காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   அமரரான தமிழக முதல்வர் (http://www.kamalogam.com/new/showthread.php?t=69377)

anabayan 06-12-16 10:12 AM

அமரரான தமிழக முதல்வர்
 
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரையடுத்து நான் அதிகமாக நேசித்தவர் இன்று அமரராகி இந்த மண்ணுலகம் நீக்கி விண்ணுலகம் சென்று விட்டார் தமிழக முதல்வரும் கோடானு கோடி மக்களின் மனதில் அம்மா என்ற நாமத்தோடு குடி கொண்டிருப்பவருமான ஜெ. ஜெயலலிதா என்ற இரும்பு பெண்மணி.

இவ்வுலகில் சந்தித்த வேதனை வலிகளை மறந்து அவரது ஆன்மா இறைவனது திருவடியில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

tdrajesh 06-12-16 11:02 AM

மக்களின் மனதில், முக்கியமாக தமிழக பெண்களின் மனதில் குடிகொண்டிருந்த இரும்பு பெண்மணி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

vjagan 06-12-16 11:11 AM

ஆணாத்திக்கம் மிகுதியான இந்த உலகில் நிமிர்ந்து நின்று வெற்றி நடை போட்ட மன உறுதி மிக்க அந்தப் பொல்லாத அம்மணியின் பெருமைகளை எண்ணி எண்ணி அவரது ஆன்மா சாந்தி அடைய வாழ்த்துகிறேன் அய்யா அம்மணி !

sinna vaaththiyaar 06-12-16 11:16 AM

ஆண் சிங்கங்கள் நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றை பெண்சிங்கமாய் உள்ளே நுழைந்து தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகளாக ராஜ தர்பார் செய்தவர் இவர்களை போன்ற ராஜதந்திரிகளுக்கு மத்தியில் வேறொரு பெண்ணால் இப்படி சாதிக்க முடியுமா என்றால் நிச்சயம் பெருத்த சந்தேகம் தான் ...மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி அருகே ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தலைவனை பின்பற்றிய தானை தலைவியின் ஆன்மா சாந்தி அடையட்டும்...

Nallavan1010 06-12-16 12:08 PM

ராமன் தேடிய சீதை படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாடிய பாடல் "திருவளர்ச்செல்வியோ? நான் தேடிய தலைவியோ" என்ற வரிகளுக்கேற்ப அவர் தேடிய தலைவியாக வாழ்ந்துகாட்டி அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.

1989 ல் தமிழகம் தலைகுனியும் வகையில் சட்டசபையில் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்த அவைக்கு முதல்வராக வருவேன் என்று வீர சவால் விட்டு அதை 1991 ல் வெற்றி சவாலாக மாற்றியவர்.

இந்த வீரப்பெண்மணியின் ஆன்மா என்றும் அமைதியில் நிற்க இறைவன் நல்லருள் புரியட்டும்.

HERMI 06-12-16 12:12 PM

Quote:

Originally Posted by sinna vaaththiyaar (Post 1408491)
ஆண் சிங்கங்கள் நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றை பெண்சிங்கமாய் உள்ளே நுழைந்து தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகளாக ராஜ தர்பார் செய்தவர் இவர்களை போன்ற ராஜதந்திரிகளுக்கு மத்தியில் வேறொரு பெண்ணால் இப்படி சாதிக்க முடியுமா என்றால் நிச்சயம் பெருத்த சந்தேகம் தான்

நண்பர் அருமையாக சொல்லியிருக்கிறார்.! அதே....அதே..!!!

தன்னைப்பற்றி வரும் எதிர்மறையான கருத்துகளை எளிதாக கடந்து செல்லும் வலிமை, தான் கொண்ட லட்சியத்தை அடைய, அதிக பொறுமையோடு போராடும் குணம்...பேச்சால், சிரிப்பால், ஆளுமைத்தன்மையால் பல கோடி நெஞ்சங்களில் குடி கொண்ட தாரகை...ஜெயலலிதா அம்மையார்.! அவரின் ஆன்மா நித்திய சாந்தியை அடைவதாக.!

gemini 06-12-16 01:58 PM

ஒரு நடிகையாக தான் இன்னல்பட்டவை எல்லாற்றையும் மனதில் கொண்டு, அரசியலில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு இரும்பு பெண்மணியாய், தன்னாதிக்கம் கொண்டவராய் இருந்து சாதித்தவர்.
அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோமாக.

anarth_maddy 06-12-16 11:26 PM

ஆணாதிக்கம் அதிகம் உள்ள சமுதாயத்தில் தனி ஒரு பெண்ணாய், துணிச்சல் கொண்டு போராடி வெற்றி பெற்ற அன்னையின் மறைவு அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியாகவே இருந்தது.

அவ்வீர பெண்மணியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

tamilplus 06-12-16 11:27 PM

அவரது ஆத்மா சாந்தி அடைக.....

bedroom_salak 07-12-16 02:47 PM

தமிழகத்தின் முதல்வர்.. தங்கதாரகை,,, இரும்பு மனுசி , எல்லோராலும் அன்பாக 'அம்மா' என்றழைக்கபடும் நம் முதல்வர், இயற்கை அன்னையின் கையிலே தவழ, நம்மையெல்லாம் மீளா துயரத்திலே ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்..
அவரின் மறைவு நம் தமிழகம் மட்டுமின்றி, இந்திய தேசத்திற்கே பேரிழப்பு..


All times are GMT +5.5. The time now is 06:18 PM.

Powered by Kamalogam members