கதைத் திருடர்கள் ஜாக்கிரதை..!!
நண்பர்களே...! நண்பிகளே...!!
நமது தளம் கட்டுப் பாடுகளுடன் இயங்கும் ஒரு தளம், அதனால் தான் இத்தனை வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வருகிறோம். இணையத்தில் தமிழில் காமக் கதைகள் என்றால் 99% அது காமலோகத்தில் மட்டுமே. நமது கதைகளை திருடிப் பிழைக்கவே இணையத்தில் ஒரு கூட்டம் உள்ளது. அதற்கு இங்குள்ள சில உறுப்பினர்களும் காரணமாக இருக்கிறார்கள். நமது தளத்தின் விதிமுறையிலும் தெளிவாக கூறியுள்ளோம், ஒவ்வொரு வருடமும் அறிவிப்புகள் கொடுக்கிறோம் எந்த குற்றம் செய்தாலும் மன்னிப்பு உண்டு, ஆனால் நம் கதைகளை திருடி மற்ற தளங்களில் பதிக்கும் புல்லுருவிகளுக்கு மன்னிப்பே கிடையாது. விதிமுறை மீறல்களை தடுக்க காமலோகத்தில் ஒவ்வொரு உறுப்பினர்களின் நடவடிக்கைகளும் மிக உன்னிப்பாக கவனிக்கப் படுகிறார்கள். வெறும் உங்கள் பதிப்புகள், திரிகளை மட்டும் கவனிப்பதில்லை. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், எப்படி வருகிறீர்கள், என்ன ப்ராக்ஸி மூலம் வருகிறீர்கள், என்ன கணணியில் இருந்து வருகிறீர்கள், என்ன ஆப்ரேட்டிங் சிஸ்டம், என்ன ப்ரௌசர், உங்கள் உண்மையான ஐபி எண் என்ன, இங்கிருந்து எங்கே செல்கிறீர்கள், என்ன பதிப்புகளை இங்கே பார்க்கிறீர்கள், அவற்றை நகல் எடுக்கிறீர்களா, அவற்றை வேறு எங்கும் பதிக்கிறீர்களா, உங்கள் கணக்கை நீங்கள் தான் உபயோகிக்கிறீர்களா? ஆனால், இவை அனைத்தும் 100% ரகசியமாக வைக்கப் படுகிறது. தமிழில் கதைகளை எழுத வைக்க திறமையற்ற சில சோம்பேறித் தளங்கள், கதைகளை திருடி கொண்டு வாருங்கள் எங்களுடைய கதைகளை படிக்க அனுமதி தருகிறோம் என்று புதிய திட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள். அவைகள் அனைத்தும் நம்மிடம் இருந்து சுரண்டப் படும் கதைகளே. அவர்கள் இதுவரை ஒரு கதையை கூட புதிதாக படைக்கவில்லை. அவர்களின் வஞ்சக வலையில் விழுந்து 5 உறுப்பினர்கள் சமீப காலங்களில் நிரந்தரமாக தடை செய்யப் பட்டுள்ளார்கள். இன்னமும் 5-6 உறுப்பினர்கள் அங்கே தங்கள் வேலையை புதிதாக துவங்கியிருக்கிறார்கள். அவர்களையும் தொடர்ந்து கவனித்து வருகிறோம், விரைவில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும். கதைத் திருடர்களை மீண்டும் எச்சரிக்கிறேன்..! ஓரிரு மாத அனுமதிக்கு ஆசைப் பட்டு, காமலோக கதைகளை திருடி அங்கே பதித்து, காமலோகத்தின் வாசலை நீங்களே நிரந்தரமாக மூடிக் கொள்ளாதீர்கள். இது போன்ற நமது கதைத் திருடர்கள், மீண்டும் ஆகஸ்டு மாதம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது திரும்ப சேர்த்து கொள்ள படமாட்டார்கள், கட்டண உறுப்பினர்களாகவும் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்கள். கட்டண உறுப்பினர்கள் இது போன்ற கதை திருடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்கள் கணக்கும் முடக்கப் படும், கட்டணமும் திருப்பி கொடுக்கப் படாது. இந்த அறிவிப்பை கண்டாவது தற்போது அங்கே உலாவிக் கொண்டிருக்கும் சிலர் திருந்துவார்கள், அவர்கள் காமலோக கணக்கை தக்க வைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி.. |
மிக நல்ல திட்டம் நிர்வாகி அவர்களே...
நீங்கல் சொல்வது முற்றிலும் உண்மையே... 99 சதவிகிதம் அல்ல... 100க்கு 100 தமிழில் காம கதை மற்றும் சிரிப்புகள் என்றால் அது நம் தளமே... நானும் பல தளங்களின் நம் கதைகளையும் சிரிப்புகளையும் பாத்திருக்கிறேன்.. உங்களின் இந்த நடவடிக்கை..மிகவும் வரவேற்கதக்கது.. மென் மேலும் இதுபோல் பல நடவடிக்கைகளை எடுத்து தளத்தை இன்னும் மெருகூட்ட வாழ்த்துக்கள் அன்புடன் சூர புலி |
இப்படியும் மனிதர்களா?
தலைவர் இத்தனை திறமையாகவும், விழிப்பாகவும் நமது லோகத்தை நடத்தி வருகின்றார்... அப்படி அவர் நமக்காக செய்து கொண்டிருக்கும் இந்த சேவைக்கு நம்மால் ஆன உதவியை செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாம் தானே? நண்பர்களே, கதையைத் திருடாதீர்கள்... அந்த ஒவ்வொரு கதையையும் படைக்க எழுத்தாளர்கள் எத்தனை சிரமப் படுகின்றார்கள் என்பதை எழுத்தாளரான நான் அறிவேன்... தயவு செய்து எங்கள் கஷ்டத்தையும், முயற்சியையும் வீணடிக்காதீர்கள்... அனைத்து எழுத்தாளர்களின் சார்பில் நான் கேட்டுக் கொள்வது இது மட்டுமே... |
நமது தளத்தில் நகல் எடுக்கும்(Ctrl + C, Right Click Copy) வசதியை டிஸேபுள் செய்ய வழிவகை இருந்தால் ஓரளவுக்கு தடுக்க முடியும் என நினைக்கிறேன்.
ஆனால் அது சாத்தியமா தெரியவில்லை. நான் பல தளங்களில் அதுபோல் காபி டிசேபுள் செய்யப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறேன். |
Quote:
நீங்கள் சொன்னதையும் நான் சொன்னதையும் தடை செய்ய முடியுமானால் கன்டிப்பாக இந்த கதை திருட்டை தடுக்கலாம் அன்புடன் சூர புலி |
Quote:
|
நான் சொல்வது எதற்கும் முழூ தீர்வு என்பது கடினம், எனக்கு தெரிந்து 2 முறைகளில் தடுக்கலாம்...
1. யூசர் ட்ராக்கிங், 2. காப்பி ஆப்சன் தடை செய்வது. யூசர் ட்ராக்கிங் சிறிது கடினமான வேலை தான், எந்த ஐபி, எங்கிருந்து ப்ரொவ்ஸ் செய்யப்படுகிறது, எந்த ஓஎஸ் என்பதை கண்டுபிடித்திடலாம். குறிப்பிட்ட நபர்தான் என்பதை உறுதி செய்ய சந்தேகிக்கும் யூசரை சற்று உன்னிப்பாக கவனிப்பது அவசியம். எங்கெங்கு செல்கிறார், திடிய கதைக்கான திரியில் யார்யார் வீயூவ்டு லிஸ்டில் இருக்கிறார்கள். கடைசியாக அவர் வந்து சென்ற நேரம். எந்தெந்த ஐபியில் லாகின் ஆகிரார் என்பதையும் கண்கானிக்க வேண்டும். இதனால் நிர்வாக பணிகள் கூடும். ஆகவே யூசர் ட்ராக்கிங் டீம் அமைப்பது கூட சிறந்தது. ஹைடு ஐபி போன்ற சில மென்பொருட்க்கள் மூலம் ஐபியை மாற்றி காண்பிக்கவும் முடியும். ஜெஸ்ட் ஐடியாதான்... |
Quote:
Quote:
Quote:
எனவே நீங்கள், நமது தளத்தில் கதை திருட்டை செய்பவர்கள் குறித்தும், வெளியே இனையத்தில் புதுக்கதை கண்டால் உடனே தனிமடல் மூலம் நிர்வாக உறுப்பினருக்கு தெரிவியுங்கள் மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். |
எப்படியும் புல்லூருவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்
என்ன செய்வது இவர்களை எதற்கு இந்த அபலாசை அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை என்று ஆகிவிடும் எனவே நகல் எடுத்து அடுத்த தளத்திற்கு கொடுக்காதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... |
திருடராய் பார்த்து திருந்தா விட்டல் திருட்டை ஒழிக்க முடியாது. அப்படி கதை திருடி என்னதான் சாதிக்கப்போகிறார்களோ ??
|
கதை திருட்டை முறையாய் கண்காணிக்கும் தலைவருக்கு வாழ்த்துக்கள். எங்கள் ஆதரவு என்றும் உண்டு இதற்கு !!!
நமது கடலில் இருக்கும் அற்புதமான படைப்புக்கள் போல் வேறு எங்கும் கிடையாது. இதில் உறுப்பினராய் பதவி உயர்ந்து ..எல்லா வாசலையும் அனுபவிப்பதோடு மட்டும் அல்லாமல் ...., நமது தளத்தின் கட்டுக்கோப்பு காமத்தை ..கண்ணியத்துடன் அலசுவதால் அழகிய சமூகத்தை உருவாக்குகிறது !!!!! இதை சீர் குலைக்கும் விஷக் கிருமிகளை அடியோடு கலைவோம் !!! |
Quote:
அன்புடன் சூர புலி |
Quote:
சரி விடுங்க சின்ன பசங்க... உளரிட்டோம்... :D அப்படி கண்டால் உடனடியாக தெரிவிக்கிறோம். |
இத்தளம் நமது தளம் . இதில் திருட்டு வேலை செய்பவர்கள் தன் வீட்டில் தானே திருடுவதர்க்கு சமம் . திருடர்களே புரிந்துகொள்ளுங்கள்.
|
ஆம்....உண்மைதான்..நம் உழைப்பை சுரண்டி அதன் மூலம் கொழுக்க நினைப்பவர்களுக்கு தலைவர் தன் அறிவிப்பின் மூலம் தக்க சாட்டையடி கொடுத்துள்ளார்.தொடரட்டும் அதிரடிகள்.
|
உழைப்பிற்க்கு பெயர்போன மும்பையில் இதற்க்கு ஒரு சதவீதல் கூட ஆதரவு கிடையாது.
உதாரணத்திற்க்கு ஒருவன் இன்னொருவனை அடிக்கிறான் என்றால் வருவோர் செல்வோர் கண்டிப்பாக கேட்பார்கள் (தமிழ்நாடு இந்த விசயத்தில் இன்னும் பின் தங்கியுள்ளது) திருட்டிற்க்காக இவனை அடிக்கிறேன் என்றல் ஒருவனும் காப்பாற்ற முனைய மாட்டார்கள். உழைப்பிற்க்கு பெயர்போனது மும்பை, படைப்பிற்க்கு பெயர்போனது காமலோகம். இரண்டிலும் விதிகள் ஒன்றே. திருடுபவர்களே திருந்துங்கள்.. |
நமது தளத்தின் தகாத உறவுக் கதை ஏதொ ஒரு தளத்தில் பார்த்த நியாபகம்...... கண்டு பிடித்து லிங்க் தருகிறேன்...... நான் பல நேரங்களில் பணியில் பிஸியாக இருப்பதனால் கதைகளை காப்பி செய்து வேர்டில் பேஸ்ட் செய்து வீட்டுக்குச் சென்ற பின் படிப்பேன்..... இதற்கு ஆபிஸ் பிரைவேஸியும் ஒரு காரணம். இதுவும் கூடாதென்றால் இனி விலக்கி விடுகிறேன்.....
|
கதை திருடர்களே ஜாக்கிரதை!! கூடிய விரைவில் உங்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது.......
ஏன்யா இந்த கீழ்த்தரமான வேலை...... நேர்மையாய் நடப்பவன் நீடித்திருப்பான்.... மற்றவனெல்லாம் கொஞ்சநாள் தான்..... அன்புடன் பில்லா |
தலைவர் அவர்களே,
இது ஒரு தேவையான எச்சரிக்கைதான். கண்டிப்பாக கதை திருடும் கயவர்களை காமலோகத்திலிருந்து களைந்திட வேண்டும். எனது அருமை அண்ணன் ஹார்ட்பேங்க் அவர்கள் தனது திரியில் குறிப்பிட்டதை இங்கே சுட்டிக்காட்டி... 'கதை திருடிகள்' செய்யும் வேலை என்ன* என்பதை அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். Quote:
பச்சி. |
இரு பெயர் கணக்காளர் மேல் எடுத்த நடவடிக்கை போல் எடுக்க வேண்டும் ......கதை என்றால் அது காமலோகம் மட்டும் தான்...வெட்டி ஒட்டிகளே திருந்திவிடுங்கள்..அல்லது அந்த திருட்டு தளத்தில் மட்டும் இருங்கள்....
|
பார்ப்பவரை, படிப்பவரை எல்லாம் படைப்பாளியாக ஊக்குவித்து உயர்த்தி விடும் நமது லோகம் ஒரு கடல். இதற்கு பங்கம் விளைவிக்க முயலும் எவரையும், எதையும் கட்டாயம் தடுத்திட வேண்டும். தலைவருக்கு உறுதுணையாக இருப்போம்....
|
ஆரம்பத்தில் காமக்கதைகள் படிக்க இங்கு வந்திருந்தாலும், வந்த பின் இங்குள்ள உறுப்பினர்களின் நட்புறவும், ஆதரவும், ஆலோசனைகளும் நம்மை நம் தளத்தை விட்டு பிரியாமலிருக்க வைத்துவிடுகிறது. ஒரு நாள் தளத்திற்கு வரமுடியாவிட்டால் கூட உயிர் நண்பனை பிரிந்தாற் போல் உணர்வு ஏற்ப்பட்டுவிடுகிறது. எத்தனை தளங்கள் வந்தாலும் அவைகளிலுள்ள கதைகள் பெரும்பாலும் நம் தளத்து கதைகள்தான். பிறர் உழைப்பை திருடும் கும்பல்கள் நடத்தும் தளங்கள் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும் பனித்துளி போன்றது. நம் தளத்திலுள்ள அந்நியோன்யம், நட்புறவு அந்த தளங்களில் கிடைக்காது.
கதை திருடுபவர்கள் இனியாவது திருந்துங்கள். அற்ப ஆசைக்காக உங்கள் அரிய காமலோக கணக்கை இழந்துவிடாதீர்கள். |
பல நாட்களாக வெளியில் பார்த்த ஞாபகம் உண்டு...........தொடர்ந்து வருவது இல்லை.............யாரேனும் சேகரித்து வைத்து இரூக்கலாம்...........தவறை கண்டிப்பது,திருத்துவது கடினமான பணி..........என்னுடைய ஆதரவு என்றும் நிர்வாகத்திற்கு உண்டு...
|
இங்கே ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் ஆரம்ப காலத்தில் என்னுடைய அறையில் இணைய (இன்டெர்னெட்) வசதி இல்லாதிருந்ததால் நகல் எடுத்து (COPY+Paste) செய்து வீட்டில் வைத்து படித்தது உண்டு. இப்போது என் அறையிலேயே இணைய தள வசதி உண்டு. அதனால் அப்படி செய்வதில்லை. ஆனால் இந்த மாதத்த்தில் சித்திர கதைகள் வந்த போது அவை ஒரிரு மாதமே அங்கிருக்கும் என்பதால் 2, 3 கதைகளை அவ்வாறு நகலெடுத்து வைத்துள்ளேன். சமீபத்தில் ஒரு சித்திரக்கதையை copy செய்ய முயற்சி செய்தேன். முடியவில்லை. மற்றபடி எந்த தளத்திலும் பதிப்பதற்காக அல்ல.
இதில் ஏதேனும் தவறிருப்பின் வருந்துகிறேன். |
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் அதை தடுக்க தலைவர் அவர்களின் முயற்சிக்கு நானும் ஆதரவளிக்கின்றேன்
|
அந்தக் கொடுமையை ஏன் கேட்கின்றீர்கள். நான் எழுதிய தாத்தாவும் அவரின் நண்பர்களும் என்ற கதை வேறொரு தளத்தில் பதிவேற்றி வைத்துள்ளார்கள். பவானியின் மஞ்ச தந்திரம் என்ற கதையினை ஒருவர் தனது பிளாக்கில் இட்டு வைத்திருக்கிறார். அதை எல்லாம் பார்க்கும் போது மண்டை காயுது....
|
Quote:
இலவசத்தை நம்பி நவரசத்தை இழந்து வீடாதிர்கள் நண்பர்களே |
இதுபோன்ற பிரச்சினைகளால்தான் மனம் வெறுத்துப்போய் புதிய கதைகளை எழுதும் எண்ணமே குறைந்துவிடுகிறது. கஷ்டப்பட்டு கற்பனை குதிரையை தட்டிவிட்டு எழுதினால் இந்த ******** நோகாமல் நொங்கு தின்னுட்டு போறமாதிரி திருடறாங்க. இந்த சோம்பேறி பயலுங்க நாளைக்கு கல்யாணமானாலும் பொண்டாட்டியை ஓக்க சோம்பல்பட்டு வேற ஆம்பளைங்க கூட அவளை படுக்கவைச்சு புள்ளை பெத்துக்குவாங்களோ.
|
அகப்பட்டால் கழுவிலேற்றுங்கள்!!!
அடப்பாவிங்களா. இப்படிப்பட்ட அநியாயமும் நடக்கிறதா? கற்பனையைக் கரைத்து எழுத்தாக்குவது ஒருவர். அதனைத் திருடிவிற்று பிழைக்கப்பார்ப்பவர் வேறொருவரா? நல்ல கூத்துத்தான். அகப்பட்டால் கழுவிலேற்றுங்கள்!!!
:evil: |
தலைவர் அவர்களின் எச்சரிக்கையை பார்த்து கதை திருடர்கள் திருந்துவார்கள் என்று நம்புவோம்.
அன்புடன் ராஜண் டை |
இதுவரை காலமும் தவிர்க்க முடியாத காரணங்களால் காமலோகத்தில் மிகையாக நேரம் செலவழிக்க முடியவில்லை. இனிமேல் தகுந்த நேரம் கிடைக்கும். அப்போது இப்படிப்பட்ட திருடர்களை கண்டாலோ அல்லது சந்தேகித்தாலோ அறியத்தருகிறேன்.
|
விழிப்புணர்வு
இப்போது காமலோகத்திற்கு தேவையான விழிப்புணர்வு பிரச்சாரம் தான் இந்த திரி. இதில் திருடப்பட்ட கதைகள் வேறு எங்கு பார்த்தீர்கள் என நிர்வாகத்திற்கு சொல்வது ஒரு முக்கியமான தொண்டு. பிளாக்கர் போன்ற தளங்களில் flag this blog என ஒரு வசதி இருக்கிறது. நான் ஒரு திருட்டு கதை பிளாக்கர் வலைத்தளத்தை இப்படி flag செய்தேன். ஆனால் blogger எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. (நான் அறிந்த வரையில்). நிறைய பேர் அப்படி தொடர்ந்து செய்தால் நடவடிக்கை எடுக்குமோ என்னமோ?
நாம் ஏதேனும் creative commons போன்ற லைசென்ஸ் எடுத்து கொள்ள இயலுமா என தெரியவில்லை. |
நானும் கூட ஒரு சில தளங்களில் நமது காமலோக கதைகளை படிக்க நேர்ந்தது. ஆனால் இது எப்படி சாத்தியம் என்று நினைத்தேன். அல்லது நம்மிடமிருந்து கதைகள் அங்கு செல்கிறதா? அல்லது அங்கு பதியப்பட்ட பின் இங்கு காப்பியாகிறதா? என்பது தான் விளங்கவில்லை. எது எப்படியிருந்தாலும், ஒருவருடைய உழைப்பை திருடி வேறு தளங்களில் பதித்து அதன் மூலம் பலன் பெறுவது என்பது தங்கள் வீட்டு பெண்களை பிறத்தியாருக்கு கூட்டிக் கொடுப்பதற்கு சமமாகும். சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது திருந்துவார்களா?
|
இதுதான் எனக்கும் புரியவில்லை, கதைகளை திருடி என்ன செய்ய போகிறார்கள். ! காமலோகத்தைலெயே முன்னேறி கொண்டு வந்தால் அதீத கலெக்ஷன்களுக்கு அக்சஸ் கிடைக்கிறது... இதை விட்டுவிட்டு.. என்ன பொழப்புட இது
|
இதைவிட ஒருத்தருக்கு எப்படி அறிவுறை சொல்ல முடியும். அன்பாகவும்
சொல்லியாச்சு, பயமுருத்தியும் சொல்லியாச்சு. இனியும் திருந்தலைன்னா அது அவரவர் தலைவிதி. அவ்வளவுதான். |
இதை தான் தலைவரே அன்றும் நான் சொன்னேன்..
தமிழ் உறவுகளே.. வெறும் காமம் மட்டும் இங்கே பார்க்க படுவதில்லை.. அதையும் மீறிய ஒரு உணர்வு இத்தளத்தில் உள்ளது.. அதை உணர பாருங்கள்.. மற்றவர் உழைப்பை திருடாதீர்கள்.. இதில் சில கட்டண உறுப்பினர்கள் தான் உடனே தவறிழைக்கின்றனரோ என்ற அய்யம் எனக்கு உள்ளது.... வாழ்க தமிழ் |
Quote:
|
Quote:
அவர் கருத்தால் நீங்கள் வருத்தப்பட தேவையில்லை. அவர் கருத்து உங்களை புண்படுத்தியிருந்தால் விரைவில் அவர் வருத்தம் தெரிவிப்பார். |
Quote:
நிச்சயம் வருத்தபட தேவையில்லை.. இத்திரீக்கு முன்னரே.. பொதுவான அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பிட்டு கதை திருடபவர் பற்றி வாதிக்க பட்டது.. தற்போதும்.. அந்த எச்சரிக்கை விட பட்டிருக்கு.. இதில் பொதுவானவர்களை சந்தேக படகூடாது என்று நான் வாதிட்டால்.... அது தவறு.. ஏனென்றால்.. திருடன் நம்மில் ஒருவன் என்பதை யாரும் மறுக்க முடியாது.. என்னால் இயன்ற அளவு.. தலைவருக்கு...தனி மடல் மூலம் தெரிவிப்பேன்.. தவறு செய்பவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.. எனது அய்ய பாட்டை சொன்னேன்.. வருத்தங்கள் வேண்டாம் தோழரே.. தவறிருப்பின் மன்னிக்கவும்.. வாழ்க தமிழ் |
நம் தளத்தின் சிறப்பை தனித்தன்மையைப் பாதுகாப்பதற்கு இவ்வாறு பெறிய தவருகளைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கட்டாயம் வழங்கப் பட வேண்டும். இதில் யாருக்கும் எந்தவித விட்டுக் கொடுப்பும் இருக்கக் கூடாது.
|
தங்களின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம் தலைவரே.
தளத்திற்கு தீங்கு விளைவிக்கும் துரோகிகளை தளத்தில் அனுமதித்தால் தளத்திற்குதான் ஆபத்து. |
காம லோகம் தளத்திற்கு வந்து கதை படித்து திருப்தியாகாமல் கதையை திருடி வேறு தளத்தில் பதிப்பவன், கண்ட கண்ட பர தேவடியாளிடம் சென்றவன் கடைசியில் எய்ட்ஸ் வாங்கி நொந்து நூலாகி தன் பாவத்திற்க்காக சாவது போல் இங்கிருந்து நம் படைப்பாளிகளின் உழைப்பினை களவாடுபவனுக்கும் அது ஒரு நாள் நேரிடும்.
தலைவர் அவர்களுக்கு ஒரு வேண்டு கோள். நம் படைப்பாளிகளின் படைப்புகளை விலை பேசும் எட்டப்பர்களை நம் தளத்தில் அறிவித்தால் நாங்களும் அந்த துரோக கூட்டம் யார் யார் என அறிந்து அவர்களிடமிருந்து விலகியிருக்க முடியும். |
யார் அந்த பொண்டாட்டியை கூட்டிக்கொடுக்கம் கயவன்.
|
Quote:
Quote:
பதிவிறக்கம் செய்யப் படுவது, நிர்வாகத்திற்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதனை வேறு தளத்தில் பதிக்க முற்படுவது கண்டிப்பாக மன்னிக்க முடியாத குற்றம். என்னுடைய கதைகளை (நான்கு என ஞாபகம்) தமிழ் மன்றத்தில் பதித்தப்போது கூட, தலைப்பின உபயோகப் படுத்தினேனே ஒழிய, கதையின் காம வரிகளை நீக்கி, வேறு மாதிரியாகத்தான் பதித்துள்ளேன். (இப்போதெல்லாம் நேரமின்மை காரணமாக தமிழ் மன்றம் போவதில்லை.) கடுமையான தண்டணையாக காம லோகத்தை விட்டு நிரந்தரமாக தடை செய்யப்படுவது நல்லதுதான். நம் வீட்டுச் சொத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும். நானும் பட்டுக் கோட்டையார் பாடலைதான் நினைவு கூர்கிறேன். |
நிர்வாகத்தின் கவனத்திற்க்கு... நம்முடைய நிறைய கதைகள் ( தளத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது - ஆதி )இந்த தளத்தில் காணப் படுகின்றன.... யார் இது போல் கதை விபச்சாரம் செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறேன்.... இவர்களின் சொந்த கதைகளே இத் தளத்தில் இல்லை என்பதே நான் கண்டு பிடித்தவரை உண்மை.... எல்லாம் நமது லோகக் கதைகள்தான்அன்புடன் கல்பனா....
|
xxxgirl மிக்க நன்றி எங்களின் கவணத்திற்கு கொண்டுவந்தமைக்கு. இதுபோல் தளத்தின் முகவரியை பொதுவில் கொடுக்கவேண்டாம். தனிமடலில் அனுப்பவும்.
நன்றி |
நான் காமலோகம் தவிர்ந்த வேறு எந்த காமத்தளங்களுக்கும் செல்வதில்லை. அதனால் இந்த கதை திருடர்கள் பற்றி அறிய எனக்கு வாய்ப்புக்கள் இல்லை. இனி வரும் காலங்களில் அப்படி சந்தப்ப்பம் கிடைக்கும் எனில் நிச்சயம் அந்த கயவர்களை நான் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன்.
|
உண்ட வீட்டிற்கு துரோகம் பண்ணும் புல்லுருவிகளை துகிலுருத்து அடையாளம் காட்டுங்கள்..அப்பத்தான் அவர்களுக்கு புத்தி என்று ஒன்றிந்தால், புரிந்து, இனிமேலாவது அதே தவறை செய்யமாட்டார்கள்..
|
கதை திருட்டை முறையாய் கண்காணிக்கும் தலைவருக்கு வாழ்த்துக்கள்.
எனது ஆதரவு என்றும் உண்டு இதற்கு !! |
இப்படியும் நடக்குமா..? என்றிருக்கிறது. ஆச்சரியப்படுவதைத் தவிற சொல்வதற்கு ஒன்றுமில்லை
|
aaaaaaaa
|
இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க ஏன் தான் மக்கள் கூட்டம் அலைகிறதோ! நானும் சில தளத்தில் நமது தளப்பதிப்பினைக் கண்ட ஞாபகம் இருக்கிறது. நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க "என்னாதான் மயிலு மாதிரி அழகான பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி அசிங்கமான கூத்தியா தேடுரது". அது இது தான் அழகான மயில் மாதிரியான நமது தளத்தினை விட்டு அத திருடி குரங்கு கிட்ட போலாமா ? நண்பர்களே யோசியுங்கள் அடுத்தவர் பதிப்பை திருடுமுன்.
|
நமது தளத்தில் இருந்து கதையை திருடி மற்ற தளத்தில் பதிப்பது கண்டிப்பாக தர்மம் இல்லை.
|
*********ம் ல் நிறைய காமலோக கதைகள் உலவுகின்றன*
பிற தள குறிப்பு நீக்கப்பட்டது - அசோ |
Quote:
அநேக தளங்களில் இருக்கும் கதைகள் எல்லாம் பல மாதங்களுக்கு முந்தையவைகளே, அம்மாதிரி எடுத்து பதிந்தவர்கள் நீக்கப்பட்டனர். புதிய சமீபத்திய கதைகளை வெளியே இனையத்தில் கண்டால் உடனே நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலில் தெரிவியுங்கள் தக்க இபண சன்மானம் உண்டு. |
நேற்று வேறு ஒரு தளத்தில் நம் தளத்தின் இரு கதைகளை கண்டேன்,அதிர்ச்சி அடைந்தேன்,உடனே நண்பர் அஷோவின் ஆலோசனை படி தனி மடல் மூலம் தெரியபடுத்தியும் இருக்கிறேன்....
|
தலைவரின் கூற்று உண்மைதான். நானும் பல தளங்களில் நம் கதைகள் இருப்பதையும் அவற்றை திருடியவர்கள் புகழுக்காக விளம்பரம் செய்வதயும் கண்டு வேதனையாய் இருக்கிறது.
|
இதைப்போன்றவர்கள் கட்டாயமாக தண்டிக்கப்படவேண்டியவர்கள். மற்றவர்களின் கற்பனையை திருடுவதைப்போல கேவலம் வேறெதுவும் இல்லை.கட்டாயம் நடவடிக்கை தேவை
|
தலைவரின் அறிவிப்பை முழுமையாக ஆதரிக்கிறேன். உறுதியாக நமது லோகத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்!
நன்றி |
அறிவுரை தந்த நண்பருக்கு மிக்க நன்றி
அறிவுரை தந்த நண்பருக்கு மிக்க நன்றி
வங்கி கணக்கை த்ரிடினாலும் பரவாஇல்லை இந்த கணக்கை த்ரிடி என்ன பண்ண போகிறார்களோ பித்தர்கள். எதற்கும் கவனம் தேவை தான். |
ஆச்சரியமாக உள்ளது? இதில் என்ன லாபம் கிடைக்கும்? நான் புதியவன்.இது பற்றி சரியாக தெரியவில்லை
|
நல்ல முடிவு.....
இப்படிப்பட்ட களவாணிகளை இந்த இணைய தளத்தில் இருந்து வெளியேற்றுவதே சிறந்தே முடிவு.... நீங்கள் இந்த திரி மூலம் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளீர்கள்... ஆகையால் இனிமேல் முதல் மன்னிப்பு இல்லமால் வெளியேற்றுவதே சிறந்த முடிவு.... |
திருடினா கதை இல்ல... கத வேணுமா பைன் வேணுமா?
|
திருடுவது கொடுமைதான்....
|
மற்ற தளங்களில் இருந்து கதைகளை அல்லது மற்ற படைப்புகளை காப்பி பேஸ்டு செய்வதும் தவறு தான். காமலோகத்தில் அதுபோன்று யாராலும் செய்ய முடியாது.. மற்ற தளங்களில் இருக்கும் படைப்புகளையோ அல்லது நமது தளத்தில் உள்ள கதை / சிரிப்பு என்று எதை காப்பியடித்து இங்கு பதித்தாலும் அதை நண்பர்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் அதை பதித்தவருக்கும் தண்டனை நிச்சயம்.
அதனால் உங்கள் பங்களிப்புகளை சொந்தமான உங்கள் கற்பனையில் இருந்து தரப்பாருங்கள். நன்றி |
சிறந்த தண்டனை அய்யா ! வரவேற்கிறேன் !
|
காமலோகத்தில் தன்னை ஒரு அங்கத்தினராக பதிவு செய்து விட்டு திருடுவது ஒரு குற்றம். இது சொந்த வீட்டிலேயே திருடுவதற்கு சமமானதாகும்.
|
இதற்க்கு ஏதாவது நிரந்தர தீர்வு கண்டுபிடித்தே தீரவேன்டும்.
எனது கதையை வேறொரு தளத்தில் பார்த்தபோது மனது வலித்தது. இது போன்ற திருடர்கள் ஆண்மையற்றவர்கள். |
எனக்கொரு ஐடியா தோன்றுகிறது. சில தளங்களில் வருவது போல், ஒவ்வொரு கதையின் பின்புலத்திலும் kamalogam என்ற watermark வருமாறு செய்தால் cnt+C அல்லது right click copy செய்யும் போது இதுவும் சேர்ந்தே காபி ஆகும். இதை எங்கு சென்று பதிந்தாலும் இதுவும் சேர்ந்தே தெரியுமாறு செய்யலாம். இந்த கருத்தை வேறு யாராவது பதித்திருந்தால் இதை ignore செய்யவும்.
|
சில மூத்த உருப்பிப்னர்களின் பெயர்களும் மற்ற தளத்தில் வருது::
அவர்களை நான் அங்கேயே கேட்பதுண்டு |
திருடர்கள் எங்கிருந்தாலும்
கண்டிக்கப் பட வேண்டியவர்கள். |
அனைத்து உறுப்பினர்களும் சுயமாகக் கதை எழுதிப் பதிக்க வேண்டும்! அந்த நேர்மையைக் கடைப்பிடித்து நம் தளத்துக்கு நம்மால் இயன்ற பணி செய்வோம்! நன்றி!:0019::0019::0019:
|
கதை திருட்டு மன்னிக்க முடியாத குற்றம்..
இவர்களை கண்டிப்பாக கண்டிக்க கூடாது... தண்டிக்கப்பட வேண்டும். |
எனது கதைகள் பல தளங்களில் உலா வருகிறது அதை தடுக்க எனது தரப்பில் இருந்து ஏதேனும் செய்ய முடியுமா !
|
நண்பரின் சிறந்த படைப்புகள் மட்டுமல்ல அய்யா அம்மணி !லோகத்தில் வெளியாகிய தங்களைப் போன்றோரின் சில பலரது படைப்புக்களும்தாம் அய்யா அம்மணி !
திருடனாக திருந்தினால்தான் உண்டு;அதை சட்டம் போட்டு தடுக்க இயலாது என்று அன்றே சொன்னார் அந்தப் பொல்லாதப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் ! |
ஒரு சில நல்ல காம வர்ணனைகள் உள்ள கதைகளை எடுத்து தங்கள் பெயரில் பிற தளங்களில் காப்பி பேஸ்ட் செய்யும் சிலர் உண்டு, நல்ல வர்ணனைகளை சில உல்டா செய்து பதிவு செய்பவர்கள் உண்டு. ஆனால் குப்பை கதைகளையும் அதிக எழுத்து பிழைகள் உள்ள கதைகளை கூட அப்படியே மறு பதிவு செய்பவர்கள் கூட உண்டு.
எனவே இது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தால் தான் நல்ல காமம் சொட்டும் மற்றும் மனம் மகிழ செய்யும் கதைகளையும் படிக்க முடியும். ஒரே கதையை மீண்டும் மீண்டும் பல முறை பல தளங்களில் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது. நிர்வாகிகளுக்கு எனது நன்றிகள். |
கதை திருட்டு என்பது ஒருவரின் கற்பனையை திருடுவது. அதை தடுப்பதற்கு தாங்கள் எடுத்த முயற்ச்சி பாரட்டுதற்குரியது.
|
எல்லோரும் அறிய வேண்டிய பதிவு
|
நல்ல பதிவு! காப்பி அடிப்பர்கள் மாற வேண்டும்.
|
கதை திருட்டு
கதை திருட்டு என்பது மன்னிக்கக் கூடாத மாபெரும் குற்றம் என்பதில் ஐயமில்லை. அவர்கள் கண்காணிக்கப்படுவதிலோ ,,தடுக்கப்படுவதிலோ தவறு ஒன்றும் இல்லை. ஆனால் தன் சுய சுகத்துக்காக அருமையான சில பதிவுகளை நகல் எடுப்பதே தவறு எனக் கருதவும் கூடாது என்பதே என் எண்ணம்.இன்றைய தொழில்நுட்ப உலகில் இது ஒரு முக்கியமான பிரச்சனைதான் ..எனினும் இவ்வளவு சிறப்பாக சிந்தித்து செயலாற்றி வரும் காமலோக நிர்வாகக் குழு இதையும் மிகச் சரியாகக் கையாளும். .கையாளவும் செய்கிறது மகிழ்ச்சி தருகிறது.
|
கண்டிப்பா ஆனா அந்த தளம் ஒரு ஒழுங்கான இல்ல முறையான தளமா இருந்தால் வெற்றி உண்டு.
நீங்கள் உங்கள் கதை முதலில் வெளியிட்ட இடத்தையும் நேரத்தையும் குறிப்பிட்டு இது உங்கள் படைப்பு என்று காப்புரிமை காமித்து அதை அவர்கள் தலத்தில் இருந்து நீக்கலாம் அகைன் அது நம்ம காமலோகம் மாறி முறையான தளமா இருந்தா வெற்றி... சோ 10 தலத்தில் ஒரு 5 தலமது அளிக்க மாட்டாங்களா.. முயற்சி பண்ணி பாருங்க Quote:
|
அதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லாதது, நாம் நம் தளத்தில் மட்டுமே கட்டுப்படுத்த இயலும். அடுத்து அநேக தளங்கள் பிளாக்குகள் இயங்குவதே இம்மாதிரி அடுத்தவர் பதிவுகளை திருடி பதிந்து தான் என்னும் போது புகார் சொன்னால் ஒத்துக்கொள்வார்களா?. நான் உங்களிடத்தில் எடுக்க வில்லை, வேறு ஒரு இடத்தில் எடுத்தேன். அதை உங்களிடம் சொல்ல முடியாது என்பார்கள். பேஸ்புக்ல் பார்த்தேன், டெலகிராமில் பிடிஎப் ல் கிடைக்கப்பெற்றேன். என்று சொல்லி நீக்க மாட்டார்கள்.
|
Quote:
அவர்கள் தெரிந்துகொண்டே செய்கின்றார்கள் அதனால் கதைகளை தங்கள் ப்லோக்க்கில் இருந்து நீக்க மாட்டார்கள் அனால் ஒன்று எப்படிஜ ப்லோக்க்க்கிறாள் நிறைய காலம் நீடிக்காது |
ஓ மை காட். இணையதளத்தில் தமிழ் காம கதைகளுக்கு இப்படி ஒரு பஞ்சமா? படைப்பாளிகளுக்கு பற்றாக்குறையா? என்ன ஒரு கலிகாலம்?
|
Quote:
எனது சொந்தக்கதையை அடுத்தவர் பெயரில் பார்க்கும் போது எனக்கு எப்படியிருக்கும்? |
Quote:
காமலோகம் தான் மிக சிறந்த காமகதைத்தளம் ....காமக்கதைகளுக்கு மட்டுமில்லை , காமக்கதை படைக்கும் எழுத்தாளருக்கும் தான் .....இதை நான் உரக்க சொல்வேன் .... ---------------------------------------- என் கதைகள்கள் : குற்றாலத்தில் குலுங்கிய குண்டி கோளங்கள் |
Quote:
|
எனது சொந்தக்கதையை அடுத்தவர் பெயரில் பார்க்கும் போது எனக்கு எப்படியிருக்கும்? --
ரொம்ப கஷ்டமாத் தான் இருக்கும்... |
ஒரு கதையை எழுதி முடிப்பதற்கு எனக்கு 10 நாள் ஆகும். சில சமயங்களில் மூன்று வாரங்கள் கூட ஆகும். ஆனால் மொத்த கதையையும் ஓரிரு நொடிகளில் காப்பி அடித்து விடுகின்றனர். எத்தனை வழி செய்தாலும் காப்பி அடிக்க புது புது வழியை உருவாக்குகின்றனர். காப்பி அடிக்க புது புது ஐடியா செய்வதற்கு பதில் நல்ல கதையை எழுத ஐடியா செய்யலாம். அடுத்தவர் உழைப்பை ஒரு போதும் திருடாதீர். நன்றி
|
கதை திருடர்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள். இவர்களின் ஒரே வேலை அடுத்தவர்களின் கதையை திருடி தங்கள் கதையாக பதிவிடுவது.
|
All times are GMT +5.5. The time now is 06:04 AM. |
Powered by Kamalogam members