காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2009 புதிய நிர்வாக உறுப்பினர்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=48148)

xxxGuy 16-12-08 06:10 PM

2009 புதிய நிர்வாக உறுப்பினர்கள்
 
நண்பர்களே,

இன்னும் சில நாட்களில் புதிய வருடத்தில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம், தளத்தில் பல மேம்பாடுகள் செய்யப் பட்டு பல புதிய வசதிகள் புகுத்தப் பட்டுள்ளன. இந்த வசதிகளை தளத்தில் செவ்வனே அமல்படுத்தவும், தளத்தின் பணிகளில் புது ரத்தம் பாய்ச்சவும், நமது பழைய நிர்வாக உறுப்பினர்களில் சிலருக்கு ஓய்வு கொடுக்கப் பட்டு, ஐந்து புதிய நிர்வாக உதவியாளர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளார்கள். அவர்கள் பின்வருமாறு:

1) mayakrishnan
2) amature_trichy
3) mouse1233
4) baseer
5) thanger.c


இது நாள் வரையில் எங்கள் நிர்வாக பணிகளில் எங்களுக்கு தோள் கொடுத்து தளத்தை சீராக நடத்த உதவி செய்த கீழ்கண்ட உறுப்பினர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து, ஓய்வு கொடுக்கிறோம். அவர்கள் பின் வருமாறு:

1) ஆதி
2) Blue Eye
3) வத்சலா


பழையவர்கள் நிர்வாக பொருப்பில் இல்லையென்றாலும், அவர்கள் தளத்தை நடத்த எங்களுடன் எப்போதும் துணை நிர்ப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் இது வரை கொடுத்து வந்த அதே மரியாதையைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தற்போது செய்யும் பணியில் தொடர்வார்கள்.

இதுவரை உங்களுடன் உலாவி வந்து தற்போது புதிதாக நிர்வாக பணியை ஏற்றுள்ள புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்கவும். இவர்கள் இந்த மாதம் 20-ம் தேதி முதல் இந்த புதிய பொறுப்பை ஏற்பார்கள்.

நன்றி..!!

JM 16-12-08 06:21 PM

நிர்வாகத்திற்கு தோள்கொடுக்க வரும் புதிய தோழர்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம். தள உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல் நிர்வாக உறுப்பினர்களுக்கும் வழிகாட்டியாய் செயல்பட்ட ஆதி அவர்களுக்கு நன்றி. முதன் முதலில் நான் தளத்தில் நுழைந்து எப்படி பதிப்புது என்று தெரியாமல் யூனிக்கோடுகுழப்பத்தில் இருந்தபோது அதை தீர்த்துவைத்து எப்படி பதிப்பது என்று சொல்லிக்கொடுத்தவர் ஆதி என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூறுவது சாலப்பொருத்தம்.

mouse1233 16-12-08 06:39 PM

புதிய உதவியாளர்களில் ஒருவராக தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி...

இன்று போல் என்றும் நிர்வாகத்துக்கும்/உறுப்பினர்களுக்கும் உதவியாக இருப்பேன் ...

தேர்வாகி இருக்கும் நன்பர்களான மா.கி amature_trichy பசீர் மற்றும் தங்கர்.சி க்கு வாழ்த்துக்கள்

நிர்வாக பொறுப்பில் இருந்து மட்டும் ஓய்வு பெறும் ஆதி Blue Eye வத்சலா க்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...உங்கள் வழியில் நாங்களும் தளத்தில் பணியாற்ற உங்கள் ஒத்துழைப்பு என்றுமே எங்களுக்கு தேவையே....

ராசு 16-12-08 06:54 PM

2009 ஆண்டின் புது நிர்வாக குழுவை வருக! வருக! வென வரவேற்கிறேன்.

தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பது ஒரு பொதுநல தொண்டு!
இங்கே அங்கத்தினர்கள் எதிர்பார்ப்பது

இளமை! இனிமை! புதுமை! இதுவே காமலோகத்தின் வெற்றிக்கு அடிப்படை!

கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு! இதைக் கட்டிக் காக்க வேண்டியது ஒவ்வொரு காமலோக அங்கத்தினர்களின் பொறுப்பு!

அன்பு! பாசம்! பற்று! மேற்கூறிய பொறுப்பை நிறைவேற்றும் போது நிர்வாகக் குழு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது!

புதிய நிர்வாக குழுவினர் காமலோகத்தை மேன்மேலும் வளர்த்து, இன்னும் பிரபலமாக்குவார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அவர்களின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்!

பச்சி 16-12-08 06:56 PM

2009ம் ஆண்டுக்கான நிர்வாக உதவியாளர்களில் ஒருவராக என்னையும் தேர்ந்தெடுத்த நம் தள தலைமை நிர்வாகிக்கும், உறுதுணையாய் இருக்கும் தற்போதைய நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் நன்றிகள்.

அனைவரின் ஒத்துழைப்புடன் என் பணியை சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும், தேர்வு பெற்றுள்ள நண்பர்கள் mayakrishnan, amature_trichy, mouse1233, thangar.c ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

அனைவருமே சிறப்பாக பணியாற்றி தளத்திற்கும், உறுப்பினர்களாகிய அனைத்து நண்பர்களுக்கும் என்றுமே உதவியாக இருப்போம்.

இதுவரை திறம்பட பணியாற்றி தற்போது ஓய்வு பெறும் ஆதி, Blue Eye, வத்சலா ஆகியோருக்கு நன்றிகள்.

XXXGirl 16-12-08 06:58 PM

புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

vsig 16-12-08 07:08 PM

புதிய நிர்வாக உறுப்பினர்களை மகிழ்வுடன் வரவேற்க்கிறேன்..

இது நாள்வரை நிர்வாக பொறுப்பில் திறம்பட செயல்பட்டு தற்போது ஓய்வு பெறும் நண்பர்களுக்கு மிகுந்த நன்றியை பகிர்ந்து கொள்கிறேன்.. அதிலும் குறிப்பாக எனது ஆருயிர் நண்பர் ஆதி அவர்களுக்கும் என் நன்றிகள்..

cena_fan 16-12-08 07:38 PM

புதியதாக பொறுப்பேற்க்கும் நிர்வாக உதவியாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஓய்வு பெறப்போகும் பழைய நிர்வாக உறுப்பினட்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தளத்திற்க்கு புதுரத்தங்கள் பாய்ந்து தளம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

JACK 16-12-08 07:44 PM

புதிய நிர்வாக உதவியாளர்களாக பொறுபேற்று இருக்கும் நண்பர்கள் மவுஸ், தங்கர், பசீர், திருச்சிகாரர் மற்றும் மாயகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் எனது ஆதரவையும் தெரிவித்து கொள்கிறேன்:D

இது வரை சிறாப்பாக நிர்வாக பனிகளை செய்த்ய் நண்பர்களுக்கு உதவியாக இருந்த ஆதி,ப்ளூ ஐ, மற்றும் வத்சலா அவர்களுக்கு எனது நன்றிகள் பல:D

வரிப்புலி 16-12-08 07:55 PM

மூன்று பேரை நான் எதிர்பார்த்தது தான்,

புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு என் வாழ்த்துக்கள். அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுப்போம்.


All times are GMT +5.5. The time now is 08:21 AM.

Powered by Kamalogam members