காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   உடல் பிரச்சனைகள் - மேலும் சில நாள்.... (http://www.kamalogam.com/new/showthread.php?t=71046)

parimaala 29-07-18 10:26 PM

சீக்கிரம் உடல் நலம் பெற்று பழைய மாதிரி திரும்பி வர இறைவனை பிரார்த்திக்கிறேன்..

பாகற்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது நாவல் பழ சீசன் என்பதால், இதையும் தினசரி சாப்பிட்டு சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும்..

mouni 02-08-18 04:26 AM

ஆலோசனை சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! இன்று நேற்று பார்த்ததில் 340. பிரச்சனை என்னவென்றால் தோள்கள் எல்லாம் உறைந்து விட்டது. எனவே கை அசைக்க முடியவில்லை. தட்டெச்சு செய்ய சிரமம் இருப்பதால் ஆஃபீஸிலும் பிரச்சனை - மன உளச்சல். அதனால் மேலும் சர்க்கரை அதிகமாகிறது.

சற்று சிக்கலான காலகட்டம். பார்ப்போம் - எல்லாம் காலத்தின் கையில்.

மௌனி

vjagan 02-08-18 05:19 AM

நண்பர் விரைவில் பூரண நலம் பெற்று வர மீண்டும் மீண்டும்பிராதிக்கிறேன் !

kauveri 08-08-18 12:23 PM

நீரிழிவு நோயை, கட்டுப்படுத்தாவிட்டால் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவர் ஆலோசனைப்படி அதனி கட்டுக்குள் எடுத்து வாருங்கள். மற்ற உபாதைகள் தானாக குறையலாம்.
முழுமையாக குணமடைந்து தங்கள் எழுத்துப் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

sreeram 10-09-18 03:50 AM

மெளனி, தற்பொழுது உங்களின் உடல் நிலை எப்படி உள்ளது..? சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதா ? ஆண்டவன் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன்.

mouni 10-09-18 10:24 AM

இல்லை...மோசமாகவே உள்ளது. 350 க்கு குறையவில்லை. பிரச்சனை அதுவல்ல. ஃப்ரோஸன் ஷோல்டர் என்று கையை அசைக்க முடியவில்லை. தட்டச்சு செய்தால் , மரண வலி. இப்போதே என் உடல்நிலை பற்றி ஏகப்பட்ட கவலை....பார்க்கலாம்....ஆண்டவன் விட்ட வழி.

மௌனி

Quote:

Originally Posted by sreeram (Post 1456325)
மெளனி, தற்பொழுது உங்களின் உடல் நிலை எப்படி உள்ளது..? சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதா ? ஆண்டவன் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன்.

geethadhasan 10-09-18 11:21 AM

340 என்பது சற்று அதிகமாக இருந்தாலும் அபாயகரமான அளவு அல்ல. முயன்றால் கட்டுக்குள் கொண்டு வரலாம். எனக்கும் 280 இருந்து அதை குறைத்து விட்டேன். மாத்திரை சாப்பிட்டு வந்ததும், நடைப் பயிற்சியும் மிகமிக முக்கியம்.
தாங்கள் மீண்டு வர வாழ்த்துகள்!

kamakedi 13-09-18 12:49 PM

வணக்கம் மௌனி, இன்றுதான் நான் இந்த திரியை பார்த்தேன், கவலை படவேண்டாம் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். நண்பர் நெருப்பு இந்த திரியின் துவக்கத்திலேயே "பேலியோ டயட்" பரிந்துரைத்திருக்கிறார். அவர் கேள்விப்பட்டதை சொல்லி இருக்கிறார், ஆனால் அது ஒரு நல்ல வழிகாட்டல்.

நான் கடந்த இரண்டு வருடங்களாக பேலியோ டயட்டில் உள்ளேன். அருமையான உணவுமுறை, என் உயர்ரத்த அழுத்தம் குறைந்து இப்பொழுது சீராக உள்ளது. உடல் எடையில் 10 கிலோ குறைத்துவிட்டேன். நான் பரிந்துரைத்து நம் லோகத்தில் சிலர் அதை கடைப்பிடித்து பயன் அடைந்திருக்கிறார்கள்.

சக்கரை நோய் இதில் முற்றிலுமாக குணம் அடையும். குகிளில் "பேலியோ டயட் தமிழ்" என்று தேடவும் அதில் உள்ள பிடிஎப் பைலை டவுன்லோட் செய்து படித்து பாருங்கள், அதன் கான்செப்டை புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் யூ டியூபில் "மரு. ஹரிஹரன் பேலியோ", "நியாண்டெர் செல்வம்" என்று தேடினால் பேலியோ பற்றி பல காணொளிகள் கிடைக்கும் அதை பாருங்கள். இதை ரத்தம், சிறுநீர் சோதனைகள் எடுத்துவிட்டு பின்னர் தகுந்த மருத்துவர் ஆலோசனையுடன் தொடங்கவேண்டும். இந்த டயட்டால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் எடைக்குறைப்பு, சோரியாசிஸ், தைராய்டு, கொழுப்பு, பி சி ஓ டி, பெண்களுக்கான பல பிரச்சனைகள் சரியானதை நான் பார்த்திருக்கிறேன். உங்களுக்கோ இதை வாசிக்கும் மற்றவர்கள் யாருக்கேனும் மேலும் தகவல்கள் வேண்டும் என்றால் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளவும், நான் உதவ தயார். இதில் எந்த வித வியாபாரமோ, லாப நோக்கமோ கிடையாது. இது ஒரு இலவசமான சேவையே. - நன்றி

mouni 26-09-18 08:18 AM

மிகவும் நன்றி நண்பரே!

மௌனி

Quote:

Originally Posted by kamakedi (Post 1456480)

itsmeparthi 12-05-21 11:29 PM

நான் லோகத்திற்கு புதிது. இருப்பினும் தங்கள் கதைகளை இணையத்தில் பல்வேறு இடங்களில் படித்துள்ளேன். தங்களது உடல்நிலை குறித்த இந்தப் பதிவு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. தற்போது தங்களது உடல்நிலை குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் தாங்கள் எவ்வித நோய் நொடியின்றி நீண்டகாலம் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

All times are GMT +5.5. The time now is 08:37 PM.

Powered by Kamalogam members