காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ் (http://www.kamalogam.com/new/showthread.php?t=38872)

askbusk 11-09-07 12:04 AM

வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்
 
வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்
________________________________________

வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ் ஒழுங்காக தெரியவில்லையா?

இகலப்பை மூலம் வேர்டிலும் பவர்பாயிண்டிலும் எழுதும்போது பலரும் தமிழ் கட்டம் கட்டமாக மாறிப்போவதை கவனித்திருப்பீர்கள். இதன் காரணம் மற்றும் தீர்வு என்ன?

இயல்பாக விண்டோஸ் கணினியின் டிபால்ட் எழுத்துருவான லதாவே வேர்டிலும் வரும். அந்த எழுத்துரு ஆபீஸ் தொகுப்பு செயலிகளில் ஒழுங்காக வேலை செய்வதில்லை.

ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆபீஸ் தொகுப்பில் தமிழுக்காக தந்திருக்கும் எழுத்துரு Arial Unicode MS.

உங்கள் வேர்டு அல்லது பவர்பாயிண்ட் செயலியை திறந்து கொள்ளுங்கள். அதில் format - font சுட்டினால் வரும் பெட்டியில் Latin text font மற்றும் compex script font பகுதியில் Arial Unicode MS என்று செட் செய்து கீழே இருக்கும் default சுட்டியை தட்டவும். (பவர்பாயிண்டில் ok தட்டவும்.)

இப்போது நீங்கள் செயலியை மூடிவிட்டு மீண்டும் புதிதாக திறந்து எழுத ஆரம்பிக்கும் போது எல்லாம் ஒழுங்காக வரும்.

இகலப்பை மூலம் எழுத தமிழ் அழகாக வரும்.

தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மொழிகள் மற்றும் ஏராளமான உலக மொழிகளை வேறு எந்த எழுத்துருவும் பதிவிறக்காமல் இந்த Arial Unicode MS எழுத்துரு மூலம் எழுதலாம். அந்தந்த மொழிகளுக்கான விசைப்பலகை செயலி மட்டுமே தேவை. தமிழுக்கு எகலப்பை வேண்டும்.

உங்கள் கணினியில் MS ஆபீஸ் பொதி இருந்தும் Arial Unicode MS எழுத்துரு font folder ல் இயல்பாக நிறுவப் பட்டிருக்கவில்லை என்றால் பின்வரும் வழிமுறைப்படி அதை நிறுவ வேண்டும்.

முதலில் கணினியில்

Control Panel க்கு செல்லவும்.

விண்டோஸ் xp அல்லது 2000 எனில்

Change or Remove Programs

இதில்

Microsoft Office தேர்வு செய்து Change கிளிக் செய்யவும் (தவறுதலாக Remove கிளிக் செய்துவிடக் கூடாது.)

(விண்டோஸ் 98, Me எனில்

Install/Uninstall பட்டையில் Microsoft Office தேர்வு செய்யவும்.

Add/Remove கிளிக் செய்யவும்.)

புதிதாக வரும் Features to install பெட்டியில்

1. next கிளிக் செய்யவும்.

2. expand Office Shared Features கிளிக் செய்யவும்.

3. expand International Support கிளிக் செய்க.

4. Universal Font அருகில் உள்ள ஐகானை கிளிக் செய்யவும்.

5 . கிளிக் Run all from My computer on the shortcut menu.

6. கிளிக் Update.

இப்போது font folder ல் Arial Unicode MS நிறுவப் பட்டிருக்கும்.

-oOo-

குறிப்பு: Arial Unicode MS எழுத்துரு இல்லை என்றாலும் அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் ஒரு தமிழ் யூனிகோடு எழுத்துருவைப் பயன்படுத்தலாம். ஆனால் பல யூனிகோடு எழுத்துருக்கள் கணினியில் இருந்தாலும் இந்த குறிப்பிட்ட செய்முறையின் போது format - font பெட்டியில் சில குறிப்பிட்ட எழுத்துருக்கள் மட்டுமே செயல்படக்கூடியதாக இருக்கும். பெரும்பாலும் TSCu எனத்துவங்கும் யூனிகோடு எழுத்துருக்கள் செயல்படுவனவாக இருக்கும். அதில் TSCu_Paranar என்னும் எழுத்துரு நன்கு செயல்படுவதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். ஏரியல் யூனிகோடுக்கு மாற்றாக நான் சோதித்த போதும் அந்த எழுத்து சரியாக செயல்படுகிறது.

எனவே Arial Unicode MS இல்லை என்றால் அதற்கு பதிலாக TSCu_Paranar என்ற எழுத்துருவைப் பயன்படுத்தி மேற்கண்ட வழிமுறையின்படியே செயல்பட்டால் எழுத்துக்கள் சரியாக தெரியும்.


நன்றி
சிந்தாநதி


இந்த தகவல் கதைகள் கட்டுரைகள் விமர்சனம் எழுதுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

tamil kumaran 28-10-07 09:47 PM

நல்ல உபயோகமான தவல் அளித்தமைக்கு நன்றி , தாங்கள் கொடுத்துள்ள விளக்கப்படி நானும் முயற்ச்சி செய்து பார்த்தேன் இப்பொழுது வேர்டில் தமிழ் எழுதுகள் அழகாக வருகின்றது

asn29 28-10-07 10:32 PM

தங்களின் தகவல் மிகவும் பயன்வுள்ளதாக இருந்தாது முன்பு கட்டம் கட்டமாக மட்டுமே தெரியும்.. இப்போது ஆஹா அசத்தல் நன்றி.

குமரன் 02-11-07 12:48 AM

நண்பர் அவர்களின் இந்தத்தகவல் மிக மிக பயனுள்ளதாக எனக்கு இருக்கிறது என்று சொல்லிவிட்டுச்செல்ல விருப்பமில்லாததால் மேலும் ஒரு சில வரிகள்......

நான் நீண்ட நாட்களாக வேர்ட்டில் இகலப்பைமூலம் தமிழில் தட்டச்சுச்செய்ய பல முறை முயன்றும் அது பலனளிக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்தும் முயற்சிகள் செய்து கொண்டேயிருந்தேன். இது பற்றி நண்பர்கள் பலரிடமும் கேட்டுப்பார்த்தேன். அவர்களும் முயன்றுவிட்டு தங்களாலும் முடியவில்லை என்று பதில் தந்தனர். ஒரு நண்பர் சொன்னார் "குமரன் நானும் பலரிடன் கேட்டுப்பார்த்தேன் இகலப்பைமூலம் வோர்ட்டில் தட்டச்சு செய்ய முடியாது என்றுதான் பலர் கூறுகின்றார்கள் எதற்காக நீங்கள் முடியாத ஒன்றை முயற்சி செய்கிறீர்கள். இதனால் உங்கள் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்" என்றார். அதற்கு நான் சொன்னேன் ஏதேனும் ஒரு வழி இருக்கவேண்டும் அதை நாம் அறியாதவரை அது முடியாது தானே என்று கூறிவிட்டேன். பின்பு உங்கள் பதிவாவைப்பார்த்ததும் முதலில் நீங்கள் கூறியது போல் முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. எங்காவது இணையத்தளம் ஊடாக Arial Unicode MS ஐ தரவிறக்கம் செய்ய முடியுமா ? என்று பார்த்தேன் ஏனே தெரியவில்லை அது கூட பயனளிக்கவில்லை. பின் இரண்டாவது வழியாகிய TSCu_Paranar எழுத்துருவை தேடிக்கண்டுபிடித்து ஒருவழியாக கணினியில் நிறுவி இப்போது தட்டச்சு செய்து பார்த்தேன். ஆகா என்ன மாதிரி தமிழ் எழுத்து தெரிகிறது. எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
:p

யாருக்காவது Arial Unicode MS எழுத்துருவை இறக்குமதி செய்யும் தளத்தின் இணைய முகவரி தெரிந்து இருந்தால் தயவு செய்து இங்கு குறிப்பிடலாமே. அல்லது உங்களிடம் இருந்தாலாவது பகிர்ந்து கொள்ளுங்களேன். பல தளங்களில் Arial Unicode MS என்று போட்டிருக்கிறார்கள் ஆனால் தரவிறக்கம் செய்ய முடியாமல் உள்ளது. :roll:

aerikarai 02-11-07 04:02 AM

Quote:

Originally Posted by askbusk (Post 592253)
வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்
இந்த தகவல் கதைகள் கட்டுரைகள் விமர்சனம் எழுதுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இது மிகவும் உயபோகமான தகவல். மிக்க நன்றி. கதைகளை நோட் பேடில் அடித்து வைத்து பின் இங்கே பதிப்பதில் ஒரு சின்ன கஷ்டம் உண்டு. நோட் பேடில் அடிக்கும் ஒவ்வொரு 'எண்டர் பட்டனுக்கும்' அடுத்த லைன் என்பது போல் தளத்தில் பதிக்கும் போது இடம் விட்டு பதிவாகி அலைன்மெண்ட் ப்ராபளம் வரும். இதை நீக்க கதையை பதிக்கும் போது ப்ரீவியூ பார்த்து சரி செய்ய வேண்டியிருக்கும். நோட்பேடில் format- word wrap உதவி செய்வதில்லை. இது போல் காரியத்துக்கு அது உதவி செய்யும் என்று இங்கு படித்த ஞாபகம் இருக்கிறது.

இந்த கஷ்டம் வேர்டில் அடிக்கும் போது வராது. எண்டர் பட்டன் அடிக்க தேவையில்லாமலே அடுத்த லைனுக்கு போவதால் பாராவாக எழுதி பிரிப்பது எளிது. நான் யூஸ் பண்ணிப் பார்த்தேன். வேர்டில் டைப் அடித்து இங்கே அப்படியே காப்பி பண்ணி செய்யும் போது பாண்ட் சரியாக வரவில்லை. ஆனால், வேர்டில் காப்பி செய்து, நோட் பேடு போய், அங்கிருந்து மீண்டும் காப்பி செய்து இங்கே தளத்தில் பதிந்து ப்ரீவியூ பார்க்கும் போது சரியாய் இருக்கிறது...

கதை எழுதுபவர்களுக்கு, நீளமாய் கட்டுரை எழுதுபவர்களுக்கு இது மிகவும் எளிதாய் இருக்கும்....நன்றி அஸ்க்புஸ்க். இந்த திரியை கூட ஒரு காப்பி எடுத்து கதைகள் பற்றி உரையாடல் பகுதியில் வைக்கலாம்.

askbusk 02-11-07 08:59 PM

Quote:

Originally Posted by குமரன் (Post 615503)
[B][COLOR="DarkRed"]

யாருக்காவது Arial Unicode MS எழுத்துருவை இறக்குமதி செய்யும் தளத்தின் இணைய முகவரி தெரிந்து இருந்தால் தயவு செய்து இங்கு குறிப்பிடலாமே. அல்லது உங்களிடம் இருந்தாலாவது பகிர்ந்து கொள்ளுங்களேன். பல தளங்களில் Arial Unicode MS என்று போட்டிருக்கிறார்கள் ஆனால் தரவிறக்கம் செய்ய முடியாமல் உள்ளது. :roll:


நண்பர்களே Arial Unicode MS எழுத்துரு இல்லாதவர்கள் இங்கிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

http://www.mediafire.com/?c91ievgtw03

rose1604u 02-11-07 10:59 PM

வணக்கம் நண்பர்களே...

நானும் Unicode Writer மூலமாகத் தான் தட்டச்சு செய்கிறேன்... இந்த தளத்தினில் தட்டச்சு செய்வது மிகவும் சுலபமாக உள்ளது... நீங்களும் முயற்சி செய்துப் பாருங்கள்...

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

வாழ்த்துக்கள்...

குமரன் 03-11-07 03:29 AM

Quote:

Originally Posted by askbusk (Post 615761)
நண்பர்களே Arial Unicode MS எழுத்துரு இல்லாதவர்கள் இங்கிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

http://www.mediafire.com/?c91ievgtw03

நண்பரின் தகவலுக்கு நன்றி.

vjagan 11-01-09 05:58 AM

உதவியான் குறிப்பு ! நன்றி ! என் நல் வாழ்த்துக்கள் !,

ஆதி 11-01-09 07:21 AM

Quote:

Originally Posted by askbusk (Post 615761)
நண்பர்களே Arial Unicode MS எழுத்துரு இல்லாதவர்கள் இங்கிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
http://www.mediafire.com/?c91ievgtw03

ராசா... எதோ கிகப்பு எழுத்துல இங்கிலீசுல ஏதோ ஒரு செய்தி வருதே, வரும் செய்தி கீழே..

Quote:

Invalid File. This error has been forwarded to MediaFire's development team.


All times are GMT +5.5. The time now is 01:05 AM.

Powered by Kamalogam members