காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   பண்பாளர் ’பச்சி’ 6000 பதிப்புகளுக்கு வாழ்த்துகள் (updated: 19.05.2015) (http://www.kamalogam.com/new/showthread.php?t=55936)

Rassy_Camren 25-09-10 05:18 AM

பண்பாளர் ’பச்சி’ 6000 பதிப்புகளுக்கு வாழ்த்துகள் (updated: 19.05.2015)
 
பண்பாளர் பச்சி http://www.kamalogam.org/gallery/data/500/31.gifhttp://www.kamalogam.org/gallery/data/500/01.gifhttp://www.kamalogam.org/gallery/data/500/01.gifhttp://www.kamalogam.org/gallery/data/500/01.gif பதிப்புகளுக்கு வாழ்த்துக்கள்.

காமலோகத்தில் தொடர்ந்து சளைக்காமல் உதவிக் கரம் நீட்டிக்கொண்டிருக்கும் நமது http://www.kamalogam.com/new/customa...ar23008_18.gifகண்காணிப்பாளர் பச்சி அவர்கள் 3000 பதிப்புகளைக் கடந்துவிட்டார். அவரை வாழ்த்தி இந்தத் திரியைத் தொடங்கியதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியே.

சமீப காலமாக உல்டா பகுதியில் கலக்கிக் கொண்டிருக்கும் பச்சியின் சேவை காமலோகம் அறிந்ததே. உதவி என்ற வார்த்தை எங்கிருந்தாலும் அங்கே பச்சியின் முத்திரை இருக்கும். மென்மையான உள்ளம் கொண்ட நமது பச்சி அவர்களைப் பற்றி நான் அதிகம் சொல்லுவதை விட இங்கு வாழ்த்த வரும் தோழர் தோழியர்கள் அதிகம் சொல்வார்கள்.

காமலோகத்தில் பிரம்மாண்டமான வாசகர் சவால் நடத்தி 74 கதைகளைப் பெற்றுத்தந்த பெரும் சாதனையாளர் பச்சி என்று சொன்னால் அது மிகையாகாது. மீண்டும் அதே போல ஒரு வாசகர் சவால் தொடங்கி அதில் நானும் எனது கதைகளைப் பதிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று இங்கே கேட்டுக்கொள்கிறேன். கதைகள் கவிதைகள் என்று சிறந்த படைப்பாளியாக மட்டுமல்லாமல் எல்லோருடனும் இனிமையாகப் பழகும் நமது பச்சி, நிர்வாகத்திலும் தனது சேவையை திறம்பட செய்துகொண்டிருக்கிறார்.

இவரைக் கண்காணிப்பாளர் ‘பச்சி’ என்று சொல்லுவதை விட பண்பாளர் பச்சி என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

புதியவர்களை சரியான பாதையில் நேர்படுத்துவதில் பச்சிக்கு நிகர் பச்சியே தான். இவரின் பதிப்புகள் 3000-த்தைக் கடந்தாலும் உதவிக்காக இவர் அனுப்பும் தனிமடல்கள் கணக்கில் அடங்காதது. கதைகளில் இருக்கும் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டி அவற்றுக்கான சரியா வார்த்தைகளையும் குறிப்பிட்டு தனிமடல் அனுப்பி நான் திருத்திய எனது கதைகளே ஏராளம். பச்சி இல்லையென்றால் ‘ன’ ‘ண’ இரண்டுக்கும் இன்றுவரை எனக்கு வித்தியாசமே தெரியாமல் போயிருக்கும். அதற்காக காமலோகத்தையும் தாண்டி இவருக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.

பொறுமையின் சிகரம் ’பச்சி’ மேலும் மேலும் படைப்புகளைத் தந்து, எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து காமலோகத்தை மென்மேலும் சிறப்பிக்க அவருக்கு நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியான வாழ்வையும் தந்தருள வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

குறிப்பு: இந்தத் திரியை நான் படைத்துக் கொண்டிருந்த சமயம் என் கவிதையில் இருக்கும் சில பிழைகளைச் சுட்டிக்காட்டி தனிமடல் போட்டிருந்தார். அதற்கும் இங்கே நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

BILLA 25-09-10 09:18 AM

அன்புள்ள பசீர்!

உங்களது காமலோக பணியானது மிகவும் மகத்தானது.... இந்த 3000 பதிப்புகளும் நிச்சயம் மற்றவர்களை நல்வழிபடுத்தியும் நண்பர்களை உற்சாக படுத்தியும் இருக்கும்.

மிகவும் இனியவரான பச்சியுடன் நான் நேரில் பேசி (சாட்) பழகியுள்ளேன் என்பதை எண்ணும்போதே மிகவும் பெருமையாக உள்ளது.... இனிய குரலுக்கு சொந்தக்காரர், எப்பவும் நண்பர்களின் நலனில் அக்கரை உள்ளவர்.

3000 பதிப்புகள் தொடர்ந்து அடுத்தடுத்து சாதனைகள் படைக்க என் வாழ்த்துகள்

அன்புடன்
பில்லா

jenny07 25-09-10 11:05 AM

அன்புள்ள பச்சி அவர்களே உங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள். 3000 பதிப்புக்கள் என்பது சாதனைதான். எங்களைப்போன்ற சிறியவர்களுக்கு ஏக்கந்தான். எப்போது உங்கள் இடத்தைப் பிடிப்பது?

maria 25-09-10 11:34 AM

எனது நண்பர் ''பண்பாளர்'' பச்சியின் 3000வது படைப்புக்கு வாழ்த்துக்கள்
அவரை எனது நண்பர் என்று சொல்லி கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன்.
பண்பாளர் என்ற அடைமொழிக்கு மிகவும் தகுந்தவர்.
அவர் எனக்கு செய்த உதவிகளுக்கு இந்த நேரத்திலும் நன்றி சொல்ல ஆசை படுகிறேன்
இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.
திரி தொடங்கிய நண்பர் ரசிக்கும் வாழ்த்துக்கள்
5 நட்சத்திரங்கள்

Amirtha 25-09-10 11:46 AM

உண்மைதான், அவர் பண்பாளர் தான், நிறையவே ஊக்கப்படுத்தும்விதமாகவே பின்னூட்டமிடுகிறார். பாராட்டுகிறேன் நானும்.

mouse1233 25-09-10 02:29 PM

பண்பாளர் பச்சி :) க்கு 3000 க்கு வாழ்த்துக்கள் .. ( 3000 தானான்னு கேட்பவர்களுக்கு , "அவரின் தனிமடலை கணக்கிட்டால் எப்போதோ 5000 தாண்டி இருக்கும் )
திரி போட்ட ரசிக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்

sunrise 25-09-10 02:53 PM

3000த்தை எட்டிய பண்பாளரை வாழ்த்துகிறேன். தனிமடலிலும், பின்னூட்டமிட்டும் அனைத்து காமலோக நண்பர்களையும் உற்சாகபடுத்தி வரும் பச்சி காமலோகத்தில் இணைந்த ஆண்டில் தான் நானும் இணைந்தேன். ஆனால், காமலோகத்தில் அவருடைய அயராத உழைப்பைக்கண்டு நானும் உள்ளுக்குள் வியந்தும் இருக்கிறேன். பல ஆயிரம் பதிப்புகள் பதிக்கவும் பச்சியை வாழ்த்துவதோடு, பச்சிக்காக திரியை ஆரம்பித்த ரஸியையும் பாராட்டுகிறேன்.

rajesh2008 25-09-10 03:21 PM

அன்பான கண்காணிப்பாளர் பச்சிக்கு நானும் என் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்

Ondipuli 25-09-10 05:02 PM

வாழ்த்துக்கள்!!! பச்சி அவர்களே !!! நீங்கள் மேலும் பலசிகரங்களை அடைய வாழ்த்துக்கள் !!!

RasaRasan 25-09-10 06:26 PM

பஷீர் தளம் வந்த நாள் முதல் தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்கிறது. தளம் வந்த சில நாட்களிலே நான் கோடு போட்டு காட்டினால் அவர் ரோடு போட்டு முடித்திருப்பார். அவர் தளம் வரும் நாளெல்லாம் சுறு சுறுப்பாக தேனியை போல் பல படைப்புகளையும், நிர்வாகம் தந்த வேலைகளையும் செவ்வனே செய்து, அதற்கும் மேலாக உதவி என வரும் நண்பர்களுக்கு தனி மடல் மூலம் அளவிலா உதவி செய்தவர். மேலும் எப்போதும் நலம் விசாரிக்கும் நல்ல அன்புள்ளவர். பண்பாளர் நண்பாளர் பச்சியின் பணி தொடர்ந்து லோகத்திற்கும் அதன் மூலம் எங்களுக்கும் கிடைக்க அன்புடன் வாழ்த்துகிரேன். நண்பர் ரசி கேம்ரனுக்கும் நன்றி.


All times are GMT +5.5. The time now is 12:44 AM.

Powered by Kamalogam members