காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   கேன்சர் - குழப்பமான மனநிலை (http://www.kamalogam.com/new/showthread.php?t=71351)

msvasan 06-12-18 05:36 PM

எப்போது உங்களுக்கு கேன்சர் என்று நீங்க வெளியில் சொன்ன பின்னர் அதனை நீங்க வென்றுவிட்டிங்க , கவலைய விடுங்க எது வந்தாலும் பார்த்து விடுவேம், கேன்சரை நினைத்து பயம் வேண்டாம், பயம் தாம் நன்மை கொன்றுவிடும் பயம் வேண்டாம், வாழ்க்கை ஒரு போர்க்களம் , அதை வாழ்ந்து தான் பார்க்கனனும்
போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமா

ramjiram 07-12-18 02:04 AM

மனதை வேதனைப்படுத்திய செய்தி! இன்றைய முன்னேறிய மருத்துவ முறைகளில் சிறிது கால போராட்டத்திற்குப் பிறகு அருமையான உடல் நிலை மீண்டும் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

madan 09-12-18 02:23 AM

மௌனி மற்றும் jaya6 அவர்களுக்காக பிராத்திக்கிறேன். பெருமாள் அருளால் இருவரும் மீண்டு வருவீர்கள். எல்லோரும் சொல்வது போல, தைரியம் மருந்து. அதையே யோசித்து கொண்டு இருக்காதீர்கள். அருகில் யாரையாவது வைத்து கொள்ளுங்கள். தனிமையில் இருந்தால் மனம் ரொம்ப சஞ்சலம் ஆகும். அனைவருடன் பழகுங்கள். வெளியே செல்லுங்கள். எல்லோரிடமும் உங்கள் உடல்நலத்தை பற்றி பேசாதீர்கள். அவர்கள் உங்களுக்கு தைரியம் சொல்வதாக நினைத்து அதை இன்னும் பெருசு ஆக்குவார்கள். விரைவில் குணம் அடைவீர்கள்.

selvenselvi 09-12-18 10:30 AM

Quote:

Originally Posted by mouni (Post 1460029)
இப்போதுதான் வாழ வேண்டும் என்று ஆசை அதிகமாக உள்ளது.

நாம் ஆழ்மன எண்ண​​மே நம் வாழ்வி​னை ​பெரும்பாலும் வழிநடத்தும்.. அவசியம் ​நோயிலிருந்து மீண்டு நலம் ​பெற்று வருவீர்கள்..

udhayasuriyan 10-12-18 01:16 AM

எனக்கு தெரிந்து எல்லாவற்றையும் இப்பொழுது கேன்சர் என்று தான் குறிப்பிடுகிறார்கள்.. தற்போது சகலை மீண்டு வந்து இருக்கிறார்.. வயது ஐம்பதுக்கும் கீழ்... ஆனால் என் தந்தை வயது அதிகம் அதே நேரத்தில் ரொம்ப முற்றிய நிலை அதுவும் நுரையீரல் ... நண்பருக்கு ஒன்று மட்டும் சொல்வேன்... நான் இறந்திருந்தால் இந்நேரம் 12 வருடங்கள் ஆகி இருக்கும்.. இதய நோய்.... அதற்கப்புறம் உடலுறவு இருக்க கூடாதென்று சொன்னார்கள்.. கொஞ்ச நாள் தவிர்த்தேன்.. அதற்கப்புறம் அட போடா என்று தூக்கி விட்டு சாதாரண வாஸ்க்கை வாழ்கிறேன்.. அதற்கப்புறம் தான் வெளிநாடும் சென்றேன்... பிரச்சினைகள் எனக்கு இருக்கு இருந்தாலும் பரவாயில்லை... மனது சந்தோஷமாக வாழுங்கள்.. சொல்வது எளிது.... எனக்கும் இது புரிகிறது... நன்றாக வருவீர்கள் என்று நம்புகிறேன்...

udhayasuriyan 10-12-18 01:21 AM

mouni and jaya6
நல்லவை நடக்கட்டும்

sreeram 10-12-18 01:33 AM

அன்புள்ள மெளனி,

என் கதைகளுக்கு நீங்கள் எழுதிய விமர்சனங்கள் என்னை வெகுவாய் ஊக்குவித்தது நிஜம். நாம் இருவரும் இணைந்து கதை எழுத வேண்டும் என லோகத்தில் சில வாசகர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். நாமும் ஒரு புதிய அறிவியல் கலந்த காமக் கதை எழுதுவதாய் திட்டம் இட்டு இருந்தோம். நேரம் காலம் தக்க சூழல் கைகூடி வராமல் போய்விட்டது. நான் என் பணியில் பிசி. நீங்கள் கனடாவில் உங்கள் வேலையில் பிசியாக இருந்தீர்கள்.

காலம் எவ்வளவோ மாற்றியது. புரட்டியடித்தது.

சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் சர்க்கரை நோயால் துன்புறுகின்றீர்கள் என்ற பதிவினைப் படித்தேன். இப்பொழுதெல்லாம் சர்க்கரை நோயை வெகு எளிதாக வென்றுவிட அதிகமான மருத்துவ அறிவியலும் உணவு முறைகளும் வந்திருப்பதால் மருத்துவர்களின் துணையுடன் எளிதாக கையாள்வீர்கள் என நினைத்திருந்தேன்.

ஆனால் இன்று கேன்சர் என்று சொல்கின்றீர்கள்.

திரைப்பட நடிகை கெளதமி கூட ஒரு முறை கேன்சரிலிருந்து மீண்டு வந்ததாக எங்கோ படித்த நினைவு.

எனவே நவீன மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுங்கள்.

நாங்கள் அனைவரும் உங்களுடன் உறுதுணையாக தோள் கொடுத்து நிற்போம். கண்டிப்பாக மீண்டு வருவீர்கள் !

டிஸ்கி: நீங்கள் ஒரு முறை என்னை, “ஸ்ரீராமுக்கு நல்ல பெண் மனைவியாய் அமைவாள்” என வாழ்த்தினீர்கள். இன்னமும் திருமணம் ஆகாத அதே அக்மார்க் கன்னிப் பையனாய் வலம் வருகின்றேன்.

eros 12-12-18 10:31 PM

என் மனைவிக்கும் கான்சர் என்றுதான் சொல்லி இருக்கிறார் டாக்டர். கவலைபட வேண்டாம், இப்பொழுது உள்ள மருந்துகள் நல்ல குணம் அளிக்கிறது, பெரும்பாலோருக்கு சரியாகி விடுகிறது என்றும் சொன்னார். நீங்களும் நிச்சயம் குணம் அடைவீர்கள்.

Thiru Raj 13-12-18 01:59 AM

எண்ணமே வாழ்க்கை.

Quote:

Originally Posted by mouni (Post 1460029)
நான் வாழ ஆசைப்படுகிறேன். இப்போதுதான் வாழ வேண்டும் என்று ஆசை அதிகமாக உள்ளது.

தங்களின் இந்த எண்ணமே தங்களை நீண்ட காலம் வாழ வைக்கும்.

- ராஜ் -

bright 13-12-18 10:56 AM

அன்பரே,
இங்கே குறிப்பிட்ட இடத்த்தில் தங்களுக்கு உகந்த மருத்துவம் கிடைக்கின்றது
.
தயவு செய்து முயற்சி செய்யவும்.
கேன்சர் மருந்து எந்த நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்ட புற்று நோயையும் 100% குணமாக்கும் 27 நாட்களுக்கு மருந்து விலை 400 ரூபாய் மட்டும் நோயளிகள் செல்லவேண்டிய அவசியம் இல்லை வீட்டில் இருந்து யார் வேண்டும் என்றலும் போகலாம்.
Address. Vaidya Narayanamurthy
Narasipura Village
Sagar Taluk.
Shivamogga District
Karnataka India
காஞ்சிபுரத்தில் இருந்து 690 கிலோமீட்டர்
காரில் செல்பவர்கள் வழி
Hosur. Bengaluru Tumakuru Chitradurga Harihar Narasipura
பஸ் மற்றும் ரயிலில் செல்பவர்கள்
Hosur Bangalore Shivamogga Ananthapuram Narasipura
வேலை நாட்கள். வியாயன் ஞாயிரறு காலை 6
குறிப்பு.
தயவு செய்து இதை அனைவருக்கும் தெரியபடுத்தவும்
மேலும் விவரம் அறிய
Mahalakshmi Travels Kanchipuram
9944228213


All times are GMT +5.5. The time now is 01:07 PM.

Powered by Kamalogam members