காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   காமலோகத்தை நன்றாக பயன்படுத்துவது எப்படி? (http://www.kamalogam.com/new/showthread.php?t=43219)

mayakrishnan 15-04-08 07:53 PM

காமலோகத்தை நன்றாக பயன்படுத்துவது எப்படி?
 
காமலோகத்திற்கு வருவதற்கு எல்லாருக்கும் ஒரு பொதுவான காரணம் உண்டு. என்றாலும், எல்லாரும் ஒரே விதமாய் இந்த தளத்தை பயன்படுத்துவதில்லை. சிலர் காமக்கதைகளை படிக்க வருகிறார்கள். சிலர் இங்கு ஜோக், அறிவுரை திரிகளை சுற்ற வருகிறார்கள். சிலர் சினிமா, சின்ன திரை பகுதியை சுற்றிவிட்டு போய்விடுகிறார்கள். எனக்கு தெரிந்து ஒரு நண்பர் லாகின் ஆனவுடன் நேராக தீவிர தகாத உறவு பகுதிக்கு போய்விடுவார். மற்ற பகுதி பக்கம் அவர் பெரும்பாலும் வருவதே இல்லை. ஒவ்வொருவர் ஒவ்வொரு ரகம்.

காமலோகத்தில் தினமும் ஐந்து மணி நேரம் சுற்றி கொண்டிருக்கும் நபர்களும் எனக்கு தெரியும். பெரும்பாலனோர் ஒரு வித பழக்கமாய் அடிக்கடி காமலோகம் வருகிறார்கள். இங்கு வரவில்லையெனில் எனக்கு எதோ குறைகிற மாதிரி இருக்கிறது என்கிறார்கள். காமலோகத்தில் அதிக நேரம் செலவழிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் செலவழிக்கும் நேரத்தில் எவ்வளவு நேரம் உருப்படியாய் செலவழிக்கிறோம் என்பது தான் கேள்வி.

காமலோகத்தில் மட்டுமல்ல, இன்று இணையம் முழுமைக்கும் ஒரு பிரச்சனையுண்டு. அதாவது இணையத்தை ஒரு காரண காரியத்திற்காக யாரும் பயன்படுத்துவதில்லை. ஒரு நோக்கத்திற்காக உள்ளே நுழைகிறார்கள். பிறகு மனம் போன போக்கில் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு மாறி கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு பிரச்சனை. நம் வாழ்வை நாம் இப்படி வீண் செய்ய முடியாது. சில நேரம் காரண காரியம் இல்லாமல் சுற்றி கொண்டிருப்பது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். என்றாலும் மனம் என்பதை கட்டுபடுத்தவில்லையெனில் அது ஒரு மதி கெட்ட குதிரையாக நம்மை எங்காவது தள்ளிவிட்டு போய்விடும்.

காமலோக்தை நன்றாக பயன்படுத்துவது எப்படி? காமலோகத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது எப்படி?

காமலோகத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பல திரிகள் உண்டு. அதில்லாமல் ஒவ்வொரு வாசலாய் முன்னேறுவது என்பது கூட அந்த பயிற்சிக்காக தான். இங்கே நான் சொல்ல வருவது அவற்றில் கற்று கொள்ளாமல் தவறவிட்ட விஷயங்களை பற்றி. சிலர் இதனை முன்பே அறிந்திருக்கலாம். அல்லது நான் சொன்ன யோசனைகளை காட்டிலும் மேம்பட்ட மாற்று யோசனைகள் வைத்திருக்கலாம்.

காமலோகத்தில் நாம் செலவழிக்கும் நேரத்தை குறைப்பது எப்படி?

காமலோகத்தின் தொடக்கமாக நாம் காமலோகத்தின் contol panelயை வைத்திருப்பது நலம். அதாவது நாம் லாகின் ஆகும் போது முதற்பக்கமாய் control panelயை வைத்திருந்தால், அந்த பக்கத்தில் நமக்கு வந்திருக்கும் தனிமடல்களின் லிஸ்ட் இருக்கும். அடுத்து நாம் இல்லாத போது பின்னூட்டங்கள் எழுதபட்ட நமது subscribed திரிகளின் லிஸ்டும் இருக்கும். இவற்றை படிப்பதற்கு முன்பு மேல்பட்டையில் உள்ள quick links உள்ள who's online கிளிக் செய்தால் தற்போது ஆன் லைனில் இருக்கும் நம் நண்பர்களை பார்த்து கொள்ள முடியும். Subscribed திரிகளை வாசித்த பிறகு மேல்பட்டையில் உள்ள new posts கிளிக் செய்தால் நீங்கள் இல்லாத போது பின்னூட்டங்கள் எழுதபட்ட/தொடங்கபட்ட அனைத்து திரிகளும் பார்வைக்கு வரும். அவற்றில் உங்களுக்கு தேவையானதை படித்து விட்டு/பின்னூட்டமிட்டு, ஆன் லைனில் இருக்கும் நண்பர்களிடம் உரையாடி விட்டு நிமிர்ந்தால் அதிகபட்சம் 15 நிமிடம் கூட செலவாகி இருக்காது. அதாவது குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது வரும் உறுப்பினர்களுக்கு சொல்கிறேன்.

Subscription பயன்படுத்துவது எப்படி?

நாம் பார்க்கும் திரிகளை நாம் விரும்பினால், அந்த திரியின் மேலே thread tools பகுதியில் சொடுக்கி subscribe செய்து கொள்ளலாம். Control panel பகுதியில் இந்த subscription திரிகள் பின்னூட்ட நிலவரத்தை கொண்டு அடுக்கபட்டு இருக்கும்.

நாம் தொடங்கிய திரிகளில் எந்தந்த திரிகளில் பின்னூட்டம் எழுதபட்டிருக்கிறது என அறிய நாம் my profile பக்கத்திற்கு போய் thread started by the user சொடுக்கினால் பின்னூட்ட நிலவரத்திற்கு ஏற்ப திரிகள் அடுக்கி காட்டப்பட்டிருக்கும். நாம் தொடங்கிய திரிகளுக்கு இது சரியான யோசனை என்றாலும், நாம் பின்னூட்டமிடும் மற்றவர்களின் திரிகளில் மேலும் பின்னூட்டம் எழுதபட்டிருக்கிறதா என அறிய subscribed threads தான் பயன்படும்.

Subscribed threads பகுதியில் folders மூலம் இன்னும் அதிக பயன்பாட்டை கொண்டு வரலாம். உதாரணத்திற்கு நான் subscripions பகுதியை பல folderகளாக பிரித்திருக்கிறேன்.
  • Unedited subscription
  • நான் எழுதிய கதைகள்
  • நான் எழுதிய கதை அல்லாத திரிகள்
  • நான் எழுதிய சவால் கதை திரிகள்
  • சமீபத்தில் நான் பின்னூட்டமிட்ட திரிகள்
  • காமலோகத்தில் மிக முக்கியமான கதை அல்லாத திரிகள்
  • காமலோகத்தின் மிக சிறந்த கதைகள்
  • நான் ரசித்த கதைகள்
Subscription folderகளில் defaultயாக இருக்கும் folderயை unedited subscription என மாற்றி கொள்ளுங்கள். இது அவசரத்தில் இருக்கும் போது உதவும். அதாவது ஒரு திரிக்கு பின்னூட்டம் கொடுக்கும் போது (quick reply மூலமாக அல்ல), அந்த திரி unedited subscription மூலம் பதிவாகி கொள்ளும். நீங்கள் பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதனை தகுந்த folderக்கு மாற்றி கொள்ளலாம்.

இதை தவிர படிக்க வேண்டிய கதைகள், படிக்க வேண்டிய கதையல்லாத திரிகள் என்று இரண்டு subscription folder வைத்திருக்கிறேன். ஒரு சுவாரஸ்யமான திரியை பார்க்கிறோம். அதை பிறகு படிக்கலாம் என ஒதுக்கி வைப்பதற்காகவே. படிக்க வேண்டிய திரிகள் என்கிற folderயை நான்காக பிரித்து வைத்திருந்தேன். பழைய கதைகள், உடனடியாக படிக்க வேண்டியவை, மெதுவாக படிக்கலாம், சமீபத்திய கதைகள் என்கிற நான்கு folderகளையும் சமீபத்தில் 'படிக்க வேண்டிய கதைகள்' என மீண்டும் ஒரே folderயாக மாற்றி விட்டேன். காரணம் படிக்க குறைவான கதைகள் இருந்தால் தான் படிக்க முடியும். இல்லையெனில் 50ற்கு மேற்பட்ட கதைகள் படிக்க வேண்டியவை என லிஸ்ட்டில் மாதக்கணக்கில் தூங்கி கொண்டிருக்கும்.

பின்னூட்டம் கொடுக்கும் போது முடிந்தளவு quick reply தவிர்த்து விடுதல் நலம். ஏனெனில் பொதுவான replyயில் பின்னூட்டம் எழுதும் போதே, அந்த திரிக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுக்கலாம். அதோடு எந்த folderயில் subscribe ஆக வேண்டுமென்பதையும் தேர்வு செய்து விடலாம்.

Folderகளை இதே போல தனி மடல்களிலும் பயன்படுத்த முடியும்.

காமலோகத்தில் நீங்கள் செய்ய போவது என்ன?

தொடக்க காலங்களில் நான் எல்லா பகுதிக்கும் சுற்று பயணம் போவதுண்டு. ஆனால் தற்போது கதைகள், கதைகள் பற்றிய உரையாடல் பகுதிக்குள் என்னை சுருக்கி கொண்டு விட்டேன். காரணம் காமலோகம் மிக பெரிய கடல். தினம் பல திரிகள் தொடங்கபடுகின்றன. பல பின்னூட்டங்கள் எழுதபடுகின்றன. அத்தனையும் பார்த்து கொண்டிருப்பது முடியாத காரியம். அதற்கு பதிலாக எனக்கு ஆர்வமானதை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன். மற்ற பகுதிகளுக்கு போவதில்லை என்பதல்ல. மிக குறைவாக போகிறேன் என்பது தான் உண்மை. உங்கள் ஆர்வத்தை பொறுத்தும் நீங்கள் தினசரி தளத்திற்கு செலவழிக்கும் நேரத்தை பொறுத்தும் உங்கள் காமலோக உலாவின் அளவுகோளை உருவாக்கி கொள்ளுங்கள்.

முகப்பு பக்கம்

Forum home pageயில் top 5 stats தெரிவது போல வைத்திருப்பது நலம். காரணம், நிர்வாக அறிவிப்புகள், கடைசியாக பின்னூட்டம் எழுதபட்ட திரி விவரங்கள், கடந்த 30 நாட்களில் அதிக ஹிட்ஸ் வாங்கிய திரிகளின் விவரம் போன்றவை அதில் காணலாம். அதே போல எல்லா வாசல்களும் expandedயாக முகப்பு பக்கத்தில் தெரிவதும் அவசியம்.

காமலோகத்தில் கதைகளை வாசிப்பது

காமலோகத்தில் ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன. தினமும் புது கதைகள் பதிக்கபட்டபடி இருக்கின்றன. எல்லாவற்றையும் படிப்பது என்பது இயலாத காரியம். சில காலம் காமலோகத்தில் சுற்றி வந்தபிறகு பிரபல எழுத்தாளர்கள் யார் என்பது நமக்கு தெரிந்துவிடும். ஆக கதைகளை வாசிப்பது என்பதை இரண்டாக கொள்ளலாம். ஒன்று கடந்த காலத்தில் பதிக்கபட்ட சிறப்பான கதைகள். இன்னொன்று தற்போது பதிக்கபட்டு கொண்டிருக்கும் கதைகள்.

ஓர் உதாரணம் சொல்கிறேன். ஐடியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நம் தளத்தின் உறுப்பினர். காலை முதல் மாலை வரை அலுவலக நேரத்தில் காமலோகம் அவரது கணிப்பொறியில் திறந்தே இருக்கும். காலையில் வந்தவுடன் அவர் தளத்தில் new postயை பார்த்து படிக்க வேண்டிய கதைகளை subscribe செய்து கொள்வார். பிறகு நாள் முழுக்க நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொன்றாய் வாசிப்பார். பின்னூட்டம் எழுதுவார். தவிர தங்க கதைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொன்றாக வாசித்து கொண்டிருக்கிறார்.

இன்னொரு உதாரணம் நம் வாத்தியார். மாதந்தோறும் சிறந்த கதைக்கான வாக்கெடுப்பு நடக்கும் சமயம் அதே திரியில் மாதத்தில் முடிக்கபட்ட அனைத்து கதைகளுக்கான சுட்டிகள் கொடுக்கபட்டிருக்கும். வாக்கெடுப்பிற்கான கடைசி நாளுக்குள் அனைத்து கதைகளையும் வாசித்து விடுவார்.

படிக்க வேண்டிய மற்ற திரிகள்

காமலோகத்தின் நோக்கம்

காமலோகம் உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

தமிழை வளர்க்கிறதா காமலோகம்?

நண்பர்களே, உங்கள் 'காமலோக உலா' எப்படி?

காமலோகத்தில் அதிகம் பார்க்கும் பகுதி எது?

காமலோகத்தில் களிப்பது எப்படி?

காமலோகம் புரொடக்ஷன்ஸ்

தங்க வாசலை நோக்கி

உங்கள் பெயர்,அவதாரம்,கையெழுத்து பற்றி?

காமலோக நண்பர்களின் பூர்வீக பூமி எது?

காமலோக பயனாளர் பெயரை தேர்ந்தெடுப்பதில் முரண்பாடு ஏன்?

காமலோக நண்பர்களின் வயது என்ன?

காமலோக உறுப்பினர்கள் சந்திக்கலாமே?

காமலோகத்தில் பெண் உறுப்பினர்கள் உள்ளனரா?

காமலோக உறுப்பினர்களுக்குள் திருமணம்?!

காமலோகத்தினை பெண்ணாக உருவகப்படுத்தி

கதைகளுக்கு சுவாரஸ்யமான பின்னூட்டங்கள் எழுதுவது எப்படி?

எழுத்துரு அமைப்பு (Font Setup)

தமிழில் எழுத சுலபமான 7 வழிகள்


குறிப்பு

இந்த திரி எழுத எனக்கு பெரிதும் ஊக்கமளித்த நிர்வாக உறுப்பினர் ஹயாத் அவர்களுக்கு என் நன்றிகள். திரிகளை தொகுத்து சுட்டிகளை கொடுத்தது அவரது கடின உழைப்பே.

இந்த திரியை குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டமாய் எழுதி இதனை மேம்படுத்துங்கள் நண்பர்களே.

rina 15-04-08 08:09 PM

மிகவும் பிரயோசனமாக ஒரு ஆக்கத்தை இங்கே பதித்துள்ளீர்கள். முடிந்த அளவு அதனை உபயோகப் படுத்தப் பார்கின்றேன். நன்றி

superhero 15-04-08 08:19 PM

நன்றி மாயகிருஸ்னினன் ,மிகவும் உபயோகமான தகவல்..........என் போன்று நன்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்...........

சூர புலி 15-04-08 10:37 PM

மா.கி., உங்களின் மற்றுமொரு அருபெரு திரியாக இது திகழும் என்பதில் ஐயமில்லை.
நீங்கள் சொன்ன அனைத்துமே உண்மை. முதலில் நான் சிரிப்பு பகுதியில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன்... நண்பர் பில்லாவால் கதை பகுதியில் நுழைந்து இப்போது வெள்ளிவாசலில்... விரைவில் தங்க வாசலிலும் சுற்றுவேன்..

முடிந்தவரை நல்ல கருத்துக்களையும் நண்பர்களுக்கு கூற மறக்கமாட்டேன்.

பல நல்ல தகவல்கலை சொல்லியுள்ளீர்கள்..மிகவும் நன்றி நண்பரே.

உங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்
சூர புலி

anusuya 15-04-08 11:14 PM

நண்பர்களுக்கு அவர்கள் லோகத்தில் இருக்கும் நேரத்தை எப்படி திறம்பட பயன்படுத்துவது என்று விளக்கி நல்லதொரு திரியை தொடங்கியுள்ளீர்கள்...வாழ்த்துக்களுடன் சில ஐகேஷ்கள்....

rose1604u 15-04-08 11:28 PM

மிக மிக அருமையான உபயோகமான திரி இது... இப்படியான அருமையான ஒரு திரி ஆரம்பித்த நண்பர் மா.கி அவர்களுக்கு கோடி நமஸ்காரம்...

நிச்சயம் இந்தத் திரியினால் பலரும் பலனடைவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை...

vaaliban 16-04-08 12:59 AM

சபாஷ் மாகி !!

மனதில் உதித்த விஷயத்தை ........பத்திரிக்கைகளில் வருமே தலையங்கம் என்று அதைப் போல் நேர்த்தியாக தொகுத்து வழங்கி இருப்பது , புதிய உறுப்பினர்களுக்கு மட்டும் அல்ல , பழைய நண்பர்களூம் சீர்திருத்தி கொள்ள உபயோகமான திரியாக இருக்கும் !

மீண்டும் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் !!!

thangar.c 16-04-08 02:02 AM

நண்பர் மாகியின் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவுகளில் இதுவும் ஒரு அருமையான பதிவு. ஒரு ஆசிரியர் போல தெளிவாக விளக்கியுள்ளார். காமலோகத்தில் உலாவுவதற்கும் ஒரு பயிற்சி வேண்டித்தான் இருக்கிறது. நண்பர் மாகியைப் போல 'டெக்னிக்கலான டிப்ஸ்' தருவது எம்மைப் போன்றவருக்கு மிகவும் பயனளிக்கும். நல்ல தகவலுக்கு நன்றி நண்பா...

subscription மற்றும் Post Reply, Quick Reply பற்றி நிறைய விபரங்கள் எமக்கு புதியவை. இரண்டு மூன்று முறைப் படித்து புரிந்துகொண்டேன். அறியாத காரணத்தால் இதுவரை பெரும்பாலும் 'Quick Reply' யில் தான் பின்னூட்டங்கள் இட்டேன். இப்பொழுது தான் Post Reply யின் பயன்களைக் கற்றுக் கொண்டேன். கற்றுத் தந்தமைக்கு நன்றி நண்பரே....

bernard123x 16-04-08 10:20 AM

பயனுள்ள தகவல்கள்
 
மிகவும் அருமையான, பயனுள்ள தகவல்கள் பலவற்றை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. நன்றி.

Hayath 16-04-08 10:40 AM

மாயகிருஷ்ணன் அவர்களே ,

எங்களுக்காக நேரத்தை ஒதுக்கி தாங்கள் இந்த கட்டுரையை படைத்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி..புதிதாக காமலோகம் வருபவர்களும், பழைய உறுப்பினர்களும் காமலோகத்தை எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்பதை இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்வார்கள் என்பது உறுதி.

உங்கள் இந்த கட்டுரை மூலம் நானும் சில விசயங்களை தெரிந்து கொண்டேன். Subscription- பற்றி நன்றாக விளக்கியுள்ளீர்கள்.தங்களுடைய ஒவ்வொரு திரியும் எங்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்திருப்பது சிறப்பு.

நான் அதிகமாக காமலோகத்தில் பார்ப்பது காம ஆலோசனைகள்/விவாதங்கள் பகுதியே அதன்பின்னர்தான் கதைகளை படிக்கிறேன், நிர்வாக விஷயங்களுக்காக பல திரிகளை பார்வையிடுகிறேன் அதில் எனக்கு பிடித்த சில திரிகளில் மட்டுமே பின்னூட்டமிடுகிறேன்.

உங்கள் சிறப்பான காமலோக பங்களிப்பை பாராட்டி 500 இ-பணங்கள் வழங்குகிறேன்.

வாழ்த்துக்கள் & பாராட்டுகள் & 5*

நெருப்பு 16-04-08 12:07 PM

அதிகநேரம் செலவழிப்பவர்களின் மனநெருடலை இது குறைக்கும் என நான் நினைக்கிறேன்.
இம்மதிரி பொதுக்கட்டுரைகள் அனைவருக்கும் பயனுள்லதாய் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
தங்களின் இம்முயற்ச்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..

anabayan 16-04-08 12:56 PM

பலரும் பயனடைய வேண்டி நல்லதொரு திரியை சிரமமெடுத்து படைத்த மாயாகிருஷ்ணனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

manmatharaja 16-04-08 07:20 PM

பயனுள்ள தகவல்கள், எல்லோருடைய ஆர்ரோக்கியத்திலும் கவனமுடன் செயல் படும் காமலோகத்திர்கு ஈடு இணை ஏதுமில்லை. நன்றி. உபயோகமா இருந்தது.நன்றி.

cowboy 16-04-08 07:25 PM

இதுவரை நான் கதைபகுதிகளில் மட்டுமே உலா வந்துகொண்டிருக்கிறேன் இனி உங்கள் ஆலோசனையை முயற்சி செய்கிறேன். தகவலுக்கு மிக்க நன்றி மாகி அவர்களே

jayanti 16-04-08 07:27 PM

உபயோகமான செய்திகள். மிக்க நன்ரி

கனவுத்தோழன் 16-04-08 07:33 PM

மிகவும் பயனுள்ள ஒரு அருமையான கட்டுரையினை படைத்தளித்த நண்பருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். இனி அநேகமானோர் காமலோகத்தை சரிவரப் பயன் படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.

sankavi 16-04-08 07:53 PM

மா.கி நான் சில முறை யோசித்துள்ளேன், ஏன் நீங்கள் கோல்ட் மெம்பராக இருந்தும் ஏன் தங்க வாசலில் அதிகம் பங்கு கொள்ளாமல் இருக்கிறீர்கள், பின் உங்கள் கதைகள் பற்றிய திரிகளை பார்த்து புரிந்து கொண்டேன் நீங்கள் கதைகள் பகுதியில் உங்கள் முத்திரைகளை சிறப்பாக பதித்து வருகிறீர்கள் என்று,

கடினமான பகுதியில் சிறப்பாக செயல்படுவதற்கு பாராட்டுகள்


.

bemercyb 16-04-08 07:56 PM

பயனுள்ள தகவல் தான். எப்படி உபயோகப் படுத்த வேன்டும் என்பது நிறைய பேருக்கு இன்னும் தகராறு தான்.

XXXGirl 16-04-08 08:10 PM

மிகவும் பயனுள்ள பதிப்பு.....

ramjiram 16-04-08 08:12 PM

உபயோகமான தகவல்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி!

ramani 16-04-08 08:32 PM

நன்றி நன்றி மாயா கிருஷ்ணன்.
இதுவரை காமலோகத்தில் உலா வந்து கொண்டிருந்தாலும் இந்த மாதிரி நினைத்துப்பார்த்ததில்லை.
மிகவும் உபயோகமாக இருக்கிறது.

KunjuMahan 16-04-08 09:26 PM

ஆர்கனைஸ்டாக இருப்பது நல்லது தான்:)

infexthenna 16-04-08 10:03 PM

ஒரு ஆக்கப்பூர்வமான அறிவுரை. காமலோகத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை

மிகவும் விரிவாக கூறியுள்ளீர்கள்.. நன்றிகள் கோடி.....

ஆதி 16-04-08 10:08 PM

மாயாவின் அற்புதமான ஒரு திரி. புதியவர்கள் மட்டுமல்ல, பழையவர்களும் தெரிந்துகொள்ளகூடிய அழகாண ஒரு பதிப்பு. சபாஸ்.

என் வகையில் 501 ஈபணம்.

ராசு 16-04-08 10:46 PM

ஆழ்ந்த சிந்தனைகள்!
ஆக்க பூர்வமான சிந்தனைகள்!
அறிவு மிக்க கருத்துக்கள்!
ஆற்றல் மிக்கவர்கள் செய்யக்கூடிய வேலைகள்!
நமது காமலோகம் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு!

இது போன்று புதிய செயல்களில் இறங்கும் போது, எடுத்தவுடனே வெற்றி வந்து விடும் என்று எதிர் பார்க்கக் கூடாது. பல முறை சோதனைகள் செய்து பார்க்க வேண்டும்.

அவ்வப்போது அவைகளை பரிசீலனை செய்து பழையன கழிதலும், புதியன புகுவதுமாக இருக்க வேண்டும்.

மாயக் கிருஷ்ணனின் முயற்சி சீக்கிரம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்!

a1b2c3d4 16-04-08 10:48 PM

ஆழ்ந்த சிந்தனையோடு எழுதப்பட்ட அற்புதமான திரி, அருமை மாயா ,

100 காசு உங்களுக்கு

murali1971 16-04-08 11:16 PM

தங்களின் இம்முயற்ச்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
-murali1971

sivaas 16-04-08 11:18 PM

அனைத்து திரிகளும் மிக மிக அருமையாக உள்ளது அதை எப்படி சொல்வேன் இங்கு

vinoj 16-04-08 11:28 PM

அருமையான விளக்கங்கள்.உண்மை சொல்லவேணும் என்றாள் நீங்கள் சொல்லியதில் அதிகம் எனக்கு தெரியாதவயே உங்களுக்கு நன்றீ

bright 16-04-08 11:46 PM

இவ்வளவு விஷயங்கள் இருப்பது இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.
மிகவும் நன்றி நண்பரே.

soosi4002 16-04-08 11:51 PM

நல்ல விளக்கங்களுடன் காமலோகத்தை சுருக்கமாகவும் விரைவாகவும் படித்து ரசிக்க நல்ல பயனுள்ள தகவல் கட்டுரையை வரைந்திருக்கிறீர்கள். நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

smartman 17-04-08 12:16 AM

பயனுள்ள பல தகவல்களை அருமையாகவும் எளிமையாகவும் சுலபமாகப் புரியும் வகையிலும் தொகுத்து வழங்கி நம் நண்பர்களுக்கெல்லாம் பேருதவி செய்திருக்கிறீர்கள் மாயக்ருஷ்ணன்.

உங்கள் எழுத்தாற்றல் கதைகளில் மட்டுமல்லாமல் எந்த இடத்திலும் வெளிப்படுகிறது.

நம் தளத்தினை பயன்படுத்தும் அன்பர்களுக்கு உங்கள் கட்டுரை ஒரு சிறந்த வழிகாட்டி.

அற்புதமான தங்கள் பணிக்கு என் அன்பும் நன்றியும்.

Renuka 17-04-08 12:31 AM

மிகவும் பயனுள்ள பதிப்பு. நன்றி.

mantra 17-04-08 12:36 AM

"reply" and "quick-reply" இவற்றின் பயன்பாடு இவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடு போன்ற புதுத் தகவல்கள் அறிந்து கொண்டேன்.
அரிய இந்த முயற்சிக்காக பாராட்டுகளும் நன்றியும்.

starcom 17-04-08 01:18 AM

மிகவும் அருமையான திரி.. இங்கு வருபவர்களின் நலனுக்காக நீங்கள் எழுதி இருப்பது உங்கள் உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகிறது.. வாழ்த்துக்கள்

மச்சக்காளை 17-04-08 01:21 AM

முறையாக காமலோகத்தை படிக்க பயனுற
வாய்ப்பு உருவாகியுள்லது
நன்றி

mukunthan 17-04-08 02:10 AM

காம லோகம் வந்தபின்பு தான் நான் நன்றாக தமிழ் எழுதிகிறேன் என் ஆசான் காமலோகம் தான் வேலைப்பழுகாரணமாக நிறைய எழுதாமல் போகிறது நடுச்சாமம் தான் வேலைமுடிந்தாலும் காமலோகம் இல்லாமல் நித்திரை வருவதில்லை வாழ்த்துக்கள்

kamapriya 17-04-08 02:41 AM

மிகவும் பயன் வாய்ந்த திரி. அது மட்டுமல்லாது உலாவரும் நண்பர்களுக்கு சரியான முறையில் வழிகாட்டியிருக்கிறீர்கள். நன்றி மாயகிருஷ்ணன்.

muthuveeran 17-04-08 02:57 AM

இன்றைய காலகட்டத்தில் சுயநலம் இல்லாமல், உண்மையாகவே தான் பெற்ற இன்பங்களை அடுத்தவர்களும் பெற வேண்டும் என்கிற நல்ல நோக்கில் நேரத்தை செலவழித்து சிந்தனையை சிறப்பாக ஓடவிட்டு அனைவரையும் சிந்திக்கும் விதமாக செய்த மாகியின் பணி மகத்தானது பாரட்டத்தக்கது..

அவருக்கு ஒரு ஓ போடலாம்

keith 17-04-08 04:09 AM

என்னை பொறுத்தவரை இப்போது என்வாழ்வில் நடைபெறமுடியாத காமகதைகளையே படிக்க விரும்புவேன். அதனுடன் காம நகைச்சுவைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. தற்சமயம் நான் காமலோகம் வருவது குறைந்துவிட்டது. ஏனென்றால் நான் சுதந்திரமாக சிந்திக்கவும் செயல் படவும் அதே சமயம் யாரையும் புண்படுத்தாமல் செயல்படவும் விரும்புபவன். ஆனால் நம் தளத்தின் விதிமுறைகள் என் தனிப்பட்ட முறையில் ஏற்றுகொள்ளமுடியாததாக இருக்கிறது, அது எனக்குள்ளேயே இருந்துவிட்டு போகட்டும். ஆனால் சிறிது உற்சாகம் குறைந்துவிட்டது என்றால் மிகையாகாது.
ஆங்கிலம் கலந்த அல்லது தற்சமய இளைய சமுதாய வாழ்க்கையை சித்தரிக்கும் கதைகள் பக்கம் நான் போவது கிடையாது. அது போல் தாய் அல்லது தந்தை இணைத்து எழுதப்பட்ட தகாத உறவு கதைகளையும் அணுகுவது கிடையாது. தமிழை தப்பும் தவறுமாக எழுதிய கதை பக்கம் தலைவைத்து கூட படுப்பது கிடையாது. பல நண்பர்கள் எழுதுபவர்களை உற்சாகபடுத்தவேண்டும், குறைகாணகூடாது என நினைக்கிறார்கள் என்னால் அது முடிவதில்லை. கடைசியாக தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சிலரால் பல படைப்புகள் சாத்தியம் என் போன்றோர்களுக்கு தளத்திற்கு வருவதே பல இடையூறுகளுக்கிடையில், அதனால் பங்களிப்பு குறைவாகத்தான் இருக்கும்
நண்பர் மாயகிருஷ்ணன் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
கீத்

sinna vaaththiyaar 17-04-08 04:55 AM

பூனைக்கு மணி கட்டியது போல் உள்ளது உங்கள் முயற்சி.உங்கள் ஆதங்கம்,எண்ணம் புரிகிறது...கண்டிப்பாக இது ஒரு நல்ல சிந்தனை..வாழ்த்துக்கள். உங்கள் ஆலோசனைப்படி நடக்க முயற்சிக்கிறோம்

dmoorthy 17-04-08 05:21 AM

நண்கு புரியும்படி மிக விபரமாக விளக்கியுள்ளீர்கள்.மிக்க
நண்றி

redfort 17-04-08 06:16 AM

மாயா கிருஷ்ணன் சொன்னது போல ஜோக், அறிவுரை திரிகளை
படிப்பது மட்டுமே என் வழக்கம். வாக்களிப்பதற்காக சில கதைகளையும்
படிப்பது உண்டு. உங்கள் சிந்தனைகள் சீக்கிரம் செயலாக்கபட வாழ்த்துக்கள்.

Thirumurugan 17-04-08 06:33 AM

மிக உபயோமான நல்ல பயனுள்ள ஒரு கருத்து இது. நான் இதனைப் பயன்படுத்த முயற்சி செய்கின்றேன்.

teen_guna 17-04-08 06:53 AM

அனைவரும் படிக்க வேண்டிய திரி. அருமையான குறிப்புகள். உபயேகமான உத்திகள். படைத்த நன்பருக்கு வாழ்த்துகள்.

JACK 17-04-08 07:06 AM

நண்பரே
உங்களுடைய இந்த முயற்ச்சி பல விதத்தில் பல காமலோக நண்பர்களுக்கு உதவியாக இருக்கும். இப்படி ஒரு திரியை ஆரம்பித்தது நமது காமலோகத்தை பல வகையில் மேம்படுத்த உதவும். உங்களது கடின உழைப்ப்பிற்க்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்

mouse1233 17-04-08 07:52 AM

மிகவும் பொறுமையாக அதே சமயம்..ஆழந்த சிந்தனையுடன் மிகவும் சிரமபட்டு மிக ஆழகாக நேர்த்தியாக பின்னப்பட்ட திரி இது,,,
அழகான பணி இது மாயகிருஷ்ணன்..வாழ்த்துக்கள்..

வரிப்புலி 17-04-08 08:42 AM

நன்றி மாயா... அனைவருக்கு பயனுள்ள தகவல்கள் இத்தனை நாள் சுற்றியும் தெரியாத சில தகவல்கள் அனைத்தையும் கோர்த்து ஒரு உருப்படியான திரியை துவக்கியிருக்கிறீர்கள்.

நேற்றே பார்த்தேன் இந்த திரியை, வழக்கம் போல என் பானியில் ஏதாவது பதிந்து கேளிக்கூத்தாக்கிட வேண்டாம் என்று தான் ஏதும் பதிக்காமல் விட்டு விட்டேன்.

பொறுமையா அனைத்தையும் கோர்த்து வழிக்காடித் திரியாக்கியமைக்கு... வாழ்த்துக்கள் சில பணங்கள்...

நன்றி மயா....

ravi2802 17-04-08 09:31 AM

திரு. மாயா அவர்களே தாங்கள் அருமையாக விளக்கி உள்ளீர்கள்.
நன்றி

monivee 17-04-08 09:49 AM

நன்றி மா.கி
 
நன்றி மா.கி , தங்களுடைய இந்த திரி என் போன்ற திக்கு தெரியாமல் திரியும் அன்பர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பது சந்தேகமில்லை... தங்கள் திரியின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பட்டியலில் "காமலோகத்தில் தமிழில் டைப் பண்ணுவது எப்படி" என்கிற ஒரு திரியையும் சேர்த்துகொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்

asho 17-04-08 10:09 AM

மாயக்கிருஷ்னன் நான் அறிந்தவரை வித்தியாசமான நண்பர்.

லோகத்தில் இல்லாத வசதிகளை அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கும் நண்பர்கள் மத்தியில் இருக்கும் வசதிகளையே எப்படி முழுமையாக பயண்படுத்துவது என்று ஆராய்ந்து அதனை தான் செய்து பார்த்து மற்ற நண்பர்களும் இன்புற, நேரம் செலவழித்து பதிந்திருக்கிறார் என்பதை என்னால் போற்றாமல் இருக்க முடியாது.

இன்னும் இது போல நமது லோகத்தில் உள்ள பல வசதிகளை அனுபவித்து நுனுக்கமாக பட்டியலிட்டு அதை மற்றவர் அன்றாட தள வருகையில் போது பயன்படுத்தி பலன் பெறும்வண்ணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நிர்வாக உறுப்பினர் ஒருவர் இம்மாதிரி செய்திருந்தால் கிடைக்கும் ஆதரவை விட சக மூத்தஉறுப்பினர் ஒருவர் செய்ததை நண்பர்கள் வரவேற்று அதன்படி செய்வார்கள் என்று நம்புகிறேன்.

இந்த திரி தற்போது உள்நுழைபவர்கள் எல்லாம் ஒருமுறை அவசியம் பார்க்க வேண்டும் என்று வைக்கப்பட்டுள்ளது, விரைவில் ஸ்டிக்கியாக்கப்படும்.

இந்த திரி உருவாக்க உறுதுனையாக இருந்த நண்பர் ஹயாத் அவர்களுக்கும் நன்றி. இம்மாதிரி தள நண்பர்களுக்கு உதவி/விளக்க குறிப்பு தர நினைப்பவர்கள், தங்களுக்கு ஏதேனும் உதவி, நிர்வாகம் சார்பில் தேவைப்பட்டல் தயங்காமல் நிர்வாக உறுப்பினர்களை தனிமடலில் அனுகி பெற்றுக்கொள்ளுங்கள்.

நிர்வாக குழு சார்பில் நண்பர் மா.கிக்கு மெத்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

gankrish 17-04-08 10:21 AM

மாயகிருஷ்ணா நல்ல அற்புதமான தகவல்கள்.. ஒவ்வொன்றும் நல்ல விளக்கம். நானும் இதை படித்து நிறைய தெரிந்து கொண்டேன்.. ந்ன்ற்¢

annaisivakumar 17-04-08 10:48 AM

நண்பர் மாயக்கிருஷ்ணன் சொல்வது மிகவும் சரியே (முதல் பராவில்)

நானும் இப்போது தான் தெரிந்து கொண்டேன் அதாவது நமது தளத்தில் போல்டர்களை ஓப்பன் செய்து கதைகளை சேமித்து படித்து கொள்ளலாம்மென்று...

தங்களின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி.

வணக்கம்,
சிவா

tsunami 17-04-08 10:54 AM

மிகவும் பயன்னுள்ள செய்திகள். தளத்தில் செறும் புது உறுப்பினர்கள் கட்டயம் படித்து பார்க்க வேண்டியது. பழய உறுப்பினர்கள் சில நேரங்களில் தன்னிலை மறந்து செய்யும் தவறுகளையும் இந்த திரியை பார்த்ததும் திறுத்தி கொள்ள முடியும்

Hayath 17-04-08 11:10 AM

Quote:

Originally Posted by mayakrishnan (Post 684022)

படிக்க வேண்டிய மற்ற திரிகள்

காமலோகத்தின் நோக்கம்

காமலோகம் உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

தமிழை வளர்க்கிறதா காமலோகம்?

நண்பர்களே, உங்கள் 'காமலோக உலா' எப்படி?

காமலோகத்தில் அதிகம் பார்க்கும் பகுதி எது?

தங்க வாசலை நோக்கி

உங்கள் பெயர்,அவதாரம்,கையெழுத்து பற்றி?

உங்கள் பூர்வீக பூமி எது?

பெயர் வைப்பதில் ஏன் இத்தனை தயக்கம்?

காமலோகம்.காம் நண்பர்களின் வயது என்ன?

காமலோக உறுப்பினர்கள் சந்திக்கலாமே?

காமலோகத்தில் பெண் உறுப்பினர்கள் உள்ளனரா?

காமலோக உறுப்பினர்களுக்குள் திருமணம்?!

காமலோகத்தினை பெண்ணாக உருவகப்படுத்தி

கதைகளுக்கு சுவாரஸ்யமான பின்னூட்டங்கள் எழுதுவது எப்படி?

குறிப்பு

இந்த திரி எழுத எனக்கு பெரிதும் ஊக்கமளித்த நிர்வாக உறுப்பினர் ஹயாத் அவர்களுக்கு என் நன்றிகள். திரிகளை தொகுத்து சுட்டிகளை கொடுத்தது அவரது கடின உழைப்பே. .

Quote:

Originally Posted by asho (Post 684664)
இந்த திரி தற்போது உள்நுழைபவர்கள் எல்லாம் ஒருமுறை அவசியம் பார்க்க வேண்டும் என்று வைக்கப்பட்டுள்ளது, விரைவில் ஸ்டிக்கியாக்கப்படும்.

இந்த திரி உருவாக்க உறுதுனையாக இருந்த நண்பர் ஹயாத் அவர்களுக்கும் நன்றி.

மிக்க நன்றி மாயக்கிருஷ்ணன் & அசோ

மேற்கண்ட சில திரி(சுட்டி)களை அனைவரும் படிப்பதற்கு வசதியாக பல்வேறு இடங்களிலிருந்து இந்த பகுதிக்கு மாற்றியிருக்கிறேன், எல்லோரும் படித்து பயன்பெறுங்கள்.

மற்றும் இந்த திரியை ஸ்டிக்கி ஆக்கியுள்ளேன்.

Reader 17-04-08 01:23 PM

மா.கி இதுவரை நான் தங்க வாசல் உறுப்பினராக இருந்தாலும் நான் quick reply option ஐ தான் நான் உபயோகப் படுத்தி வருகின்றேன். உங்களின் இந்தக் கட்டுரையைப் படித்த பின் தான் நான் quick reply and post reply க்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்துள்ளேன். இது போல் பல தகவல்களை தந்து உதவிய தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

raj007 17-04-08 01:37 PM

என்னைபோன்று அடிக்கடி காமலோகம் படிக்கும் வாசகர்களுக்கு நல்ல வழிகாட்டி.... நன்றி மாயகிருட்டிணன்

uga 17-04-08 02:49 PM

மிக நல்ல கருத்துக்களை பதித்துள்ளீர்கள். இதை உறுப்பினர்கள் பின்பற்றினாலே போதும் காமலோகத்தை முழுமையாக அனுபவிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

Rajen682003 17-04-08 02:54 PM

மிகவும் நல்ல பயனுல்ல தகவல்கள்.

Lia 17-04-08 03:34 PM

ஆக்கபூர்வமான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

sorgam 17-04-08 03:57 PM

அன்பு மாயா அவர்களுக்கு
தாங்கள் தங்க மெம்பர் என்பதற்க்கு தங்களது இந்த தங்க கட்டுரையே சாட்சி. காமலோகத்தை அனுபவித்து படித்து மகிழ சிறந்த வழிகாட்டி. வாழ்த்துக்கள்.

நட்புடன்
சொர்கம்(sorgam)

oolvathiyar 17-04-08 03:59 PM

நான் 1 வருடத்துக்கு மேலாக லோகத்தில் உலா வருகிறேன். இந்த சப்ஸ்கிரிப்ஸனை நான் அதிகமாக பயன்படுத்தி வருகிறேன். அங்கு 20 போல்டர்கள் உருவாக்கி பிரித்து வைத்திருகிறேன். அது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் அதை மற்ற மக்கள் அறியும் வன்னம் எழுத வேன்டும் என்று எனக்கு தோன்றாமல் போய்விட்டது.
எப்படி பயன்படுத்த வேன்டும் என்று மிக அழகாக விளக்கி இருக்கும் மாயாகிருஸ்னனுக்கு பாராட்டும் நன்றியும்

SREEJA RANI 17-04-08 04:36 PM

ஆக்கபூர்வமான அறிவுரைக்கு நன்றி.

கமல் 17-04-08 04:51 PM

மிகவும் அருமை மாயகிருஷ்ணன்.... பயனுள்ள திரியை பல முறை துவங்கி கலக்கிவிட்டீர்கள் நன்றி உங்களுக்கு...

hi2chat2003 17-04-08 05:16 PM

காமலோகத்தை இப்படியும் பயன்படுத்தலாம் என்பதை மிக தெளிவாக அனைவருக்கும் புரியும் விதத்தில் கூறியது மிக அருமை, இங்குள்ள ஒவ்வொருவரும் நமது லோகத்தை இவ்வறு ஆக்கபூர்வமாக உபயோகித்துக்கொள்ள இக்கட்டுரை மிகவும் பயனுள்ள ஒன்று,

வாழ்த்துக்கள்,

ஆதி 17-04-08 05:21 PM

Quote:

Originally Posted by monivee (Post 684662)
தங்கள் திரியின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பட்டியலில் "காமலோகத்தில் தமிழில் டைப் பண்ணுவது எப்படி" என்கிற ஒரு திரியையும் சேர்த்துகொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்

தங்கள் வேண்டுகோளின் படி சேர்க்கப்பட்டுவிட்டது நண்பரே.

sherin_lv 17-04-08 06:34 PM

ஊர் கூடி தேர் இழுத்தால் தான் அந்தத் தேருக்கு மதிப்பு ஏற்படும். அதுபோல காமலோகத்தில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று கூடி செயல் பட்டால் தான் தளம் நல்ல முறையில் செயல்பட முடியும். அதற்கான வழி முறைகளை வடிவமைத்து கொடுத்த மாயகிருஷ்ணன் அவர்களையும் நண்பர் திரு ஹயாத் அவர்களையும் பாராட்டத்தான் வேண்டும். நன்றி

letchumiyah 17-04-08 08:48 PM

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். முடிந்தவரை பின்பற்ற விழைகிறேன்.

anna 17-04-08 09:56 PM

மிக மிக உபயோகமான தகவலை தந்தமைக்கு நன்றி.

kathaipadi 17-04-08 10:02 PM

நல்ல முயற்சி. பாராட்டுக்கள்
 
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்

nsamathan 17-04-08 10:48 PM

பல நல்ல தகவல்கலை சொல்லியுள்ளீர்கள்..மிகவும் நன்றி .

murali_113098 18-04-08 04:24 AM

மிகவும் பயனுள்ள கட்டுரை அதுவும் கதை கட்டுரை எழுதுபவர்களையும் நன்றாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மிகவும் நன்றி

serakumar 18-04-08 09:15 AM

ஆக்கப்பூர்வமான தகவல்கள்

kudimagan 18-04-08 10:15 AM

காமலொகத் திரிகளையும், மற்றப் பகுதிகளையும் எப்படி சிற்ப்பாக (Effective manner) உபயோகப் படுத்தலாம் என்று விளக்கியத்திற்கு மாயக் கிருஷ்ணணுக்கு நன்றி. முடிந்தவரை அதைப் பின்பற்ற முயலுகிறேன்,

குடிமகன்

kovaimalli 18-04-08 10:23 AM

காமலோகத்தை எப்படி வேகமாக பயன்படுத்தலாம் என்று எங்களுக்கு சொல்லி தந்த உங்களுக்கு மிக்க நன்றி. இனி நாங்கள் இதை பயன்படுத்துவோம்

ss123456 18-04-08 10:47 AM

நிச்சயம் இந்தத் திரியினால் பலரும் பலனடைவார்கள்...... என்பதில் சந்தேகமே இல்லை

mims 18-04-08 11:16 AM

நன்றி மாயாக்கிருஷ்ணன்
 
காமலோகத்தில் அதிக நேரம் உலாவர சந்தர்ப்பம் கிடைக்காத என்னைப் போன்றவர்களுக்கு இந்தத்திரியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் பயனளிப்பவையாகும்.


நன்றி மாயாக்கிருஷ்ணன்

curumbanp 18-04-08 11:53 AM

காமலோகம் ஒரு மிகச்சிறந்த வெப்சைட்டாக மாறிவருகிறது. வாழ்த்துக்கள்.

amateur_trichy 18-04-08 03:56 PM

உண்மையிலேயே மிகவும் உபயோகமான திரியை ஆரம்பித்து இன்னும் பல உபயோகமானவற்றை கொடுத்துள்ளீர்கள்,

பைவ் ஸ்டார் வாழ்த்துக்கள்,

subbu2004 18-04-08 06:28 PM

மாயா, எனக்கு தெரியாத ஒரு சில நுட்பங்களை உங்கள் பதிவு மூலம் அறிந்து கொண்டேன். பொறுமையாக இருந்து ஆராய்ந்து இப்படி ஒரு விளக்க கட்டுரை எழுதிய உங்களுக்கு எனது பாராட்டுகள், நன்றிகள்.

junaam 18-04-08 08:28 PM

இத்திரியை அனைவரும் கட்டாயம் படித்து நிறைய தெரிந்து கொள்ள வேன்டும்.

rara 18-04-08 09:02 PM

அனைவருக்கும் பயன்பட கூடிய மிகவும் அருமையான தகவல்கள். மிக்க நன்றி

gopi55 19-04-08 01:47 AM

நல்ல பயனுள்ள தகவல்களைத்தந்து ஆலோசனை சொல்லியிருக்கிறீர்கள், நன்றி. உங்கள் வழிமுறைகள பின்பற்ற முயற்சி செய்கிறேன்.

மீண்டும் நன்றி
கோபி

BILLA 19-04-08 03:18 AM

நன்பர் மா.கி.. அவர்களே... இந்த திரியை குறைந்தது ஒரு 5 மணி நேரமாவது படித்திருப்பேன்... அதாவது... உங்கள் திரியின் கீழுள்ள அனைத்து லிங்கையும் படித்தேன்... வரிப்புலி தொடங்கிய பெயர் அவதார்... திரி மிகவும் அருமையாக இருந்தது.... மேலும் நன்பர் அயாத் பற்றி முழுமையா தெரிந்துகொன்டேன்.... அவருடைய பழைய சிக்னேச்சர் மிகவும் பொருள் பொதிந்தது..

இதை உருவாக்க எவ்வளவு உழைத்திருப்பீர்கள் அதை பார்க்கையில் மற்றதெல்லாம் ஒன்றும் இல்லை.......உண்மையிலேயே நன்பர்கள் அதிகம் விரும்பும் ஒரு பயனுள்ள திரி இது.. வாழ்த்துக்கள்...

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக்கேட்டத் தாய்..

அன்புடன்
பில்லா

banu 19-04-08 06:41 AM

தேவையானவொன்றைத் தேடிப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல!


பானு

sudu 19-04-08 07:14 AM

கதை கடலில் நீந்துவது எப்படி சொன்ன உமக்கு நன்றி.

kprakash3516 19-04-08 08:51 AM

மாயகிருஷ்ணன் கூறுவது முற்றிலும் உண்மையே.
சேர்ந்த புதிதில் அனைத்து பகுதிகளிலும் சுற்றி திரிந்து பிறகு நமக்கு விருப்பமான ஒரு பகுதியில் முடங்கி விடுகிறோம்.

jeyara 19-04-08 10:50 AM

சரியான நேரத்தில் சரியாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை.இந்த கருத்து பலருக்கும் புரிந்திருக்கும்.

hotprince 19-04-08 12:45 PM

அருமையான யோசனை...
நலம் தரும் உபதேசங்கள்.
நல்ல பயன் தரும்...

myajay 19-04-08 01:39 PM

நல்ல பிரயோசணமான தகவல்களைத் தந்து எங்களை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறீர்கள்.நன்றி.....

sweet_rajini_2006 19-04-08 01:41 PM

அருமையான் ஒரு அறிவுரைத்திரி. அனைவரும் தெரிந்துகொண்டு காமலோகத்தை பயனுள்ள லோகமாக அனைவரும் சுற்றித்திதிரிய நல்ல அறிவுரை. நன்றி.

shailu.bhat 19-04-08 01:46 PM

நான் பெரும்பாலும் இங்கு வருவது நல்ல காம கதைகளை படித்து ரசிப்பதற்கே..இத் திரி மிகவும் நல்ல முறையில் கையாளப்படுகிறது...மிக நல்ல கதைகளும் இருக்கின்றன..ஆனல் சிறிது அதிகளவு கட்டுபாடுகள் என்று நினைக்கின்றேன்..அதுவும் இத்தளத்தை நல்ல முறையில் கொண்டு நடத்துவதற்கே..ஆகவே என்னிடம் இருந்து எதுவிதமான முறைப்பாடுகளும் இல்லை..

pappudear 20-04-08 12:46 AM

மிகவும் உபயோகமான திரி நன்றிகள் பல

சூர புலி 20-04-08 12:53 AM

அன்பரே மாகி. ஆரம்பித்த வேகம்... அதிலும் இந்த திரி முன்னேரிய வேகம்... அதிலும் நான்கு பக்கங்களை கடந்த வேகம்ம்.. பார்வையாளர்களின் அதிக பார்வை பதிப்பு... இது போதுமய்யா... நான் மிகவும் மகிழ்ந்தேன்...

அதிலும் சப்ஸ்கிரிப்சன் உங்கள் மூலமாகத்தான் அறிந்தேன்... இதோ உங்களுக்காக மீண்டும் 100 காசுகள்..

அன்புடன்
சூர புலி

spy 20-04-08 12:44 PM

இந்த திரி மிகவும் உபயோகமானது.
இந்த திரியை எழுதியதற்காக என்னுடைய பரிசாக 100இ−பணத்தை தங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கின்றேன்.

gayathri2 20-04-08 04:46 PM

அருமையான கருத்துகள்.......மிகவும் பயனுள்ளவை ..!. சிறந்த டெக்னிக்களை இனி எல்லோறும் உபயோகபடுத்தலாம்

pansel 20-04-08 07:08 PM

மிகவும் பயனுள்ள திரியை பதிந்துள்ளீர்கள். பெரும்பாலும் பலர் கதை படிக்கும் ஆர்வத்தில் இங்கு வந்துள்ளனர் அவர்களின் நோக்கம் நிறைவேற்றும் தளமாக நம்தளம் அமைந்துள்ளது

SINGAI-RAM 21-04-08 08:34 AM

மிகவும் உபயோகமான கட்டுரை, மிக்க நன்றி...
பாராட்டுக்கள்

tlkanthan 21-04-08 10:56 AM

மிகவும் பிரயோசனமாக ஒரு ஆக்கத்தை இங்கே பதித்துள்ளீர்கள். முடிந்த அளவு அதனை உபயோகப் படுத்தப் பார்கின்றேன். நன்றி

nita_chat2005 21-04-08 02:59 PM

அனைவரும் பாராட்டும் வகையிலும் ,பாராட்டு பெற வழிசெய்யும் வகையிலும் ஒரு அற்புதமான திரியை படைத்தமைக்கு மிக்க நன்றி


All times are GMT +5.5. The time now is 04:49 PM.

Powered by Kamalogam members