காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   மெளனி அவர்களுக்கான நினைவேந்தல் (http://www.kamalogam.com/new/showthread.php?t=75182)

kauveri 19-07-21 10:38 AM

கிட்டத்தட்ட 400 படைப்புகளுக்கு மேல் செய்த மெளனி காலமாகிவிட்டார் என்றறியும் போது, காமக்கதை வாசகர்களுக்கும் படைப்பாளிக்களுக்கும் பெரிய வெற்றிடம் ஏற்பட்டு சோகத்தில் ஆழ்த்திருக்கும். இந்த காமலோகம் தளம் இருக்கும்வரை மெளனி என்றும் நிலைத்திருப்பார். புகழ் ஓங்கியிருக்கும்.
தமிழில், அரிதாக வரும் மூன்றாம் பாலினத்தவர் வகை காமக்கதைகளை அருமையாக எழுதியதற்கு வாழ்த்தியதுதான் அவரிடம் என் முதல் தொடர்பு. அடிக்கடி தனிமடலில் தொடர்பு கொள்வார்.
அவர் ஓரு ஆங்கில கதையை மொழிப்பெயர்த்து தழுவி எழுதும் போது, அந்த கதையின் ஆசரியர் நுண்ணர்வுடன் தமிழர்களை வில்லனாக இழிந்தவர்களாக சித்திரிக்கும் போக்கை கொண்டவர், அதனால் அந்த கதையை தொடர வேண்டாமென்றேன். அதைவிட தமிழில் அருமையான கதைகள் இருக்கின்றது என்றேன். எல்லோரும் பாராட்டும் கதைத்தானே, நல்ல ஸ்லட்டீஷ் கதநாயகி கதைதானே என்றார். என்னவாக இருந்தாலும் எனக்கு பிடிக்கவில்லை என்றேன். அப்படியென்றால் ஒரு ஆய்வு கட்டுரையைப் போல எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தினார். சரி கொஞ்சம் டீடெய்லாக எழுதலாம் என்று காமக்கதைகளை பற்றி எழுதி, அது முடிக்க முடியாமல் பாதியில் நிற்கின்றது. அதற்குள் தளத்தின் நிர்வாகிகளுக்கு அந்த திரி பிடிக்காமல் போய்விட்டது.
ஒரு ஸ்லட்டிஷ் கேரக்டரான ஹீரோயின் கதைதானே நன்றாகத்தானே இருக்கின்றது என்று அவர் சொன்ன போது. அதை விட தமிழில் அருமையாக நன்றாக கதைகள் வந்திருக்கின்றது, என்று வேறு ஒரு தளத்தில் நான் படித்த கதையை சுட்டிக் காட்டினேன். அதற்கு பதிலாக, சீக்கிரம் தங்கவாசலை அடையுங்கள் என்றார்.
தங்க வாசலை அடைந்தவுடன் தெரிந்தது அந்த கதையை எழுதியது நண்பர் மெளனிதானென்று.
அதைப் பற்றி அவருக்கு தனிமடலில் கடிதம் எழுதினேன். ஆனால், பதிலளிக்க அவரில்லாமல் போய்விட்டார். இனிமேல் பதில் வராது.
மெளனிக்கு நான் செலுத்தும் அஞ்சலியாக, அவரின் ஓவ்வொரு படைப்பை படித்து என் கருத்தை கூறுவதாக இருக்கும் என நினைக்கிறேன்.
மெளனிக்கு என் நன்றிகள்.
அவருடைய ஆன்மா இறைவனின் கால்களில் சாந்தியடையட்டும்.

Raja456 19-07-21 01:48 PM

மெளனி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
அவர்களின் இரு கதைகளை படித்து உள்ளேன் அதைப் படித்துப் பிறகு நான் பயங்கர ஆச்சர்யம் பட்டு உள்ளேன்
நன்றி வணக்கம்

starcom 21-07-21 11:31 AM

அதிர்ச்சியா இருக்கிறது. ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

PUTHUMALAR 23-07-21 10:16 AM

மௌனி அவர்களின் இறப்பை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.. அவரின் இறப்பை மனம் நம்ப மறுக்கின்றது.. அவரது இழப்பு லோகத்திற்கு பேரிழப்பாகும்.. அவருடைய கதைகளுக்கு லோகத்தில் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.. குறிப்பாக தீ.த.உ கதைகளுக்கு.. அவருடைய கதைகள் எனக்கும் பிடிக்கும்.. நானும் அவரது கதைகளுக்கு ரசிகை.. இனி நமது லோகத்திற்கு அவரை போன்றதொரு எழுத்தாளர் கிடைப்பாரா? என்றால் கேள்விக்குறியே..

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்..

popyjovy 24-07-21 01:40 PM

மௌனியின் இழப்பு என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது போனாலும், உண்மை அதுவாக இருந்தால் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.. நானும் மௌனியின் தீவிர ரசிகன்.. தனிப்பட்ட மின் தொடர்புகள் இருந்தாலும் நேரில் சந்தித்ததே இல்லை. வருத்தம் தினமும் என்னை பாதிக்குது.. இருந்தாலும் அவரின் கதைகளை படித்து கண் முன்னே மௌனியை நிறுத்துகிறேன். தயவு செய்து மௌனியின் ஆரம்ப காலம் தொட்டு எழுதி பதிந்த கதைகளை படிக்க எனக்கும் அனுமதி தருமாறு நிர்வாகத்தை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி.. popyjovy

asho 24-07-21 02:21 PM

Quote:

Originally Posted by popyjovy (Post 1553883)
மௌனியின் ஆரம்ப காலம் தொட்டு எழுதி பதிந்த கதைகளை படிக்க எனக்கும் அனுமதி தருமாறு நிர்வாகத்தை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

இதென்ன புது டெக்னிக்கா இருக்கு, அனுமதி கேட்க தனி திரி உள்ளது. அங்கே அனுமதி கேட்டு பதியுங்கள், அதை விடுத்து இங்கே பதிந்து வைத்தால் நேரடியாக மெளனி கதை இருக்கும் தங்கவாசலுக்கு அனுமதி தந்து விடுவோமா?. அதற்கு நீங்கள் தான் பதிப்புகள் செய்து வரனும்.

__DELETED USER__ 30-07-21 02:57 AM

ஆத்மா அமைதி பெறட்டும்
 
மௌனி அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு கேன்சர் என்று நமது லோகத்தில் தெரியப்படுத்தியவுடன், அவருக்காக ப்ரார்த்தனை செய்யாத உள்ளங்களே இங்கு இல்லை. ஆனால் சில காலங்களுக்குப் பிறகு பார்த்தால் தளத்தில் மிகவும் சுறுசுறுப்பாக வலம் வந்து கொண்டு, கதைகள் பலவற்றைப் படைத்து நமது லோக மக்களுக்கு பல்சுவை விருந்து அளித்துக் கொண்டிருந்தார். அதைப்பார்த்தவுடன் அவரது உடல் நிலை பரவாயில்லை போலும் என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் எனக்குத் தெரிந்து பலர் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற்று குணம் அடைந்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் பழக்கம் இல்லையாதலால் அவரைப் பற்றி அதன் பிறகு எனக்கு ஏதும் தெரியவில்லை.

ஆனால் ஏற்கெனவே இருக்கும் உபாதைகளோடு கோவிட் பெருந்தொற்றும் சேர்ந்து அவரை நம் லோகத்தில் இருந்தும்/இந்த பூலோகத்தில் இருந்தும் பிரித்து விட்டதை எண்ணி மிகவும் மன வருத்தம் அடைகிறேன். கோவிட் இரண்டாவது அலை நமது மௌனி போல பல உயிர்களைக் கொள்ளை கொண்டு போய் விட்டதை நினைக்கும் போது மனதில் ஏதோ ஒரு வெறுமை சூழ்கிறது.

இரும்புப்பெண்மணி மௌனியின் ஆத்மா அமைதியாக உறங்கட்டும்.

karikaalan 05-09-21 02:29 PM

மௌனி அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா மோக்ஷம் அடைவதாக*

kathalan 07-09-21 09:31 PM

மௌனி அவர்கள் சிறுகதை எழுதுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர் என்று சொல்லி இருக்கிறார். அவர் கதைகளில் இருந்தே அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர் ஆக சிறந்த படைப்பாளியாகவே நம் லோகத்தில் உலா வந்தார். அவரின் இழப்பு அவர் குடும்பத்தார்க்கும், நம் லோகத்திற்கும் பேரிழப்பு தான்.

mayakrishnan 11-09-21 11:38 PM

அதிர்ச்சியாக இருக்கிறது


All times are GMT +5.5. The time now is 04:18 AM.

Powered by Kamalogam members