காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   மௌனி காலமானார் இன்று! (02-06-2021) (http://www.kamalogam.com/new/showthread.php?t=74978)

ஸ்திரிலோலன் 02-06-21 07:45 PM

நேற்று வரை சீரியஸ் என்று கேள்விப் பட்டேன். தில்லி என்.சி.ஆர். ரீஜியனில் கொரனா கட்டுக் கடங்காமல் இருப்பதை அறிவோம். இம்மாதம் என் தூரத்து உறவினர்கள் இரண்டு பேர் கொரானாவால் உயிர் இழந்தனர். இப்பொழுது நம் லோகத்து சொந்தம் ஒருவரையும் கொரானா அரக்கன் கொண்டு சென்று விட்டான் என்று நினைக்கையில் மனம் சொல்ல முடியாத அளவு துயர் கொள்கிறது.

நண்பர் மௌனி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

mmkarnan 02-06-21 08:10 PM

ஐயகோ?! நான் பலமுறை வெளிப்படுத்தியதை போல, நண்பர் மௌனியின் எழுத்துக்கள் தான் என்னைப்போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு ஆதர்சம் ஆயிருந்தது. ரசித்து ரசித்துப் படித்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர் மறைந்த நண்பர் தோழி மௌனி அவர்கள். அன்னாரின் இறப்பைத் தொடர்ந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் எழுத்துக்களை ஆதர்சமாய் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான நமது தோழர்களுக்கு எனது மனமார்ந்த ஆறுதல்கள். அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற மனதார வேண்டுகிறேன்.

johndoejr7 02-06-21 08:18 PM

அதிர்ச்சிகரமான செய்தி. அவரது பல கதைகளை படித்துள்ளேன். நல்ல எழுத்தாளர். அவர் எழுதிய கதைகளில், நான் படித்த கதைகள் மிகவும் சொற்பமே... இன்னும் நெறைய படிக்க வென்றும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.

அவர் பெண் என்பதே எனக்கு ஆச்சர்யம் தான். ஒரு பெண்ணாக, காமலோகத்தில் இத்தனை கதைகள், வர்ணனைகள் ஆச்சர்யம்.

தன் கதைகள் மட்டுமல்லாது, மற்றவரது கதைகளுக்கும் நல்ல கருத்துக்களை படிந்து ஊக்கப்படுத்துவார் என்று கண்டுள்ளேன்.

மனதில் ஒரு வெறுமை. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

vjagan 02-06-21 08:35 PM

என்னை என் லோக வாழ்வில் மனதால் பாதித்த உடன் பிறவாத தங்கையின் இழப்பு பற்றி வாயிருந்ததும் வார்த்தை இல்லை

நினைவுக்கு வரும் வாக்கியங்கள்:

1. விலையில்லாத மாணிக்கக் கற்கள் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் தாமதமாகவே நம்மால் இனம் காணப்படுகின்றன;

ஆனால் ஏனோ அந்தப் பொல்லாதக் கடவுள், அவைகளை இரக்கமின்றி அவசர அவசரமாக தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

உபயம்: பெயர் அறியப் படாத ஒருவர்

2. அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை

இப்போதிந்த உலகம் முழுவதும்
எமனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை...

உபயம்: கண்ணதாசன்

தேவ் 02-06-21 08:48 PM

மிகவும் வருத்தமிக்க செய்தி. நண்பர் மௌனி அவர்களின் தொடர் கதைகள் மிகவும் வேறுபட்ட தளத்தில் இருப்பதை நினைத்து ஆச்சர்யம் அடைந்துள்ளேன்.

மௌனி அவர்கள் சார்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். கொரனோ எனும் கொடிய பேய்க்கு இன்னும் எத்தனை பலிகள் தான் தேவையோ?.

வருத்தத்துடன்.

jayjay 02-06-21 09:21 PM

Quote:

Originally Posted by jaya2019 (Post 1544581)
காமலோகத்தை உயிராக
நினைத்த உள்ளம். இறக்கும்போதும் அவர்கள் ராசு, அஷோ, ஜேஜே என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

ஜய2019

மிகவும் நெருங்கிய நண்பி.. இன்று இல்லையென்ற செய்தி, காணும்போதே இதயம் கணக்கிறது. இறக்கும்போதும் என்னை நினைவுகூர்ந்த அன்பிற்கு ஈடாக என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லையே.

இனியவள் இனி இறைவனடியில் இளைப்பாறட்டும்..

tamizhan_chennai 02-06-21 09:23 PM

ஆழ்ந்த அனுதாபங்கள். இதை தவிர வேறு என்ன சொல்ல முடியும். வருத்தமாக உள்ளது.

ramstories 02-06-21 09:41 PM

ஈடு செய்ய முடியாத இழப்பு.. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்ளும் அதே நேரம் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்,,

sinna vaaththiyaar 02-06-21 09:53 PM

என்னெங்க சொல்லுறிங்க.....

எனது நெருங்கிய நண்பர்களின் சொந்தங்களை இந்த காலகட்டதில் இழந்த வருத்ததில் இருந்த எனக்கு மௌனியின் மறைவு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது....அவரது ஆன்மா இறையருளை அடைய பிரார்த்தனை செய்வோம்.....
(மன்னிக்கவும்....என்னால் இந்த த்ரெட்க்கு ஸ்டார் கொடுக்க முடியவில்லை...இந்த செய்தியை எதிர்பார்க்கவில்லை...)

harshanwriter 02-06-21 10:04 PM

எனக்கு மௌனி யாருனு கூட தெரியாது முன் பின் பார்த்தது கூட இல்ல ஏன் ஒரு பிரைவேட் மெசேஜ் கூட பண்ணது இல்ல ஆனா இன்று மௌனி இன்று இந்த உலகத்தில் இல்லை என்ற செய்தியை அறிந்து என் கண்கள் குளமானது.

ஏதோ என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பரை இழந்தது போன்ற ஒரு உணர்வு சொல்ல முடியாத சோகம்.

நான் பல தளங்களில் மௌனியின் பல கதைகளை படித்து மகிழ்ந்து இருக்கிறேன். என்னை போலவே பல பேரை மகிழ்வித்தவர் மௌனி.

ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

என்ன வாழ்க்கைடா இது.

இந்த இரண்டு வருடங்களில் என் வாழ்க்கையிலும் சரி எனக்கு பிடித்த பிரபலங்களிலும் சரி நான் இழக்க கூடாத பல பேரை இழந்து விட்டேன் இன்று மௌனி.

என்ன சொல்றதுன்னே தெரியல. தன் எழுத்துக்களால் இன்னும் வாழும் மௌனிக்கு நன்றி.


All times are GMT +5.5. The time now is 08:04 PM.

Powered by Kamalogam members