டிரீமர் இறையடி சேர்ந்தார்.
நம்முடைய அண்ணன் ட்ரீமர் மூன்று நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டார். வெண்டிலேட்டர் மூலம் அவர் சுவாசிக்க உடல் நலம் தேறி வந்தார். ஆனால் நேற்று அவரின் உடல் நலம் சற்று சீரியஸாக இருப்பதாக டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
அவர் பூரண நலம் பெற்று திரும்பி வர எல்லாம் வல்ல அந்த ஆண்டவரிடம் பிரார்த்திப்போம். பின்னர் பதிந்தது: (15.04.2016) அருமை அண்ணன் டிரீமர் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இறையடி சேர்ந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் இறுதிக் கிரியைகள் இன்று காலை ஒன்பது மணியளவில் நடக்கவிருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்…. |
அண்ணன் ட்ரீமர் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது கவலையை தருகிறது. அவர் சீக்கிரம் நல்ல குணமடைந்து நம்முடன் உலாவ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அண்ணன் ட்ரீமர் விரைவில் பூரண குணமடையவேண்டும் இறைவா.
|
ட்ரிம்மர் அண்ணா, தளத்து மூத்த உறுப்பினர் விரைவில் குணமடைந்து மறுபடியும் சுறுசுறுப்பாக தளம் வலம் வர இறைவனிடம் பிரார்த்திருக்கிறேன்.
அனைவரின் வேண்டுதல்களும் நிச்சயம் அவருக்கு உடல்நலம் சிறப்படையச்செய்யும். |
டிரீமர் அவர்கள் கூடியவிரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
|
லோக பீஷ்மர் பூரண உடல் நலத்துடன் நலம் பெற்று நம்முடன் எப்போதும் போல் உலாவி வர இறைவன் அருள் புரிய வேண்டுகின்றேன்..
|
பூரண நலமுடம் நலத்துடன் அண்ணா அவர்கள் வர இறைவனிடம் மன்றாடி வேண்டுகிறேன்
|
டிரீமர் அவர்கள் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன்.
|
நம்முடைய லோக வழிகாட்டி அண்ணன் ட்ரீமர் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற அந்த இறைவனை இறைஞ்சுகிறேன்.
|
நான் நண்பர்கள் tdrajesh மற்றும் ராசு மூவரும் சற்று முன் அண்ணன் ட்ரீமர் அவர்களை அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டு வந்தோம். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவர் நிலை தொடர்ந்து கவலைக் கிடமாகவே உள்ளது.
நம் லோக நண்பர்களின் கூட்டுப்ரார்த்தனை தான் அவரை விரைவில் குணமடைய செய்யவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள் புரிவாராக. |
ட்ரீமர் ஐயா விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்..
|
All times are GMT +5.5. The time now is 11:59 PM. |
Powered by Kamalogam members