காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   சென்னை வெள்ளம் - Check in (http://www.kamalogam.com/new/showthread.php?t=67811)

Kanchanadasan 03-12-15 03:12 PM

சென்னை வெள்ளம் - Check in
 
அன்பு நண்பர்களே,

சென்னையில் இருக்கும் நமது நண்பர்கள் நலம் எனத் தெரிந்தால், அவர்கள் உறுப்பினர் பெயரைக் குறிப்பிட்டு நலம் என ஒரு வார்த்தை பதித்தால் அனைவருக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். வேறேதும் இத்திரியில் பதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

உறுப்பினர் - நலம்

tdrajesh 04-12-15 08:57 PM

வீட்டைச் சுற்றி தண்ணீர் நின்ற போதிலும் பிரச்சனை ஏதும் இல்லாமல் நானும் குடும்பத்தினரும் சமாளித்துவிட்டோம். மின்சாரம், நெட் ஆகியவை இன்று மாலைதான் கிடைத்தன. இன்னும் போன் (அவுட் கோயிங்) வசதி கிடைக்கவில்லை.

நல்லவன் இன்று காலை போன் செய்திருந்தார். அவரும் நலம்.

டிரீமர் அண்ணா இப்போதுதான் மடல் அனுப்பியிருந்தார். ஹோமை சுற்றி தண்ணீர் நின்ற போதிலும் பிரச்சனை ஒன்றுமில்லை என்றும் நெட் வசதி இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.

சென்னையில் இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பி வருகிறது.

மற்றவர்கள் தகவல்கள் தெரிந்தால் அப்டேட் செய்கிறேன்.

dreamer 05-12-15 05:07 AM

சுற்றிலும் வெள்ளக்காடு. இப்போதுதான் வடிந்துவருகிறது, இரண்டு நாள் நெட் கனெக்,ஷன் இல்லாமல், (பாதி நேரம் பவர் ஸப்ளை கூட இல்லாமல்) அவதிப்பட்ட பிறகு நேற்று பிற்பகல் தான் நெட் வசதி கிடைத்தது. அருகிலுள்ள பள்ளமான பகுதியிலுள்ள மீனவர் காலனியில் தத்தம் வீடுகள் தண்ணீரில் மிதந்தாலும் எங்கள் ஹோமுக்கு வந்து எங்களுக்கு வேளாவேளைக்கு உணவும் இதர தொண்டுகளும் அசராமல் செய்யும் எம் பணியாளர்களின் கடமையுணர்ச்சியால் எமக்கு ஏதும் குறையில்லை.

Kanchanadasan 05-12-15 06:03 AM

மிக்க மகிழ்ச்சி நண்பர்களே. ரொம்ப மனசுக்கு கஷ்டமாக இருந்தது. சிலரின் தொலை பேசி எண் தெரிந்திருந்தும், சார்ஜ் உள்ளதோ இல்லையோ, அவர்கள் கஷ்டத்தில் நாம் வேறு போன் செய்து பேசி தொல்லைப்படுத்த வேண்டுமா பேச தயக்கம்.

tdrajesh 05-12-15 07:16 AM

சற்று நேரத்திற்கு முன்பு நண்பர் கண்ணன்76 அவர்களுடன் பேச முடிந்தது. அவரும் குடும்பத்தினரும் நலமாக இருப்பதாக சொன்னார்.

சற்று நேரத்திற்கு முன்பு நண்பர் ராசு அவர்கள் போன் செய்தார். அவரும் குடும்பத்தினரும் நலம் என்று சொன்னார்.

vjagan 05-12-15 09:12 AM

எங்கள் வீட்டினுள் மழை நீரும் கழிவு நீரும் கலந்து நுழைந்து விட்டது;
மின்சாரமும் கிடையாது;
மூன்று நான்கு நாட்கள் மிகவும் அவதியுற்றோம். அய்யா அம்மணி !.
இன்றுதான் இயல்பு நிலைக்கு திரும்புகிறோம் -சிறிது சிறிதாக அய்யா அம்மணி !

nana2003 05-12-15 08:37 PM

சென்னை பற்றிய விபரங்கள் நேரடியாக பார்த்து இங்கே தகவல் வழங்கியத்ற்கு நன்றி !

sujatha 05-12-15 08:41 PM

வ்ஜகன் இப்போது நிலைமை சரியாகிவிட்டதா

RasaRasan 05-12-15 08:44 PM

மீண்டும் சென்னை நண்பர்களை லோகத்தில் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. டிவியில் சென்னையை பார்க்கும் போதே மிரட்சியாக இருந்தது. சென்னையில் இருந்து அந்த துயரங்களை நிஜத்தில் அனுபவித்தவர்களுக்குதான் அதன் வலி தெரியும். யாரும்மே உதவிக்கு வராத நிலையில் தங்களுக்கு தாங்களே உதவி என மனிதாப உள்ளத்துடன் களம் இறங்கி பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய நல் உள்ளங்களுக்கு நன்றி.
Quote:

Originally Posted by vjagan (Post 1368079)
எங்கள் வீட்டினுள் மழை நீரும் கழிவு நீரும் கலந்து நுழைந்து விட்டது;

உங்கள் வீட்டினுள் தற்போது வெள்ள நீர் வடிந்து விட்டதா ஜெகன் அவர்களே.
Quote:

Originally Posted by ராசு (Post 1368186)
இப்போது மழை நின்று ஓரளவு சகஜ நிலை திரும்புகிறது ! இருந்தாலும் நாளை ஞாயிற்றுக் கிழமையும் மழை வருமென்று வானிலை அறிவிப்பு கூறுகிறது.

வருண பகவான் மீண்டும் வந்தாலும் அதிகமாக மக்களை சோதிக்க மாட்டான் என நம்புவோம்.

நண்பர் புழு அவர்கள் எப்படி உள்ளார்கள். ராஜேஷ் அவர்களுக்கு இன்று அலைபேசியில் முயற்சி செய்தேன். ஆனால் போண் நெட் வொர்க் கிடைக்கவில்லை.

நல்லவருடன் இன்று சாட்டிங் செய்தேன். அவரும் பாதுகாப்பாக இருந்து கொண்டு பக்கத்தில் உள்ளவர்களுக்கு பல உதவிகலை செய்து வருகின்றார். கேப்டன் அநபாயன் அவர்களிடன் பேசினேன். அவரும் பாண்டியில் நலமாக உள்ளார்.

MACHAN 06-12-15 02:16 AM

நம் சென்னை உறவுகள் நலமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி...! மின்சாரத்தடை, தொலைபேசி நெட்வொர்க் பிரச்சினையினால் பல நண்பர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. தல பில்லா அவர்களிடம் மட்டுமே சேட்டிங் செய்ய இயன்றது. விரைவிலேயே தலை நகரின் நிலைமை சீரடைய எல்லாம் வல்ல இறைவனிடம் மச்சான் பிரார்த்திக்கிறேன்.

நண்பர் ஓஷோ விஜி பெங்களூரில் இருக்கிறாரா இல்லை கடலூரிலா..? அவரின் குடும்பம் எப்படி இருக்கிறது..? இறைவன் அருளால் கடலூர், பாண்டிச்சேரி போன்ற நகரங்களும் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும்.


All times are GMT +5.5. The time now is 08:57 PM.

Powered by Kamalogam members