காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   இனிய 62வது சுதந்திர தின வாழ்த்துக்கள்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=45490)

smdhabib 15-08-08 01:09 AM

இனிய 62வது சுதந்திர தின வாழ்த்துக்கள்!
 

நண்பர்கள் அனைவருக்கும் காமலோகம் சார்பாக எனது இனிய 62வது சுதந்திர தின வாழ்த்துக்கள்!

62வது-ன்னு குறிப்பிட்டு சொல்லும்போது இந்த 62 வருஷ வளர்ச்சியும், இந்த சுதந்திரத்துக்காக நூற்றாண்டுகளாக போராடின நம்ம முன்னோர்களும் ஞாபகத்துக்கு வருவாங்கன்னு தோன்றுகிறது எனக்கு.




சுதந்திரத்தைக் காத்த அனைவருக்கும் காமலோகத்தின் சார்பாக சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்.......!

நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வேம்!!! இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்!!!

தமிழ் எங்கள் பேச்சு..! தமிழ் எங்கள் முச்சு..! எட்டு திக்கும் தமிழன் செல்ல, தரணி எங்கும் தமிழே பேச........! தமிழ் எங்கள் பேச்சு..! தமிழ் எங்கள் முச்சு..!

*வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு*

நண்பர்களே...............!

நான் சிறுவனாக இருந்த போது என் வீட்டிற்கு எதிரே இருந்த ஒரு தாத்தா தன் சொந்த செலவில் கொடி மிட்டாய் எல்லாம் வாங்கி சிறுவர்களுக்கு தந்து யாராவது ஒரு தியாகியைப்பற்றி சொல்லிக்கொடுப்பார். அதனால் எதோ ஒரு சின்ன மகிழ்ச்சி அவருக்கு உண்டாகியிருக்க வேண்டும் இல்லையா?? ஏன் நாம் எதுவுமே செய்வதில்லை? கொடி குத்திக்கொள்வது கூட நம்மால் முடியாமல் போகிறது. அதைக் குத்திகொண்டு தான் தேசபற்றை நிலைநாட்டத்தேவையில்லை என்றாலும் வேறு ஏதாவது செய்யலாமே. நம் நாட்டுக்கு உபயோகமாக எதாவது செய்யலாமே? வெகுநாட்களுக்கு முன்னால் என் நண்பன் ஒருவன் தான் பொது இடத்தில் குப்பை போடுவதே இல்லை என்று சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். அதைப் பார்த்து நானும் inspireஆகி என்னால் முடிந்த வரை கடைபிடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.

நண்பர்களே நாட்டுக்கு உபயோகமாக என்ன செய்ய போகிறிர்கள் நீங்கள் ?

நண்பர்களே........!

நீங்கள் பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது என்பதை மறந்து விட வேண்டாம்.

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும் என்பதை யோசிக்காமல் இருந்து விட வேண்டாம்.

இந்தியர்கள் அனைவருக்கும் இந்த காமலோகம் சார்பாக சுதந்திர தின வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்
ஹபிப்

anusuya 15-08-08 01:30 AM

காமலோக நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் 62வது சுதந்திர தின வாழ்த்துக்கள்...ஜெய் ஹிந்த்...

இந்தியர்களின் சாதனைகள் எல்லாத்துறையிலும் பிரகாசமாக ஜொலிக்க வாழ்த்துவோம்...

vsig 15-08-08 01:39 AM

நண்பர்கள்/ நண்பிகள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

லலிதாதாசன் 15-08-08 01:51 AM

நண்பர்கள் அனைவருக்கும் 62வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இந்த தருணத்தில் தேசியக்கொடியை குறித்து சில தகவல்கள்

தேசியக் கொடியைக் காலை நேரங்களில் ஏற்ற வேண்டும்.

தேசியக் கொடியை சூரிய உதயத்தின் பின் ஏற்றி சூரிய அஸ்தமனத்தின்போது இறக்கப்பட வேண்டும். கொடியை இறக்கும்போது நிதானித்து மெதுவாக இறக்கவேண்டும். கொடி தரையில் படாமல் கைகளில் ஏந்தி எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பறக்க விடுவதோ தவறு. ஆனால் முறைப்படி அறிவிக்கப்பட்ட இரவுகளில் உதாரணமாக சுதந்திர தின பொன்விழா, வெள்ளிவிழாவில் பறக்க விட அனுமதி உண்டு.

தேசியக் கொடியை ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும்போது முதல் வரிசையில் வலதுபுறத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். வேறு கொடிகள் முன்வரிசையில் இருந்தால் ஊர்வலத்தின் முன்னே நடுவில் எடுத்துச் செல்ல வேண்டும்.

செய்யக் கூடாதவை:

சாயம் போன தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது.
முக்கியஸ்தர்களுக்கு மரியாதை அளிப்பதாக கருதி தேசியக் கொடியை தாழ்த்தி பிடிக்கக்கூடாது.

தேசியக் கொடியை அலங்கார பொருளாக மேடையிலோ. மேஜை மீதோ விரிக்கப்படக் கூடாது.

கொடியேற்ற விழா முடிகையில் ‘ஜனகன மன’ தேசிய கீதத்தைப் பாடத் தவறக் கூடாது.

தேசிய கீதம் பாடப்படும்போது கூடியுள்ளோர் பணிவுடன் அசையாது நிற்கத் தவறக்கூடாது.


ஜெய்ஹிந்த்

அன்புடன்
லலிதாதாசன்

உதயம் 15-08-08 02:03 AM

இந்திய நேரப்படி இந்த 62வது சுந்தந்திர தினத்தன்று நான் காமலோகத்தில் இருக்கேறேன். இதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி. தாய்நாட்டை விட்டு பிழைப்பிற்காக வெளிநாடு வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்குத்தான் தாய்நாட்டின் அருமை அதிகம் தெரிகிறது. அங்கே இருக்கும்போது இந்தியா, இந்தியன் என்ற எண்ணம் பெயரளவில் தான் இருந்தத். ஆனால் வெளிநாட்டில் இருக்கும்போது இந்தியன், இந்தியா என்று கேட்டவும் திரும்பிபார்க்கும் அளவிற்கு அதன் தாக்கம் வந்துவிடுகிறது. அதுமட்டும் அல்ல சில இடங்களில் பார்த்தால் ஒரே அறையில் இந்தியன், பாக்கிஸ்தானி, பங்காளி, ஸ்ரீலங்கன் இப்படி அனைவரும் ஒன்றாக இருப்பார்கள். ஒரே கேம்ப்பிள் ஒன்றாக இருப்பார்கள்.

இந்த ஒற்றுமை ஒவ்வொரு இந்தியனிடமும் இந்தியாவில் இருக்க வேண்டும். அன்டை நாட்டான் அடிக்க வருகிறான் என்றபோது மட்டும் நமக்குள் ஒற்றுமை வருகிறது, ஒரு போர்க்காலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு, இயற்கையின் சீற்றத்திற்கு எல்லோரும் ஒன்றினைந்து உதவி செய்கிறோம். ஆனால் சாதாரன நாட்களில் இது நம்மிடம் இல்லை. இதுபோல சமயத்தில் மட்டும் ஒற்றுமையுடன் இல்லாமல் எல்லா நாட்களிலும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

நமது நண்பர்கள் அனைவருக்கும் எனது சார்பாகவும், காமலோகம் சார்பாகவும் சுதந்திர வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்

coolanu 15-08-08 02:15 AM

அனைத்து காமலோக நண்பர்களுக்கும், எங்களால் தற்சமயம் முடியாத, இந்திய காற்றை சுவாசிப்பவர்களுக்கும் என் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.

BILLA 15-08-08 11:47 AM

அணைவருக்கும் இனிய சுதந்திர தின நாள் நல்வாழ்த்துக்கள்

கமல் 15-08-08 11:50 AM

அனைவருக்கும் சுந்திர தின நல்வாழ்த்துக்கள்... இந்தியா வல்லரசாக உறுதி எடுப்போம்...

udhayasuriyan 15-08-08 11:59 AM

நேற்று பாகிஸ்தானுக்கும்
இன்று இந்தியாவிற்கும் சுதந்திர நாள்....

கலக்கலான தேச பக்தி பாடல்களை கலைஞர் தொலை காட்சியில் தற்போது கண்டேன்...

சுதந்திரத்திரத்திற்கு முன் இருந்த ஒற்றுமையை விட தற்போது தான் அதிக ஒற்றுமை தேவை படுகிறது...

இத்தருணத்தில்.. சூளுரைப்போம்..
மத வெறியினை வேரறுபோம்..மனித நேயம் காப்போம்..
வாழ்க பாரதம்
வந்தே மாதரம்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

anabayan 15-08-08 12:55 PM

நம்மன்னின் சுதந்திர திருநாளை நினைவூட்டி கொண்டாடும் இந்த இனிய நாளில் இத்தள தலைவர், நிர்வாகிகள் மற்றும் நண்ப/நண்பிகள் அனைவருக்கும் இந்த முன்னாள் இராணவத்தானின் வாழ்த்துக்களையும் பாரத மாதாவுக்கு வீர வணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன்.

அத்துடன் இத்திரியை நம் மூவண்ணக் கொடி அலங்கரிக்க வண்ணமயமாக படைத்த ஹபீபுக்கு எனது நன்றியை உரித்தாக்குகின்றேன்.

நட்புடன் அநபாயன்...... வாழ்க பாரதம்.


All times are GMT +5.5. The time now is 01:53 AM.

Powered by Kamalogam members