பாஸ்வேர்ட் மாற்றுவது அவசியம்
நண்பர்களே,
ஏற்கனவே உங்களுக்கு பல முறை அன்புடன் கூறியுள்ளோம், மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். உங்கள் காமலோக கணக்கை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பாஸ்வேர்டை யாரும் கணிக்கமுடியாத "எண்-எழுத்து" (alpha-numberic) கொண்ட கடினச் சொற்களாக வைத்துக் கொள்ளுங்கள். அல்லது, அவற்றை திருட அலையும் கூட்டங்களிடம் நீங்கள் தோற்றுப் போக நேரிடும் என்பதற்காகவே உங்களை மீண்டும் நினைவூட்டுகிறோம். மேலும், உங்கள் கணக்கின் பாஸ்வேர்டை குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை நிச்சயம் மாற்றுங்கள். குறிப்பாக மாதம் ஒரு முறை அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை பாஸ்வேர்டை மாற்றுவது அவசியம். நம் உறுப்பினர்களில் பலர் வருடக் கணக்கில் ஒரே பாஸ்வேர்டையே உபயோகித்து வருகிறார்கள், இதனால் அவர்கள் பொது இடங்களில் காமலோகத்தை காணும் சமயத்தில், அவர்களுடைய கணக்கு "லாக்-அவுட்" ஆகாமல் மாதக் கணக்கில் அங்கேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளது. அடுத்து வருபவர் உங்கள் கணக்கை தனதாக்கவும், நமது படைப்புகளை திருடி மற்ற தளங்களில் பதியவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால், இன்று முதல் மாதம் தோறும் உங்களை பாஸ்வேர்ட் மாற்ற நினைவூட்டும் படி செய்யப் பட்டுள்ளது. நமது தளத்தின் பாதுகாப்புக்காகவும், நமது உறுப்பினர்களின் நன்மைக்காகவும் எடுக்கப் பட்ட இந்த நடவடிக்கை உங்களுக்கு சிறிய அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், அவற்றின் நன்மை கருதி பொருத்துக் கொள்ளுவீர்கள் என நம்புகிறோம். நன்றி..!!! |
தலைவரே, இது ஒரு நல்ல நடவடிக்கையே. வரவேற்கிறேன்
|
மிக பாதுகாப்பான நடவடிக்கை தலைவரே...
நேற்றுதான் என்னுடையை பாஸ்வேர்டை மாற்றினேன்... கதையை திருட காத்திருக்கும் கூட்டத்திற்கு பாஸ்வேர்ட் திருட்டுதான் முதல் வேலை... பாஸ்வேர்டை மாற்றி உங்களின் கணக்கை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.. சரியான நேரத்தில் அறிவுறுத்திய தலைவருக்கு நன்றி... எண் மற்றும் எழுத்துக்கள் இரண்டையும் இணைத்தாற்போல பாஸ்வேர்ட் உபயோகித்தால் யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. உதாரணமாக kSio586, maed7854, 2008hai2009, வெளியில் நெட் கேப் உபயோகிப்பவர்கள் சரியாக லாக் அவுட் செய்துவிட்டோமா என்று உறுதி செய்துவிட்டு போங்கள். தலைவருக்கு நன்றி.... வாழ்க தலைவர்... வளர்க காமலோகம்... |
இது போல ஏதாவது செய்தால் தான் பாஸ்வேர்ட் மாற்றும் எண்ணமே வருகிறது நினைவு படுத்தியமைக்க்கு நிர்வாகிக்கு நன்றி
|
தளத்தின் மேல்,உறுப்பினர்கள் மேல் தலைவர் காட்டும் அக்கறை பாராட்ட படவேண்டியது நேற்று எனக்கும் பாஸ்வர்ட் மாற்ற சொல்லி தகவல் வர.... மாற்றினேன்..
இனி மாதா மாதம் மாற்றி விடுவேன்... |
காலத்துக்கேற்ற மாற்றங்களை கொண்டுவருவதிலும்
நம் தளத்தின் நன்மைக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் உங்களுக்கு நிகர் எவரும் இல்லை.. நம் தளத்தின் நன்மைக்காக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் கண்டிப்பாக ஆதரித்து பின்பற்றுவோம். தக்க சமயத்தில் அறிவுறுத்தியதற்கு நன்றி... |
என்னடா திடீரென்று லாக் இன் செய்ய முடியாமல் பாஸ்வேர்டு மாற்ற அறிவிப்பு வந்திருக்கிறதே என்று நேற்றைக்கு குழம்பியே போய்விட்டேன். இன்று இந்த அறிவிப்பை படித்த பிறகுதான் எவ்வளவு நல்ல விஷயத்தை தலைவர் அவர்கள் நமக்காகவும் லோக நன்மைக்காகவும் செய்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் வரவேற்புக்குரிய நடவடிக்கை தலைவர் அவர்களே...! நன்றி.
|
Quote:
ஆனால் சரியாக் பாஸ்வேர்டை மாற்றிய பிறகு எந்த பிரச்சனையும் இல்லை என்ன ஒன்னு பழைய ஞாபகத்துலேயே பழைய பாஸ்வோர்டை கொடுத்துவிடுகிறேன்:y2: ஹ்ஹ்ம்ம் எல்லாம் போக போக சரியாகிவிடும்:y15: |
தேவையான மாற்றங்களை தேவைப்படும் நேரத்தில் செயல்படுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான் நிர்வாகி அவர்களே. எங்களுடைய நலனை எங்களுக்கு மேலாக கருத்தில் கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றிகள் பல.
|
காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை தரும் நிர்வாகிக்கு நன்றிகள்.
பலமுறை சொல்லியும் பல ஆண்டுகளாக மாற்றி ஒரே பாஸ்வேர்ட்டே உபயோகிப்பவன் நான், ஆனால் உங்களின் அறிவுறுத்தலை இனி நிச்சயம் செயற்படுத்துகிறேன். |
All times are GMT +5.5. The time now is 09:12 PM. |
Powered by Kamalogam members