காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   பதிவுகளை திருத்துதல் 10 நாட்கள் மட்டும் - விளக்கம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=64796)

kamakodangi68 18-04-14 10:16 PM

Quote:

Originally Posted by asho (Post 1288282)
சிலர் தவறுதலாகவோ அல்லது மனம் மாறியோ, தான் பதிந்தவற்றை நீக்கி வெற்றுப்பதிவாகவோ அல்லது நீக்கப்பட்டது என்றோ பதிந்து செல்கின்றனர். இதனால் பின்னர் அந்த திரி பார்ப்பவர்களுக்கு என்ன ஏது என்றே தெரிய மாட்டேன்கிறது,

உண்மைதான் நண்பரே.. எனவே இதுகுறித்து தகுந்த வழிமுறையை ஏற்படுத்தித்தான் ஆகவேண்டும்.

Quote:

Originally Posted by asho (Post 1288282)
னவே அந்த மாதிரி பின்னர் தன்னிச்சையாக பதிவுகளை நீக்குபவர்களை கட்டுப்படுத்த இது அவசியமாகிறது.

இங்குதான் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது நண்பரே..

தன்னிச்சையாக பதிவுகளை நீக்குபவர்களை கட்டுப்படுத்த இது அவசியமானது என்றால்.. தவறுதலாக நீக்கிவிடுபவர்களை என்ன செய்வது..?

ஒருவேளை... பதிப்பை நீக்கும்போது. (அது தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ என்றுகூட இருக்கட்டும்)
Quote:

Originally Posted by asho (Post 1288282)
இம்மாதிரி பதிவுகளை பின்னர் திருத்தும் போது முந்தைய பதிவு தற்காலிகமாக பின்னர் பயன்படுத்திக்கொள்ள மென்பொருளால் சேமிக்கப்படுகிறது,

என்று இருக்கும்போது இந்த புதிய நடைமுறை தேவைதானா..?

eros 18-04-14 11:26 PM

இது ஒரு உபயோகமான கட்டுப்பாடுதான். தொடர்கதைகளுக்கு பழைய பாகங்களுக்கு சுட்டி குடுப்பது இனி கடினம் என்பது நன்பர்கள் சொல்லியதும் புரிகிறது. இது (அடுத்த பாகங்களுக்கான சுட்டி) என் போன்ற வாசகர்களுக்கு உபயோகமான உதவி. நிர்வாக நண்பர்கள் இதனால் ஏற்படும் அதிகப்படி வேலை பளுவை தாங்கிக்கொள்ள முன்வந்தது பாராட்ட வேண்டிய விஷயம் !

PUTHUMALAR 18-04-14 11:48 PM

Quote:

Originally Posted by kamakodangi68 (Post 1288418)
தன்னிச்சையாக பதிவுகளை நீக்குபவர்களை கட்டுப்படுத்த இது அவசியமானது என்றால்.. தவறுதலாக நீக்கிவிடுபவர்களை என்ன செய்வது..?

தவறுதலாக நீக்கிவிடுபவர்கள் உடனடியாக நிர்வாகத்திற்கு தெரியபடுத்தினால் இனிமேல் கவனமாக இருங்கள் என அறிவுரை வழங்கிவிட்டு மென்பொருளினால் சேமிக்கப்பட்டதிலிருந்து மீள்பதிவு செய்து வைக்கப்படும்.. ஆனால் வேண்டுமென்றே தன்னிச்சையாக ஒரு சிலரால் செய்யப்படும் பதிவுகள் நீக்கத்தால் நிர்வாகத்திற்கு மீள்பதிவு செய்ய ஏற்படும் பணிச்சுமைகளை தவிர்க்கவே இந்த கட்டுப்பாடு அவசியமாகின்றது..
Quote:

Originally Posted by kamakodangi68 (Post 1288418)
ஒருவேளை... பதிப்பை நீக்கும்போது. (அது தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ என்றுகூட இருக்கட்டும்)
Quote:

Originally Posted by asho (Post 1288282)
இம்மாதிரி பதிவுகளை பின்னர் திருத்தும் போது முந்தைய பதிவு தற்காலிகமாக பின்னர் பயன்படுத்திக்கொள்ள மென்பொருளால் சேமிக்கப்படுகிறது,

என்று இருக்கும்போது இந்த புதிய நடைமுறை தேவைதானா..?

மின் தடை ஏற்பட்டால் அவசர அவசியத்திற்கு ஜெனரேட்டர் பயன் படுத்துகின்றோம்.. அதற்காக எல்லா நேரங்களிலுமே ஜெனரேட்டரை பயன்படுத்த முடியுமா?..

ஸ்திரிலோலன் 19-04-14 01:36 AM

Quote:

Originally Posted by asho (Post 1288306)
பின்னர் பிந்தைய பாக சுட்டி பதிப்பதை, சுட்டிகளுடன் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலிட்டால் போதும், அவர்கள் அதனை செய்து விடுவார்கள்.

நிர்வாகத்தாருக்கு பணிசுமை ஓக்கே என்றால் எனக்கு பிரச்சனை இல்லை தான். ஆனால் படைப்பாளிகள் அறிமுகத் திரி போன்ற அடிக்கடி மாற்றம் செய்யும் திரிகளுக்கு விதிவிலக்கு அளிக்கலாமே அண்ணா.. அதோடு காமச் சிரிப்புகள், சித்திரச் சிரிப்புகள், படங்கள் போன்றவற்றுக்கு தலைப்பை மட்டும் மாற்றும் வசதி கொடுக்க முடிந்தால் நன்றாக இருக்குமே...

நன்றி

dreamer 19-04-14 05:53 AM

தேவையான மாற்றம்.

ஆனால் ஏற்கனவே பலர் சுட்டிக்காட்டியதுபோல் 'படைப்பாளர் திரி' எடிட் ஆப்ஷனுடன் இருப்பது அவசியம்.

ஸ்திரிலோலன் 19-04-14 10:48 AM

வணக்கம் அஷோ அண்ணா. இந்த முறையில் வரும் சிக்கல்களுக்கு ஒரு லைவ் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். தற்போது நான் மற்றும் அநபாயன் அண்ணன் அவர்கள் இணைந்து நடத்தும் வாசகர் சவாலுக்கான கலந்துரையாடல் திரியை அப்டேட் செய்ய இன்று முயன்றேன். ஆனால் இந்தத் தடையின் காரணமாக முடியவில்லை. போட்டியின் தேதி, மவுஸாரின் சிக்நேச்சர்கள், மற்றும் புதிய ஸ்பான்சர்களின் பங்கு மற்றும் உபசரணையாளர்கள் நிறைவு பற்றிய அறிவிப்பு என்று சேர்க்க விரும்புகிறேன். என் லாகை கவனித்தால் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட பல முறைகள் எடிட் செய்து வந்தது தங்களுக்குத் தெரியும் அண்ணா. இந்த மாற்றங்களை நிர்வாக நண்பர்களை வைத்து செய்வது சிரமமே, அப்படிச் செய்தாலும் அதன் பின் அடிக்கடி மாற்றங்கள் செய்ய வேண்டியது வருமே அண்ணா?(திரியின் சொந்தக்காரரே மாற்றம் செய்யாத பட்சத்தில்).

அதனால் இந்த மாற்றத்தை கதைப் பகுதிகளுக்கு மட்டும் கொண்டு வந்தால் போதுமே அண்ணா. அது போல ஸ்பான்சர் லிஸ்ட், தனிப்பரிசு லிஸ்ட், பின்னூட்ட உறுதியளிப்பு லிஸ்ட் என்று வரைவுப் பணிமனையில் பல சேர்த்துக் கொண்டே வருகிறேன் அண்ணா. அதுவும் எடிட் செய்ய முடியாவிட்டால் இன்னும் சிரமமாகுமே? அனைவரும் சென்று பார்க்க முடியாத வரைவுப் பணிமனைக்கு இந்த ரெஸ்ட்ரிக்*ஷன் தேவையில்லையே அண்ணா?

அதோடு சவால் ஆரம்பித்ததும் கதைகள் சேரச் சேர முதல் பதிப்பை எடிட் செய்து சேர்க்க வேண்டுமே அஷோ அண்ணா. இந்த பத்து நாட்களுக்குப் பின்னான தடையின் காரணமாக 35 நாட்கள் நடக்கும் சவாலில் இன்னும் பலப்பல சிரமங்கள் வருமே அஷோ அண்ணா?

தயவு செய்து இந்தத் தடையை கதைகள், உல்டாப் பாடல்கள், மற்றும் கவிதைகளுக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாமே அண்ணா. நினைத்ததை விட இந்த விசயத்தில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பது தெரிகிறது என்பதால் நிர்வாக நண்பர்கள் இதற்கு நல்ல முடிவை சீக்கிரம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்...

நன்றி

KANNAN60 19-04-14 12:21 PM

Quote:

Originally Posted by dreamer (Post 1288474)
தேவையான மாற்றம்.

ஆனால் ஏற்கனவே பலர் சுட்டிக்காட்டியதுபோல் 'படைப்பாளர் திரி' எடிட் ஆப்ஷனுடன் இருப்பது அவசியம்.

இதேதான் என் கருத்தும். நிர்வாகிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

MACHAN 19-04-14 01:25 PM

Quote:

Originally Posted by asho (Post 1288282)
நம் தளத்திலே ஒருவர் ஆரம்பித்த திரியின் முதல் பதிப்பையோ அல்லது மற்றவர் ஆரம்பித்த திரிகளில் பதிக்கும் பதிப்புகளையோ அவர் இது நாள் வரை எப்போது வேண்டுமானலும் திருத்தலாம் என்றிருந்தது, சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய நடைமுறைப்படி, ஒருவர் ஆரம்பித்த/பதிந்த திரி/பதிப்பு அவரால் அடுத்த 10 தினங்கள் மட்டுமே திருத்த(எடிட்) செய்ய இயலும், பின்னர் அந்த வசதி இருக்காது.

முக்கியமாக கதைகள் பகுதிகளுக்கு மட்டுமே இதனை நடைமுறைப் படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். மற்ற பகுதிகளுக்கும் இது பொருந்தும் என்றால் தர்மசங்கடமான நிலைதான்...! நிர்வாகிகளுக்கும் வேலைப்பளு அதிகமாகும்.

snehan 19-04-14 01:37 PM

மேற்பார்வையாளர் நண்பர் அஷோ அவர்கள் பதிந்த கருத்துகள் அருமையானவை.

நாம் ஒவ்வொரு படைப்புகள் பதிந்ததும் உடனே சென்று தொடர்களிலும் சுட்டி ஏற்றிவிட்டால் சிரமமும் இருக்காது.

தொடர்கள் நாள்பட்டு கழித்து எழுதுவோர் மட்டும் தனிமடல் இட்டு நிர்வாகத்தினரிடம் கேட்டால் அதுவும் சரி செய்யப்படும்.

அருமையான விஷயம்.. ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றே.

நீங்கள் சொல்லிய கருத்துகளை நானும் வரவேற்கிறேன் நண்பரே.

asho 19-04-14 02:52 PM

நண்பர்களே, உங்கள் கருத்தை பெறுவதற்காகவே காத்திருந்தோம், தற்போது திரி ஆரம்பித்தவர் திரி தலைப்பை திருத்துவதில் ஏதும் பிரச்சினை இருக்காது(அந்த வசதி அளிக்கப்பட்டு விட்டது) என்றே நினைக்கிறேன்.

ஏனென்றால் நி.உறுப்பினர்களால் அனைவர் திரிகளையும் திருத்தும் அனுமதி இருப்பதால் இதனை சோதித்து பார்க்க இயலவில்லை.

சோதித்து பார்த்து பதில் சொல்லுங்கள்.

(திரியின் தலைப்பை நான் மாற்றியுள்ளேன்).

பின்னர் பதிந்தது:
தலைமை நிர்வாகி அவர்கள் பதிந்ததை கருத்தில் கொள்ளவும்.


All times are GMT +5.5. The time now is 08:33 PM.

Powered by Kamalogam members