காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   அன்பர்கலெ உதவி செய்யுங்கல் (http://www.kamalogam.com/new/showthread.php?t=27066)

ஸ்டீம் 06-03-06 03:59 AM

அன்பர்கலெ உதவி செய்யுங்கல்
 
தமிழில் எழுத 7 சுலபமான வழிகள்

காமலோகத்திற்கு வரும் எல்லோருக்கும் தோன்றும் முதல் கேள்வி. எப்படி தமிழில் எழுவது? எதில் எழுதுவது? அதற்கு எந்தெந்த மென்பொருட்கள் தேவைப்படுகின்றன? அவைகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? இந்த யூனிகோட், பாமினி, முரசு அஞ்சல் இதெல்லாம் என்னவென்று குழம்பி தலை வலிக்கிறதா? கவலையை விடுங்கள். நான் கீழே எழுதியிருக்கும் 7 வழிகளை அப்படியே கடைப்பிடித்துச் செய்யுங்கள். 10 நிமிடத்தில் தமிழில் எழுத ஆரம்பித்து விடுவீர்கள்.

1. கீழ்கண்ட இணையதளத்திலிருந்து eKalappai 2.0b (Anjal) என்ற மென்பொருளை உங்கள் கணினியில் பொருத்துங்கள்.

eKalappai 2.0b (Anjal)

2. அதை பொருத்தியப் பிறகு உங்கள் கணினியில் Start பிறகு Programs பிறகு Tavultesoft Keyman For ThamiZha! பிறகு Keyman-ஐ க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது eKalappai துவங்கி உங்கள் ஸ்கிரீனின் கீழ்வலது மூலையில் இரு சிறு ஐகான் (icon) ஆகிவிடும்.

3. இப்பொழுது கணினியில் Notepad-ஐ துவக்குங்கள்.

4. கர்ஸரை (Cursor) Notepad-இல் வைத்து Alt-2 ஐ அழுத்துங்கள். இப்பொழுது கீழ்வலது மூலையில் இருக்கும் அந்த சிறு ஐகான் "அ" என்ற தமிழ் எழுத்தைக்காட்டும்.

5. பிறகு Notepad-இல் டைப் செய்யுங்கள். என்ன? தமிழில் எழுத துவங்கி விட்டீர்களா? எவ்வளவு சுலபமாக இல்லை?

6. நீங்கள் எவ்வளவு எழுதுகிறீர்களோ அதை அப்படியே காப்பி செய்து காமலோகத்தில் எங்கு பதிக்க நினைக்கிறீர்களோ அங்கிருக்கும் எழுத்துப் பலகையில் பதியுங்கள்.

7. பிறகு நீங்கள் எங்கு எழுதுகிறீர்களோ அதை பொறுத்து "Submit New Thread", அல்லது "Post Quick Reply" என்ற Button-ஐ அழுத்தி உங்கள் பதிப்பை சமர்ப்பியுங்கள்.

பார்த்தீர்களா? ஏழே வழிகளில் உங்களை தமிழில் எழுத வைத்துவிட்டேன். இப்பொழுது எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? செல்லுங்கள். உங்கள் எண்ணங்களை கதைகளாக கட்டுரைகளாக பதியுங்கள்.

மேலும் விவரங்கள் வேண்டுபவர்களுக்கு:

1. eKalappai-யின் Keyman மென்பொருளை ஆரம்பித்து விட்டு Notepad-இல் நீங்கள் Alt-1-ஐ அழுத்தினால் ஆங்கிலத்தில் எழுதலாம். Alt-2-வை அழுத்தினால் யூனிகோட் (Unicode) முறையில் தமிழ் எழுதலாம். இது தான் நமக்கு தேவை. காரணம் காமலோகத்தில் இப்பொழுது எல்லாமே யூனிகோடே. இருப்பினும் இன்னொன்றையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். Alt-3-ஐ அழுத்தினால் தமிழை அஞ்சல் எழுத்துருவில் எழுதலாம். அதற்கு கணினியில் முரசு அஞ்சல் என்ற இன்னொரு எழுத்துருவு மென்பொருளும் வேண்டும். இது கொஞ்சம் குழப்பமானதால் அப்படியே விட்டுவிடுங்கள். Alt-2 மற்றும் Alt-1-ஐ மட்டும் பயன்படுத்துங்கள்.

2. யூனிகோட் முறையிலான தமிழை பயில இந்த இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.

யூனிகோட் பயிற்சிக் கூடம்

தமிழில் மிகச் சுலபமான முறையில் டைப்படித்து பழகச் சிறந்த இடம் இதுவே. இங்கு தமிழ் எழுத்துக்களை டைப் செய்வதற்கு முன்னால் மறக்காமல் நான் மேற்கூறியது போல Keyman மென்பொருளை செயல்படுத்தி பின்பு எழுதும் பலகையில் கர்ஸரை வைத்து Alt-2-வை அழுத்துங்கள். பின்னரே எழுத ஆரம்பியுங்கள்.

3. ஆங்கில உச்சரிப்புக்களுடன் தமிழ் யூனிகோட் வெகுவாகப் பொருந்தினாலும் சில எழுத்துக்களை தேட வேண்டிய நிர்பந்தம் ஆரம்பத்தில் எல்லோருக்கும் ஏற்படும். அதை சுலபமாக்க மறைந்திருக்கும் சில முக்கியமான எழுத்துக்களை இங்கே தருகிறேன். அவற்றை பழகிக்கொள்ளுங்கள்.

ந், ந - w, wa
ஃ - q
ஷ், ஷ - sh, sha மற்றும் ch, cha
ஸ், ஸ - S, Sa
ஞ், ஞ - nj, nja
ல, ள, ழ - la, La, za
ங் - ng
ஹ - ha
க்ஷ - ksha

4. புதிய திரி (New Thread) ஒன்றை ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்றால் தயவு செய்து அதை "Preview Post" என்ற Button-ஐ க்ளிக் செய்து சரி பார்த்தப் பின்னரே பதியுங்கள். இது உங்களின் படைப்புக்களின் முதல் பார்வை (First Impression) தரத்தை உயர்த்தும்.

நான் சொல்ல நினைத்தது அவ்வளவே. வேறு எதாவது சந்தேகங்களிலிருந்தால் இதே பதிப்பில் என்னிடம் கேளுங்கள். என்னால் இயன்ற ஆலோசனைகளை கூறுகிறேன். யூனிகோட் தமிழில் உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய எனது நெஞ்சம் கலந்த வாழ்த்துக்கள். நன்றி.

ஸ்டீம்

dayaan 06-03-06 04:24 PM

நானும் இதே முறையில் தான் செய்து வருகிறேன் ஆனால் நீர் அருமையாக சொல்லி கொடுக்கின்றீர் ஸ்டீம் அற்புதமான பணி தொடருங்கள். ஸ்டீம் பெற்ற பேறு பெருக இவ் வையகம்.

என்னால் மைக்ரோசாஃப்ட் வேர்டில் (2000) டைப் செய்தால் ஒன்னு ரெண்டு எழுத்துக்கு பிறகு 0 0 0 ஆக வ்ருகின்றது உதவ முடியுமா நண்பா!

அன்புடன்,

டயான்

ஸ்டீம் 07-03-06 01:00 PM

மைக்ரோசாஃப்ட் வோர்டில் தமிழ்
 
விஜய நாராயணன் மற்றும் டயான் அவர்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி! ஒரு வழியாக தேடிக்கண்டுபிடித்து இப்பொழுது தான் எனக்கு இப்படி சுலபமான ஒரு வழி கிடைத்தது. சில வருடங்களுக்கு முன்பே இந்த எழுத்துருவு பிரச்சினையால் எனது கதையெழுதும் ஆர்வம் தடைப்பட்டு பிறகு மறந்தே போனது. இது புதியவர்களுக்கு நடக்கக் கூடாது என்ற எண்ணமே இதனை எழுதுவதற்கு காரணம். முரசு அஞ்சலில் கஷ்டப்பட்டு ஏதேதோ எடிட்டர்களில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிகோட் உன்மையிலேயே ஒரு வரப்பிரசாதம் தான்.

டயான்! நானும் மைக்ரோசாஃப்ட் வோர்டில் பார்த்தேன். உங்களை போல எனக்கும் அந்த சுழிகள் வந்தன. இதற்கு Arial Unicode MS font என்ற எழுத்துருவை வோர்டுடன் பொருத்த வேண்டும். அதற்கான செயல்முறை விளக்கத்தை கீழே இருக்கும் லிங்கில் காணலாம்.

http://support.microsoft.com/kb/q287247/

இதில் How do I install the Arial Unicode MS font? என்ற பகுதியில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை உங்களுக்கு பயனாக இருக்கும் என நம்புகிறேன். இதனை நீங்கள் முயற்சி செய்து பலனை தயவுக்கூர்ந்து இங்கு பதித்தால் எல்லோருக்கும் பயன்படும். நன்றி.

ஸ்டீம்

mims 20-03-06 03:17 AM

மிகவும் நன்றி ஸ்டீம், நான் பாமினி எழுத்துருவில் மிகவும் நன்றாக தட்டச்சு செய்வேன். காம லோகத்தில் யுனி கோர்ட் கொன்வேட்டரில் எழுதி எழுதி பாமினியில் எழுதுவது மறந்துவிடுமோ என்று அஞ்சிக் கொண்டு இருந்தேன். ஈ கலப்பை ஸைட்டில் eKalappai 2.0b (Bamini) என்று கண்டவுடன் எனது அச்சம் நீங்கியது. இப்போது eKalappai 2.0b (Bamini) ஐப் பதிவிரக்கம் செய்து. அதில் தான் தட்டச்சு செய்கிறேன். சில நாட்கள் பாமினியில் டைப் பண்ணாமால் அஞ்சலில் டைப் பண்ணினதுக்கே இப்போது இரண்டும் குழம்புகின்றுது. இப்படியே சில நாட்கள் டைப் பண்ணியிருப்பின் பாமினி முற்றாக மறந்திருக்கும்.

ஸ்டீம் 22-04-06 10:08 PM

பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்பதே என் ஆசை. எல்லோரும் என் முயற்சியினால் பயன் பெறுவதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

Quote:

Originally Posted by punithan
தயவு செய்து "னன்றி" யில் உள்ள ந எப்படி அடிப்பது,உதவுங்கள்.

புனிதன்! உங்கள் பதிப்பை இப்பொழுது தான் பார்த்தேன். இத்தனை நாட்கள் பதிலெழுதாமல் தாமதித்தற்கு மன்னிக்கவும். நானும் உங்களை போலவே சில எழுத்துக்களை கோர்ப்பதற்கு வழியறியாமல் பல நாட்கள் குழம்பி இருக்கிறேன். உங்களுக்கு உதவுமாறு சில எழுத்துக்களை இங்கே தருகிறேன்.

ந், ந - w, wa
ஃ - q
ஷ், ஷ - sh, sha மற்றும் ch, cha
ஸ், ஸ - S, Sa
ஞ், ஞ - nj, nja
ல, ள, ழ - la, La, za
ங் - ng
ஹ - ha
க்ஷ - ksha

இவைத் தவிற மற்ற அனைத்து எழுத்துக்களும் சுலபமே. மேலும் பயிற்சி பெற இந்த லிங்கிற்கு ஒரு முறை சென்று வாருங்கள். உங்கள் சந்தேகங்கள் முழுவதுமாக தீர்ந்துவிடும்.

யூனிகோட் பயிற்சிக் கூடம்

வேறு எதுவாயினும் இங்கே கேட்கவும். நானும் யூனிகோடில் அனுபவம் பெற்ற மற்ற நண்பர்களும் உங்களுக்கு விடை அளிக்கத் தயங்க மாட்டோம். நன்றி.

ஸ்டீம்

tamil_kirukkan 25-08-06 06:51 AM

அன்பர்கலெ உதவி செய்யுங்கல்
 
எனக்கு தம்ழில் எழுதுவது மிக கடினமாக உல்லது. தம்ழில் வேகமாக எழுதும் நன்பர்கல் எப்படி வேகமக, எழுதுப்பிலை இல்லாமல் எழுவது என்று சொல்ல வேன்டுகிரென்

ஆதி 25-08-06 11:36 AM

நண்பர் ஸ்டீம் அவர்கள் தந்துள்ள அழகாண பதிப்பு, இங்கே சொடுக்குங்கள்

java 28-08-06 03:13 PM

என்முறையினையைத்தான் ஆதி காட்டிவிட்டாரே. இதற்கு மேல் எனக்கு தெரியாது.
அது சரி உதவி கேட்டு இன்றோடு இரண்டுனாளாகிவிட்டது. பயனடைந்தீர்களா? இல்லையா??
அறியத்தரலாமே. உதவியவர்கள் சந்தோசப்படுவர்.
தமிழ் பண்பாட்டை எங்கேயும் கைவிடாதிருக்கலாமே???

பீனா 28-08-06 05:02 PM

அது மட்டுமல்ல... மூத்த உறுப்பினர்கள் பலருக்கே இன்னும் ல,ள,ழ இவைகளுக்குள் குழப்பம் இருக்கிறது. என்னால் முடிந்த அளவு விளக்கப் பார்க்கிறேன்.

லி கா ல ம்
ka li kaa la m

ளி க் க லா ம்
ka Li k ka laa m

ழிளு ம்
ka zi ka Lu m

ஷ் ட ம்
ka sh ta m

ஸ் ப ம்
pa S pa m

இதைப் போல் ஒவ்வோர் எழுத்தாக தட்டச்சு செய்து பயின்றீர்கள் என்றால், டிரையல் அண்ட் எர்ரர் என்று சொல்லப்படும் முயன்று தவறும் முறையில் பல புதிய குறுக்குவழிகள் புலப்படும்.

Quote:

Originally Posted by tamil_kirukkan
எனக்கு தம்ழில் எழுதுவது மிக கடினமாக உல்லது. தம்ழில் வேகமாக எழுதும் நன்பர்கல் எப்படி வேகமக, எழுதுப்பிலை இல்லாமல் எழுவது என்று சொல்ல வேன்டுகிரென்

நீங்கள் எழுதியிருப்பதை (பிழைகள் களைந்து) அப்படியே ஆங்கிலத்தில் எழுதி காண்பிக்கிறேன். (இவருக்கு கற்றுக் கொடுப்பதற்காகத்தான் அப்படி செய்கிறேன். ஆங்கிலத்தில் எழுதியமைக்காக எனக்கு எச்சரிக்கை புள்ளிகள் தரவேண்டாம், ப்ளீஸ்).

enakku thamizil ezuthuvathu mikak katinamaaka uLLathu. thamizil veekamaaka ezuthum waNparkaL eppati veekamaaka,
ezuththup pizai illaamal ezuthuvathu enRu solla veeNtukiReen.

எனக்கு தமிழில் எழுதுவது மிகக் கடினமாக உள்ளது. தமிழில் வேகமாக எழுதும் நண்பர்கள் எப்படி வேகமாக,
எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவது என்று சொல்ல வேண்டுகிறேன்.

இதைப் பார்த்து, அப்படியே தட்டச்சு செய்தால் தமிழில் வரும்.

kavinila 28-08-06 09:43 PM

Quote:

Originally Posted by bj
நீங்கள் எழுதியிருப்பதை (பிழைகள் களைந்து) அப்படியே ஆங்கிலத்தில் எழுதி காண்பிக்கிறேன். (இவருக்கு கற்றுக் கொடுப்பதற்காகத்தான் அப்படி செய்கிறேன். ஆங்கிலத்தில் எழுதியமைக்காக எனக்கு எச்சரிக்கை புள்ளிகள் தரவேண்டாம், ப்ளீஸ்).
-------
இதைப் பார்த்து, அப்படியே தட்டச்சு செய்தால் தமிழில் வரும்.

எச்சரிக்கை புள்ளியை... எல்லாருக்கு தருவதில்லை.. அவசியம் இருந்தால் ஆங்கிலத்தை உபயோகிக்கலாம்..

நல்ல விளக்கம் நன்றி...

arul5318 28-08-06 09:53 PM

நண்பரே நீங்கள் தொடர்ந்து ரைப்பிங் செய்து கொண்டு வருகையில் அது தானாகவே வேகம் அதிகரித்துவிடும் ஆனால் எழுத்துப்பிழை இல்லாமல் ரைப்பிங் செய்ய கொஞ்சம் தமிழ் அறிவு வேண்டும் அதனை வாசிப்புப்பழக்கங்களினால் உருவாக்கிக் கொள்ளலாம் இப்பவும் அழகாகத்தான் ரைப்பிங் செய்றீங்க ஆனால் எழுத்துப்பிழையை கொஞ்சம் கவனத்திற் கொள்ளுங்க.

பீனா 29-08-06 10:20 AM

Quote:

Originally Posted by arul5318

இது எந்த மொழி? தமிழில்லை; புரிகிறது. ஆங்கிலமும் இல்லையே?!!

__DELETED USER__ 29-08-06 10:41 AM

Quote:

Originally Posted by bj
இது எந்த மொழி? தமிழில்லை; புரிகிறது. ஆங்கிலமும் இல்லையே?!!

வாங்க அம்மணி பீனா...

நண்பர் இலங்கைத்தமிழ் நண்பர் என்று நினைக்கின்றேன். டைப்பிங்-ங்கறத ரைப்பிங்-னு சொல்லிட்டார். அவரப் போட்டு இந்த வாங்கு வாங்கறீங்களே...விட்ருங்க பாவம்.

எப்படி..உங்களுக்கு நக்கல் நாராயணி-ன்னு ஒரு பட்டம் குடுக்கலாமோ???( ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..மற்றொரு திரி ஞாபகம் வருதே..)
ஞாபகம் வந்துடுச்சா..சும்மா..சும்மா..தமாஷூ.

பீனா 29-08-06 11:08 AM

Quote:

Originally Posted by sooriyathamizhan
(ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..மற்றொரு திரி ஞாபகம் வருதே..) ஞாபகம் வந்துடுச்சா..சும்மா..சும்மா..தமாஷூ.

சும்மா கலாய்ச்சுட்டே இருந்தீங்கன்னா ஆதி வந்து குனிய வெச்சு குமுறிடுவாரு, ஆமாம்...!!

.

பீனா 29-08-06 12:10 PM

Quote:

Originally Posted by sooriyathamizhan
எப்படி..உங்களுக்கு நக்கல் நாராயணி-ன்னு ஒரு பட்டம் குடுக்கலாமோ???

வேணும்னா நக்கல் நான்ஸி-ன்னு குடுங்களேன்.... கொஞ்சம் பொருத்தமா இருக்கும். (யப்பா சாமிங்களா, மதம் பத்தி பேசலீங்கோ... எல்லோரையும் மதம் அரசியல் பேசாதீங்கன்னு காது திருகிட்டு, இப்போ நானே பேசறேன்னு நினைச்சுக்காதீங்க).

Hayath 29-08-06 01:36 PM

இது எந்தவிதமான நக்கல்னு யாரும் சொல்லலையே...?!

XXXGirl 29-08-06 05:29 PM

ஓவர்தான்.......
 
Hayath சார் வர வர உங்களுக்கு குசும்பு ரொம்ப ஓவர்தான்....

Quote:

Originally Posted by Hayath
இது எந்தவிதமான நக்கல்னு யாரும் சொல்லலையே...?!

Hayath 29-08-06 06:35 PM

Quote:

Originally Posted by கல்பனாXXXL
Hayath சார் வர வர உங்களுக்கு குசும்பு ரொம்ப ஓவர்தான்....

அப்படியா கல்பனா ? நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியுது ?!

arul5318 29-08-06 07:14 PM

Quote:

Originally Posted by bj
இது எந்த மொழி? தமிழில்லை; புரிகிறது. ஆங்கிலமும் இல்லையே?!!

ஐயோ பாவமே தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் தெரியாமல் இருக்கும் அம்மணியே நான் எழுதியிருப்பது தமிழில்லையா? நீங்கள் எழுதுவது தானா தமிழ் உங்களின் பிரச்சினை என்ன என்னுடன் சண்டை போட வேண்டுமா அல்லது நீங்கள் வேண்டுமென்றே என்னுடைய கருத்துக்களுக்கு இப்படி கூறுகிறீரோ தெரியவில்லை எல்லாவற்றிற்கும் நான் தயாறாக இருக்கிறேன்.

நாங்கள் typing என்பதற்கு ரைப்பிங் என்றுதான் சொல்வோமே தவிர
டைப்பிங் என்று சொல்லமாட்டோம் ஏனென்றால் அது dyping ஆகிவிடும் இது இங்லிஸ் பிழையாகிவிடும் நண்பி கொஞ்சம் அவசரப்படுறமாதிரி தோன்றுகிறது தயவு செய்து ஒரு வைத்தியரை நாடவும்.

பீனா 30-08-06 09:29 AM

Quote:

Originally Posted by arul5318
நாங்கள் typing என்பதற்கு ரைப்பிங் என்றுதான் சொல்வோமே தவிர டைப்பிங் என்று சொல்லமாட்டோம் ஏனென்றால் அது dyping ஆகிவிடும் இது இங்லிஸ் பிழையாகிவிடும் நண்பி கொஞ்சம் அவசரப்படுறமாதிரி தோன்றுகிறது தயவு செய்து ஒரு வைத்தியரை நாடவும்.

அது சரி நண்பரே. எனக்கு இத்தனை நாள் தெரியாமல் இருந்தது. நாங்கள் காற்றாடியை பட்டம் என்று சொல்வோம். நீங்கள் பர்ரம் என்று சொல்வீர்களோ? ஏனென்றால் அது paddam ஆகிவிடுமே?!!

நானும் வைத்தியர்தான்... பல் மருத்துவர். ஓஹோ, நீங்கள் என்னை நல்லதொரு மனநல மருத்துவரை நாடச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆலோசனைக்கு நன்றி; பரிசீலிக்கிறேன்.

Quote:

Originally Posted by arul5318
ஐயோ பாவமே தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் தெரியாமல் இருக்கும் அம்மணியே நான் எழுதியிருப்பது தமிழில்லையா? நீங்கள் எழுதுவது தானா தமிழ் உங்களின் பிரச்சினை என்ன என்னுடன் சண்டை போட வேண்டுமா அல்லது நீங்கள் வேண்டுமென்றே என்னுடைய கருத்துக்களுக்கு இப்படி கூறுகிறீரோ தெரியவில்லை எல்லாவற்றிற்கும் நான் தயாறாக இருக்கிறேன்.

மண்ணிகவும். நானும் உங்கலைப் போள் கூரிய சீக்கிரம் தமில் கர்ருக் கொல்கிரேன்.

__DELETED USER__ 30-08-06 10:30 AM

Quote:

Originally Posted by bj
சும்மா கலாய்ச்சுட்டே இருந்தீங்கன்னா ஆதி வந்து குனிய வெச்சு குமுறிடுவாரு, ஆமாம்...!!

அது சரிங்க. குமுறுனாலும் குமுறுவாரு...

அச்சச்சோ..தப்பாச்சே.. அவுரு அந்த மாதிரி பண்ற ஆளில்லையே..நியாயதர்மம் பாத்து முடிவெடுக்கற ஆளாச்சே.....

ஏங்க.. சும்மா இருக்க மாட்டீங்களா? என்ன ஏனம்மணி வம்ப வெலைக்கு வாங்க வெக்கறீங்க?

__DELETED USER__ 30-08-06 10:39 AM

Quote:

Originally Posted by bj
வேணும்னா நக்கல் நான்ஸி-ன்னு குடுங்களேன்.... கொஞ்சம் பொருத்தமா இருக்கும். (யப்பா சாமிங்களா, மதம் பத்தி பேசலீங்கோ... எல்லோரையும் மதம் அரசியல் பேசாதீங்கன்னு காது திருகிட்டு, இப்போ நானே பேசறேன்னு நினைச்சுக்காதீங்க).

தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்..அப்படியே நக்கல் நான்ஸி-ன்னு வெச்சுருவோம்.

ஆனாப் பாருங்க. நீங்க ரொம்ப புதுமையான பேரா வேணும்-னு ஆசப்படறாப்பல தோணுது.

ஒன்னு சொல்றேன்.. கேட்டுக்குங்க.

என்னதான் இப்ப புதுசு புதுசா "பிராய்லர் கோழி"-ங்க வந்தாலும் பழைய "நாட்டுக் கோழி" ருசி..யப்பப்பா..அத அனுபவிச்சி ருசிச்சவங்க நானு. அதனால தான் சொன்னேன்.( நான் சொன்னது கோழிக்கறிய மட்டுந்தாங்க..நீங்க ஏதாவது ஏடாகூடமா கற்பன பண்ணிக்கிட்டா அதுக்கு நான் ஜவாப்தாரி கெடையாது)

__DELETED USER__ 30-08-06 10:43 AM

Quote:

Originally Posted by bj
நானும் உங்கலைப் போள் கூரிய சீக்கிரம் தமில் கர்ருக் கொல்கிரேன்.

இதுக்குத்தான்..இதுக்குத்தான் சொன்னேன்.

திரி திசை திரும்புதோ?? இருந்தாலும் இந்த மாதிரி சில பதில்கள் இருந்தாத்தான் சுவாரசியம் கூடும்.

என்னங்கோ சொல்றீங்க மத்தவங்க எல்லாம்???? தப்புன்னா நான் இதோட கப்..சிப்..

__DELETED USER__ 30-08-06 10:50 AM

Quote:

Originally Posted by Hayath
இது எந்தவிதமான நக்கல்னு யாரும் சொல்லலையே...?!

ஏங்க..இது உங்களுக்கே நியாயமா இருக்கா???

இப்படித்தான் ஒரு பொண்ணுகிட்ட பேசறதா???( ஆஹா, கண்காணிப்பாளரே..மாட்டினீங்களா..மாட்டினீங்களா..)

ஆதி அண்ணாச்சி.. வாங்க..வாங்க..வந்து ஒரு பதில் சொல்லுங்க.

arul5318 30-08-06 11:12 AM

Quote:

Originally Posted by bj
அது சரி நண்பரே. எனக்கு இத்தனை நாள் தெரியாமல் இருந்தது. நாங்கள் காற்றாடியை பட்டம் என்று சொல்வோம். நீங்கள் பர்ரம் என்று சொல்வீர்களோ? ஏனென்றால் அது paddam ஆகிவிடுமே?!!

நானும் வைத்தியர்தான்... பல் மருத்துவர். ஓஹோ, நீங்கள் என்னை நல்லதொரு மனநல மருத்துவரை நாடச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆலோசனைக்கு நன்றி; பரிசீலிக்கிறேன்.

மண்ணிகவும். நானும் உங்கலைப் போள் கூரிய சீக்கிரம் தமில் கர்ருக் கொல்கிரேன்.

நண்பி கொஞ்சம் சிந்திக்க வேண்டும் எல்லோரும் எழுதுகிறார்கள் என்பதற்காக நாமும் எழுதக்கூடாது

நாங்கள் இங்லிஸில் ty என்று வருவதை ரை என்று எழுதுவோம் dy என்று வந்தால் டை என்று எழுதுவோம் இப்ப உங்கள் பிரச்சினை என்ன

நாங்கள் பட்டத்தை பட்டம் என்றும் - இங்லிஸில் kite என்றும் எழுதுவோம் ஆனால் பட்டத்தை paddam என்று எழுதமாட்டோம் இது இங்லிஸ் அல்ல இது தமிழ் வார்த்தை :mrgreen::mrgreen: :mrgreen:

நீங்கள் பல்லு வைத்தியர் தானே

கொஞ்சம் இவருக்கு பல் வைத்தியம் செய்து விடுங்கள் ஓவறா சிரிக்கிறாரு :mrgreen: :mrgreen: :mrgreen:

__DELETED USER__ 30-08-06 11:20 AM

Quote:

Originally Posted by arul5318
நாங்கள் இங்லிஸில் ty என்று வருவதை ரை என்று எழுதுவோம்

இது எந்த ஊருலங்க. சொன்னீங்கன்னா நானும் தெரிஞ்சுக்குவேன். இலங்கையா????

Hayath 30-08-06 11:28 AM

"ரைப்பிங்" என்று எழுதுவதற்கு பதிலாக (தமிழில்) "தட்டச்சுவது" என்று எழுதினால் நன்றாக இருக்கும்.

பீனா 30-08-06 11:41 AM

அது சரி... கேள்வி கேட்ட தமிழ்கிறுக்கனை காணோமே?!!

பீனா 30-08-06 11:48 AM

Quote:

Originally Posted by sooriyathamizhan
இப்படித்தான் ஒரு பொண்ணுகிட்ட பேசறதா???( ஆஹா, கண்காணிப்பாளரே.. மாட்டினீங்களா..மாட்டினீங்களா..)

பொண்ணு கிட்ட பேசாம, ஒரு ஆம்பளை கிட்ட போய் பேசணுங்கறீங்களா?

Quote:

Originally Posted by sooriyathamizhan
இதுக்குத்தான்..இதுக்குத்தான் சொன்னேன். திரி திசை திரும்புதோ?? இருந்தாலும் இந்த மாதிரி சில பதில்கள் இருந்தாத்தான் சுவாரசியம் கூடும்.

மன்னிக்கவும்... நானே திசைதிரும்பும் திரிகள் பற்றி ஏகப்பட்ட கருத்துக்கள் பல்வேறு திரிகளில் பதிந்து விட்டு, இப்போது திசைதிருப்புகிறேனோ?

Quote:

Originally Posted by sooriyathamizhan
ஆதி அண்ணாச்சி.. வாங்க..வாங்க..வந்து ஒரு பதில் சொல்லுங்க.

ஹிஹி... திசைதிருப்ப அழைப்பிதழா?!!

Quote:

Originally Posted by Hayath
"ரைப்பிங்" என்று எழுதுவதற்கு பதிலாக (தமிழில்) "தட்டச்சுவது" என்று எழுதினால் நன்றாக இருக்கும்.

நன்றி ஹயாத். நானும் இதுகுறித்து தீவிரமாக சிந்திக்கத் தொடங்கி விட்டேன். இனி தனித் தமிழிலேயே பதிவுகள் கொடுத்தாலென்ன என்று தோன்றுகிறது. முயற்சிக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக முழுத் தமிழுக்கு தாவி விடுகிறேன்.

arul5318 30-08-06 12:10 PM

Quote:

Originally Posted by bj
பொண்ணு கிட்ட பேசாம, ஒரு ஆம்பளை கிட்ட போய் பேசணுங்கறீங்களா?

மன்னிக்கவும்... நானே திசைதிரும்பும் திரிகள் பற்றி ஏகப்பட்ட கருத்துக்கள் பல்வேறு திரிகளில் பதிந்து விட்டு, இப்போது திசைதிருப்புகிறேனோ?

ஹிஹி... திசைதிருப்ப அழைப்பிதழா?!!

நன்றி ஹயாத். நானும் இதுகுறித்து தீவிரமாக சிந்திக்கத் தொடங்கி விட்டேன். இனி தனித் தமிழிலேயே பதிவுகள் கொடுத்தாலென்ன என்று தோன்றுகிறது. முயற்சிக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக முழுத் தமிழுக்கு தாவி விடுகிறேன்.

அப்ப நீங்க சொன்னது தவறு என்பதை ஒத்துக் கொண்டீர்கள் என்று விளங்குகிறது நன்றி உங்கள் ஒத்துளைப்புக்கு - ஐயோ இதுக்கெல்லாம் தீவிரமாக சிந்திக்க வேண்டாம் தலை குளம்பிவிடும் பார்த்து - ஏதும் பிழைகள் இருப்பின் திரும்பவும் விவாதிக்கலாம். அடுத்து ஒரு நண்பர் கேட்டார் எந்த ஊர் என்று நான் சிங்கப்பூர்

பீனா 30-08-06 02:28 PM

Quote:

Originally Posted by arul5318
அப்ப நீங்க சொன்னது தவறு என்பதை ஒத்துக் கொண்டீர்கள் என்று விளங்குகிறது நன்றி உங்கள் ஒத்துளைப்புக்கு - ஐயோ இதுக்கெல்லாம் தீவிரமாக சிந்திக்க வேண்டாம் தலை கும்பிவிடும் பார்த்து - ஏதும் பிழைகள் இருப்பின் திரும்பவும் விவாதிக்கலாம். அடுத்து ஒரு நண்பர் கேட்டார் எந்த ஊர் என்று நான் சிங்கப்பூர்

ஒதுங்கிப் போனாலும் விட மாட்டீர்கள் போலிருக்கிறதே. நான் சொன்னது தவறல்ல; செய்தது (திசைதிருப்பியது) தவறென்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.

பீனா 30-08-06 02:41 PM

Quote:

Originally Posted by arul5318
நண்பி கொஞ்சம் சிந்திக்க வேண்டும் எல்லோரும் எழுதுகிறார்கள் என்பதற்காக நாமும் எழுதக்கூடாது
நாங்கள் இங்லிஸில் ty என்று வருவதை ரை என்று எழுதுவோம் dy என்று வந்தால் டை என்று எழுதுவோம்

காமலோக மக்களுக்கு ஆங்கிலப் பயிற்சி:-
ரைப்பிங் (typing)
பார்ரை (party)
யுனிவர்சிரை (university)
எய்ட்ரை (eighty)
ஸ்ரைல் (style)

Hayath 30-08-06 04:39 PM

தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் கீழ்கண்டவாறு ஆங்கிலத்தை தமிழில் எழுதுவோம். அதனால் "ரைப்பிங் அருள்" இனிமேல் உங்க விருப்பம்...இல்லாவிட்டால் சுத்த தமிழில் எழுத பழகுவோம்.

taipping - டைப்பிங் -(typing) - தட்டச்சுவது

paarti - பார்டி - (party) - விருந்து - கட்சி - விழா

yunivarsitti- யுனிவர்சிட்டி -(university) - பல்கலைக்கழகம்

eyitti-எயிட்டி - (eighty) - எண்பது

-stail -ஸ்டைல் - (style) - தினுசு அல்லது வித்தியாசமான நடை

arul5318 30-08-06 09:03 PM

Quote:

Originally Posted by bj
காமலோக மக்களுக்கு ஆங்கிலப் பயிற்சி:-
ரைப்பிங் (typing)
பார்ரை (party)
யுனிவர்சிரை (university)
எய்ட்ரை (eighty)
ஸ்ரைல் (style)

அப்ப உங்களின் தமிழ் படி எப்படி சொல்வது

(typing) - டைப்பிங்
(party) - பார்டை
(university)-யுனிவர்சிடை
(eighty) - எய்ட்டை
(style) - ஸ்டைல்

நல்ல தமிழ் எல்லோரும் கற்றுக்கொள்ளுங்கள். :mrgreen: :mrgreen:

சொல்வது மிகப்பிழை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது அதை மறைக்கப்பார்கிறீர்களே உங்களின் உச்சரிப்பொன்று எழுதுவது ஒன்றா என்ன முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்று உங்கள் தமிழ் நாட்டில் இப்படி சொன்னாலும் நாங்கள் இப்படி சொல்லமாட்டோம் இது எங்களுக்கு உச்சரிப்புக்கு பிழையாக இருக்கிறது.

இனியாவது திருந்துங்க மற்றவர்களை குறை கூற வேண்டாம் bj இதற்கெல்லாம் நீங்க தீவிரமாக சிந்திக்க வேண்டாம் கொஞ்சம் அமைதியா சிந்தியுங்கள் எல்லாம் விளங்கும்.

arul5318 30-08-06 09:21 PM

Quote:

Originally Posted by Hayath
தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் கீழ்கண்டவாறு ஆங்கிலத்தை தமிழில் எழுதுவோம். அதனால் "ரைப்பிங் அருள்" இனிமேல் உங்க விருப்பம்...இல்லாவிட்டால் சுத்த தமிழில் எழுத பழகுவோம்.

taipping - டைப்பிங் -(typing) - தட்டச்சுவது

paarti - பார்டி - (party) - விருந்து - கட்சி - விழா

yunivarsitti- யுனிவர்சிட்டி -(university) - பல்கலைக்கழகம்

eyitti-எயிட்டி - (eighty) - எண்பது

-stail -ஸ்டைல் - (style) - தினுசு அல்லது வித்தியாசமான நடை

ரைப்பிங் -(typing) - தட்டச்சுவது

பார்ட்ரி - (party) - விருந்து - கட்சி - விழா

யுனிவர்சிட்ரி -(university) - பல்கலைக்கழகம்

எயிட்ரி - (eighty) - எண்பது

ஸ்ரைல் - (style) - தினுசு அல்லது வித்தியாசமான நடை

இப்படிதான் நாங்கள் எழுதுவோம். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆனால் நீங்கள் சொல்வதை விட நாங்கள் சொல்வது ஆங்கில வார்த்தைகளை அப்படியே சொல்வது போலிருக்கிறது.

ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது இப்படி யெல்லாம் விவாதித்து பின்னர் என்னை Hayath நீக்கிவிடுவீங்களோ என்று

தயவு செய்து அப்படியேதும் செய்துவிட வேண்டாம் இந்த விவாதம் தேவையில்லை என்றால் இவ்விடத்திலே நிறுத்திவிடுவோம் நன்றி

Hayath 31-08-06 11:49 AM

Quote:

Originally Posted by arul5318
ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது இப்படி யெல்லாம் விவாதித்து பின்னர் என்னை Hayath நீக்கிவிடுவீங்களோ என்று
தயவு செய்து அப்படியேதும் செய்துவிட வேண்டாம் இந்த விவாதம் தேவையில்லை என்றால் இவ்விடத்திலே நிறுத்திவிடுவோம் நன்றி

அருள் உங்கள் கருத்துகளை சொல்வதற்கு முழு உரிமை இருக்கிறது (அது யாரையும் பாதிக்காதவரை.)

தொடருங்கள்....இலங்கை தமிழ் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

ஆதி 31-08-06 12:01 PM

Quote:

Originally Posted by arul5318
உங்கள் தமிழ் நாட்டில் இப்படி சொன்னாலும் நாங்கள் இப்படி சொல்லமாட்டோம்

இங்கேயும் நம்மை பிரிக்கவேண்டுமா?

arul5318 31-08-06 04:00 PM

Quote:

Originally Posted by ஆதி
இங்கேயும் நம்மை பிரிக்கவேண்டுமா?

எனது பிழையை சுற்றிக்காட்டியதற்கு நன்றி நண்பரே நான் இப்படியான வார்த்தை வராமல் இருக்க தவிர்த்துக் கொள்கிறேன் நண்பர் ஹயாத் அவர்கள் இப்படி சுற்றிக்காட்டவும் தான் நானும் பதிலுக்கு எழுதினேன் (தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் கீழ்கண்டவாறு ஆங்கிலத்தை தமிழில் எழுதுவோம்.) மன்னிக்கவும்

பீனா 31-08-06 06:36 PM

Quote:

Originally Posted by ஆதி
இங்கேயும் நம்மை பிரிக்கவேண்டுமா?

ஒண்ணா இருக்க கத்துக்கணும், அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு கத்துக் குடுத்தது யாருங்க

arul5318 31-08-06 09:11 PM

Quote:

Originally Posted by bj
ஒண்ணா இருக்க கத்துக்கணும், அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு கத்துக் குடுத்தது யாருங்க

செந்தமிழ் செல்விக்கும் தமிழ் பிழையா ஐயோ இதையாருகிட்ட சொல்வது - இவற்றுக் கொல்லாம் ஆதி, ஹயாத் என்ன சொல்லப்போகிறீர்கள்.

ஒண்ணா இருக்க கற்றுக்கணும், அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க

__DELETED USER__ 01-09-06 10:47 AM

Quote:

Originally Posted by arul5318
செந்தமிழ் செல்விக்கும் தமிழ் பிழையா ஐயோ இதையாருகிட்ட சொல்வது - இவற்றுக் கொல்லாம் ஆதி, ஹயாத் என்ன சொல்லப்போகிறீர்கள்.

ஒண்ணா இருக்க கற்றுக்கணும், அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க

ஆதி அண்ணாச்சியையும்( மன்னிக்கவும்..அண்ணனையும்..ஏனென்றால், தாங்கள் கேட்பீர்கள்..அது என்ன அண்ணாச்சி..என்று..), நண்பர் ஹயாத்-தையும் ஏன் இழுக்கின்றீர்கள். அதற்கு முன் நான்...எனக்குத்தெரிந்த விவரங்களோடு..உங்கள் முன்..

வாங்க சிங்கைத்தமிழ் நண்பரே அருள்..

அருமைத்தோழி பீனா எழுதியது பேச்சுத்தமிழ். அதைத் தாங்கள் ஏன் குறை கூறுகின்றீர்கள்.( இதே தான் அருமைத் தோழி பீனாவுக்கும்..ஏனென்றால் சூரியத்தமிழன் ஒரு உண்மைவிளம்பி..)

ஒரு சிறு விளக்கம். அதாவது...தமிழில் பல வகைகள் உண்டு..

முதலில் உங்க ஊர்த்தமிழைச் சொல்லுகிறேன் (இல்லையென்றால் நீங்க கோபம் கொண்டுவிடப் போகின்றீர்கள்). சிங்கைத்தமிழ், மலேசியத்தமிழ், இலங்கைத்தமிழ், மொரீஷியஸ் தமிழ், இந்தியாவில் தமிழ்நாட்டில் பல தமிழ்கள்(சென்னைத்தமிழ்,கோவைத்தமிழ், மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ்...). இப்படிப்பல தமிழ்கள் இருந்தாலும் அவை அனைத்தும் பழங்கால சங்கத்தமிழில் இருந்து காலத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப.. மருவி வந்த தமிழ்களே.

ஆகவே, பேசும்போதும்..எழுதும்போது..அவரவர் அவரவர் தமிழையே பின்பற்றுவார்கள்.

உங்க quote-ஐப் பாருங்கள். என்ன பதித்திருக்கிறீர்கள்?

ஒண்ணா இருக்க கற்றுக்கணும்:அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்

எழுத்துத்தமிழில் பதித்திருந்தால் இதே வார்த்தைகளை " ஒன்றாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்: அந்த உண்மையைச் சொன்னால் ஒத்துக்கொள்ள வேண்டும்" என்றுதானே பதித்திருக்க வேண்டும்.( அதுவும் அந்த "க்", "ச்" எல்லாம் சரியாகப் பார்த்து). தாங்கள் அப்படிப் பதிக்கவில்லையே..என்ன காரணம்? தாங்கள் தமிழ் பழகிய விதம் அவ்வாறு..

அதனால் மேலே கூறப்பட்ட தமிழ்களில் ஒன்றைவிட ஒன்று தாழ்ந்ததோ..அல்லது உயர்ந்ததோ அல்ல.

அப்பப்பா..மூச்சு வாங்குதுங்கோ....மக்களே அமைதி.. அமைதி..

தமிழ்த்தாய் மக்கள் நாமென்போம்..

வணக்கம்..

=========================================================
பதித்த முதல் பதிப்பிலேயே இந்த மாதிரி ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு வித்திட்ட "தமிழ்க்கிறுக்கன்" எங்கீங்க போனார்? ஆளு அட்ரஸையே காணமே...

ஆதி 01-09-06 01:55 PM

Quote:

Originally Posted by sooriyathamizhan
ஆதி அண்ணாச்சியையும்( மன்னிக்கவும்..அண்ணனையும்..ஏனென்றால், தாங்கள் கேட்பீர்கள்..அது என்ன அண்ணாச்சி..என்று..), நண்பர் ஹயாத்-தையும் ஏன் இழுக்கின்றீர்கள். அதற்கு முன் நான்...எனக்குத்தெரிந்த விவரங்களோடு..உங்கள் முன்..

தம்பியுடையோன் படைக்கு அஞ்சான் (bj அடுத்தபதிப்பில் வச்சுகிறேன் உங்கள)

பீனா 02-09-06 10:29 AM

Quote:

Originally Posted by arul5318
செந்தமிழ் செல்விக்கும் தமிழ் பிழையா ஐயோ இதையாருகிட்ட சொல்வது - இவற்றுக் கொல்லாம் ஆதி, ஹயாத் என்ன சொல்லப்போகிறீர்கள்.

ஒண்ணா இருக்க கற்றுக்கணும், அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க

செந்தமிழ் செல்வரே... தாய்த் தமிழின் தவப் புதல்வரே... தமிழாசானே... இப்பேதையின் வணக்கங்கள் உமக்கு உரித்தாகுக. உமது தமிங்கில முகமூடியை சற்று விலக்கி உம் செவிகளை சற்று எம் பக்கம் சாய்ப்பீர்களா? இப்பாடல் யாம் எழுதியதல்ல... பண்டொரு காலத்தில் நீவிர் பெரும் புலவர்கள் என்று போற்றிப் புகழ்ந்த திரைப்படக் கவிஞர்கள் எழுதிய பாடல்களைத்தான் யாம் இங்கு தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்...!!!

பீனா 02-09-06 10:36 AM

தமிங்கில வகுப்பு தொடர்கிறது:-

TYPING ரைப்பிங்
TYPEWRITER ரைப்வ்ரிரெர்
---------

இப்படித்தான் பாருங்கள் நேற்று மாங்காய் வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிருந்தேன். அந்த அங்காடியில் விற்பனைப் பெண் ஒருத்தி இருந்தாள்... அவளிடம் ஆங்கிலத்தில் ஐ வாண்ட் ரைப் மாங்கோ (ripe mango) என்று ஆங்கிலத்தில் கேட்டேன். பாவம் அந்தப் பெண்... (அவள் சிங்கப்பூரை சேர்ந்தவள் என்று நினைக்கிறேன்) நான் கேட்டதை தட்டச்சு செய்யும் மாம்பழம் என்று நினைத்துக் கொண்டு "இல்லை" என்று சொல்லி விட்டாள். பின்னர் மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்து, ப்ளீஸ் கிவ் மீ ஒன் ரிபே மங்கூ என்று கேட்டதும் படக்கென்று புளிப்பு மாங்காய் எடுத்து நீட்டுகிறது அந்தப் பெண்...!!!

sathy555 02-09-06 11:07 AM

பீனா அவர்களே உங்களால் என் வேலைக்கு ஆபத்து வந்துடும்போல இருக்கு..இந்த திரியை படிக்கும் போது திடீர் வெடி சிரிப்பை அடக்க முடியல்லை..என் அலுவலகத்தில் அதிக அளவில் ஐரோப்பியர்கள் இருக்கிறார்கள்.பலமுறை உங்கள் உல்டா பாட்டு மற்றும் இந்த திரிக்கு அலுவலகத்தில் சிரித்துவிட்டதால் எனக்கு நட்டு கழன்று விட்டதோ என்று அவர்கள் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாயிடுச்சு..

பீனா 02-09-06 12:53 PM

Quote:

Originally Posted by arul5318
செந்தமிழ் செல்விக்கும் தமிழ் பிழையா ஐயோ இதையாருகிட்ட சொல்வது - இவற்றுக் கொல்லாம் ஆதி, ஹயாத் என்ன சொல்லப்போகிறீர்கள்.

ஒண்ணா இருக்க கற்றுக்கணும், அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க

ஒன்றாய் வசிக்க கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வுண்மையை இயம்பினால் ஒப்புக் கொள்ள வேண்டும்...
காக்காய் கூட்டத்தினை பாருங்கள், அவற்றுக்கு பயிற்றுவித்துக் கொடுத்தது யாரென கூறுங்கள்.

இப்போது திருப்தியா?

arul5318 02-09-06 01:11 PM

Quote:

Originally Posted by bj
ஒன்றாய் வசிக்க கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வுண்மையை இயம்பினால் ஒப்புக் கொள்ள வேண்டும்...
காக்காய் கூட்டத்தினை பாருங்கள், அவற்றுக்கு பயிற்றுவித்துக் கொடுத்தது யாரென கூறுங்கள்.

இப்போது திருப்தியா?

நல்ல திருப்தி ஆனால் உங்களின் காக்காய் என்பது தான் கொஞ்சம் பிழை திருத்திக்கொள்ளுங்கள்.

arul5318 02-09-06 01:15 PM

Quote:

Originally Posted by bj
தமிங்கில வகுப்பு தொடர்கிறது:-

TYPING ரைப்பிங்
TYPEWRITER ரைப்வ்ரிரெர்
---------

இப்படித்தான் பாருங்கள் நேற்று மாங்காய் வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிருந்தேன். அந்த அங்காடியில் விற்பனைப் பெண் ஒருத்தி இருந்தாள்... அவளிடம் ஆங்கிலத்தில் ஐ வாண்ட் ரைப் மாங்கோ (ripe mango) என்று ஆங்கிலத்தில் கேட்டேன். பாவம் அந்தப் பெண்... (அவள் சிங்கப்பூரை சேர்ந்தவள் என்று நினைக்கிறேன்) நான் கேட்டதை தட்டச்சு செய்யும் மாம்பழம் என்று நினைத்துக் கொண்டு "இல்லை" என்று சொல்லி விட்டாள். பின்னர் மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்து, ப்ளீஸ் கிவ் மீ ஒன் ரிபே மங்கூ என்று கேட்டதும் படக்கென்று புளிப்பு மாங்காய் எடுத்து நீட்டுகிறது அந்தப் பெண்...!!!

அப்ப எப்படி உங்களின் பாசைப்படி சொல்வீர்கள்

TYPING டைப்பிங்
TYPEWRITER டைப்வ்டிடெர் :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: சிரிப்பு அடக்க முடியலப்பா.....
---------

arul5318 02-09-06 01:23 PM

Quote:

Originally Posted by sooriyathamizhan
ஆதி அண்ணாச்சியையும்( மன்னிக்கவும்..அண்ணனையும்..ஏனென்றால், தாங்கள் கேட்பீர்கள்..அது என்ன அண்ணாச்சி..என்று..), நண்பர் ஹயாத்-தையும் ஏன் இழுக்கின்றீர்கள். அதற்கு முன் நான்...எனக்குத்தெரிந்த விவரங்களோடு..உங்கள் முன்.. .

அன்பர் சூரியத்தமிழன் அவர்களே உங்கள் கருத்துக்கு நன்றி ஆனால் பெண்ணுக்கு ஏதும் ஏற்பட்டால் பொறுக்கமாட்டீங்களே ஓடிவந்திடுவீங்களே ஆனால் இந்த விடயத்தில் ஆதியும் ஹயாத்தும் தான் சம்மந்தப்பட்டவர்கள் அதனால் தான் அவர்களை குறிப்பிட்டுக் கூறினேன் இருந்தாலும் உங்களையும் மூணாமவராக சேர்த்துக்கொள்கிறேன் - வெக்கப்படாமல் அடுத்தகருத்தை எழுதுங்க

arul5318 02-09-06 01:38 PM

Quote:

Originally Posted by bj
செந்தமிழ் செல்வரே... தாய்த் தமிழின் தவப் புதல்வரே... தமிழாசானே... இப்பேதையின் வணக்கங்கள் உமக்கு உரித்தாகுக. உமது தமிங்கில முகமூடியை சற்று விலக்கி உம் செவிகளை சற்று எம் பக்கம் சாய்ப்பீர்களா? இப்பாடல் யாம் எழுதியதல்ல... பண்டொரு காலத்தில் நீவிர் பெரும் புலவர்கள் என்று போற்றிப் புகழ்ந்த திரைப்படக் கவிஞர்கள் எழுதிய பாடல்களைத்தான் யாம் இங்கு தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்...!!!

அது முக்கியமல்ல எங்கள் விவாதமே தமிழைப்பற்றித்தானே சரி நண்பியே தமிங்கில முக மூடியை நீக்கிற்றேன் .................. :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:

செந்தமிழ் செல்விக்கும் தமிழ் பிழையா என்றுதானே கேட்டேன் அதற்கு இவ்வளவு கோபமா?

இப்பாடல் யாம் எழுதியதல்ல... பண்டொரு காலத்தில் நீவிர் பெரும் புலவர்கள் என்று போற்றிப் புகழ்ந்த திரைப்படக் கவிஞர்கள் எழுதிய பாடல்களைத்தான் யாம் இங்கு தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்

பண்டைக்கால புலவர்களும் எழுத்துப்பிழைகள் விட்டாங்களோ - அதை தமிழ் படித்த பண்டித மாமேதை செந்தமிழ் செல்வியுமா அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றுவதா?

பீனா 02-09-06 01:53 PM

Quote:

Originally Posted by arul5318
செந்தமிழ் செல்விக்கும் தமிழ் பிழையா என்றுதானே கேட்டேன் அதற்கு இவ்வளவு கோபமா?

தமிழென்னும் அமுதத்தை கரைத்துக் குடித்த பண்டித தமிழ்மேதைகளிடம் கேட்டேன். அவர்கள் சொல்வது: "இப்பேதைப் பெண் காண்பிப்பது கோபம் அல்ல... குறும்பு" என்று சொல்கிறார்களே!!

arul5318 02-09-06 01:55 PM

Quote:

Originally Posted by bj

இப்படித்தான் பாருங்கள் நேற்று மாங்காய் வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிருந்தேன். அந்த அங்காடியில் விற்பனைப் பெண் ஒருத்தி இருந்தாள்... அவளிடம் ஆங்கிலத்தில் ஐ வாண்ட் ரைப் மாங்கோ (ripe mango) என்று ஆங்கிலத்தில் கேட்டேன். பாவம் அந்தப் பெண்... (அவள் சிங்கப்பூரை சேர்ந்தவள் என்று நினைக்கிறேன்) நான் கேட்டதை தட்டச்சு செய்யும் மாம்பழம் என்று நினைத்துக் கொண்டு "இல்லை" என்று சொல்லி விட்டாள். பின்னர் மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்து, ப்ளீஸ் கிவ் மீ ஒன் ரிபே மங்கூ என்று கேட்டதும் படக்கென்று புளிப்பு மாங்காய் எடுத்து நீட்டுகிறது அந்தப் பெண்...!!!

நீங்க இப்படி கேட்கவில்லையா? ஐ வாண்ட் டைப் மாங்கோ (ripe mango) ஏன் இப்படி கேட்டீங்க ப்ளீஸ் கிவ் மீ ஒன் ரிபே மங்கூ - நான் நினைக்கிறேன் அந்த மாங்காய் வியாபாரி தமிழ் நாடு இல்லைபோலும்

ஐயோ இந்தப்பிரச்சினைக்காக மாங்காய் வாங்கப்போயிருக்கீங்களே மிச்சம் சிந்திக்க வேண்டாம் இந்தப்பிரச்சினையை நாட்டுப்பிரச்சினையாக்க வேண்டாம் இங்கேயே வைத்துக் கொள்வோம் சரியா - சினம் வேண்டாம் - சமாதானம், சமாதானம்.

பீனா 02-09-06 01:56 PM

Quote:

Originally Posted by ஆதி
தம்பியுடையோன் படைக்கு அஞ்சான் (bj அடுத்தபதிப்பில் வச்சுகிறேன் உங்கள)

சரிங்கய்யா... ஆனால், இதில் வச்சுகிறேன் என்பதை நீல எழுத்தில் எழுத மறந்து விட்டீர்களே? ஃபீடிங் பாட்டில் பாப்பாக்களையும் மதிக்கும் உங்கள் பெருந்தன்மையை மெச்சினோம்.... இதோ, பிடியும் ஓர் முத்துமாலை...!!!

__DELETED USER__ 02-09-06 01:58 PM

Quote:

Originally Posted by arul5318
பண்டைக்கால புலவர்களும் எழுத்துப்பிழைகள் விட்டாங்களோ

ஏனுங்கோ..அருளு..

உட்டா சங்கத்தமிழே தப்புன்னு சொல்லுவீங்க மாரை இருக்குதே..( இது கொங்குத்தமிழுங்கோ..)

__DELETED USER__ 02-09-06 02:01 PM

Quote:

Originally Posted by bj
ஃபீடிங் பாட்டில் பாப்பாக்களையும் மதிக்கும்...

வாங்கம்மணி பீனா.

இங்க யாரு ஃபீடிங் பாட்டில் பாப்பா-ன்னு தெரிஞ்சுக்கலாமா????

அது நான் தான்-னா...

நான் சின்னத்தம்பி இல்லீங்கோ.."ப்ப்ப்ப்ப்பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய தம்பி"

arul5318 02-09-06 02:07 PM

Quote:

Originally Posted by sooriyathamizhan
ஏனுங்கோ..அருளு..

உட்டா சங்கத்தமிழே தப்புன்னு சொல்லுவீங்க மாரை இருக்குதே..( இது கொங்குத்தமிழுங்கோ..)

உங்கள் கொங்குத்தமிழை விட்டுவிட்டு விளங்கக்கூறுங்களேன்.

பீனா 02-09-06 02:38 PM

Quote:

Originally Posted by sooriyathamizhan
வாங்கம்மணி பீனா.
இங்க யாரு ஃபீடிங் பாட்டில் பாப்பா-ன்னு தெரிஞ்சுக்கலாமா????

ஏனுங்கோ... நீங்க இன்னும் இந்த திரியை படிச்சு போடலை போலிருக்குதுங்கோ. அங்கனக்குள்ள ஃபீடிங் பாட்டில் பத்தி வெலாவரியா விவாதிச்சு போடுறாங்கோ சாமியோவ்...!!

__DELETED USER__ 02-09-06 02:46 PM

Quote:

Originally Posted by bj
அங்கனக்குள்ள..

அங்கனக்குள்ளே..கொங்குத்தமிழ் இல்லீங்கம்மணி. அது "அவடத்தாண்ட"ங்கோ.

பீனா 02-09-06 02:57 PM

Quote:

Originally Posted by sooriyathamizhan
அங்கனக்குள்ளே..கொங்குத்தமிழ் இல்லீங்கம்மணி.

Quote:

Originally Posted by bj
விவாதிச்சு போடுறாங்கோ சாமியோவ்...!!

அதே மாதிரி சாமியோவ் கூட கொங்கில்லைங்கோ... குறவர்பாஷை...!!!

__DELETED USER__ 02-09-06 03:04 PM

Quote:

Originally Posted by bj
அதே மாதிரி சாமியோவ் கூட கொங்கில்லைங்கோ... குறவர்பாஷை...!!!

அடக்கொடுமையே..

சாமியோவ்...எல்லா ஊருலயும் பேசற தமிழுங்கோ.

சந்தேகமா இருந்தா நம்மாளு சிங்கைத்தமிழன் "அருள்" கிட்ட கேட்டுப்பாருங்கோ.

__DELETED USER__ 02-09-06 03:09 PM

Quote:

Originally Posted by arul5318
உங்கள் கொங்குத்தமிழை விட்டுவிட்டு விளங்கக்கூறுங்களேன்.

ஐயா அருள் அவர்களே..

சங்கத் தமிழிலும் குற்றம் காண்பீர்கள் போல இருக்கின்றதே...

பீனா 02-09-06 03:13 PM

Quote:

Originally Posted by sooriyathamizhan
சந்தேகமா இருந்தா நம்மாளு சிங்கைத்தமிழன் "அருள்" கிட்ட கேட்டுப்பாருங்கோ.

நான் கூட ரைப்பிங் அருள் கிட்ட கேக்கலாம்னுதான் யோசிக்கிறேன்... ஆனா, இன்னும் கொஞ்சம் தமிங்கிலம் கத்துக்க வேண்டியிருக்கு. அதாவது, எஸ்கிஸ்மி, விச் ரைப் ஆஃப் டமில் திஸ் சூடியாதமிஜ்ஹன் (நீங்கதான்) இஸ் டால்க்கைங் என்பது போல் முயன்று கொண்டிருக்கிறேன்.

__DELETED USER__ 02-09-06 04:28 PM

Quote:

Originally Posted by bj
எஸ்கிஸ்மி, விச் ரைப் ஆஃப் டமில் திஸ் சூடியாதமிஜ்ஹன் (நீங்கதான்) இஸ் டால்க்கைங்[/COLOR] என்பது போல் முயன்று கொண்டிருக்கிறேன்.

முயற்சி திருவினையாக்கும்.

ஆனா எப்படியோ "சூடியாதமிஜ்ஹன்"னு சொல்லி எம் பேரெ கொன்னு குழிபறிச்சுப் பொதச்சே போட்டீங்க போங்க.

வாழிய நீர் பல்லாண்டு.

பீனா 03-09-06 01:56 PM

Quote:

Originally Posted by arul5318
நான் நினைக்கிறேன் அந்த மாங்காய் வியாபாரி தமிழ் நாடு இல்லைபோலும்

தமிழ்நாடு இல்லை... சிங்கப்பூர் :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: ...!!

rajnraj 03-09-06 04:39 PM

அருளுக்கும் பீனாவுக்கும் சண்டை (விவாதம்?) முடிந்துவிட்டதா? இல்லையா? இனி தொடரும் என்று ரைப்பிங்கோ, டைப்பிங்கோ தட்டச்சோ செய்து தொடருங்கள்

testing_arvind 14-11-06 01:30 AM

Quote:

Originally Posted by steam_78 (Post 324693)

தமிழில் எழுத 7 சுலபமான வழிகள்
ஸ்டீம்

steam, உண்மையில் நீங்கள் ஒரு வழியைத் தான் ஏழு படிகளாக விளக்கி உள்ளீர்கள். :-P

இன்னும் பல வழிகளை காண http://www.ta.wikipedia.org/wiki/wikipedia:FAQ பாருங்கள்.

அப்புறம், எ-கலப்பை கொண்டு நோட்பேடிலோ வேர்டிலோ தான் எழுத வேண்டும் என்றில்லை. நேரடியாக காமலோகப்பின்னூட்டப் பெட்டியிலேயே அடிக்கலாம். எந்த கணினி மெனபொருளிலும் அடிக்கலாம். இது சுரதா எழுதியில் இருந்து வெட்டி ஒட்டும் வேலையைத் தவிர்க்கும்.

இன்னொன்று, எ-கலப்பை alt+2 முறை தமிழ்நெட்99 (அல்லது இறக்கப்பட்ட பொதிக்கேற்ப வேறு விசைப்பலகை முறை) விசைப்பலகை பின்பற்றுகிறது. இதுவும் சுரதா எழுதி விசைப்பலகையும் ஒன்றல்ல. எனினும், தற்பொழுது சுரதா எழுதி பல வகை விசைப்பலகை முறைகளிலும் தட்டச்சு செய்யும் தேர்வுகளைத் தருகிறது.

காமலோகத்தின் மூலம் அழகாகத் தமிழ் வளர்ப்பது பாராட்டுக்குரியது. இடுகைகள் (post) தமிழிலேயே இருக்க வேண்டும் என்ற முடிவு எடுத்த நிர்வாகிகளை நான் பெரிதும் பாராட்டுகிறேன்

aerikarai 14-11-07 11:31 PM

Quote:

Originally Posted by இளஞ்சூரியன் (Post 620155)
வடமொழியில் shri or srirangam என்பதில் உள்ள ச்ரீ என்பதனை எப்படி இகலப்பையில் அடிப்பது. உதவுங்கள் நண்பர்களே..

ஸ்ரீ என்று அடிப்பதற்கு ஆங்கில கீ போர்டில் sr என்று டைப் செய்யுங்கள்..(வேறு ஒரு இடத்தில் sri என டைப் செய்ய வேண்டும் என பார்த்த ஞாபகம்)

மேலும் அறிய கீழே உள்ள சுட்டியில் முதல் பதிப்பில் ஒரு தெளிவான அட்டவனை உள்ளது. அதையும் பாருங்கள்- உங்கள் சந்தேகம் தீரும்.
http://kamalogam.com/new/showthread.php?t=16993

ஸ்டீம் 08-08-08 12:59 PM

இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய வழிமுறைகள் இன்றும் உங்கள் அனைவருக்கும் பயன்படுகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

Windows-Vista போன்றப் புதிய Operating System-இனால் இந்த வழிமுறைகளில் சில பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது. என்னிடம் Windows 2000 மற்றும் Windows XP மட்டுமே உள்ளது. ஆகையால் Vista வைத்து இங்கு தமிழில் ஏற்கனவே எழுதிக்கொண்டு இருக்கும் நண்பர்கள் அவர்களுக்கு உதவலாமே.

mulan. the last paragraph is written mainly for you.

deven. நீங்கள் notepad-இல் எழுதி Save செய்யும்பொது தயவு செய்து Encoding என்ற இடத்தில் Unicode-ஐ தேர்ந்தெடுங்கள். மறுபடியும் அதே பிரச்சினை இருந்தால் இங்கு விபரங்களுடன் பதியுங்கள். நன்றி.

ஸ்டீம்

JACK 08-08-08 01:07 PM

Quote:

Originally Posted by ஸ்டீம் (Post 735909)
இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய வழிமுறைகள் இன்றும் உங்கள் அனைவருக்கும் பயன்படுகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

காமலோகத்தில் எனது முதல் பதிப்பு உங்களது திரியில்தான் என்பதை மிக மகிழ்ச்சியோடு கூறி கொள்கிறேன்:D:D
Quote:

Originally Posted by ஸ்டீம் (Post 735909)
Windows-Vista போன்றப் புதிய Operating System-இனால் இந்த வழிமுறைகளில் சில பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது. என்னிடம் Windows 2000 மற்றும் Windows XP மட்டுமே உள்ளது. ஆகையால் Vista வைத்து இங்கு தமிழில் ஏற்கனவே எழுதிக்கொண்டு இருக்கும் நண்பர்கள் அவர்களுக்கு உதவலாமே.]

நான் Windows-Vista தான் உபயோகப்படுத்துகிறேன்
நான் இந்த http://www.higopi.com/ucedit/Tamil.html லிங்கை உபயோகப்படுத்திதான் தமிழில் டைப் பன்னுகிறேன். இந்த தளத்தில் தங்கிஷ்லில் டைப்பன்னினா அது தானான தமிழில் மாற்றி கொடுத்துவிடும் அதை அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்ய வேண்டியதுதான் ஏதோ எனக்கு கூறியுள்ளேன் தவறேனு இருந்தால் மன்னிக்கவும்

JACK 08-08-08 01:19 PM

Quote:

Originally Posted by ஸ்டீம் (Post 735915)
Vista-வின் சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு நன்றி. அதனை முதல் பக்கத்தில் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் சேர்க்கலாம் என்று இருக்கிறேன். இந்த தளத்தை உபயோகப்படுத்துவதற்கு eKalappai-ஐ பொருத்தவேண்டுமா?
ஸ்டீம்

eKalappai-ஐ பொருத்த தேவை இல்லை மேற்கூரிய பக்கத்தை நேரடியா திறந்து டைப் செய்து அதை காப்பி பன்னி பேஸ்ட் பன்ன வேண்டியதுதான் வெகு சுலபம்

பின்னர் பதிந்தது
நீங்கள் இந்த தகவலை முதல் பக்கத்தில் பதிப்பதில் எனக்கு சந்தோசமே இருந்தாலும் சீனியர் என்ற முறையில் நீங்களும் இதை உபயோகிப்படுத்திப்பார்த்துவிட்டு பிறகு பதியுமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

மிக முக்கியமான செய்தி: இந்த தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது நம்ம அன்பு வாத்தியார் என்பதை கூறி கொள்ள விரும்புகிறேன்

சூர புலி 08-08-08 02:08 PM

Quote:

Originally Posted by jacktkp (Post 735910)
நான் Windows-Vista தான் உபயோகப்படுத்துகிறேன்
நான் இந்த http://www.higopi.com/ucedit/Tamil.html லிங்கை உபயோகப்படுத்திதான் தமிழில் டைப் பன்னுகிறேன். இந்த தளத்தில் தங்கிஷ்லில் டைப்பன்னினா அது தானான தமிழில் மாற்றி கொடுத்துவிடும் அதை அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்ய வேண்டியதுதான் ஏதோ எனக்கு கூறியுள்ளேன் தவறேனு இருந்தால் மன்னிக்கவும்

நண்பரே ஜாக்.. எனக்கு தெரிந்தது.. நம் user control பேனலில் edit option சென்று அங்கே கீழே.. அடியில் Message Editor Interface: பேசிக் எடிட்டர் என்ற ஆப்சனை செலக்ட் செய்து விட்டு save செய்துவிட்டால்.. நாம் வேரொரு இடத்தில் தங்கிலிசில் எழுதி அதை காப்பி பேஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை... நீங்கள் நேரடியாகவே இங்கேயே அதை அப்படியே எழுதலாம்... ஏனென்றால் நான் இது நாள் வரை அதைத்தான் செய்கிறேன்.

அன்புடன்
சூர புலி

JACK 08-08-08 02:17 PM

Quote:

Originally Posted by சூர புலி (Post 735936)
நண்பரே ஜாக்.. எனக்கு தெரிந்தது.. நம் user control பேனலில் edit option சென்று அங்கே கீழே.. அடியில் Message Editor Interface: பேசிக் எடிட்டர் என்ற ஆப்சனை செலக்ட் செய்து விட்டு save செய்துவிட்டால்.. நாம் வேரொரு இடத்தில் தங்கிலிசில் எழுதி அதை காப்பி பேஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை... நீங்கள் நேரடியாகவே இங்கேயே அதை அப்படியே எழுதலாம்... ஏனென்றால் நான் இது நாள் வரை அதைத்தான் செய்கிறேன்.

அன்புடன்
சூர புலி

சூனா பானா உங்கள் தகவலுக்கு நன்றி நீங்க கூறியது போல் நான் முயற்ச்சி செய்து பார்த்திருக்கிறேன் அதுவும் நல்ல சுலபமான முறைதான்:D

ஆனால் மேற்க்கூறிய* முறையில் smilies, font setting, insert image, insert link & font alignment போன்றவைகளை பயன் படுத்த இயலவில்லையே இதற்க்கு ஏதும் தீர்வு உள்ளதா?:???::???:

சூர புலி 08-08-08 02:22 PM

Quote:

Originally Posted by jacktkp (Post 735942)
ஆனால் மேற்க்கூறிய* முறையில் smilies, font setting, insert image, insert link & font alignment போன்றவைகளை பயன் படுத்த இயலவில்லையே இதற்க்கு ஏதும் தீர்வு உள்ளதா?:???::???:

அந்த முறையை பயன்படுத்தினால் நீங்கள் கேட்கும் இந்த வசதி கிடைக்காது நண்பரே... அதனால் என்னுடைய பதிப்பில்milies, font setting, insert image, insert link & font alignment எந்த இதுவும் வருவதில்லை... அப்படி செய்ய வேண்டுமானால்... ஒரு முறை பதித்துவிட்டு மீண்டும் கன்ட்ரோல் பேனல் சென்று வேரொரு எடிட்டரை செலக்ட் செய்துவிட்டு பிறகு சேவ் பன்னிவிட்டு மீண்டும் வந்து நம் பதிப்பை எடிட் பன்ன வேண்டும்... ஆனால் பேசிக் எடிட்டரிலேயே இந்த வசதி இருந்தால் பல பேருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... இதை நிர்வாகம் கவனித்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்
சூர புலி

drabu100 22-08-09 05:17 PM

நன்றி

sudhakar1987 03-09-09 09:16 PM

¯í¸Ç¢ý ¯¾Å¢ìÌ Á¢¸×õ ¿ýÈ¢

sudhakar1987 03-09-09 09:17 PM

அந்த முறையை பயன்படுத்தினால் நீங்கள் கேட்கும் இந்த வசதி கிடைக்காது நண்பரே... அதனால் என்னுடைய பதிப்பில்milies, font setting, insert image, insert link & font alignment எந்த இதுவும் வருவதில்லை... அப்படி செய்ய வேண்டுமானால்... ஒரு முறை பதித்துவிட்டு மீண்டும் கன்ட்ரோல் பேனல் சென்று வேரொரு எடிட்டரை செலக்ட் செய்துவிட்டு பிறகு சேவ் பன்னிவிட்டு மீண்டும் வந்து நம் பதிப்பை எடிட் பன்ன வேண்டும்... ஆனால் பேசிக் எடிட்டரிலேயே இந்த வசதி இருந்தால் பல பேருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... இதை நிர்வாகம் கவனித்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்
சூர புலி[/QUOTE]

Ravanan 15-10-09 08:28 AM

அருமையான வழிகாட்டி.
 
அருமையான வழிகாட்டி.

முரசு அஞ்சல் இன்ச்டால் செய்துவிட்டு, பின்னர் ஈகலப்பையை இன்ச்டால் செய்துவிட்டு, நோட்பேடில் ஆல்ட்-3 அடித்த பின்னர், தமிழில் டைப் செய்வது எளிதாக உள்ளது.
மீண்டும் ஆங்கிலத்திற்கு மாறுவதற்கு, ஈகலப்பையிலிருந்து எக்சிட் செய்யவும்.

நீங்கள் நோட்பேடில் டைப் செய்ததை காமலோகத்தில் பதிவு செய்ய, யுனிகோட் கன்வர்ட்டர் பகுதியில் உங்களின் நோட்பேட் விஷயத்தை பேஸ்ட் செய்து விட்டு, TSCII ரேடியோ பட்டனை அழுத்தவும்.

bronze 15-10-09 09:44 AM

இ-கலப்பையால் தமிழ்99 முறையில் தட்டச்ச வழி இருக்கிறதா என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

நான் இங்கு கிடைக்கும் NHM Writer என்ற மென்பொருளை விண்டோஸ் விஸ்டாவில் நிறுவியிருக்கிறேன். ஒரு தொந்தரவும் இல்லாமல் மிக அருமையாக வேலை செய்கிறது. கணினி முடுக்கும்போது தானாகவே தொடங்கிக் கொள்கிறது. வேறு எந்த வேலையுடனும் குறிக்கிடுவதில்லை.

எல்லாரும் இ-கலப்பையைப் பெருமையாகப் பேசுவதால் முயற்சி செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். ஆனால் எனக்கு தமிழ்99 முறையில்தான் தட்டச்சிப் பழக்கமாகிவிட்டது.

asho 15-10-09 02:38 PM

Quote:

Originally Posted by bronze (Post 901056)
இ-கலப்பையால் தமிழ்99 முறையில் தட்டச்ச வழி இருக்கிறதா என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

Code:

http://thamizha.com/ekalappai-tamil99
மேலே கண்ட தளம் சென்று பாருங்கள் அதற்கும் வழி இருக்கிறது.

APPAS 09-11-09 04:51 PM

லோக நண்பர்கள் ஆலோசனைகள் புதிய நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் பயன் தரும்

dhum_durai 15-03-10 04:18 PM

how2 to write in tamil
 
அருமை.

badboys 26-09-10 06:12 PM

நான் முரசு அஞ்சல் வைத்துளேன் அதை கொண்டு இதுபோல் copy paste முறையில் செய்யமுடியுமா அறிந்தவர்கள் விபரம் கூறவும்

Kaleshan 17-09-11 10:37 AM

நல்ல தகவல்கள். நான் 'அழகி' எழுத்துதவியை என்னுடைய கண்னியில் நிறுவி இருப்பதால எந்த பிரச்சனையும் இல்லாமல் டைப் அடிக்க முடிகிறது. நண்பர்கள் முயற்சி செய்து பார்க்கலாமே!

adonis 29-09-11 12:49 AM

நன்றீ நண்பரே.

spiderman 15-02-12 10:00 PM

நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. தமிழ் வாழ்க

pooja_priyan 25-09-12 01:52 PM

அருமை
 
நான் தமிழில் எப்படித்தான் எழுதப்போகிறோம்..ன்னு ஒரே கவலையோடு இருந்தேன்! எவ்வளவு சுலபமான வழிகள்! அவ்வளவும் அருமையாகவே உள்ளன! இவற்றுள் என்.எச்.எம் மிகவும் அருமையாக உள்ளது!! நன்றி!நன்றி!நன்றி!நன்றி!

drem1980 26-09-12 08:39 PM

விண்டோஸ் 7வில் இ-கலப்பை வேலை செயவில்லை, எதாவது புது வேர்சின் டோவ்ன்லோன் செய்ய வேண்டுமா ?

GOPIGEEJAY 12-10-12 04:44 PM

தமிழ் வாழ்க, தமிழ் எழுத சொல்லி கொடுத்த தலைவா உன் தமிழ் இனம் வாழ்த்தும்.

jayak 26-09-13 09:01 PM

Quote:

Originally Posted by aerikarai (Post 620182)

ஸ்ரீ என்று அடிப்பதற்கு ஆங்கில கீ போர்டில் sr என்று டைப் செய்யுங்கள்..(வேறு ஒரு இடத்தில் sri என டைப் செய்ய வேண்டும் என பார்த்த ஞாபகம்)

மேலும் அறிய கீழே உள்ள சுட்டியில் முதல் பதிப்பில் ஒரு தெளிவான அட்டவனை உள்ளது. அதையும் பாருங்கள்- உங்கள் சந்தேகம் தீரும்.
http://kamalogam.com/new/showthread.php?t=16993

' ஸ்ரீ ' என்பதை ' sri - ச்ரி ' அல்லது ' sr - ச்ர் ' என்று எப்படி அடித்தாலும் நமது யுனிகோடில் வர்வில்லையே....

உதவுங்கள்...

அருமையான தகவல்கள்...

தமிழில் பதியவே நம் தளம்தான் மிக உறுதுணையாக இருந்துவருகிறது.
இதிலும் அனைவரும் கொடுக்கும் குறிப்புகள் மிக அற்புதமாகவும் உதவியாகவும் உள்ளது

PUTHUMALAR 26-09-13 11:39 PM

Quote:

Originally Posted by jayak (Post 1248790)
' ஸ்ரீ ' என்பதை ' sri - ச்ரி ' அல்லது ' sr - ச்ர் ' என்று எப்படி அடித்தாலும் நமது யுனிகோடில் வர்வில்லையே....
உதவுங்கள்...

யுனிகோர்ட் கன்வர்ட்டரில் அடிக்காமல் அதற்கு மேலுள்ள கூகுள் டிரான்ஸ்லேட்டரில் 'sri' என அடித்து ஒரு ஸ்பேஸ் அடித்தால் 'ஸ்ரீ' என்பது கிடைக்கும்..

யுனிகோர்ட் கன்வர்ட்டரில் 'Srii' என அடித்தால் 'ஸ்ரீ' என்பது கிடைக்கும்..

vjagan 26-02-18 09:05 AM

நல்ல ஐயப்பாடும் சிறப்பான பயனுள்ள வழிகாட்டல்களும் வாசகர்கள் யாவருக்கும் மிக்க பயன் தரும் திரி !

All times are GMT +5.5. The time now is 10:55 AM.

Powered by Kamalogam members