காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   பழம் பெரும் நடிகைகள் அஞ்சலி தேவி, சுசித்ரா சென் மறைவு! (http://www.kamalogam.com/new/showthread.php?t=64383)

kay 18-01-14 01:00 AM

பழம் பெரும் நடிகைகள் அஞ்சலி தேவி, சுசித்ரா சென் மறைவு!
 
http://www.kamalogam.org/gallery/dat...ali_Devi_1.jpg
http://www.kamalogam.org/gallery/dat...ali_devi_2.jpg
http://www.kamalogam.org/gallery/dat...itra_Sen_1.jpg]http://www.kamalogam.org/gallery/dat...itra_Sen_2.jpg
பழம் பெரும் நடிகைகள் தமிழில் அஞ்சலி தேவி, வங்காள மொழியில் சுசித்ரா சென் மறைந்தனர். அவர்கள் அழகு முதுமையிலும் வெளிப்பட்டது! அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்!

அஞ்சலி தேவி தன் உடல் உறுப்புக்களை மருத்துவ ஆராய்ச்சிக்காகத் தானம் கொடுத்து விட்டார் என்பது நெகிழ வைக்கும் செய்தி. அவருக்கு வயது 86.
சுசித்ரா சென் ஹிந்தியிலும் வங்காளியிலும் புகழ் பெற்ற நடிகை. அவருக்கு வயது 82. தன் கடைசி 30 ஆண்டுகளை சன்னியாசினி போல் கழித்தாராம். தன் இறுதி ஊர்வலத்திலும் நெருங்கிய சொந்தக்காரர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தவிர வேறு யாரும் அனுமதிக்கப் படவில்லையாம். அவர் உடல் மூடப்பட்ட வண்டியில் இடுகாட்டுக்குக் கொண்டு போகப்பட்டதாம்!

venkat8 18-01-14 02:12 AM

மறைந்த நடிகைகளின் ஆன்மா சாந்தியடைய இறைவன் அருள் புரியட்டும். செய்தியை தொகுத்தளித்த கேவிற்கு நன்றி.

tdrajesh 18-01-14 04:24 AM

இருவருமே நல்ல நடிகைகள். அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். செய்தியை படத்தோடு தொகுத்தளித்த நண்பர் kay-க்கு நன்றி.

kamakodangi68 18-01-14 04:47 AM

நடிகையர்களில் முன்னோடிகளான இவர்களின் இழப்பு அவர்களின் குடும்பத்திற்கும் கலைக்குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னார்களது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

செய்தியை தொகுத்து லோக அன்பர்களுக்கு அளித்த நண்பர் கே அவர்களுக்கு நன்றி.

HERMI 18-01-14 05:17 AM

'தோன்றின் புகழோடு தோன்றுக' - என்ற வள்ளுவனின் வாக்கிற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்த இவர்கள் இருவரின் ஆன்மா சாந்தியடைவதாக..!

தொகுத்தளித்த நண்பர் கே அவர்களுக்கு நன்றி.

Nallavan1010 18-01-14 05:33 AM

மறைந்த முதுபெரும் நடிகைகளின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அக்காலத்தில் இவ்விருவரின் நடிப்புத்திறன் முத்திரைகள் ரசிகர்களின் மனத்தில் நீங்காத நினைவுகளாக என்றென்றும் இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

Kattumaram 18-01-14 06:43 AM

மறைந்தவர்களுக்கு அஞ்சலி..

ஸ்திரிலோலன் 18-01-14 08:40 AM

Quote:

Originally Posted by kay (Post 1271575)
அஞ்சலி தேவி தன் உடல் உறுப்புக்களை மருத்துவ ஆராய்ச்சிக்காகத் தானம் கொடுத்து விட்டார் என்பது நெகிழ வைக்கும் செய்தி

உண்மையிலேயே நெகிழ வைத்துவிட்ட செய்தி இது...
Quote:

Originally Posted by kay (Post 1271575)
சுசித்ரா சென் ஹிந்தியிலும் வங்காளியிலும் புகழ் பெற்ற நடிகை. அவருக்கு வயது 82. தன் கடைசி 30 ஆண்டுகளை சன்னியாசினி போல் கழித்தாராம்

ஓஹோ 50 வயதுக்கு மேலே சந்நியாசியாக வாழ்ந்தாரா.

இருவரின் ஆன்மா சாந்தி அடையட்டும். தகவலைத் தந்த நண்பர் கே அவர்களுக்கு நன்றி...

dashand 18-01-14 09:49 AM

கணவனே கண் கண்ட தெய்வம், நான் சிறுவயதில் டிடி தொலைக்காட்சியில் பார்த்த நியாபகம் என்றும் அகலாது, மற்றும் சில திரைப்படங்கள் அடுத்த வீட்டுப்பெண். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

vjagan 18-01-14 04:29 PM

இரு பெரும் நடிகைகளின் மறைவுக்கு என் அஞ்சலி அய்யா அம்மணி !


All times are GMT +5.5. The time now is 12:56 AM.

Powered by Kamalogam members