காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா இயற்கை எய்தினார் (http://www.kamalogam.com/new/showthread.php?t=80542)

Natarajannatty 03-05-23 03:22 PM

இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா இயற்கை எய்தினார்
 
தமிழ் திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவரும் சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகருமான மனோபாலா சற்று முன்னர் இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன் நண்பர்களே இவர் ஊர்க்காவலன், மல்லுவேட்டி மைனர், பிள்ளை நிலா போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார் மேலும் அரண்மனை தரம் அதிகாரம் ஒன்று போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் இவரது தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் சதுரங்க வேட்டை என்பது குறிப்பிட தக்கது ஆழ்ந்த அனுதாபங்கள் அவருக்கு அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திகிறேன்

suppan 03-05-23 04:34 PM

ஆம் இப்போது தாக் கேள்வியுற்றேன்.

தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ஓர் இழப்பு என்றால் மிகையாகாது.

அன்னாரின் ஆத்மா சந்தி பெறட்டும்.

Killermiller 03-05-23 11:27 PM

மிகுந்த மனவேதனை தரும் செய்தி....
69 வயதில் மரணம்.....
500 படங்களுக்கு மேல் பணியாற்றியவர்....
சதுரங்க வேட்டை போல ஒரு தரமான திரைப்படத்தை தந்தவர்....
நல்ல நகைச்சுவை நடிகர்...
ரம்மி விளம்பரத்தில் நடித்து... பின்.. தவறுணர்ந்து மன்னிப்பு கேட்டவர்....

rook 13-05-23 05:21 PM

உண்மையில் எல்லோரும் ஒர் நாள் போக வேண்டியது தான், அந்த வரிசையில் மனோ பாலா இயற்கை ஏய்தி விட்டார். நகைசுவை நடிகர்.

மறுபிறவி 13-05-23 05:53 PM

நல்லவர்கள் சீக்கிரம் இயற்கை எய்துவது வாடிக்கையாகிவிட்டது. இவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

tjayak 13-05-23 09:28 PM

நல்ல நகைச்சுவை நடிகர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

eros 14-05-23 01:49 AM

நல்ல நகைச்சுவை நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர். இந்தி படங்கள் கூட இயக்கி இருக்கிறார். அவர் மறைவு வருத்தம் தான்

vjagan 26-08-23 06:24 AM

அந்தப் பொல்லாத கடவுள் நல்லவர்களை காலம் தாழ்த்தி நமக்கு அடையாளம் காட்டுவதும், அவர்களை நம்மிடமிருந்து உடனுக்குடன் பிரித்து எடுத்து செல்வதும் வாடிக்கையாகிவிட்டது!


All times are GMT +5.5. The time now is 01:49 AM.

Powered by Kamalogam members