காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   எழுத்தாக்கம் பண்ண சிறந்த வழி. (குரல் மூலம் ) (http://www.kamalogam.com/new/showthread.php?t=74117)

வேதா 30-11-20 02:53 PM

எழுத்தாக்கம் பண்ண சிறந்த வழி. (குரல் மூலம் )
 
சில நாட்களின் முன் இணையத்தில் உலாவிய போது speech recognition ஐ ஸ்மார்ட் போன்களில் Gboard என்ற கீபோர்ட் மூலம் கதைக்கும் அனைத்து வசனங்களையும் தமிழில் எழுத்துருவாக்கினேன் ... அதையே ஏன் கணனியில் செய்ய முடியாது என்று சிந்தித்து தேடிய போது ஒருசில இணையப்பக்கங்களை கண்டறிந்தேன் அவை கீழே

1. https://www.unicodeconverter.info/vo...-converter.php
2. https://speechnotes.co/

இந்த இரு பக்கங்களையும் சோதித்ததில் இதில் நன்றாக குரல் பதிவின் மூலம் எழுத்துருவாக்க முடியும் என்பதை அறிந்தேன். சில நண்பர்கள் டைப் செட்டிங் செய்வதை ஒரு பளுவாக நினைத்து சிலவரிப் பதிவுகளை மேற்கொள்வதையும் அவதானித்தேன். அதனாலேயே இந்தப் பதிவை இடுகின்றேன்

மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி நீங்கள் நினைக்கும் வசனங்களை மைக்கின் மூலம் பதிந்தால் அது இலகுவாக தமிழில் தட்டச்சு செய்து கொடுக்கின்றது .... இந்த பக்கங்கள் எனக்கு 90% சரியான சொற்களை பதிவு செய்ததன் அடிப்படையிலேயே நான் இதை பரிந்துரைக்கிறேன்.

தனிமையில் குரலை பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பமுள்ள நண்பர்களுக்கு இது உகந்ததாக இருக்கலாம். பரிசோதித்துப் பாருங்கள்.

குறிப்பு - ஸ்மார்ட் போனில் இதை நான் பரிசோதிக்கவில்லை . நீங்கள் ஸ்மார்ட் போன் இணைய பாவனையாளரெனின் பரிசோதித்து மற்றய நண்பர்களுக்கு பரிந்துரை கூறுங்கள்.

ASTK 30-11-20 06:55 PM

உபயோகமான தகவல். தட்டச்சு செய்ய சிரமம் கொள்ளும் நண்பர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

vjagan 30-11-20 07:15 PM

மிகவும் பயனாக்கம் செய்ய வேண்டிய பதிவு! தனிமையில் இருக்கும் சமயம் மிகவும் நேரத்தைக் குறைக்கும்!பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்பு குறியீடும் குறியீடும்!

jayjay 30-11-20 09:00 PM

பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றியும் பாராட்டுக்களும்..

ipsasp 30-11-20 09:09 PM

அருமை. நல்ல பயனுள்ள தகவல்.

ஸ்திரிலோலன் 30-11-20 11:44 PM

மிக்க நன்றி நண்பரே.. உண்மையிலேயே இது மிகவும் பயனுள்ள தகவல்..

BILLA 01-12-20 07:55 AM

இந்த அருமையான வசதியை தந்த நண்பருக்கு எனது பாராட்டுக்கள். இது எனக்கு பல விதங்களில் பயன்படும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இது மிக அருமையாக வேலை செய்கிறது இந்த பின்னூட்டம் கூட நான் பேசி பதிவு செய்ததுதான், எந்த பிழையும் வரவில்லை அதனால் இது எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது உங்களுக்கு கோடான கோடி நன்றி அன்புடன் பில்லா

sriramesh2005 01-12-20 10:37 AM

நல்ல தகவலை தந்துள்ளீர்கள் நன்றி மகிழ்ச்சி

srasatheesh 06-12-20 01:50 PM

கைபேசி மூலமும் Gboard app மூலம் எளிதாக தமிழில் தட்டச்சு செய்யலாம்

Sent from my SM-G985F using Tapatalk

jenipriyan 06-12-20 05:19 PM

நான் இந்த வசதியை ஸ்மார்ட் போனில் பயன்படுத்தினேன்.. 90% சரியாக இருந்தது.. ஆனால் , கதையாக எழுதும் பொழுது ஒரு சில இடர்பாடுகள் உள்ளன.. தட்டச்சு செய்து பிழைகளை நீக்க வேண்டி உள்ளது .. மேலும் , அருகில் இருப்பவர்கள் யாராவது கேட்டு விடுவார்களோ என்ற பய உணர்வுடன் பேச வேண்டி உள்ளது..


All times are GMT +5.5. The time now is 09:07 AM.

Powered by Kamalogam members