காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   லோகத்திற்கு வைர வாசல் வேண்டும் (http://www.kamalogam.com/new/showthread.php?t=56631)

mayakrishnan 12-11-10 11:27 PM

லோகத்திற்கு வைர வாசல் வேண்டும்
 
இதற்கு முன் இப்படி ஒரு விவாதம் நடந்ததாக நினைவில்லை. எழுதுவதற்கு முன் லோகத்தில் தேடி பார்த்தேன். இல்லை என்பதால் இப்போது பதிக்கிறேன். இதை தாண்டி எங்காவது அப்படி ஒரு திரி ஒளிந்திருந்தால் எனக்கு தகவல் கொடுங்கள்.

இது ஒரு ஒளி கீற்று போல தோன்றிய யோசனை. சும்மா லோகத்தில் உருட்டி பார்த்தால் ஆக்கப்பூர்வமாய் வளரும் என்பதற்காக இங்கே பதிக்கிறேன். தேவையில்லாத யோசனைகள் காலத்தே மங்கி போகும் என்பது லோக வாசிகள் நன்கு அறிவர்.


யோசனை இது தான்: காமலோகத்திற்கு வைர வாசல் வேண்டும்.

காரணம்: காமலோகத்தில் திரிகளின் எண்ணிக்கை பல்கி பெருகி விட்டன. முக்கியமாக கதைகள் பதிக்கபடும் வேகமும் எண்ணிக்கையும் மலைக்க வைக்குமளவு இருக்கிறது. பதிக்கபடும் புது கதைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் புது கதைகளை படிக்க கூடும் கூட்டம் பழைய கதைகளை மறந்து போகிறது. பழைய கதைகள் மாதக்கணக்கில் படிக்கபடாமல் பின்னூட்டம் இல்லாமல் மங்கி போய் கிடக்கின்றன. புது கதைகளை படிக்க வரும் கூட்டம் அந்த சூட்டோடு சூடாய் போகும் கூட்டம்.ஆனால் மற்றொரு பக்கம் பதிக்கபட்ட காலத்தை பற்றி கவலையின்றி காமக்கதைகளை படிக்கணும் என்று லோகத்திற்குள் லாகின் ஆகிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்களை சரியான இடத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு தான் வைர வாசல் தேவை. தங்க வாசல் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அதற்குள் கதைகள் இடம் பெறுவது எளிதான காரியமாக இல்லை. அதோடு பெரும்பாலும் நீண்ட கதைகள் தான் அதனுள் இருக்கின்றன. hall of fame மாதிரி ஓரிடம். மாதாந்திர கதைப்போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற கதைகள், வாசகர் சவால் போட்டியில் முதலிடம் வென்ற கதைகள், ஏனைய போட்டிகளில் பரிசு வென்ற திரிகள் இப்படியான வெற்றி பெற்ற மெடல் குத்த பெற்ற கதைகள் வைப்பதற்கு ஓரிடம் உண்டாக்கினால் நன்றாக இருக்குமா? அந்த hall of fame-யை தான் வைர வாசல் என்று சொன்னேன். இல்லை இப்படி யோசித்து பாருங்கள் லோகத்தில் இருக்கும் கதைகளில் ஐந்து நட்சத்திரம் பெற்ற கதைகள் மட்டும் தனியே ஓரிடத்தில்!

இந்த யோசனை குறித்த கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.

PUTHUMALAR 13-11-10 12:12 AM

வரவேற்க தக்க நல்ல யோசனை.. நிர்வாகம் பரிசீலித்தால் நன்றாக இருக்கும்.. நல்ல யோசனையை முன் வைத்த மாகி அவர்களுக்கு நன்றிகள்..

பீனா 13-11-10 12:25 AM

தோழர் மாகி சொல்வதும் ஒரு வகையில் சரிதான். எதையாவது அடைய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும்போது இருக்கும் த்ரில்லும், உத்வேகமும்... அதை அடைந்தவுடன், தண்ணீர் ஊற்றி அணைத்தது போல் பொசுக்கென்று அடங்கி விடுகிறது. தேடும் ஆவல் மங்கிப் போய்விட்டதோ என்று ஐயமும் வருகிறது.

எனக்கு இப்போது நினைவுக்கு வருவது, "தேடுவதை நிறுத்துங்கள்... தேடியது கிடைக்கும்" என்று ஒரு மாமேதை (பீனா இல்லை) சொன்னதுதான். அது போல, எதை தேடுகிறோம் என்றே விளங்காது, இலக்கில்லாமல் ஓடிக் கொண்டிருந்தவளை... சரக்கென்று கூந்தல் பற்றியிழுத்து, "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் குறும்புப் பெண்ணே?" என்று மாயகிருஷ்ணன் கேட்டது போல் உணர்கிறேன்.

bedroom_salak 13-11-10 09:21 AM

நண்பர் மா.கி. சொன்ன இந்த யோசனை, நல்ல யோசனையாகத்தான் இருக்கு..
அரிய பொக்கிஷ கதைகளை மொத்தமாக ஓரிடத்திலே படிக்கும் வாய்ப்பு..

niceguyinindia 13-11-10 10:46 AM

ஆம் வைர வாசல் ஒன்று இருந்தால் நன்றாக தான் இருக்கும் நண்பர் சொன்னது போல் போட்டியில் பங்கு பெற்ற மற்றும் எல்லோராலும் விரும்பி படிக்கப்பட்ட கதைகளை அங்கு வைக்கலாம் என்பது எனது கருத்து

தங்க வாசலும் இதையே தான் செய்கிறது எனவே வைர வாசலுக்கென்று ஏதேனும் ஒரு தொகுப்பை உருவாக்கினல் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்

நிர்வாகிகளின் கருத்தை அறிய ஆவல்

jayjay 13-11-10 01:51 PM

Quote:

Originally Posted by mayakrishnan (Post 1020900)
யோசனை இது தான்: காமலோகத்திற்கு வைர வாசல் வேண்டும்.

காமலோக மேம்பாட்டில் உங்களுக்கு இருக்கும் அக்கரை சிலிர்க்க வைக்கிறது. 'காமலோகத்தை நன்றாக பயன்படுத்துவது எப்படி' போல இதுவும் சிறப்பான யோசனைதரும் திரி.

நல்ல யோசனை அண்ணே. தற்போது கதை மெசின் போல வாசகர் சவால் பகுதியிலேயே மாதம் 50-60 கதைகள் வந்துவிடுகிறது. அதுமட்டுமின்றி காமக்கதைகளிலும் நிறைய கதைகள் வருகிறது. எனவே இன்னொரு பாரம் இருப்பது நல்லதுதான்.

Quote:

Originally Posted by mayakrishnan (Post 1020900)
தங்க வாசல் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அதற்குள் கதைகள் இடம் பெறுவது எளிதான காரியமாக இல்லை. அதோடு பெரும்பாலும் நீண்ட கதைகள் தான் அதனுள் இருக்கின்றன.

நீங்கள் சொல்வது போல அங்கே கதைகள் இருந்தாலும் படங்கள்,அசைபடங்களே முன்னனி வகிக்கிறது. முதல் மூன்று பரிசுகள் பெற்ற கதைகளை தங்கவாசலுக்கு மாற்றினால் தங்கவாசலில் மட்டும் எட்டிப்பார்த்துவிட்டு செல்பவர்களை கதைபடிக்க வைக்கலாம். தற்போது தங்கவாசலில் இருப்பவைகளை வைரவாசலுக்கு மாற்றலாம்.

Quote:

Originally Posted by mayakrishnan (Post 1020900)
மாதாந்திர கதைப்போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற கதைகள், வாசகர் சவால் போட்டியில் முதலிடம் வென்ற கதைகள், ஏனைய போட்டிகளில் பரிசு வென்ற திரிகள் இப்படியான வெற்றி பெற்ற மெடல் குத்த பெற்ற கதைகள் வைப்பதற்கு ஓரிடம் உண்டாக்கினால் நன்றாக இருக்குமா? அந்த hall of fame-யை தான் வைர வாசல் என்று சொன்னேன்.

இது நல்ல யோசனை மாகி அண்ணே. வெற்றி பெறும் கதைகளை வைர வாசலில் வைக்கலாம். இதன் மூலம் வென்ற கதைகளுக்கு மரியாதை அளீப்பதை போல இருக்கும்.

ஆனா வைர வாசல் அனுமதி இல்லாதவங்க, ஜூனியர் மெம்பர் வகையில் இருப்பவர்கள் அந்த மாதிரி கதைகளை படிக்க முடியாம போயிடும். அப்படி ஒரு இடைஞ்சலும் இருக்கு.

Quote:

Originally Posted by mayakrishnan (Post 1020900)
இல்லை இப்படி யோசித்து பாருங்கள் லோகத்தில் இருக்கும் கதைகளில் ஐந்து நட்சத்திரம் பெற்ற கதைகள் மட்டும் தனியே ஓரிடத்தில்!

இது நல்லா இருக்காது. பலதரப்பட்ட திரிகள் அங்கே இருந்தா சரியா இருக்காது. ஸ்டார் ரேட்டிங்கை பார்த்து அங்கே மாற்றுவது நிர்வாகத்திற்கும் தேவையில்லாத அலைச்சல்.

sajid80 13-11-10 02:25 PM

நல்ல யோசனை தான்..பரிசு பெற்ற,சிறந்த கதைகள் மட்டுமே ஓரிடத்தில் இருந்தால் சிறந்த கதைகளை படிக்க விரும்புவோர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாக இருக்கும்..நிர்வாகத்தின் எண்ணத்தை அறிய ஆவலாக உள்ளேன்

nandabalan 14-11-10 05:44 AM

அருமையான யோசனை. எனக்கும் வெகு காலமாய் ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்தாய் ஆகி விடக்கூடாதே என்ற அச்சத்தின் காரணமாய் அமைதியாய் இருந்தேன்.

இந்த பீனா அக்காவை கொஞ்சம் கண்டிங்கப்பா யாருக்காவது தைர்யமிருந்தா. சீரியஸா பேசிட்டு இருக்கும் போதே சின்னப்பிள்ளைத் தனமா சிரிப்பு காட்டிட்டு.:0024:

vjagan 14-11-10 07:29 AM

மிக சிறந்த சிந்தனைதான்,அய்யா ! காமலோகம் இன்னமும் உயர உயர போக இதுவும் ஒரு நல்ல வழிதான் !

gemini 14-11-10 07:38 PM

நல்ல ஒரு யோசனைனை முன் வைத்துள்ளீர்கள்.
பரிசு பெறப்பட்ட கதைகளை மட்டும் அங்கே இருந்தால் நன்றாக இருக்கும். ஐந்து நட்சத்திரம் பெற்றவை என்றால் இங்கே பல கதைகள் உள்ளது. அவைகளையும் அந்த பகுதிக்கு மாற்றினால், வைர பகுதியில் தேவையில்லாமல் கூடுதலான கதைகள் வந்துவிடும்.


All times are GMT +5.5. The time now is 09:08 AM.

Powered by Kamalogam members