காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   டி.எம்.சௌந்தரராஜன் மறைந்தார்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=63095)

கண்ணன்76 27-05-13 01:57 PM

பழம் பெரும் சிறந்த கலைஞர்களின் வரிசையில் டி எம் ஸ் க்கு தனி இடம் உண்டு. இனி இவரின் குரல் போல ஒரு குரல் திரை உலகத்துக்கு மட்டும் இல்லை நமக்கும் கிடைக்க வாய்ப்பில்லை... அண்ணாரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

maria 27-05-13 02:52 PM

சிம்ம குரலோன் ''டி..எம். எஸ் அவர்களின் பூத உடல் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது நினைவுகளும் அவர் பாடிய பாடல்களும் நெஞ்சை விட்டு மறையவே மறையாது.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்ததனை செய்வோம்.அதுவே அவருக்கு நாம் செய்யும் மிக பெரிய அஞ்சலி

oolvathiyar 27-05-13 03:03 PM

மிகவும் வருத்தமான செய்தி, அவர் இல்லாவிட்டாலும் அவர் குரல் இன்னும் பல தலைமுறைக்கு ஒலித்துக் கொன்டே இருக்கும். என் பெற்றோர் கேட்டு ரசித்த பாடல்களை நான் கேட்டு ரசிக்கிறேன், என் குழந்தைகளும் அதை இன்னும் கேட்டு ரசிக்கிறது நாளை என் பேரப்பிள்ளைகளும் அதை ரசிப்பதை நான் கானத்தான் போகிறேன். டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.

MACHAN 28-05-13 04:02 AM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1229067)
என் பெற்றோர் கேட்டு ரசித்த பாடல்களை நான் கேட்டு ரசிக்கிறேன், என் குழந்தைகளும் அதை இன்னும் கேட்டு ரசிக்கிறது நாளை என் பேரப்பிள்ளைகளும் அதை ரசிப்பதை நான் கானத்தான் போகிறேன்.

என்னாது..? நாளைதான் உங்களுக்கு பேரப் பிள்ளைங்க வரப் போறாய்ங்களா..? தங்களின் பேரக் குழந்தைகளுக்கும் குழந்தைகள் இருக்கிறதா சொன்னாய்ங்க..?:023: டி எம் எஸ் அவர்கள் இறந்த சோகத்திலும் ஜோக் அடிக்க எப்படித்தான் இந்த வாத்தியாரால் முடிகிறதோ..?:y12:

mouni 28-05-13 05:15 AM

மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது!

vjagan 28-05-13 10:56 AM

டி எம் எஸ் அவரின் தமிழ் உச்சரிப்பு வேறு எவருக்கும் வராது அய்யா அம்மணி !
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் :
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ...!
வீடு வரை உறவு...!
அவர் புகழ் நிலையானது !

NamiXXX 28-05-13 09:40 PM

TMS ஆத்மா சாந்தியடையட்டும்.. ... PB ஸ்ரீநிவாசுக்கு அடுத்து வெகு விரைவில் ஒரு அருமையான கலைஞனை தமிழ் நல்லுலகம் இழந்து விட்டது.... :(

ஆதி 29-05-13 07:37 AM

அய்யா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

துக்கமான செய்தி. அவர் குரலால் எப்போதும் நம்மோடு வாழ்ந்துகொண்டே தான் இருப்பார்.

sinna vaaththiyaar 29-05-13 08:31 AM

உடல் மறைந்து விட்டலும்,அவரது ஆன்மா,சிம்மக்குரலால் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது...அவருக்கு அழிவில்லை..

வாழ்ந்த உயரிய அந்த மகா கலைஞன்,இன்னும் வாழ்வாங்கு வாழ்வார்..

"தைரியமாக சொல்..நீ மனிதன் தானா?"

இந்த கேள்விக்கு இன்னும் யாரிடம் இருந்தும் பதில் இல்லை..

உச்சத்தில் இருந்த காலங்களில் எம்.ஜி.யாரிடம் சிறிது பிணக்காகி இருந்ததால்,யேசுதாஸ்,எஸ்.பி.பி போன்றோர் எம்.ஜி.யாருக்கு குரல் கொடுத்தனர்..

அவரது ஆன்மா இளைப்பாரட்டும்..

jayak 19-07-13 09:07 PM

திரு T.M.S அவர்களின் மறைவும், திரு P.B.S அவர்களின் மறைவும், இப்பொழுது திரு வாலியின் மறைவும் அடுத்து அடுத்து நடந்துள்ள சோக நிகழ்வுகள்.

அதிலும் திரு.T.M.S அவர்களின் மறைவின் பொழுது திரு வாலி குறியது இப்பொழுது நினைத்தாலும் வருந்ததக்கது.


All times are GMT +5.5. The time now is 01:47 AM.

Powered by Kamalogam members