காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   விடைபெறுகிறேன் - ரசி கேம்ரென் (http://www.kamalogam.com/new/showthread.php?t=57220)

Rassy_Camren 10-01-11 10:11 PM

விடைபெறுகிறேன் - ரசி கேம்ரென்
 
அன்பிற்குறிய வாசக பெருமக்களுக்கும், தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

காமலோகத்திலிருந்து நிரந்தரமாக பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் சில சொந்தக் காரணங்களுக்காக உங்கள் அனைவரிடமிருந்தும் விடைபெறும் தருனம் வந்துவிட்டது. காமலோகம் என்னும் காமக்கடலில் சிறு துறும்பாக இணைந்து என்னையும் இங்கே அடையளப்படுத்திக்கொள்ள உதவிய அனைத்து பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இங்கிருந்து சென்றாலும் நான் விட்டுச் செல்லும் எனது படைப்புகள் காலம் காலமாய் என்னை நினைவுகூறும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அனைவரிடமிருந்தும் பிரியா விடைபெறுகிறேன்.

எல்லோரும் நலமுடன் வாழ எனது பிரார்த்தனைகள்.

அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
ரசி கேம்ரென்.

gemini 10-01-11 10:27 PM

என்ன நண்பரே, என்ன நடந்தது?
இப்படி நிரந்தரமாக?
காமலோகத்தின் பழைய உறுப்பினர் நீங்கள்.
நீங்கள் எங்களிடம் இருந்து விடைபெறுவது மிக கவலைக்குரியது.

Mathan 10-01-11 10:28 PM

பிச்சிபுடுவேன் பிச்சு...

லூசாவே நீர்...??

ஒழுங்கு மறுவாதியா இந்த திரிய அழிச்சிபுட்டு ஒழுங்கா சமத்தா இங்கே இருப்பியாம்.

நான் கூட ஏதோ வொளையாட்டுக்குத்தான் சொல்லுதீர்னு பார்த்தேன்... :y14:

நல்லா இல்லவோய் ஆமா சொல்லிட்டேன்... :y4:

dayaan 10-01-11 10:29 PM

இன்று ஏப்ரல் 1 இல்லையே
இல்லை என்றாலும் இது பொய் செய்தியாகத் தான் இருக்கும்.
எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்ல எங்களால் முடியாது சாமி!
முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்.
அன்புடன் உங்கள் பதிலை எதிர் பார்க்கின்றேன்.

டயான்

wgi_removed 10-01-11 10:45 PM

நீங்க இப்படி எல்லாம் சொல்லி விடை பெற முடியாது........

தயவு செய்து நீர் உமது முடிவை மறு பரிசீலனை செய்யவும். இந்த புதிய உறுப்பினரின் தாழ்மையான கருத்து.......

KAMACHANDRAN 10-01-11 11:05 PM

ரசி அட ஆண்டவா காமலோகத்தில் இருக்கும் பெருந்தலைகள் ஒவ்வொருவரும் காமம் சலித்து செல்வதை நினைத்தால் மனம் வலிக்கிறது... புலம் பெயர்ந்து வாழும் நாங்கள் காமலோகதில் வந்துதான் ஆறுதலை அடைகிறோம். உங்களைப் போன்ற நல்ல நண்பர்கள் விலகிச் செல்வதால் மனம் சோர்வடைகிறது. உங்களுக்கு சொந்தப் பிரச்சனை இருப்பதை மதிக்கிறேன்..ஆனால் அதையும் தாண்டி இந்த லோகத்துக்கு வர உங்களை பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். :sign0150: :sign0171:

அதுசரி நீங்கள் காமலோகத்துக்கு செய்யும் பணியை பார்த்த உங்கள் துணைவியார் ஓங்கி உங்கள் தலையில் ஒரு கொட்டு வைத்து விட்டாரா!!!!!!
இப்படி எல்லாம் பேசி மகிழ்ந்த நாங்கள் இனி...:sign0180: :sign0150: :sign0171:

thesun 10-01-11 11:07 PM

தங்களது முடிவு வருத்தமாக உள்ளது....

niceguy 11-01-11 12:11 AM

ஏன் இந்த் திடீர் முடிவு? மாற்றிக்கொள்ள்லாமே.

Rudran 11-01-11 01:58 AM

தோ பாருங்க ரசி இந்த மாதிரி உடான்ஸ்லாம் விட்டு எங்கள விட்டு போயிடலாம்னு கனவு காணாதீங்க. என்னங்க அப்படி ஒரு பிரச்னை, ஒரு அஞ்சு நிமிஷம் வர முடியாதா உங்களால, நானும்தான் எவ்வளவோ பிரச்சினைகளுக்கு இடையில வந்து போறேன், அப்பப்ப மச்சான் கிட்ட கொட்டும் வாங்கறேன், இதெல்லாம் இல்லன்னா அப்புறம் நட்புக்கு என்னங்க அர்த்தம்? சீக்கிரமா மனச மாத்திக்கோங்க ரசி!!!!!

muthuveeran 11-01-11 02:31 AM

உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு சொல்லிருக்கும்....மடல் மன வருத்தத்தை அளித்தாலும், நன்பரின் தனிமனித கருத்துச் சுதந்திரத்தை மதித்து அவருக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். படைப்புகள் மூலம் அவரை அன்றாடம் காணலாம் என்பது உண்மை...வாழ்க நன்பர்....


All times are GMT +5.5. The time now is 02:36 AM.

Powered by Kamalogam members