காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2009 நிர்வாக உதவியாளர்கள் (2ம் குழு) முடிவு (http://www.kamalogam.com/new/showthread.php?t=50077)

xxxGuy 03-05-09 01:29 AM

2009 நிர்வாக உதவியாளர்கள் (2ம் குழு) முடிவு
 
நண்பர்களே,

நமது காமலோக நிர்வாக பணிகளில் எங்களுக்கு உதவி செய்ய ஏற்படுத்தப் பட்டுள்ள நிர்வாக உதவியாளர்கள் குழுவில் எங்களுக்கு உதவி செய்த அனைத்து உதவியாளர்களுக்கும் முதற்கண் நன்றி!

இந்த குழுவிலிருந்து baseer மற்றும் mouse1233 தொடருகிறார்கள். இவர்கள் தவிர கீழ்கண்ட நிர்வாக உதவியாளர்கள் அவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப் படுகிறார்கள்:

1) amature_trichy
2) mayakrishnan
3) thangar.c
4) titan


இவர்கள் நான்கு பேருக்கு பதில் அடுத்த 4 மாதங்களுக்காக புதிதாக 8 பேர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளார்கள். இவர்களின் அடுத்த 2 மாத பணிக்கு பிறகு, சிறப்பாக பணியாற்றும் 4 பேர்கள் மட்டுமே இறுதியாக தேர்வு செய்யப் படுவார்கள்.

பொதுவாக தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர்கள், நிறைய படைப்புகள் கொடுப்பவர்கள் நிர்வாக பொறுப்பு ஏற்றவுடன் காணாமல் போய்விடுவது வழக்கமாகி விடுகிறது. அதனால், தளத்தில் சிறப்பாக செயல்படும் படைப்பாளிகளைத் தவிர்த்து வந்தோம், ஆனால், எத்தனை முறை தான் அவர்களைத் தவிர்க்க முடியும், அதனால் இந்த முறை அவர்களையும் சேர்த்துள்ளோம். நிர்வாக பணியில் சேர்ந்தவுடன் தங்கள் பங்களிப்பு குறையாமலும், தளத்தில் இருந்து காணாமல் போகாமலும் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

புதிதாக தேர்வு பெற்றுள்ள அவர்கள் பின்வருமாறு:

1] smdHabib
2] vaaliban
3] Billa
4] cena_fan
5] valarasu
6] பீனா
7] coolanu
8] லலிதாதாசன்


புதிய நிர்வாக உதவியாளர்களாக தேர்வு செய்யப் பட்டுள்ளவர்களுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்! இவர்கள் பணி மே மாதம் 5-ம் தேதியிலிருந்து துவங்கும்.

இவர்கள் அனைவருக்கும் நமது தளத்தை சீராக நடத்துவதில் உங்கள் ஒத்துழைப்பைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி..!!

__DELETED USER__ 03-05-09 01:40 AM

புதிய நிர்வாகப் பணியாளர்களுக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள்.

ஜெய் 03-05-09 01:41 AM

வாழ்த்துகள்
 
புதியவர்களுக்கு எனது வாழ்த்துகள்
1] smdHabib - அப்பாட இனிமே போட்டிக்கு வரமாட்டாரு. சவால் ராஜா
2] vaaliban – கருத்துப் பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்தவர்
3] Billa - சொல்லவே வேணாம் அருமையான நண்பர் எல்லாருக்குமே.
4] cena fan – எனக்கு கிடைத்த மற்றும் ஒரு அருமையான நண்பர்.
5] valarasu – அதிகம் தெரியாது இருந்தாலும் படைப்புகளால் தெரிந்தவர்.
6] பீனா – சமீபத்தில் அதிகம் லொல்லு பாடல்களில் வலம் வரும் நண்பி
7] coolanu – எங்கோ ஒரு இடத்தில் குட்டிய (செல்லமாக) தோழி
8] லலிதா தாசன் – வாங்க பொடியா
அனைவருக்குமே எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

கடவுளே தொடர்ந்து தள விதிகளை பின்பற்றி இவங்க யாருக்குமே தொல்ல குடுக்காம என்ன காப்பாத்தப்பா . . .
பழையவர்களுக்கு எனது வாழ்த்துகள்
baseer மற்றும் mouse1233 ஆகியோருக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள் பணி தொடர மென்மேலும் சிறக்க.

ஒரு சின்ன வருத்தம்
இனிமே காமெடி பண்ண அடுத்த செட்ட தேடனுமே.

kadalkanni 03-05-09 01:45 AM

நண்பர்களே, உங்களின் புதிய பதவி உயர்வுடன் நம் காமலோகம் மிகவும் சிறப்பாக நடக்கும் என்று நம்புகிறோம்..புதிய நிர்வாக உறுப்பினர்களாகிய உங்களுக்கு இந்த கடல்கன்னியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

thangar.c 03-05-09 02:11 AM

புதிய நிர்வாக உதவியாளர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வரவு & நல்வாழ்த்துகள்...

muthuveeran 03-05-09 02:23 AM

புதிதாக பொறுப்பேற்கவுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுக்கள்...என்றும் போல எமது ஆதரவு உண்டு...

cena_fan 03-05-09 02:27 AM

என்னையும் நிர்வாகத்தில் உதவியாளாராக தேர்வு செய்த தலைவர் அவர்களுக்கு மிக்க நன்றி. என்னால் முடிந்தளவிற்கு இந்த தளத்தில் பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன். என்னுடன் சேர்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற நண்பர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

BILLA 03-05-09 02:29 AM

என்னுடன் சேர்ந்து நிர்வாக பணியில் உதவிசெய்ய தேர்வான அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

தளத்திற்கு அவ்வப்போது புதுரத்தம் பாய்ச்சி புத்துணர்வுடன் வைத்திருக்கும் தலைவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மற்ற நண்பர்கள் அனைவரும் நிர்வாகத்திற்கு இப்போது போலவே எப்போதும் ஆதரவும் ஒத்துழைப்பு அளித்து தளத்தை சிறப்பிக்கவேன்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
பில்லா

vaaliban 03-05-09 02:36 AM

புதிய நிர்வாக உதவியாளர்களுடன் என்னையும் தேர்ந்தெடுத்த தலைவர் அவர்களுக்கு நன்றிகள் !

தலைவர், நிர்வாக மேற்பார்வையாளர்கள், மூத்த உதவியாளர்கள் ஆலோசனையுடன், புதிய நிர்வாக உதவியாளர்களுடன் கை கோர்த்து தளத்தை வளப்படுத்த வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் நன்றிகள் !

வாழ்த்திய / வாழ்த்தும் நண்பர்களுக்கும் நன்றிகள் !

பச்சி 03-05-09 03:12 AM

நிர்வாக உதவியாளராய் தொடர்ந்து பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த நிர்வாகத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

புதிதாய் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நண்பர்கள் 'எட்டு பேரையும்' வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

மாயகிருஷ்ணன், தங்கர், அமெச்சூர்_திருச்சி, டைட்டன் ஆகிய நால்வரும் பணி விட்டு செல்வது வருத்தமே. இவர்களது பங்களிப்புகள் நம் தளத்தில் சிறக்க வாழ்த்துகிறேன்.


All times are GMT +5.5. The time now is 08:10 PM.

Powered by Kamalogam members