காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0101 - மத்தளக் காட்டிடையே முத்தாரக் குளிப்பு! - போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65450)

kamakodangi68 15-11-14 09:01 PM

முதலிடம் பெற்று வெள்ளிவாசல் நுழையும் நண்பர் கலேஷன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அதேபோல் அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

லோக நண்பர்களே..

மேற்கண்ட வரிகளுடன் இந்தப் பதிவை நான் பதித்துவிடலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் சிலரின் பதிவுகள் என் மனதிலும் சில விஷயங்களைத் தோற்றுவிக்கவே.. நானும் என் பதில் கருத்தைப் பதிவுசெய்கிறேன். மற்றபடி இதை விவாதத்திரியாக ஆக்குவது என் நோக்கமல்ல.

நிர்வாகத்தினர் மன்னிக்கவும்.

பொதுவாக இது போட்டியின் முடிவு அறியும் திரி.. எனவே இதில் வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு போய்விடலாம். ஆனால் அதைவிடுத்து வேறுவிதமான கருத்துக்களைப் பொதுவில் இந்தத்திரியில் பதிவதும் அதை வழிமொழிவதும் அதுதான் உண்மையோ என்ற மாயத்தோற்றத்தினை ஏற்படுத்துவதால் என் மனதில் தோன்றிய கருத்துக்களையும் பொதுவில் பதியவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.


Quote:

Originally Posted by subbu2000 (Post 1313441)
ஆனாலும் குறைந்த அளவே கலந்து கொள்கிறார்கள்.....குறைந்த அளவே வாக்களிக்கிறார்கள்......குறைந்த அளவே பின்னுட்டமிடுகிரார்கள் .....இது தான் மனதை சிரமபடுத்துகிறது....என் ஒவ்வொரு கதைகளுக்கும் கீழே படித்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டினாலும் பின்னுட்டம் என்னவோ பத்து கூட இருக்காது.....பாராட்ட மனமில்லையா, நேரமில்லையா, வசதியில்லையா என்று தான் கேட்க தோன்றுகிறது ஆனாலும் கேட்டு கேட்டு பெற்றால் அது அசிங்கமில்லையா.....?

அசிங்கம்தான் நண்பரே.. போன சிறப்பு நி.ச.போட்டி 0100 ல் எத்தனை போட்டியாளர்கள் பங்கெடுத்தார்கள்.. அதற்கடுத்த இந்த போட்டியில் எத்தனை பேர் பங்கெடுத்தார்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்குமே.. இது ஏன் என்று தெரிந்திருந்தும் "மனதை சிரமப்படுத்துகிறது" என்று சொன்னால் என்ன அர்த்தம் நண்பரே..


Quote:

Originally Posted by subbu2000 (Post 1313441)
..படிப்பாளிகள் படைப்பாளிகளை தட்டி தட்டி உருவாக்கவில்லை என்றால் உங்களுக்கு மொக்கை சிற்பங்களும், சிற்ப்பிகளும் தான் கிடைப்பார்கள்......ஏன்னா எளவைடா எழுதுறானுங்க என்று நீங்கள் கதைக்கு வேறு இடத்தை தான் தேட வேண்டும்


இதில்தான் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது நண்பரே..

"கதைக்கு" என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால்.. "காமக்கலப்பில்லாத ஜனரஞ்சகமான கதைக்கு" என்று அர்த்தமாகப் படுகிறது. காமலோகத்தில் அது ஏற்புடையதா.. அல்லது அப்படிப்பட்ட கதைகள்தான் இனி பதிக்கப்படவேண்டும் என்பது உங்கள் விருப்பமா என்று புரியவில்லையே நண்பரே..

மேலும் உங்கள் கருத்து.. சதை சம்பந்தப்பட்ட கதை எழுதுவது "என்ன எழவுடா" என்பது போலவும் அப்படி காமத்தைக் குழைத்து எழுதுபவர்கள் மொக்கை சிற்பிகள் போன்றும் அவர்கள் வடிக்கும் காமக்கதைகள் மொக்கை சிற்பங்கள் என்றும் அர்த்தம் தருகிறதே நண்பரே..


Quote:

Originally Posted by subbu2000 (Post 1313441)
.கதை ஒன்றும் தொட்டனைத்துரும் மணற்கேணி அல்ல.....உள்ளே இருக்கும் சரக்கெல்லாம் தீர்ந்துவிட்டால் அடுத்ததர்க்காக தவம் கிடக்க வேண்டும் .....அப்படி தவம் கிடக்கும் சினிமா கதையாசிரியர்களை நீங்கள் அறிவீர்கள் .....அதே நேரம் உங்கள் தட்டிகொடுத்தல் எழுத்தாளர்களின் மணற்கேணியை தூர் வாரி விடுவது போல இருக்கும்....சில நண்பர்கள் பின்னுட்டங்களில் ஐடியா கொடுப்பார்கள், ஆஹா என்பார்கள்

நண்பரே.. நீங்கள் சரக்கெல்லாம் தீராத அமுதசுரபியாக இருக்கும் பட்சத்தில் ஏன் மற்றவர்கள் உங்களுக்குத் தூர் வார வேண்டும் என நினைக்கிறீர்கள். அடைபட்டுக் கிடந்தால்தானே தூர் வாருவதற்கு.. அடைக்க எதுவுமில்லாத ஆழ்கடல் பெய்மழை போல் உங்கள் திறமை இருக்க நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள் நண்பரே..

eros 16-11-14 12:00 AM

Quote:

Originally Posted by subbu2000 (Post 1313441)
எனக்கு சின்ன வயதில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.....எழுதியவுடன் அந்த பேபரை பிடுங்கி கொண்டு ஓடுவார்கள் .

அப்படியா விஷயம்... அந்த கதையை இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லலாமே. அதுதான் இப்பவும் பல கதை மன்னனா, எட்டு கதை ஒரே நேரத்தில எழுதிறீங்க !!

MACHAN 16-11-14 03:11 AM

வெற்றி பெற்று வெள்ளி வாசல் வந்த நண்பர் கலேஷன் அவர்களுக்கும் , மூன்றாமிடம் வந்த நண்பர் நைஸ்கை அவர்களுக்கும் வாழ்த்துகள். இரண்டு தொடர்களை எழுதியதோடு இரண்டு மற்றும் நான்காமிடம் பெற்ற நண்பர் சுப்பு2000 அவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

Kaleshan 16-11-14 07:26 PM

போட்டியில் எனக்கு வாக்களித்து என்னை சவால் ராஜாவாக்கிய நண்பர்களுக்கு என் நன்றி. என் கதையை பாராட்டி பின்னூட்டங்கள் பதித்த நண்பர்களுக்கும் என் நன்றி.

இரண்டாம் மற்றும் நான்காம் இடம் பெற்ற நண்பர் சுப்பு அவர்களுக்கும் மூன்றாம் இடம் பெற்ற நைஸ்கை அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
Quote:

Originally Posted by dreamer (Post 1313460)
வெற்றி பெற்று வெள்ளி வாசலை அடைந்த தம்பி கலேஷனுக்குப் பாராட்டுகள். அடுத்த நிர்வாக சவால் போட்டியிலும் வென்று தங்க வாசலை அடைய வாழ்த்துகிறேன்.

டிரீமர் ஐயாவின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. சூழ்நிலை சரியாக அமைந்தால் நிச்சயம் கலந்துக்கொள்கிறேன் ஐயா.

subbu2000 17-11-14 01:28 PM

Quote:

Originally Posted by kamakodangi68 (Post 1313482)
"கதைக்கு" என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால்.. "காமக்கலப்பில்லாத ஜனரஞ்சகமான கதைக்கு" என்று அர்த்தமாகப் படுகிறது. காமலோகத்தில் அது ஏற்புடையதா.. அல்லது அப்படிப்பட்ட கதைகள்தான் இனி பதிக்கப்படவேண்டும் என்பது உங்கள் விருப்பமா என்று புரியவில்லையே நண்பரே..

மேலும் உங்கள் கருத்து.. சதை சம்பந்தப்பட்ட கதை எழுதுவது "என்ன எழவுடா" என்பது போலவும் அப்படி காமத்தைக் குழைத்து எழுதுபவர்கள் மொக்கை சிற்பிகள் போன்றும் அவர்கள் வடிக்கும் காமக்கதைகள் மொக்கை சிற்பங்கள் என்றும் அர்த்தம் தருகிறதே நண்பரே..

யெப்பா நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.......நான் யாரையும் மொக்கை என்றூ சொல்ல தயாராக இல்லை....படிப்பது வேறூ, எழுதுவது வேறு....எழுதும் அளவுக்கு திறமையுள்ளவர் எந்த நாளும் மொக்கையாகி விட முடியாது ஆயினும் அவர்களை உங்களை போன்ற ரசிகர்கள் தட்டிகொடுக்கும் போது அவர்களீன் எழுத்து இன்னும் மேன்மையாக வாய்ப்புள்ளதே என்றூ தான் இதைச் சொன்னேன்.....மேலும் நம் தளத்தில் யாரும் கருத்து கணீப்பு பேராசிரியர்களாக அல்லாமல் நண்பர்களாகவே தோன்றுவதால் தான் இந்த வேண்டுதலும்......போற்றூவதும் தூற்றுவதும் உங்கள் கையிலே, உங்கள் விருப்பத்திலே.....

அதிகப்பிரசங்கித்தனமாக எழுதியிருந்தால் அது தங்களையும் மற்ற நண்பர்களையும் பாதித்திருந்தால் சிரம் தாழ்ந்த மன்னிப்பை பகிரங்கமாக கேட்டுக் கொள்கிறேன்.

தமிழா 17-11-14 08:25 PM

வெற்றி பெற்ற கலேஷனுக்கும் மற்றும் இரண்டாம், மூன்றாமிடம் பிடித்த சுப்பு, நைஸ்கை அவர்களுக்கும் என் பாராட்டுக்கள் !

பச்சி 10-12-14 03:35 PM

முதன்முறையாக நி.சவாலில் பங்குகொண்டு அதில் வெற்றியும் கண்டு, நி.சவால்: 0101 -ன் 'சவால் ராஜா'வாக ஆகியிருக்கும் நண்பர் kaleshan அவர்களுக்கு பாராட்டுகள். வெள்ளி வாசல் அடைந்ததோடு, அதே உற்சாகத்துடன் அடுத்த நி.சவாலிலும் (நி.சவால்: 0102) களமிறங்கியமைக்கு வாழ்த்துகள்.

சவாலில் பங்கு கொண்டு போட்டியை பலப்படுத்திய நண்பர்கள் subbu2000 & niceguyinindia ஆகியோருக்கும் வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 02:53 AM.

Powered by Kamalogam members