் சுனாமியே,
 
எல்லோருக்கும் வேலைப் பளு உண்டு.அதை நான் மறுக்கவில்லை.
எனக்கும் கடினமான வேலைப் பளு. இன்னும் சொன்னால் தினம் ஒரு ஊர் என்று சுற்றும் வேலை. இருந்தும் முயற்சி செய்கிறேன்.
அதே முயற்சியை நீங்களும் செய்யுங்கள். அப்புறம் எப்படி தளம் இயங்குவது? ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும்.

என் கருத்தை சொல்லுகிறேன். நான் கோரிக்கைதான் வைத்துள்ளேன் இணையத்தலைவருக்கு. கோரிக்கையை ஏற்பதும்
ஏற்காததும் இணையத்தலைவரின் விருப்பத்தை பொறுத்தது.

அன்புடன்
சிவா - மதுரை

ஆதி 01-09-05 10:03 PM

நல்ல ஒரு கருத்தை முன் வைத்துள்ளீர்கள். இருப்பினும் நம் காமலோக உருப்பினர்களில் கூடுமானோர் வேலை (employee) செய்பவர்களாகவே இருப்பார்கள் என்பது என் கணிப்பு. தாங்கள் கூறியதில் அங்கத்தினராக சேரும் ஒவ்வொரு உருப்பினரும் பதவி உயர்வு கிடைக்கும் வரை பதவி உயர்வுக்கு தேவைபடும் பதிப்புகளை மட்டும் பதித்து விட்டு (ஒரு வரி அல்லது இரண்டு வரி) காணாமல் போய்விடுகிறார்கள்.

Kanchanadasan 01-09-05 10:08 PM

நீங்கள் நினைப்பதை தலைவர் உடனே நிறைவேற்றி இருக்கிறார். பாருங்கள்.

kenmore 01-09-05 11:40 PM

இப்பொழுதுள்ள தள விதிமுறைகளே போதுமானது என்பது என்கருத்து. பழைய உறுப்பினர்கள் அல்லது வெள்ளி வாசல்,தங்க வாசல் அனுமதி பெற்றவர்கள் தொடர்ந்து தகுதியைத் தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 4 மாதங்களுக்கு ஒரு கதையாவது பதிக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளலாம்.

gankrish 02-09-05 10:45 AM

சிவா நல்ல கருத்தை தான் வைத்துள்ளார். அரவிந்த் சொன்னது போல எல்லோருக்கும் கதை எழுதுவது வராது. ஏன் நானே எல்லா பாட்டையும் மாற்றி எழுதுகிறேன், ஆனால் ஒரு கதை எழுத முடிவதில்லை. அதற்க்கு ஒரு திறமை வேண்டும். எல்லோரும் கதை எழுத சொன்னால்.. இங்கு உறுப்பினர் ஆக இருப்பதற்க்கு என்ரு சொன்னால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எழுத ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் கதையின் தரம் குறைந்து விடும். இது என் கருத்து.

Rajam 02-09-05 01:28 PM

நீங்கள் சொல்வதை அப்படியே நிறைவேத்துவது ஆபத்தில் முடியும்....

கதை எழுதும் திறன் இருப்பவர்கள் என்றும் சோர்வடைய மாட்டார்கள்.. காதா, காமன், ஹார்ட்பாங் என பலர் இன்னும் எழ்ததான் செய்கிறார்கள்.. அவர் எழுதவது புகழாரத்துக்கு, தன் திருப்திக்கு, தனது திறமைக்கு ஒரு வடிவுகாலாக நினைப்பவர்கள்.

ஆனால பலருக்கு இந்த திறமைகள் கிடையாது.. ஆனால் படித்துவிட்டு நேர்மையாக, கடமை உணர்வுடன் பாராட்டு தெரிவிக்கும் பலர் இஙுகுண்டூ..

வேரு சிலர், படித்துவிட்டு ரசிக்க கூடிய கதையாக இருந்தாலும், அதை வெளிப்படுத்தாமலே சென்று விடுகிறார்கள்..

எல்லோரையும் குற்றவாலி கூண்டில் எத்தி அவர்களை வெளி அனுப்பிவிட்டால் இங்கு படிக்கவும் பாராட்டவும் ஆளிருக்க மாட்டார்கள், பாராட்டுக்கள் இல்லமல் அதுவும் நிறைய பேர் பாராட்டமல் பாராட்டுக்கு மதிபில்லாமல் போய் விடும்.

மற்றும் வெறும் பத்து இருபது பேர் மட்டும் இங்கு வந்து பொனால் இந்த இடம் வெறிச்சோடிவிடும். இந்த பத்து பதினைந்து பேர்களும் எவ்வளவு நாட்கள் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பழைய எழதாளர்கள் இப்போது இங்கு வருவதில்லை, இப்பொது எழ்துவபர்களும் நாளை கானாமல் போகலாம்.

இங்கு, எழுதுபவர்களும், ரசிப்பவர்களும், விமரிப்பவர்களும் வேண்டும். கொன்சம் சிந்தித்து பாருங்கள் இன்கு 1000 பேர் இங்கு வந்து அதில் பாதிபேர் உங்கள் க்டஹிக்கு வொட்டு போட்டால் அதற்குறிய மதிப்பிர்க்கு, வெறும் 10 பேர் மட்டும் வோட்டு போடுவது ஈடாகுமா??

இங்கு எழுத கூடிய திறனிருப்பவர்களை மேலும் நிறைய காவியங்களை படைப்பதற்க்கு நாம் எல்லோரும் காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருக்க வேண்டும் என்றால், அவர்களுடைய எல்லா கதைகளையும் ரசித்து படித்துவிட்டு நன்றி தெரிவிப்பதே.

ரா

aunty_lover_uk 03-09-05 03:11 AM

15 கதைகள் என்றில்லாமல் 15 படைப்புகள்(பாடல்) என்ன வைக்கலாம்

x_wala 03-09-05 07:28 AM

தாங்கள் கருத்து கிட்டதட்ட சரிதான்
ஆனால் பலருக்கு அலுவல் காரணமாக படைப்புகளை
அளிக்கமுடியாமல் இருக்கலாம்

என்னை பொருத்தவரை விமர்சனம்
எழுதுபவர்களை நிச்சயம் பாரட்டதான்
வேண்டும்
எல்லோரும் எழுதவேண்டும் என்று எதிர்பார்பது
நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று....

காமராஜன் 03-09-05 11:22 AM

கருத்தில் பிழை உள்ளது என்பதே எனது கருத்து

எல்லோராலும் கதை எழுத முடியாது.
எல்லோராலும் விமரிசனம் எழுத முடியாது,
எல்லோராலும் கவிதை புனைய முடியாது.

அவரவர்கள் தத்தம் பங்களிப்பை அளிப்பதுவரை தளம் வெற்றி பெற்றதாகவே கருத வேண்டும்.

துப்பாக்கி முனையில் யாரையும் கதை எழுத வைக்க முடியாது..........

ROSE 03-09-05 01:33 PM

ஐந்து விரலும் ஒன்று போல் இல்லை நண்பரே. எல்லாரும் சிறந்த காதாசிரியர்கலாக ஆக முடியாது. சிலர் சிறந்த எழுத்தாளர்கலாக இருப்பார்கள். நல்ல கதைகளை படைப்பாவர்கள், பாடல்களை எழுத முடியாதவர்கலாக இருக்கலாம். கவிதைகள் எழுதுபவர்கள் நகைச்சுவை துணுக்குகள் எழுத முடியாதவர்கலாக இருக்கலாம். சிலர் இவைகளை தவிற வேறு பயன் உள்ள ஆக்க பூர்வமான துணுக்குகள் Threadகளை படைக்கலாம்.

கா.தா சார் மாதிரியான ஒரு சிலர் தான் ஓயிவு இல்லாமல் எந்த ஒரு சோர்வும் இல்லாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களின் தனிச்சிறப்பு.
அவர்களை போல் எல்லாரும் ஆக முடியாது. அவர்களை இன்னும் ஊக்குவிக்க வேண்டும், மணம் திறந்து பாராட்ட வேண்டும்.

இங்கு வரும் பெரும் அங்கத்தினர்கள் கதைகள் படிக்கவே வருகிறார்கள். அவர்களும் தளத்தின் விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு பதவிகளை எதிர்பார்த்து அல்லது கிடைத்த பதவிகளை தக்க வைத்து கொள்ள தன்னால் இயன்ற பங்களிப்புகளை அளிக்கின்றார்கள்.

அனைவரும் கட்டாயம் கதைகள் எழுத வேண்டும் என்று நிர்பனித்தால் மேலே ஒரு நண்பர் சொல்லியது போல் இங்கு குப்பைகள் தான் அதிகரிக்கும். பின் நிர்வாகத்துக்கு அதுவே அதிக வேளையையும் வீன் சிரமத்தையும் கொடுக்கும்.

anusuya 03-09-05 02:45 PM

நண்பர்கள் கூறியது போல் அனைவருக்கும் வேலைப்பளு இருக்கும் நிலையில் (இதில் வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலையும் உள்ளவர்கள் பாடு மிகவும் சிரமம் தான்) சிவா சொல்வது போல் கட்டாயபடுத்தி பதிப்புகள் மற்றும் கதையை பதிக்க சொன்னால் தரமான கதைகள் தளத்திற்கு கிடைக்காது....வெறும் குப்பைகளை பதித்து நானும் பதிக்கிறேன் என்று சொல்பவர்கள் தான் மிஞ்சுவார்கள்....
தலைவர் ஏற்கனவே சாட்டையை எடுத்துவிட்டார்...
கண்டிப்பாக கதைகள் பதித்து தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்துவதற்கு பதிலாக மாதம்தோறும் தங்களால் இயன்ற பதிப்புகளை அது பாராட்டாகட்டும், கவிதையாகட்டும், துணுக்கு ஆகட்டும் பதிக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி இத்தளம் சிறக்கவும் இதன் துணைதளமான kamalogam.org மூலம் தளத்திற்கு வருமானம் வந்து தலைவருக்கு சிரமத்தை குறைக்கவும் எல்லோரும் உதவ வேண்டும்....
மூன்று மாதங்களுக்கு ஒரு கதையாவது பதிக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் பழைய உறுப்பினர்களுக்கு கட்டாயமாக்கலாம்....புதிய உறுப்பினர்களுக்கு 15 கதைகள் எழுத வேண்டும் என்பது மிகவும் கடினமான காரியம்...அது போல் 4 வரி கதைகளை எழுதுவதை கட்டாயம் தடைவிதிக்க வேண்டும்....அல்லது 4 வரி கதை எழுதி பதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு அவர்களுடைய முழு கதையையும் சேர்த்து ஒரு பதிப்பாக கருத வேண்டும்...

xxxGuy 03-09-05 02:52 PM

சிவா_மதுரை,

உங்கள் கருத்துக்கள் படி நடந்தால் நல்லது தான். ஆனால், கதை எழுதுவது என்பது எல்லோராலும் முடியாது. நாம் கதை எழுதினால் முன்னுரிமை என்று கூறுவதனால் பலர் கதை எழுத ஆரம்பிக்கிறார்கள், ஆனால் ஒரு சிலராலேயே நன்றாக எழுத முடிகிறது, பலர் அனுமதி கிடைத்தவுடன், கருத்துக்கள் கூறியே தங்கள் தகுதிகளை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

யாருமே தனக்கு எதுவுமே வராது என்றும் இருந்துவிடக் கூடாது. முயற்சி செய்து பார்க்கவேண்டும். முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை. அதே நேரத்தில் எல்லோராலும் எல்லாமும் செய்ய முடியாது. ஆனால், அவரவருக்கு என்று ஒரு திறமை உண்டு. அதை செய்தாலே போதும் கதைகள் மட்டும் தான் படைக்க வேண்டுமென்பதல்ல. குறைந்த பட்சம் சிறந்த கருத்துக்கள் கொடுத்து எழுத்தாளர்களை ஊக்குவித்தாலே போதும். ஆனால், அனுமதிகள் கிடைத்தவுடன், அதுவும் கூட செய்யாமல் நிறைய பேர் இருந்து விடுகிறார்களே அவர்களுக்கு தான் விதிமுறைகளை இனி கடுமையாக்க வேண்டும்.

நல்ல விமர்சனங்கள் ஒரு படைப்பாளிக்கு டானிக் போன்றது. அது கிடைத்தால், படைப்பாளி மேலும் மேலும் தன் படைப்பை மெறுகேற்றுவான். அதன் மூலம் தரமான படைப்புகள் கிடைக்கும்.

நீங்கள் ஆரம்பித்துள்ள இந்த தலைப்பால் பலர் கலங்கிப் போய் இருக்கிறார்கள். "வந்துட்டான்யா... வந்துட்டான்யா..." என்று வடிவேல் பாணியில் பலர் கூறியிருப்பார்கள்". "ஏற்கனவே, இங்கே அதிக கெடுபிடி, இந்த ஆளு வேரையா?" என்று சிலர் முணுமுணுத்திருப்பார்கள். நாமும் அவர்களை முதலிலேயே ரொம்பவும் மிரட்ட வேண்டாம். கதை எழுத ஆர்வமுள்ளவர்கள் தானாகவே எழுதுவார்கள், நாம் கத்தியை காட்டி மிரட்டி எழுத வைக்க தேவையில்லை.

மேலும், நாங்கள் இங்குள்ள ஒவ்வொரு படைப்புகளையும், அதைப் படைப்பவர்களையும், கருத்துகள் கூறுபவர்களையும், கருத்துக்கள் கூறாமல் செல்பவர்களையும் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதற்கு ஏற்ப அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப் படும், படைப்பாளிகள் ஊக்கம் கொடுக்கப் படும், கதைகளின் தரம் காக்கப் படும்.

kamakalaingan 03-09-05 03:29 PM

தளம் சிறப்பாக செயல்பட தலைவருக்கு ஒத்துழை
 
நண்பர் சிவாவின் கருத்துக்கள் முற்றிலும் உண்மை. அனுமதி பெறுவதற்காக மட்டுமே கதை பதிப்பது என்பது தவறாகும். இத்தளமே நமக்குள் காமகலையின் பரிணாமங்களை, அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்காக சுயநலமின்றி தலைவர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தலைவர் அனைவரும் பயன்பெற வேண்டும் என்று சொந்த பணத்தை போட்டு நிர்வகித்து வருகிறார் என அறியும்போது . . . தலைவர் உண்மையிலே பாராட்டத்தகுந்தவர்.
நம் தாய் தமிழில் இவ்வாறு ஒரு தளத்தை காணுவேன் என்று உண்மையிலேயே நினைத்துப் பார்க்கவில்லை.
நாம் அனைவரும் முழு முச்சுடன் தலைவருக்கு ஒத்துழைப்பு அளிப்போம். தளம் மென்மேலும் சிறப்பாக செயல்பட வழி வகுப்போம்.
இது எழுதுவதில் மட்டும் நின்று விடாமல் செயலில் கடைப்பிடிப்போம். தலைவர் கூறியது போல் முயற்சித்தால் முடியாதது இல்லை.

nandabalan 03-09-05 04:26 PM

அன்பு நண்பர்களே,


நான் எனது கருத்தையும், கோரிக்கையையும்தான் வைத்துள்ளேன். நானும் எல்லோரையும் போல் உறுப்பினர்தான். தலைவர்தான் முடிவு
செய்யவேண்டும்.எனவே தலைவர் என்ன சொல்லுகிறார் என்று
பார்ப்போம்.

மற்றபடி என் கருத்தில் எந்த உள் நோக்கமுமில்லை.

அன்புடன்
சிவா - மதுரை

vaithiyanathans 03-09-05 05:40 PM

வேலைப் பளு எல்லாருக்கும் உண்டு. கதை எழுதுவோருக்குத்தான் அதன் கடினம் தெரியும். 15 என்பது அதிகம். இப்போது உள்ள சட்டங்களே போதும். அனைவரும் கருத்து பதிவு செய்தாலே கதைகளின் உயரும் என்பது என் கருத்து. சிறந்த கருத்து என்பதே சிறிது கடினமாகத் தான் உள்ளது. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், சில கதைகளுக்கு படித்த உடன் கருத்து எழுத முடிவதில்லை. யோசித்து பதிய ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகிறது. காரணம் அலுவலகத்தில் இருந்து தளத்தினை பார்ப்பதுதான்...

aunty_lover_uk 04-09-05 03:53 AM

தல நீங்க சொன்னது முற்றிலும் சரியே.

இருப்பினும் நாலு பத்திகலில் கதை சொல்லும் போக்கு அதிகரிப்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம். இப்படியான "குறுந்தொகை" களால் கதை ஆர்வமே குண்றிபோகவும் கூடும்.

காமராஜன் 04-09-05 10:47 AM

Quote:

Originally Posted by xxxGuy
நல்ல விமர்சனங்கள் ஒரு படைப்பாளிக்கு டானிக் போன்றது. அது கிடைத்தால், படைப்பாளி மேலும் மேலும் தன் படைப்பை மெறுகேற்றுவான். அதன் மூலம் தரமான படைப்புகள் கிடைக்கும்.

இது ஒரு வெகு முக்கியமான அம்சம்.... நான் ஒரு புதிய 'நூல்'-ஏ தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பாயிண்ட்.

தற்போது பலர் கருத்து என்று கூறிச் செல்கிறார்கள் என்றாலும் - 'விமரிசனம்' என்ற ரீதியில் வரும் பதிப்புக்கள் மிகக் குறைவே -- சொல்லப் போனால் விரல் விட்டு எண்ணிவிடலாம். எனது கருத்தில் விமரிசனம் எழுதுவது கதை எழுதுவதை விட சிரமம். சாதாரண கருத்துக்கள் பலதும் கதைகளை வாசிக்காமல் கூட .. ஸ்கோர் கூடுவதற்காக செய்யப்படுவது ஆங்காங்கே புலப்படலாம்.

பழைய காமக்கதைகள் யாஹூ குழுவில் - ஒரு நண்பர் - ராஜா என்று நினைக்கிறேன் - பெயர் அவ்வளவு நிச்சயம் இல்லை - விமரிசன ஸ்பெஷலிஸ்ட் ஆக இருந்தார்.

ஒரு சின்ன ஆலோசனை..
ஒவ்வொரு மாதமும் "சிறந்த விமரிசனம்" அல்லது "சிறந்த விமரிசகர்" என்று ஒருவர் ஊக்குவிக்கப் படலாம்.

இது வாக்களிப்பால் நிச்சயமாக நடக்காது. பொதுவாக எல்லா பதிப்புக்களையும் நோட்டமிடும் ஒரு அல்லது இரு நடுவர்களால் தீர்மானிக்கப்படலாம்.

விமரிசனங்களின் தரம் கூடும்போது நிச்சயமாக படைப்புக்களின் தரமும் உயரவே செய்யும்.

smartman 04-09-05 07:09 PM

Quote:

Originally Posted by காமராஜன்
தற்போது பலர் கருத்து என்று கூறிச் செல்கிறார்கள் என்றாலும் - 'விமரிசனம்' என்ற ரீதியில் வரும் பதிப்புக்கள் மிகக் குறைவே -- சொல்லப் போனால் விரல் விட்டு எண்ணிவிடலாம். எனது கருத்தில் விமரிசனம் எழுதுவது கதை எழுதுவதை விட சிரமம். சாதாரண கருத்துக்கள் பலதும் கதைகளை வாசிக்காமல் கூட .. ஸ்கோர் கூடுவதற்காக செய்யப்படுவது ஆங்காங்கே புலப்படலாம்.

ஒரு சின்ன ஆலோசனை..
ஒவ்வொரு மாதமும் "சிறந்த விமரிசனம்" அல்லது "சிறந்த விமரிசகர்" என்று ஒருவர் ஊக்குவிக்கப் படலாம்.

இது வாக்களிப்பால் நிச்சயமாக நடக்காது. பொதுவாக எல்லா பதிப்புக்களையும் நோட்டமிடும் ஒரு அல்லது இரு நடுவர்களால் தீர்மானிக்கப்படலாம்.

விமரிசனங்களின் தரம் கூடும்போது நிச்சயமாக படைப்புக்களின் தரமும் உயரவே செய்யும்.

தாங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. நானும் நிறையப் பதிவுகளை பார்க்கிறேன்.. அவை எண்ணிக்கையை மட்டுமே கூட்டுவதற்காகப் பதியப்படுகின்றன என்பது கண்டு வேதனையாக இருக்கிறது.. இவற்றைக் கண்காணித்து அவர்களின் பாயிண்டுக்களைக் கூட்டவோ குறைக்கவோ செய்தால் தாங்கள் கருத்துக் கூறியபடி தரமான விமர்சனங்களும் அதன் விளைவாக தரமான படைப்புகளும் வரும் என்பது வெகு நிச்சயம்.

இந்த வகையில் நம் அங்கத்தினர்கள் சிலர் நிச்சயம் உதவுவோம்.

xxxGuy 04-09-05 10:02 PM

Quote:

Originally Posted by காமராஜன்
ஒரு சின்ன ஆலோசனை..
ஒவ்வொரு மாதமும் "சிறந்த விமரிசனம்" அல்லது "சிறந்த விமரிசகர்" என்று ஒருவர் ஊக்குவிக்கப் படலாம்.

இது எங்கள் லிஸ்டில் ஏற்கனவே உள்ளது, எப்படி நடைமுறைப் படுத்துவது என்று நன்கு ஆலோசித்த பிறகு அமல்படுத்த உள்ளோம். நாம் முன்பு Best Critic of the Month (மாதாந்திர சிறந்த விமர்சகர்) என்று நடத்தியது தானே? அதனால் தான் அதில் வெற்றி பெற்ற ஒருவரை இந்த அணியில் சேர்த்துள்ளேன். (ராஜம் சிறந்த விமர்சகர் என்று முன்பு பட்டம் வென்றவர்களுள் ஒருவர்)

முகேஷ் 05-09-05 12:02 AM

Quote:

Originally Posted by xxxGuy
சிவா_மதுரை,

உங்கள் கருத்துக்கள் படி நடந்தால் நல்லது தான். ஆனால், கதை எழுதுவது என்பது எல்லோராலும் முடியாது. நாம் கதை எழுதினால் முன்னுரிமை என்று கூறுவதனால் பலர் கதை எழுத ஆரம்பிக்கிறார்கள், ஆனால் ஒரு சிலராலேயே நன்றாக எழுத முடிகிறது, பலர் அனுமதி கிடைத்தவுடன், கருத்துக்கள் கூறியே தங்கள் தகுதிகளை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

யாருமே தனக்கு எதுவுமே வராது என்றும் இருந்துவிடக் கூடாது. முயற்சி செய்து பார்க்கவேண்டும். முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை. அதே நேரத்தில் எல்லோராலும் எல்லாமும் செய்ய முடியாது. ஆனால், அவரவருக்கு என்று ஒரு திறமை உண்டு. அதை செய்தாலே போதும் கதைகள் மட்டும் தான் படைக்க வேண்டுமென்பதல்ல. குறைந்த பட்சம் சிறந்த கருத்துக்கள் கொடுத்து எழுத்தாளர்களை ஊக்குவித்தாலே போதும். ஆனால், அனுமதிகள் கிடைத்தவுடன், அதுவும் கூட செய்யாமல் நிறைய பேர் இருந்து விடுகிறார்களே அவர்களுக்கு தான் விதிமுறைகளை இனி கடுமையாக்க வேண்டும்.

நல்ல விமர்சனங்கள் ஒரு படைப்பாளிக்கு டானிக் போன்றது. அது கிடைத்தால், படைப்பாளி மேலும் மேலும் தன் படைப்பை மெறுகேற்றுவான். அதன் மூலம் தரமான படைப்புகள் கிடைக்கும்.

நீங்கள் ஆரம்பித்துள்ள இந்த தலைப்பால் பலர் கலங்கிப் போய் இருக்கிறார்கள். "வந்துட்டான்யா... வந்துட்டான்யா..." என்று வடிவேல் பாணியில் பலர் கூறியிருப்பார்கள்". "ஏற்கனவே, இங்கே அதிக கெடுபிடி, இந்த ஆளு வேரையா?" என்று சிலர் முணுமுணுத்திருப்பார்கள். நாமும் அவர்களை முதலிலேயே ரொம்பவும் மிரட்ட வேண்டாம். கதை எழுத ஆர்வமுள்ளவர்கள் தானாகவே எழுதுவார்கள், நாம் கத்தியை காட்டி மிரட்டி எழுத வைக்க தேவையில்லை.

மேலும், நாங்கள் இங்குள்ள ஒவ்வொரு படைப்புகளையும், அதைப் படைப்பவர்களையும், கருத்துகள் கூறுபவர்களையும், கருத்துக்கள் கூறாமல் செல்பவர்களையும் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதற்கு ஏற்ப அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப் படும், படைப்பாளிகள் ஊக்கம் கொடுக்கப் படும், கதைகளின் தரம் காக்கப் படும்.

தலைவர் அவர்களே
தாங்கள் சொல்வது தான் சரி
மேடை பேச்சாளர்கள் பேசிய உடன் அந்த கைதட்டல் இருக்கே அது பேசியவருக்கு எவ்வளவு பெருமை
பேசுபவர் ஓரிருவர் தான் கேட்டு கொண்டிருப்பவர் பல்லாயிரம் பேர் யாவருமா பேச முடியும்
அது போல கதையின் விமர்ச்சகர் இருந்தால் தான் அந்த கதையின் வலிமை மற்றவர்களுக்கு தெரியும்
கதை படிப்பவர்கள் இருந்தால் தானே கதை எழுதி அணுப்ப முடியும்
எல்லோரையும் தண்டனை என்ற பெயரில் நீக்கி விட்டால் யார்தான் எழுதும் கதையை படிப்பது எழுதியவரே படிப்பதா?
கதை எழுதுபவர் எவ்வளவு முக்கியமோ அதெபோல கதையை விமர்சிப்பவரும் முக்கியம் என்ற உங்கள் கருத்துக்கு ஓராயிரம் கைதட்டல் பெருகிறீர்கள்
தலைவா

tamil kumaran 15-09-05 03:45 PM

நண்பர் சிவா அவர்களே தாங்களின் கோரிக்கையில் நியாயங்கள் தெரிகின்றது , இருந்தாலும் இதனால் நிறைய உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் , கதை எழுதுவது என்பது ஒரு திறமை இத்திறமை எல்லோருக்கும் இருப்பது இல்லை.

உதாரணமாக நாம் திரைதுறையை எடுத்து கொள்ளலாம் , ஒரு படம் எடுகிறார்கள் என்றால் அதற்க்காக கஸ்டப்படுபர்வர்கள் பலர் , எவ்வளவு தான் அருமையாக படத்தை எடுத்தாலும் அதை பாரட்ட ரசிகர்கள் இல்லை என்றால் அப்படம் வெற்றியடையாது, ஒவ்வொரு நடிகனுக்கும், கதாசிரியருக்கும் ரசிகர்கள் இருக்கவேண்டும். இம்மாதிரியான கடுமையான விதிகளை வைத்தால் பின்பு ரசிகர்கள் கூட்டம் சேருவது கடினமாகி விடும் , எல்லோரும் நாம் தான் கதை எழுதிவிட்டோமே அதனால் நாம் எதற்காக மற்றவர்களின் கதைகளுக்கு விமர்சனம் செய்யவேண்டும் என்று இருந்து விடுவார்கள் , யாரும் வமர்சனம் செய்யவில்லை என்றால் கதைகளின் தரமும் குறைந்துவிடும், கதைகளும் குறைந்துவிடும்.

யாரையும் மிரட்டி எழுதவைப்பது என்பது நன்றான செயல் இல்லை , திறமை உள்ளவர்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை அவர்கள் யாரும் சொல்லாமலே கதைகளை படைப்பார்கள் என்பது என்னோட கருத்து.

தாசன் 19-09-05 05:55 PM

எழுதுபவர்களும் வேண்டும்
படிப்பவர்களும் வேண்டும்

எல்லோரும் படித்தாலும் கஷ்டம்
பிறகு எழுதுவது யார்
எல்லோரும் எழுதிலாலும் கஷ்டம்
பிறகு படிப்பது யார்

mukunthan 19-09-05 06:24 PM

எவரால் எந்த காரியம் முடியுமோ அதை அவர்கள் செய்வது நல்லம் இலக்கண்மக்க தமிழ் எழுதுவது ரொம்ப கடினமான காரியம் சிவா இதில் எத்தனை பேர் யாருல்லும்தெரியாமல் வந்து இந்த தளத்தை பார்க்கிறர்களொ எல்லொரிடமும் வசதிகள் இருப்பதில்லையே அவெர்களையு நாம் அரவணைத்து செல்ல வேண்டும் இல்லையா??15 கதைகள் எப்படியும் மற்றவர்கலின் சாயலில் வருவதை தவிர்க்க முடியாது பின்பு காப்பியடித்து விட்டான் என்ரு தண்டனை வரும் தேவையா இது?? விமர்சனங்கள் வரவேற்கதக்கதே
தமிzலில் எழுதுவது முக்கியம் பொருள் உதவி செய்பவர்கள் செய்யா வேண்டும் அது நல்லது தான் தண்டனைகள் எப்போதுமே நல்லது செய்வது இல்லை இது என்னொட தாழ்மையான அபிப்பிராயம்

kay 22-09-05 10:08 AM

முடிஞ்சதை நல்லா செய்யுங்க ஐயா! தொடர்ந்து செய்யுங்க!அது போதும் தளம் சிறக்க!:grin: :grin: :grin:

rasiga 22-09-05 01:35 PM

கதை கட்டாயம் எழுத வேண்டும் என்றூ ஏன் எதிர்பார்க்கிறீர்கள். கண்ணியமாய் விவாதிக்கப்படும் என்று சொல்லிவிட்டு எழுதித்தான் ஆக வேண்டும் கட்டாயப்படுத்த வேண்டாமே

Guna2009 28-09-05 07:39 AM

இது ஒரு அருமையான தலைப்பு. பாராட்டுக்கள் சிவா அவர்களே.

ஆனால் பதினைந்து கதைகளைப் படைத்தால்தான் மற்ற பகுதிகளுக்கு அனுமதி என்று கூறினால் அந்த பதினைந்து கதைகளை எழுதிமுடிக்கவே அவர்களுக்கு நேரம் கிடைக்காது.

இந்த தளத்திற்கு வருபவர்கள் அனைவரும் வேறு வேலையில் இருப்பவர்கள். அவர்களால் தொடர்ந்து சில மணி நேரங்கள் கதை எழுதுவதற்கு செலவிட முடிவதில்லை. நான் எழுதிய ஒரு கதையே இன்னும் பாதியில் நிற்கிறது. ஆறு பாகங்கள் வரவேண்டிய கதை இரண்டு பாகங்களுடன் நிற்கிறது. காரணம் நேரமின்னைதான். தொடர்ந்து சில மணி நேரங்கள் ஒதுக்கமுடியவில்லை என்ற காரணம்தான்.

ஆனால் தொடர்ந்து சிறப்பாக பதிவு செய்துகொண்டிருந்தாலே நல்லது. அதுபோல் வரும் கதைகளுக்கு ஒரு சில வார்த்தைகளாவது எழுதினால் கதையை எழுதியவருக்கு மீண்டும் உற்சாகம் பிறக்கும் அடுத்த கதை எழுதுவதற்கு.

நன்றி வணக்கம்
ஆரென்

கர்ணா 28-09-05 10:01 PM

15 கதையா யப்பே?
 
திரு சிவா அவர்களே,
உங்களின் கருத்துக்கு மிகவும் கடுமையான விமர்சனங்கள் செய்ய முடியும் ஆனால் விரும்பவில்லை. தாங்கள் கூறியது போல் 15 கதைகளா அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று நிறம்ப கதைகள் எழுதிய உங்களுக்கு தெரியும். நான் ஆரம்பித்த 2 கதையை இன்னும் முடிக்க நேரம் கிடைக்காமல் விழிபிதுங்கி நிற்கிறேன்.
கதை ஏழுதுவது கதை படிப்பது போல சாதரண விஷயம அல்ல என்பது என் கருத்து. நல்ல தரமான கதைகள் எழுத வெகு நேரம் வேண்டும். பிறகு அந்த கதையை தொடர்ந்து எழுத சூழ்நிலைகள் சாதகமாக வேண்டும். எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இதே தளத்தில் எத்தனை கதைகளை நீங்கள் வேகமாக ஸ்குரோல் செய்து படித்து இருப்பீர்கள் ஏன் என்றால் அதில் படிப்பதற்கு ஒன்றும் இல்லாததால். இன்னும் கதை எழுத சட்டம் போட்டால் கதைகளின் தரம் அதளபாதளத்திற்கு போகும் நண்பரே.
எனக்கு என் கதையின் ஒரு பாகம் சுமாரான நீளத்தில் எழுதுவதற்கு 2 மணி நேரம் எடுக்கிறது. என்னால் எப்பவும் ஒரு இடத்தில் உக்காந்து 2 மணி நேரம் எழுத முடியாது. ஆனால் கதைகளை படித்து விமர்சனங்கள் எழுத முடியும். அதுவும் நான் எல்லா கதைகளுக்கும் விசர்சனம் எழுதுவதில்லை விமர்சனம் இருந்தால் மட்டும் எழுதுவேன்.
உண்மைய சொல்லுங்கள் நண்பரே பதிப்புகள் கதைகள் அதிகம் எழுதினால் பதவி உயர்வு என்பதால் தானே இத்தனை வேகமாக கதை எழுதுனீர்கள். பதவி உயர்வே ஒரு முக்கியமான நோக்கம் நன்பரே அதனால் தான் அந்த விதிமுறையே உள்ளது. அதை இங்கே யாரும் மறுக்க முடியாது பதவி உயர்வுக்கு பின்னரும் கதை எழுதும் நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் எல்லாராலும் அது முடியாது.

உங்கள் தமிழன் 08-10-05 02:34 PM

அன்பரே,
நான் இப்பொழுதான் புதிதாக கதை பதிய ஆரம்பித்துள்ள ஒரு உறுப்பின்ர்.
நான் அதிகமாக கதை பதிய வேண்டும் என்று ஆர்வமுள்ளவன்.
என் போன்ற ஆர்வமுள்ளவர்கள் எப்பொழுதும் கதை பதியத்தான் போகிறார்கள்.
எனவே இந்த அளவுக்கு கடுமையான விதிமுறைகள் தேவையில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து.

- உங்கள் தமிழன்.

nandabalan 08-10-05 06:17 PM

அன்பு நண்பர் கர்ணா அவர்களே,
 
அன்பு நண்பர் கர்ணா அவர்களே,

பதவி உயர்வுக்கு எழுதியிருந்தால் இன்னும் அதிகம் எழுதியிருப்பேன். என்னுடைய விவாதத்தின் முக்கிய கருவை எல்லோரும் மறந்து பேசுகிறீர்கள். இணைய தளம் வெற்றிகரமாக நடப்பதற்கு நம் பங்களிப்பை தந்தால்தான் முடியும் என்று சொன்னதை விட்டுவிட்டு மற்றதையே எல்லோரும் பிடித்துக்கொண்டுள்ளீர்கள்.

ஏற்கனவே சொன்னபடி என் கருத்தை தான் நான் சொல்லி உள்ளேன். அதை செயல்படுத்துவதென்பது தலைவரின் கையில் உள்ளது. எனவே பதவி உயர்வுக்கு என்று வார்த்தைகளை கொட்டாதீர்கள்.

அன்புடன்
சிவா - மதுரை

tamilraja_2004 10-10-05 04:57 PM

Anumathi vendum
 
Enakku anumathi vendum

Kanchanadasan 10-10-05 05:15 PM

Quote:

Originally Posted by கர்ணா
உண்மைய சொல்லுங்கள் நண்பரே பதிப்புகள் கதைகள் அதிகம் எழுதினால் பதவி உயர்வு என்பதால் தானே இத்தனை வேகமாக கதை எழுதுனீர்கள். பதவி உயர்வே ஒரு முக்கியமான நோக்கம் நன்பரே அதனால் தான் அந்த விதிமுறையே உள்ளது. அதை இங்கே யாரும் மறுக்க முடியாது.

இது தவறான வாதம் கர்ணா....

பதவி உயர்வுக்காக எழுதுவது என்றால் நான் எழுதுவதை கிட்டத்தட்ட ஒண்ணரை வருடங்களுக்கு முன்பே நிறுத்தி இருக்க வேண்டும்.

என்னை பொறுத்த வரை உங்களது பதில், சிவா என்ற உறுப்பினரின் கருத்தினை விமர்சனம் செய்யாமல் சிவா என்ற தனி மனிதனை விமர்சனம் செய்வது போலத் தான் நான் நினைக்கிறேன்.

எல்லோரும் அவரைத் திட்டும் முன் அவரின் வாதத்தில் இருக்கும் உண்மையை உணருங்கள். கதை எழுதுவது கஷ்டம் தான். நேரம் ஆகும் தான். எல்லோராலும் முடியாது தான். ஆனால் அதே நேரம் முதலில் தலை வாசலில் இருந்து தமிழ் வாசலுக்கு வருவதற்காக இருக்கும் வேகம் அதை அடுத்து அடுத்து பதவி உயர்வுகள் பெற்ற பின் இருப்பதில்லை. என்னால் பல உதாரணங்கள் காட்ட முடியும் தங்க உறுப்பினரான பின் மொத்தமாய் கதை எழுதுவதையே நிறுத்தி விட்டவர்களுக்கு. ஆனால் நான் அப்படிச் செய்தால் அது திரும்ப தனி மனித தாக்குதல் ஆகி விடும் என்பதால் அதை தவிர்க்கிறேன்.

எனவே ஒவ்வொருவரும் எழுதுங்கள். விதி முறைகளை கடினமாக்க வேண்டும் என்பது சிவாவின் கருத்து. அது வேண்டாம் என்றால் அதை மட்டுமே பதியுங்கள். கடுமையான விமர்சனக்கள் வேண்டாமே...

padam22 11-10-05 10:46 AM

அருமையான தளம், தொடர்ந்து கிளர்ச்சிக் கதை எழுதவும்

நன்றி

காமராஜன் 11-10-05 05:51 PM

என் கருத்துப் படி உண்மையான எழுத்தாளர்கள் தத்தம் திருப்தி அல்லது இன்பத்துக்காகவே கதை எழுதுகிறார்கள் என்பதே... ஆனால் அதற்காக எப்போதும் கதை எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் சரியல்ல.

கதை எழுத வேண்டிய சில அம்சங்கள் .. நேரம்.. அதைவிட முக்கியம் கிடைத்த நேரத்தில் எழுதும் 'மூட்' வரவேண்டும். ஒரு வித சலிப்பு தட்டி விட்டால் ஒரு சிலர் கதை எழுதுவதை நிறுத்தி வைக்கலாம்..

காமலோகத்தில் தற்போது கதைகளின் எண்ணிக்கைக்கு பஞ்சம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. வெளியாகும் கதைகளின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளே உடனடியாகத் தேவை........

கா ரா

Quote:

Originally Posted by KanchanaDasan
என்னால் பல உதாரணங்கள் காட்ட முடியும் தங்க உறுப்பினரான பின் மொத்தமாய் கதை எழுதுவதையே நிறுத்தி விட்டவர்களுக்கு. ஆனால் நான் அப்படிச் செய்தால் அது திரும்ப தனி மனித தாக்குதல் ஆகி விடும் என்பதால் அதை தவிர்க்கிறேன்..


thamilan2005 01-12-05 03:05 PM

எல்லோராலும் கதை எழுத முடியாது என்னோட கருத்து

annan 01-12-05 07:45 PM

நண்பர் தமிழன் சொன்ன மாதிரி, எல்லோராலும் கதை எழுத முடியாது. கதை எழுதுவது ஒரு கலை. இல்லாதவர்களை கட்டாயபடுத்தினால், தாழ்வு மனப்பான்மைதான் வரும். இது எனது கருத்து

rajjdy 02-12-05 02:43 AM

Quote:

Originally Posted by annan
நண்பர் தமிழன் சொன்ன மாதிரி, எல்லோராலும் கதை எழுத முடியாது. கதை எழுதுவது ஒரு கலை. இல்லாதவர்களை கட்டாயபடுத்தினால், தாழ்வு மனப்பான்மைதான் வரும். இது எனது கருத்து


கதை எழுதுவது திறமை தான் ஒத்துக் கொள்வோம். நேரம், காலம், சந்தர்ப்பம் எல்லாம் அமைய வேண்டும். மிகவும் சரிதான். எமது லோகத்தில் சில ஆயிரம் அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். சில நூறு அங்கத்தவர்கள் அக்ரிவ் ஆக இருக்கிறார்கள்.

ஆனால் எந்தவொரு ஆக்கத்திற்கும் 50 கருத்துப் பதிவுகள் உண்டு என்பதே.... மிக மிக அரிதாக அல்லது இல்லை என்றே கூறலாம்.

கஸ்டப் பட்டு ஒவ்வொரு படைப்பாளியும் படைக்கும் படைப்புகளை எத்தனை பேர் படிக்கிறார்கள். படித்தவர்களிலும் எத்தனை பேர் மனசு வைத்து தங்கள் விமர்சனங்களை கொடுக்கிறார்கள்? ஒரு வரி என்றாலும் ஆதரித்தோ எதிர்த்தோ கேள்வி கேட்டோ வந்தால் தான் எழுதுபவர்களுக்கு தங்களையும் கவனிக்கிறார்கள், தங்களுடைய ஆக்கங்கள் படிக்கப் படுகின்றது என்ற எண்ணம் வரும். எண்ணம் உற்சாகத்தைக் கொடுக்கும். உற்சாகம் தொடர்ந்தும் எழுதத் தூண்டும்.

கொடுக்க வேண்டிய ஆதரவைக் கொடுக்காமல் 10 கதை எழுது 15 கதை எழுதென்றால் யாரும் எழுதமாட்டார்கள்.

விமர்சனங்கள், கருத்துகள் சகல உறுப்பினர்களாலும் கூறப் படவேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட வேண்டும். குறைந்தது இரண்டு கிழமைகளுக்கு மேல் எந்தக் கருத்தோ பதிவோ பதிக்காதவர்களை
எச்சரிக்கைப் பண்ணலாம்.

விமர்சனங்கள் அதிகரித்துச் செல்லும் பொழுது ஆக்கங்கள் நிச்சயம் அதிகரிக்கும். இவ்வாறு விசனம் கொள்ளத் தேவையில்லை.


அங்கத்தவர்களே இதைக் கடமையாகக் கொண்டு செயற்பட்டால் ...பருங்கள் நீங்கள் படிக்கப் படிக்க கதைகள் வந்து கொண்டே இருக்கும்.

இது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

கர்ணா 19-12-05 04:38 PM

நண்பர் சிவா அவர்களும் காஞ்சன் என்னை மன்னிக்க வேண்டும்.
சிவா அவர்களின் படைப்புகளின் மேல் மிகுந்து ஆர்வம் உள்ளவன் நான். நான் நினைத்து எழுதியது வேறு மற்றவர்கள் படிக்கும் போது வரும் பொருள் என்று நினைக்கிறேன். தள் உறுப்பினர்களை தாக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை உடன்பாடும் இல்லை.

சிவா அவர்களிடம் தனி பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன்.

நான் சொல்ல வந்தது கதை எழுதுவது எவ்வளவு கடினம் என்றும் 15 கதைகள் மிகவும் கடினம் என்பதே.

மீண்டும் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும் நண்பர்களே

kayar 21-12-05 03:24 PM

தள நண்பர்களே!
15 கதைகள் கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற கருத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? நாம் முயன்றால் நம்மால் எல்லாமே முடியும். நமது தள நிர்வாகி அவர்கள் நமது தகுதிக்கு தகுந்தவாறு பதவி தந்துள்ளார். அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு ஒவ்வொரு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. நமது தளத்தின் ஒவ்வொரு பகுதியும் மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது.
நமது நண்பர்கள் அனைவருமே அதிக வேலைப்பளு உள்ளவர்களே. அவர்களும் கதைகள் படைக்கிறார்கள். நாமும் முயற்சிப்போம். கதைகள் படைப்போம்.

காமசுப்புடு 21-12-05 04:31 PM

ஒரு விளையாட்டுக் களத்தில் எல்லோரும் விளையாடினால்தான் அனுமதி என்று ஒரு நிலை வந்தால்..... கதி என்னவாகும்..?

ஒரு சிலர் விளையாடுவதும் பல்லாயிரக் கணக்கானோர் பார்வையாளர்களாக இருப்பதும் தான் இயற்கை..

எல்லோரும் கதை எழுதவேண்டும் என்று என்றைக்குமே கட்டாயப் படுத்த முடியாது.

vatta 21-12-05 10:23 PM

எல்லோரும் கதை எழுதினால் பின் யார்தான் படிப்பது. கதையை படித்து விமர்சனம் செய்வதே , அவர்களை ஊக்கவிக்கதான் .

தவிர எனக்கு இன்னும் உயர்வு கிடைக்க வில்லை.அதர்க்கு என்ன செய்யவேண்டும்

oolvathiyar 15-11-06 02:58 PM

சுரந்தால் தான் நண்றாக இருக்கும்
 
சிவா, நீங்கள் சொல்வதி முற்றிலும் ஏற்று கொள்ள முடியாது. நாண் கதைகள் எழுதி இருக்கிறேன், னால் இதுவறை ஒண்று கூட இந்த லோகத்தில் பதியவவில்லை. எண்ண காரனம் தெரியுமா.
1. கதைகளை நண்கு படித்து திருத்தி பிறகு போடலாம் எண்று
2. கதைகளை ரகம் பிரித்து எனக்கு எதை முதலில் போடலாம் எண்று இன்னும் குழப்பி கொண்டிருக்கிறேன்.
3. முதல் கதை பதிய நல்ல நாள் பார்த்து கொண்டிருக்கிறேன்
4. பல கதைகள் எழுதிவிட்டேன் னால் அவை அறைகுறையாக இருக்கிறது, இண்னும் எனக்கு திருப்தியடைவில்லை.
5. எனக்கு கதைவிட தத்துவஙக்ள் எழுததான் பிடிக்கிறது, கையால் அவை பல முறை படிக்க வேண்டி இருக்கிறது
கதை எழுதுபவர்கள், அது பல நாள் சிந்தித்து பிறகு அதற்க்கு வார்த்தைகள் வகுத்து பிறகு நேரம் கிடைக்கும்போதுதான் டைப் செய்து போட முடியும். அதனால் யாரையும் வற்புருத்த வேண்டாம், அவர்களுக்கு தோண்றும் போது எழுதலாம்.
ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறேன்
யாரிடமும் கதை சுரந்தால் தான் நண்றாக இருக்கும், கரந்தால் அந்த கதை நண்றாக இருக்காது
நண்றி

rajesh2008 04-01-09 08:36 PM

எழுத முடிந்தவர்கள் எழுதுவதற்கு வாசிப்பவர்கள் பின்னூட்டத்தால் ஊக்குவித்தால் அது வரவேற்கத்தக்கது. இரண்டையும் போற்றவேண்டும்

jayjay 12-05-10 03:04 PM

ஐந்து வருடத்திற்கு முந்தைய திரியாக இருந்தாலும் இப்போதும் இது பொருந்தும்... பதவிஉயர்வுக்கு இப்போது நிறைய மாற்றங்கள்,கட்டுப்பாடுகளை தலைவர் செயல்படுத்தி வருகிறார். ஆனால் தங்கவாசலை அடைந்து படங்களை பார்த்த பிறகு காமக்கதைவாசல் பக்கமே சிலர் வருவதில்லை என்பதுதான் உண்மை.

தங்கவாசலை அடைய வேண்டுமென்றால் அவர் எத்தனை உழைக்க வேண்டும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அடைந்த பிறகு ஹாயாக உட்கார்ந்துகொள்ள அது ரிடயர்மெண்ட் கிடையாது. அதைவிட பொறுப்பு அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை.

தற்போது வாக்குகள் குறைவாக விழுகிறது என லோகத்தில் ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் கதை எழுதாத... அட கதைகூட வேண்டாம்பா பின்னூட்டமாவது போடுங்க...

இதுபோன்ற தங்கவாசல் உறுப்பினர்களை கதைகள் பக்கம் வரவழைத்துவிட்டால், தரமான கதைகள் கிடைக்கும், என்னைப்போன்ற தத்துக்குட்டிகள் கற்றுக்கொள்ள நிறைய வழிக்காட்டி கதைகள் கிடைக்கும் என்கிற நல்ல எண்ணத்தில் தான் இதை சொல்கிறேன். மற்றபடி யார் மனதையும் புண்படுத்தவோ குறிப்பிடவோ இல்லை. தவறாக சொல்லி இருப்பின் மன்னிக்கவும்.

சமீபத்தில் கதை எழுதாத தங்கவாசல் உறுப்பினர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தலைவரை கேட்டுக்கொள்கிறேன்.

Quote:

Originally Posted by nandabalan (Post 274859)

அதே போல் பழைய உறுப்பினர்களில் நிறையப்பேர் இப்போது கதைகள் எதுவும்
புதிதாய் பதிப்பதில்லை. அசைப்படப்பகுதியில் படங்களை பதிப்பதில் எந்த
பயனும் இருப்பதாய் தெரியவில்லை.
................

இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும், விதிகளும் எனக்கும் பொருந்தும்.
எதிர்காலத்தில் நானே தொடர்ந்து கதைகளை பதிக்கவில்லை என்றால்
என் உறுப்பினர் பதவி போகும்.

அன்புடன்
சிவா - மதுரை.

இந்தக்கருத்துக்களை சொன்ன உங்களை பாராட்டத்தான் வேண்டும். ஆனால் இவ்வளவு நல்ல விசியங்களை சொல்லிட்டு நீங்களே தங்கவாசலில் படம் மட்டுமே போட்டுக்கிட்டு இருக்கீங்களே... உங்க படங்கள் தொகுப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணே.. ஆனா சமீபத்தில் உங்க கதைகளை தேடிப்பார்த்தேன் கிடைக்கல.. ஒரு சில கதைகளில் ஒரிரு வரி பின்னூட்டங்கள் தவிர, தங்கவாசலை விட்டு வரலை போல...

இதை குறையாக சொல்லவில்லை, ஒரு ஆதங்கமாக கேட்கிறேன்... தவறாக இருப்பின் மன்னியுங்கள்...

vjagan 15-05-10 07:53 PM

சுவையான விவாதங்கள் !நானும் முயற்சி செய்து ஒரு சிறிய படைப்பாக கரும்புக்காரன் கதை என்று ஒரு சிரிப்பு துணுக்கு எழுதிருக்கிறேன் !அதற்க்கு மேல் எழுத தொடர்ந்து படைக்க முயற்சிப்பேன் !

Rassy_Camren 15-05-10 08:01 PM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 414659)
யாரிடமும் கதை சுரந்தால் தான் நண்றாக இருக்கும், கரந்தால் அந்த கதை நண்றாக இருக்காது

ஒற்றை வாக்கியமானாலும் நெத்தியடி வாத்தியாரே..

சுரப்பதை கொஞ்சம் பதம் செய்து தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..

எந்திரன் 17-05-10 12:47 PM

என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். லோகத்தில் இணைந்த 2006ம் வருஷத்திலிருந்து முயற்சித்து பல கதைகளை பதிந்தாலும் ஒரு கதை கூட முழுவமாக முடிக்காமல் இருந்தேன். ஒரு வருடத்திற்கு பிறகுதான் ஒரே ஒரு கதையை மூன்று பாகங்களுடன் முடிக்க முடிந்தது.

2009ல் ஜாக்கின் சவால் கதையில் ஆறு பாகங்களை கொடுத்துவிட்டு நேரமின்மையின் காரணத்தால் தொடராமல் விட்டு விட்டேன். ஆனால் என்னுடைய பின்னுட்டங்களாலேயே 2010ல் சில்வர் மெம்பராக வந்தேன்.

2010 ஏப்ரலில் எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக நேரம் கிடைக்கவே. இதோ இப்போது மே மாத நிர்வாக சவாலில் கலந்து கொண்டேன். பில்லாவின் வா.ச.எண். 44ல் ஒன்பது கதை பதிந்துள்ளேன். நின்றுபோன பழைய பாகங்களை தூசி தட்டி தொடந்து எழுதி முடித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் தங்க வாசலை அடைவேன். அதன் பின்பும் எழுதுவேன்.

ஆனால் கடைசி வரை இதே வேகத்தில் தொடர்ந்து எழுதுவேன் என்று சொல்ல முடியாது. நேரமும், சந்தர்ப்பமும் ஒத்துழைக்க வேண்டும். என்னை போல இப்படி பலர் ஆசையிருந்தும் வேலைப்பளுவில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பின்னூட்டம் இடுவதே பெரிய வேலை. இன்னும் பலருக்கு கோர்வையாக கதை எழுத வராது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, கதை பதிந்தால் மட்டுமே பதவி உயர்வு என்று லோகவாசிகளை நிர்பந்திக்காமல், பின்னோட்டத்திற்கும் பதவி உயர்வு வழங்குவதே சரி.

salem1963 11-02-15 06:49 PM

நண்பரே தங்கள் கருத்து மற்றும் தங்கள் எண்ணம் மற்றவர்களும் கதை எழுத வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் ஆனால் எல்லோராலும் கதை எழுதமுடிய்மா என்பதை கருத்தில் கொள்ளவேன்றும் உதாரணமாக சுவைத்து உண்டு விமர்சிக்க தெரிந்த அனைவராலும் நன்றாக சமைக்க தெரியாது அவ்வாறு சமைத்தாலும் அவைகள் அனைத்தும் குப்பையில் கொட்ட வேண்டிய மதிக்க படமுடியாத பொருளாகத்தான் ஆகும் தங்கள் என்ன்னதின் படி மற்றவர்களின் படைப்புகளை விமரிப்பவர்களை வேண்டுமானால் கட்டுபடுத்த செய்யாலாம். நானும் ஒரு புதிய உறுப்பினரே தற்போதுதான் தமிழில் கோர்வையாக விமர்சிப்பதையே செய்ய முடிகிறது மட்ட்ரவர்களின் கதைகளை படித்துகொண்டுவரும்போது வேண்டுமானால் பின்னிட்டு கதைகளை எழுத முயற்சி செய்ய முடியும் ஆரம்பத்தில் அவ்வ்வாறு செய்ய இயலாது எனெவே தற்போது உள்ள விதிமுறைகளே கடுமையகா உள்ளது எதுவே போதும் என்று எண்ணுகிறேன்

tamilplus 09-01-16 10:54 PM

கட்டாயம் பதினைந்து கதை என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டால் அது நிச்சயமாக எதிர் விளைவுகளைத்தான் தரும் என்பதில ஐயம் ஏதும் இல்லை.
அவரவர் விரும்பும்படி பங்காற்ற இப்போது உள்ளது போன்ற நிலையே தொடர்தல் நல்லது.

salem1963 10-01-16 05:31 PM

உங்கள் கருத்து சரி என்று தோனவில்லை எல்லோருக்கும் தொடர்ச்சியாக கோர்வையாக கதை கொடுக்க முடியாது ஆனால் அவர்கள் கதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களை ஊக்க படுத்தி தங்கள் கருத்துகளை கொடுக்க இயலும் அதற்காக அவர்கள் எல்லோரும் சும்மா வந்து செல்பவர்கள் என்று சொல்ல இயலாது அவைகள் எல்லோரும் உண்மையில் தங்கள் எண்ணங்களை வெளியிட விருப்பம் கொண்டவர்கள் எனவே அவர்களை உருப்பினர்களிருந்து நீக்குவது சரியில்லை

madhavi 28-04-17 06:57 PM

Quote:

Originally Posted by nandabalan (Post 274859)
ஒவ்வொரு புதிய உறுப்பினர்களும் குறைந்த பட்சம் 15 கதைகளை ஆவது அது காமக்கதைகளாகவோ அல்லது தகாத உறவுக் கதைகளாகவோ கூட இருக்கட்டும். ஆனால் குறைந்தது 15 கதைகள் பதிக்க வேண்டும் என்று நடைமுறை படுத்த வேண்டும்

நல்ல ஐடியா .... !!!!


All times are GMT +5.5. The time now is 10:27 AM.

Powered by Kamalogam members