காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   புதியவர்களை ஊக்குவிக்க என் யோசனை! (http://www.kamalogam.com/new/showthread.php?t=74472)

mouni 27-03-21 09:55 AM

புதியவர்களை ஊக்குவிக்க என் யோசனை!
 
கதையை எப்படி துவங்கிறோம் என்று முக்கியமில்லை...எப்படி முடிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று சுஜாதா சொல்வார். உண்மைதான்.

ஒர் இயக்கம்/ தளம் குறைவு இல்லாமல் செல்ல புதியவர்கள் முக்கியம். அவர்கள் பங்கு பெற, ஊக்கம் முக்கியம். மாத கதைகள் சிறந்த கதை விருது அதற்கு ஒரு நல்ல உதாரணம்.

என் யோசனை இதுதான் - என் போன்ற மக்கள் இனி போட்டியில் இருந்து விலகிக்கொள்ளலாமே ? மூத்த எழுத்தாளர்கள் தாங்கள் விருப்பட்டால் என்று இல்லை - ஒரு பாலிஸியாக மாத விருதிலிருந்து விலக்கப்பட்டால், புதியவர்களுக்கு இது நல்ல உதாரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இப்படி ஒரு ப்ளானை நான் முன்வைக்கிறேன். அப்படி ஒரு ப்ளான் வந்தால், முதல் ஆளாக என்னை உட்படுத்திக்கொள்ள நான் தயார்.

உங்கள் கலந்துரையாடலுக்கு!

நன்றி
மௌனி

asho 27-03-21 10:29 AM

நிர்வாக உறுப்பினராக அல்லாமல் தளத்து உறுப்பினராக எனது கருத்து.

கதை எழுதுபவருக்கு சன்மானம் அது எப்படி மற்றவ்ர்களால் கவனிக்கப்படுகிறது என்பதே, இது ஆளுக்காள் மாறுபடும். நீங்கள் விருப்பப்பட்டால் இனி என் கதைகள் போட்டியில் வென்றாலும் அதற்கடுத்தவர்களுக்கு சான்ஸ் கொடுங்கள் எனக்கு பரிசு/பதக்கம் தர வேண்டாம் என்று அறிவிப்பதே, ஆனால் மற்றவர்களை அப்படி சொல்லுங்கள் என்று கட்டாயப்படுத்த முடியாது.

புதியவர் கதைகளுக்கு வாக்கு போடுவதன் மூலமும் பின்னூட்டமிடுவதன் மூலமும், இபணம் பரிசளிப்பது மூலமுமாக அவர்களை உற்சாகப்படுத்தலாமே அன்றி, ஒட்டப்பந்தயத்தில் முன்னரே ஒடியவர்கள் கலந்து கொள்ளும் போது அவர்கள் கால்களை கட்டுப்போடவோ ஓடவே கூடாது என்று சொல்வது முறையன்று. ஒடி முதலில் வந்தாலும் நான் முன்னரே வந்தததால் அடுத்து வருபவருக்கு பரிசு கொடுங்கள் என்று பெருந்தண்மையாக சொல்லாமே அன்றி ஆரம்பத்திலே அவர்களை விலக்கம் செய்தல் சரியல்ல.

vjagan 27-03-21 10:52 AM

நடை முறையில் நடக்கவொண்ணாத கருத்து!
மற்றவர்கள் ஒப்புக் கொள்ள இயாலாத செயற்பாடு!

ஸ்திரிலோலன் 27-03-21 11:52 AM

நண்பரின் நல்ல எண்ணம் புரிகிறது. புதியவர்களை ஊக்குவிக்க, தான் அவர்களின் வெற்றிக்கு தடையாக இருக்க வேண்டாம் என எண்ணும் பழைய உறுப்பினர்கள், தாராளமாக தங்கள் கதை வாக்கெடுப்பில் சேர்க்க வேண்டாம் என்று சொல்ல கதைத் தலைப்பில் "#" என்று ஆரம்பித்து வைத்து கெஸ்ட் கதையாகக் கொடுக்கலாம் என்ற நடைமுறை உள்ளது. இது முக்கியமாக வாசகர் சவால்களில் (பெரும்பாலும் நடத்துனர்கள் எழுதும் கதைகளில்) பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இது மாதப் போட்டிக்கும் பொருந்தும். உதாரணமாக சிலர் வேறு தளத்தில் எழுத ஆரம்பித்த கதையை, இங்கே லோகத்தில் இணைந்த பின்பு, மீண்டும் ஆரம்பிக்கும் போது அவ்வாறு எழுதுவார்கள்.

ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்வது என்பது அவரவர் விருப்பம் ஆகும். எனவே இதனை சம்பந்தப் பட்ட எழுத்தாளர்களே முடிவு செய்து பின்பற்றினால் தான் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

niceguyinindia 28-03-21 02:18 AM

உங்களின் நல்ல எண்ணம் புரிகிறது நண்பரே

ஆனால் அசோ சொன்ன கருத்தில் நான் உடன் படுகிறேன்

புதியவர்களின் கதைகளுக்கு பின்னூட்டம் கொடுத்து தொடர்ந்து அவர்களது கதைகளுக்கும் வாக்களித்து உற்சாகப்படுத்தினாலே தளம் இன்னும் சிறப்பாக செயல்படும் என நினைக்கிறேன்

ஒரு காலத்தில் நாமே புதியவர்கள் தானே சீனியர்களிடன் முட்டி மோதி தானே வெற்றி பெற்றோம்

mouni 28-03-21 04:02 AM

எல்லா மாற்றமும் தன்னுள் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்!

எனவே, நான் என்னுள் முதலில் இந்த மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்கிறேன். இனி என் கதைகள் பரிசு போட்டிக்கு வராது.

அசோ அண்ணா சொன்னது போல, மற்ற நண்பர்கள் - ஸ்லோ, நைஸ்கை சொன்னது போல, மற்றவர்களை கட்டயப்படுத்துவதில் உள்ள சிரமத்தை உணர முடிகிறது. நான் கட்டாயப்படுத்தவில்லை. அதற்கான நோக்கமும் எனக்கு இல்லை. இது ஒரு சஜஷன்! அவ்வளவே!

மௌனி

jayjay 02-04-21 06:26 PM

மெளனி... உங்களுடைய பெருந்தன்மையான மனப்பூர்வமான முடிவுக்கு பாராட்டுக்கள்...

பிரசாந்த் 10-04-21 03:05 AM

Quote:

Originally Posted by mouni (Post 1534019)
எனவே, நான் என்னுள் முதலில் இந்த மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்கிறேன். இனி என் கதைகள் பரிசு போட்டிக்கு வராது.

தங்களது முடிவு/ஆலோசனை பெருந்தலைவரின் "K Plan" போல உள்ளது, சிறப்பு. ஆனால் விருதுகள் ஊக்கப்படுத்த மட்டுமின்றி, சிறந்த கதை (பலராலும் ரசித்துப் படித்து தேர்ந்தெடுத்த கதை) என்றும் அறிவிக்கத் தானே. அதனால், போட்டியில் அனைத்துக் கதைகளும் இருந்தால் நல்லது தான்.

வேண்டுமென்றால் மூத்த உறுப்பினர்களுக்கென்று என தனிப் போட்டிகள் நடத்தலாம்.

Mauran 30-04-21 10:11 PM

எனது யோசனை ( தவறு இருந்தால் மன்னிக்கவும்) ... Trial அடிப்படையில் ஒரு கிழமையில், ஒரு நாளில், சில மணி துளிகளில், புதியவர்களுக்கு நமது தங்க வாசல் எப்படி இருக்கும் இரண்டு காட்டினால் சிலநேரம் அவர்கள் மென்மேலும் எழுதி அதற்கு முன்னேற யோசிப்பார்கள்

Justforfunokk 30-01-22 10:00 AM

வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 02:53 AM.

Powered by Kamalogam members